Monday, August 26, 2013

பிரபல ட்விட்டர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 1Photo: பார்வை கத்தி
குத்தி
கிழித்து
ரத்தம் வழிந்து
சதை
பிண்டமாகும் வரை
வழிய விடுகிறாய்
உன் ஆண்மையை
துயர் தரும் பார்வைதான்
உனை வெளிக்காட்ட
ஒரு குண்டூசி  எடுக்கும் அவகாசம் போதுமானது....


-ரேவா 

படத்திற்கு நன்றி 

சகோதரர் இளங்கோவன் பாலகிருஷ்ணன்
ஆல்ரெடி நாம  பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்  பாகம்  1 பாகம் 2   ன்னு தேவையான அளவுக்கு பதிவர்கள்பற்றி துவைச்சு , காயப்போட்டு , அலசி ஆராஞ்சிட்டதால   அடுத்து நாம ட்விட்டர்கள் பற்றி பார்ப்போம் , இது வரை அதை படிக்காதவங்க பாகம் 1  http://www.adrasaka.com/2010/12/blog-post_09.html   பாகம் 2  ,  http://www.adrasaka.com/2011/04/2-18.html போய் படிச்சுக்குங்கSwimming pool view from hotel, Kuala Lumpur
Photo: Swimming pool view from hotel, Kuala Lumpur


1. கானாப்ரபா  - மாலையில்  சிட்னி யில்  இரவு இனிதே விடிந்தது 

 யோவ், இப்போத்தான் நைட்  ஸ்டார்ட்  ஆகி  இருக்கு

ஓ சாரி , எனக்கு அப்படிச்சொல்லியே பழக்கம் ஆகிடுச்சு. இப்போ நான் யாழ்ப்பாணத்துல நடந்த  ஒரு உண்மைச் சம்பவம் பற்றி சொல்லப்போறேன்.

ம்க்கும், நைட் ஃபுல்லா அதுதானா? நாசமாப்போச்சு 

யாரைப்பார்த்து என்னவார்த்தை   சொல்லிட்டே?இளையராஜா பாட்டு , இசை பற்றி  வீடியோ ஆல்பம் பார்க்கப்போறோம் 


உலகத்துலயே முதல்  இரவன்னைக்கு இளையராஜா ஆல்பம் பார்க்கும்  முத ஜோடி நாமாத்தான் இருக்கும் ,அது  இருக்கட்டும் இப்போ எதுக்கு இந்த பால் , பழங்கள் , ஸ்வீட் எல்லாம் ஃபோட்டோ எடுக்கறீங்க?

 ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன் , ஃபேஸ்புக்;ல அப்பப்ப போடுவேன் 

 அய்யய்யோ, நான் எங்கப்பா வீட்டுக்கே போய்டறேன்,டாட்டா 


இரு , ஒரு க்விஸ் புரோகிராம் நடத்தறேன் , இளையராஜாவும் , எம் எஸ் வியும் சேர்ந்து இசை அமைச்ச படம் எது?


 போய்யா  நீயும் உன் முதல்  இரவும் .கிஸ் புரோகிராம் நடத்த வேண்டிய  இடத்துல க்விஸ் நடத்திட்டு..வேகமாத் திறக்குதுகதவு , மீ கோயிங்க் 


Photo: பேரன்பு மழைதான்
வானம் வெறித்த போது 
வேடிக்கையாய்  இருந்தது..

2.  சேந்தன் அமுதன்  சக்திவேல் - மாலை வணக்கம்  தங்கச்சி

 யோவ் , நான் உன் பொண்டாட்டியா? தங்கச்சின்னு சொன்னா முறையே மாறிடுமே?


 எல்லாம் பழக்க  தோஷம்  தான் .அது  இருக்கட்டும் , கல்யாண மண்டபத்துல  மண மேடைல  எல்லாரையும் பார்த்து  பொதுவா  ஒரு வணக்கம் வெச்சாப்  பத்தாதா? எதுக்கு ஒவ்வொருவர்  கையையும்  பிடிச்சு  வாலண்ட்டியரா வணக்கம் வெச்சு டைம் வேஸ்ட் பண்றீங்க?

 அங்கே தான் நிக்கறான் அமுதன் . இப்போ பொதுவா   வணக்கம் வெச்சா ஒரே ஒரு ட்வீட் எண்ணிக்கைதான் கூடும் , என்ஃபாலோயர்ஸ் 3000 பேருக்கும் தனித்தனி வணக்கம்  வெச்சா  அதுலயே டெய்லி  3000  ட்வீட்ஸ் தேத்திடுவேன்

ஓஹோ, அப்படிப்போகுதா   கதை , இதுவரை எத்தனை பேரை அப்படித்தேத்தி  இருக்கீங்க? 


 ம்க்கும் , டெய்லி வணக்கம்   வைக்கவே 8மணி நேரம் ஆகிடுது, அதுக்குப்பிறகு  டி எம் போறதுக்குள்ளே  விடிஞ்சுடும்.


இப்போ  நீங்க  ஸ்டார்ட் பண்றதுக்குள்ளே இங்கே  விடிஞ்சிடும் போல.ஆமா, எனக்கு ஒரு டவுட் , எல்லா பெண்களையும் அக்கா, தங்கச்சின்னுகூப்பிடறேங்களே, நீங்க  அம்புட்டு நல்லவரா?

 இங்கே தான் எல்லாரும் என்னை தப்பா புரிஞ்சுக்கறீங்க..  ஃபிரண்ட்ஸ் கிட்டே   எந்த வம்பும் நான்  வெச்சுக்க மாட்டேன், எல்லா லேடி ட்வீடர்ஸையும்  அக்கா , தங்கைன்னுகூப்பிடுவேன், எல்லாரும் என்னை ரொம்ப  நல்லவன்னு   நம்பிடுவாங்க, அவங்களோட தங்கச்சி , தோழி , பக்கத்து  வீடு எதிர்த்த  வீடு இப்ப்டி அறிமுகம்  பண்ணுவாங்க ,  மல்டி லெவல் மார்க்கெட்டிங்க்  மாதிரி  செயின் மாதிரி போய்க்கிட்டே  இருக்கும் .அது  இருக்கட்டும் எங்கே உந்தங்கச்சி ? ஆளையே காணோம்?

  யோவ்!!Photo: உன் பார்வை விருந்திற்கு பின் 
பசியென்னவோ 
என் காதலுக்கு தான்....


(மீள்)
3.  ஜப்பான்  ரவி - ஹா ய்   வெட்டி ! நானு  வந்தாச்சு


ஸ்வீட்டின்னுதானே பொதுவா   கொஞ்சுவாங்க? 


நீயும் ட்விடர்ல இருக்கே, நானும்  ட்விட்டர்ல இருக்கேன் , அப்போ நாம  2 பேருமே  வெட்டிதானே?


ம், சரி ,ஸ்டார்ட் பண்ணலாமா? 


ஒரு சின்ன விளையாட்டு விளையாடுவோமா? ஒரு 10 பேரு வரணும். 10பேருல at least ஒருத்தர கொஞ்சம் நல்லா தெரிஞ்சவரா இருக்கணும். யாரெல்லாம் ரெடி?

 யோவ் , இங்கே  என்ன நடக்குது? முதலிரவா?  கபடி மேட்சா?  கூட்டம் சேர்த்த? 


 ஹி ஹி , சும்மா , இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் ரூம்க்கு வந்திருக்கோம்... #ஒரு-கை-பார்த்திடப்போறேன்


 அப்போ இன்னொரு கை என்ன பண்ணும்? 


நான் எந்தவேலை செஞ்சாலும் இடதுகையாலதான் செய்வேன் , ஏன்னா வலது கை எப்பவும்  ட்வீட் போட்டுட்டே இருக்கும் 


சுத்தம் , நான் ஜப்பான் காரர்னா எப்பவும்சுறு சுறுப்பா இருப்பார்னு   நினைச்சுத்தான்  உங்களை கட்டுனேன் , இப்படி இதுல  சுறுசுறுப்புன்னுதெரியாம போச்சுதொடரும்Photo: Good nite ;)a
டிஸ்கி -  அடுத்த   பாகம் 2-ல் ரைட்டர் நாயோன் , ரைட்டர் சி எஸ் கே  , தோட்டா 

3 comments:

Unknown said...

ஹிஹிஹி ; -))) அடுத்து வாரதுதான் பட்டாசு.. கலக்குங்க

Unknown said...

பட்டாசு ;-)))

'பரிவை' சே.குமார் said...

நடத்துங்க... நடத்துங்க...