Wednesday, August 07, 2013

அடடே வாங்கண்ணா வணக்கங்ணா

1. மு க - வெற்றிக்கனி நமக்கே!கேப்டன் - தானா கனியல.புகை போட்டு பழுக்க வெச்சீங்க.கெடுதல் தான்--------------------------


2. மு க - இது சரித்திர வெற்றி கேப்டன் - தரித்திர வெற்றி!--------------------------


3. கூட்டணி மாறி வாக்களிப்பது துரோகம்!-சரத்குமார் # சோமாரி ,கேப்மாரி ,மொள்ளமாரி ,வளையாமாரி எல்லா மாரிகளும் புழங்கற இடம்ங்ணா
-----------------------------


4. மு க - கடைசில கப்பு எங்களுக்குத்தான்.கேப்டன் - ஆமா.கப்பு தாங்கல.அரசியல் சாக்கடை-----------------------


 5. மீடியாக்கள் எங்களை கண்டு கொள்ள வில்லை --சரத்குமார் # நயன் தாரா வே நட்டாத்துல போவுதாம்.புதுமுகம் மோட்டார் போட் கேட்டுச்சாம்----------------------


6. திமுக.க்கு அளித்துள்ள ஆதரவை வேறு அர்த்தத்தில் புரிந்து கொள்ளகூடாது - காங்கிரஸ் செய்திதொடர்பாளர் # இது வரை அப்டி நினைக்கலை.இப்போ தோணுது----------------------------


7. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை: திருமாவளவன் # வள வளனு என்ன பேச்சு.?நீங்க எல்லாம் ஆட்டத்துலயே இல்ல--------------------------------


8. அதிமுக ஆட்சியை நான் மனதார புகழ்வேன் ! - சரத்குமார் # ஒரு பொய்யாவது சொல் கண்ணா.ஈடு இணையற்ற தலைவி என.அந்த பொய்யில் பொழப்பு ஓடும்-------------------------


9. விஜய் - தலைவா ட்ரெய்லரை இது வரை 10 லட்சம் பேர் பார்த்தாச்சு.இது இருந்து என்ன தெரியுது? ஓ சி ன்னா தமிழன் யோசிக்காம களம் இறங்குவான்னு---------------------------


10 அஜீத் மாதிரி பேர் வாங்கணும்-் புதுமுகம் ஜெய் ஆனந்த். 'திறப்புவிழா' படத்தின் ஹீரோ !!!"# ஆகட்டுண்டா தம்பி ராஜா நட ராஜா.மெதுவா செல்லய்யா--------------------------


11. கொடுத்துட்டாரே சோனியா தன் ஆதரவை.கெடுத்துக்கிட்டாரே மு க தன் பேரையே! வெட்கம் மானம் சூடு சுரணை ஏதும் காணலை
-------------------------


12. ஒரு நல்ல தலைவனாத்தான் தமிழர்களை காப்பாத்த முடியல.ஒரு நல்ல அப்பாவா பொண்ணை கரை சேத்துடறேனே?
-----------------------------


13. மடமை ! பெண்ணிடம் கால் ல விழு # ராஜ்யசபா-----------------------


14. மு க - நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு!சோனியா - அடடே வாங்கண்ணா வணக்கங்ணா! சுய மரியாதை சுகமா?----------------------------


15. உயிருனும் மேலான உடன்பிறப்பே! நீங்கள் எங்களை கடலில் தூக்கிப்போட்டாலும் காங்கிரஸ் காலில் தான் விழுந்து கிடப்போம்.திருந்தி விட மாட்டோம்


-----------------------


16. ஐஸ்- ராஞ்சனா ஹிட் ஆனதுக்கு ஏன் டாடி சோகமா இருக்கீங்க?
  இனி பாலிவுட் தயாரிப்பாளர்கள் தனுஷை மொய்ப்பாங்களே?

 ரஜினி -அவங்க மட்டுமா மொய்ப்பாங்க?-------------------17. மு க - கடைசில நான் தான் ஜெயிச்சேன். கேப்டன் - கேவலமான வெற்றியை விட கவுரவமான தோல்வி மேல்
---------------------------


18. பாமக பொதுக்கூட்டத்திற்குஹைகோர்ட் மீண்டும் அனுமதி # ஜெ- எல்லாம் நம்ம ஐடியாதான்.கூண்டோட பிடிக்க பிளான்


------------------------


19. ராஜ்யசபா தேர்தலில் திமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு # உன்னால நான் கெட்டேன்.என்னால நீ கெட்டே.2 பேரும் சேர்ந்து ஊரை அடிச்சு உலைல போடலாம் வா.-------------------------


20. ஆத்திச்சூடி நூலை அனைவருக்கும் பரிசளிக்கும் அஜித் # என் நூல் என்ன மட்டமா?னு சாரு இன்னும் கிளம்பலையா?
------------------------------

0 comments: