Friday, August 30, 2013

நயன் தாரா வீட்டு வாசப்படிக்கும் . இந்திய எல்லைக்கும் என்ன ஒற்றுமை?

1. டிவி நடிகையை சரமாரியாக தாக்கிய திருடர்கள்.. வேடிக்கை பார்த்த மக்கள் # தத்ரூபமா இருக்கேனு ஷூட்டிங் னு நினைச்சு வேடிக்கை பார்த்திருப்பாங்க----------------------


2. இந்திய எல்லையில் மியான்மர் ராணுவம் ஊடுருவல்-# அது என்ன நயன் தாரா வீட்டு வாசப்படியா?ஆளாளுக்கு எட்டிப்பார்த்துட்டு போறானுங்க?


---------------------


3. ரூபாய் சரிவைத் தடுக்க 10 அம்ச திட்டம் - காங்கிரஸ் # முதல்ல திட்டத்தை சொல்லுங்க.அம்சமா? துவம்சமா?னு நாங்க சொல்றோம்்


----------------------4. நில அபகரிப்பு புகார்... சிக்கலில் கருணாநிதி மகள் செல்வி? # தலைவர் சோனியாவை மணிமேகலைன்னு அள்ளி விட்ட போதே நினைச்சேன்---------------------


5. அடக்குமுறையில் ஆங்கிலேயர்களுக்கு ் சளைத்தவரல்ல என ஜெ. நிரூபித்துள்ளார்: ராமதாஸ் # கூட்டணி ல இருக்கும்போதே இதை சொல்லி இருந்தா நீர் வீரர்----------------


1.எனக்கு ஸ்மைலிங்க் ஃபேஸ்னு என் சம்சாரம் சொன்னா..

ரொம்ப புளகாங்கிதம் அடையாதே, இளிச்சவாயன்கறதை நாசூக்கா சொல்லி இருப்பாங்க. # பல்பு!!

-----------------------------

2. கேப்டன், இப்போ எதுக்காக திடீர்னு சொந்தப்படம் எடுக்கறீங்க?

மக்களை பழி வாங்கப்போறேன்,நான் வலில துடிக்கற மாதிரி அவங்களும் துடிக்கனும்

-------------------------------

3. இன்னும் திருமணம் செய்யாதது ஏன்? சித்தாரா விளக்கம்! # XQSமீ மிஸ், நயன் தாரா யுகமே முடிஞ்சிடுச்சு, நீங்க யாரு?எந்த காலத்தை சேர்ந்தவங்க?

---------------------------

4. R K செல்வமணி - இந்தப்படத்துல நீங்க சி எம் ஆக வர்றீங்க..

கேப்டன் - சி எம் ஆகி வர்ற மதிரி கதை வேணும்

--------------------------

5. தலைவரே, பேச்சுன்னா கேக்குறவங்களை கட்டிப்போட்ட மாதிரி இருக்கனும்..

எதுக்கு வம்பு, எல்லாரையும் முதல்ல கட்டிப்போடுங்க, நான் அப்புறம் பேசறேன்

--------------------------------------

6. ”மிஸ், ஐ லவ் யூ..

“   உனக்கு மூளையே கிடையாதா?

“ இல்லை, ஆனா இதயம் இருக்கு”

-----------------------------------

7. கோயிலுக்கு வந்து சைட் அடிக்கறீங்களே?

இது தப்பு இல்லை? இல்லை, இடம், பொருள், ஏவல் சைட்டுக்கு இல்லை

------------------------

8. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் ஆணின் கண்ணியம் அதிகரிக்கிறது, ஜீன்ஸ் பேண்ட், டிசர்ட்டில் இளமையும்,கம்பீரமும் அதிகரிக்கிறது # ஜெண்ட்ஸாலஜி

------------------------------

9.  காட்டன் சேலைகள் டீச்சருக்கான கம்பீரத்தையும்,பட்டு சேலைகள் மணப்பெண்ணுக்கான நளினத்தையும், நைலக்ஸ் சேலைகள் நாணத்தையும் தருகின்றன #லேடீஸாலஜி

-------------------------------------


10. தமிழகத்தின் இட்லி,சாம்பார் தான் அதிக சத்தான உணவு :ஆய்வில் தகவல் .# அதுல குஷ்பூ இட்லி ,ஹன்சிகா இட்லி % எல்லாம் எவ்வளவு? னு சொல்லல?------------------------------------


11. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சோனியாவின் பிளாக் பெர்ரி போன் 'மிஸ்ஸிங்'.# எத்தனையோ பிளாக் மார்க்.பத்தோட 11,அத்தோட இதுவும் 1---------------------------


12. பொடி தோசை சாப்பிட பார்சல் 'கஞ்சா பொட்ல' தோசை! இது கரூர் அதிர்ச்சி # கரூர்ல சிறைக் "கஞ்சா " செல்வங்கள் நிறைய பேரு இருப்பாங்க போல
--------------------------------


13 விஷால் ரசிகைகள் இன்று சுடிதாருக்கு ஷால் போட்டு வரவும் # வி ஷால் பிறந்த நாள்-----------------------------


14. டான்ஸ்க்கு எதிர்ப்பதம் உடான்ஸ்.நேர் பதம் அன்பே உன் டான்ஸ்---------------------------


15. கூச்ச சுபாவம் அதிகம் உள்ளதா வேலன்ட்டரியா சொல்லிக்கிட்டவங்க கூட கடலை போடறதுல கூச்சப்படறதே இல்லை ;-)--------------------------------


16. அன்பே! பூனை குறுக்கே வந்தாலும் ,யானை எதிர்க்கே வந்தாலும் நீ என் கூடவே வந்தால் அது எனக்கு நல்ல சகுனமே!-----------------------------


17. மத்திய அரசு தந்தி சேவையை நிறுத்தியதை கான்செப்ட்டா வெச்சு தந்திக்கே தடையா?னு தினத்தந்தி விளம்பரம் பண்ணிக்கலாம்-----------------------------


18. பொண்டாட்டி ,புள்ளைங்களை அம்போன்னு விட்டுட்டு ஓடிப்போறவன் எல்லாம் நான் புத்தன் னு சொல்லிக்க முடியாது


----------------------------------


19. ஆடம்பரப்பெண்களுக்கு ஆல் ஈஸ் ஜ்வல் (ALL IS JEWELL)

------------------------------


20. பொருளாதார சோதனையில் இந்தியா வெற்றி பெறும் -கலைஞர்.# ஆபரேஷன் சக்சஸ்.பேஷண்ட் அவுட் டாக்டர் கிரெட் எஸ்கேப்---------------------------------

0 comments: