Monday, September 08, 2014

எங்க இளைய தளபதியை இப்டி கூப்டறது தப்பு.கண்டனங்கள்

1 பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மது விலக்கு அமல்படுத்தப்படும் -ராமதாஸ் # சிம்புக்கு எப்போ புத்தி வர்றது? நயன் தாராக்கு எப்போ கல்யாணம் ஆகறது?


===============

2 நலம் விசாரிக்க மட்டுமே விஜயகாந்தைச் சந்தித்தேன் - நெப்போலியன் # தெளிவா இருந்தாரா? சாரி.நலமா இருந்தாரா?===============


3 பாமக ஆட்சிக்கு வந்தால் ஃப்ரீயாக பூச்சி மருந்து தருவோம் - டாக்டர் ராமதாஸ் #,ஓட்டுப்போட்டவங்க சாப்பிடவா?


==============


4  மதுரையில் தயாரான நடிகர் விஜய் சிலை: ரசிகர்கள் கொண்டாட்டம் # இந்நாள் முதல்வருக்கே சிலை வைக்கலை.நாளைய முதல்வருக்கு வெச்சாச்சா?


================


5  அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டிக்குவேன் அடம் பிடிக்கும் 60% இந்தியர்கள் #புரட்சித்தலைவிக்கு இந்தியா பூரா எவ்ளோ செல்வாக்கு பாத்தீங்களா?


==========

6 தொண்டர்கள் பலம் இருக்கும் வரை எந்த சக்தியாலும் திமுகவை அசைக்க முடியாது: மு.க.ஸ்டாலின்.# அண்ணனுக்கு அறைகூவல் விடறாரு போல


================


7  ஓட்டுநேரி சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் பூத்தில் பெண்ணுடன் உல்லாசம்.கைது # டியூட்டி டைம் ல பியூட்டி கூட லூட்டி .அடேய்


================


8
பாலா என்னை பட்டை தீட்டினார் - வேதிகா # வழக்கமா எல்லாரும் திட்டினார் னு தான் சொல்வாங்க.என்ன வேதியல் மாற்றம் நிகழ்ந்ததோ?


=================

9  கத்தி கதையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் - நீதிமன்றம் # யுவர் ஆனர்.கதை அவுட் ஆனா படம் அவுட் ஆகிடாதா?


===============


10 துரதிருஷ்டம் விலக நாயை திருமணம் செய்த இளம்பெண் # அடடா.நாய்க்கு என்ன துரதிர்ஷ்டமோ?=================


11 நான் படத்தின் 3–ம் பாகம் எடுப்பேன்: விஜய் ஆண்டனி. # அதுலயாவது முகத்தை கொஞ்சம் சிரிச்சா மாதிரி நடிங்க பாஸ்


===============


12 பேய் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்: ராய் லட்சுமி. # மேக்கப் செலவு மிச்சம்

==============


13 ஆந்திர தலைநகராக விஜயவாடா அறிவிப்பு # என்னதான் தெலுங்கு ரீமேக் ல நடிச்சாலும் எங்க இளைய தளபதியை இப்டி கூப்டறது தப்பு.கண்டனங்கள்


============14 /கத்தி கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது - ஏ ஆர் .முருகதாஸ் # மக்கள் மன்றத்துல சமர்பிங்க.படிச்சுப்பார்த்து கரெக்சன் இருந்தா சொல்றோம்============


15  இன்னும் பேசிக்கிட்டேதான் இருக்கார் மோடி, செயலைக் காணோம்#ஞானதேசிகன்!! # ஜப்பான் ல டிரம்ஸ் வாசிச்சாரு. கவனிக்கல?============


16  தமிழகத்தில் ஆட்சி அல்ல காட்சிதான் நடக்கிறது-ஸ்டாலின்# கழக ஆட்சில மானாட மயிலாட கண்கொள்ளாக்காட்சியா இருந்தது.இப்போ சரி இல்ல.கவனிங்க===============

17  சங்கரன்கோயில் அருகே 110 ரூபாய் அச்சிட்டவர்கள் கைது. # 111 ரூபா அடிச்சு நாமம் சாத்தி இருக்கலாம்=======


18  மலையாள மக்களுக்கு ஓணம் திருநாள்வாழ்த்து-கருணாநிதி # பொங்கல் தீபாவளி க்கு மட்டும் விடுமுறை தின வாழ்த்தும்பாரே? தமிழ் இனத்தலைவர்டா


=============

19 காந்திய வழியில் அம்மா ஆட்சி-கட்டுரை போட்டி தலைப்பு#உப்பு காய்ச்சாம சாராயம் காய்ச்சறாங்க================


20  என்ன ட்வீட் போடறதுனு தெரியாம ஏதாவது பாட்டு வரியைப்போட்டு னு பொண்ணுங்க ட்வீட்டினா பிரமாதமான ட்வீட் மிஸ் என அடிச்சி விடுவான் நெட் தமிழன்


=================


0 comments: