Wednesday, August 07, 2013

தலைவா - காமெடி கும்மி கலா ட்டா

 

1. இவர் பேரு மகேஷ்.இவர் படங்களை சுட்டு ஒருத்தர் படம் நடிச்சுட்டே இருந்தாரு.ஆனாலும் பெய்லியர் ல இருந்து அவரை யாராலும் காப்பாத்த முடியல------------------------


2. சுமாரா ஓடி இருக்க வேண்டிய விஸ்வரூபத்தை செம ஹிட் ஆக்கியதே தடையால் வந்த எதிர்பார்ப்பால் தான். தலைவா அந்த லிஸ்ட்டில் சேர்ந்துடும் போல


------------------------


3. என் படம் ஓடும் தியேட்டர்ல பாம் வெச்சுடுவோம்னு மிரட்றாங்க. அப்டி வெச்சா உங்க எல்லா படத்தையும் பார்க்க வைப்பேன்னு நீங்களும் மிரட்டுங்க.-----------------------------


4. ரிசர்வேசன் செஞ்ச டிக்கெட்டுக்கு காசை திருப்பித்தருவீங்களா ? டிக்கெட் வித்ததே பெருசு.போங்க போங்க. ரிலீஸ் ஆகும்போது பாத்து கழிச்சுக்குங்க -----------------------------


5. கமல் மைன்ட் வாய்ஸ் - நம்ம டெக்னிக்கை வெச்சு ஆளாளுக்கு கல்லா கட்டிடுவாங்க போல.-------------------------------

6. தீவிரவாதிகள் அறிவிப்பு - எந்த ஹீரோ படம் ஹிட் ஆகனும்னாலும் இங்கே பாம் வைப்பதாக சும்மானாச்சுக்கும் பூச்சாண்டி காட்டப்படும்.நிதி உதவி தாரீர்--------------------------


7. தலைவா - 2 மணி நேரம் 50 நிமிசம் ஓடுதாம்.170 நிமிசம்.கூட்டுத்தொகை 8, அஷ்டமத்துல சனி அப்டினு எந்த ஜோசியரும் கிளம்பலையா?-------------------------


8. விஜய் டூ ஜெ - மேடம்.இது அரசியல் படம் இல்லை .டைட்டிலைப்பார்த்து தப்புக்கணக்கு போடாதீங்க. THE LIVE AA = த லைவ் ஆ னு டைட்டிலை மாத்திடாறோம்
-----------------------


9. கமல் டூ விஜய் - விஸ்வரூபம் 2 க்கு நான் ஐடியா பண்ணி வெச்சிருந்த மார்க்கெட்டிங்க் டெக்னிக்.நீங்க பாட்டுக்கு யூஸ் பண்ணிக்கிட்டா எப்டி ?-----------------------


10. அமலாபால் மைன்ட் வாய்ஸ் - படம் ரிலீஸ் ஆகறதுக்குள்ள நான் அமலா தயிர் ஆகிடுவேன் போல.ஹூம்
-----------------------------

11. தலைவா ரிலீஸ் ஆகலைன்னா த LIE வா----------------------12. அஜித் மைன்ட் வாய்ஸ் - ஆரம்பம் முந்திக்கும் போல .அது ;-))-------------------------


13. SAC - எனக்கு என்ன தோணுதுன்னா.., விஜய் - அம்மா.அவரை கம்முனு இருக்கச்சொல்லு.இல்ல . வேற ஜில்லாக்கு பார்சல் தான் ---------------------------------14. நிச்சயம் ஆன பொண்ணும் ரிசர்வேசன் செஞ்ச விஜய் படமும் ஒண்ணு. கைக்கு எட்டுனது கண்ணுக்கு எட்டுனாத்தான் நிஜம்---------------------------------15. தலைவா - வருவீயா? வரமாட்டியா? வர்லைன்னா உன் பேச்சு கா கா---------------------------


16. SAC - உலகம் சுற்றும் வாலிபன் க்கு எதிர்ப்பு வந்தது.MGR கலக்கினார்.இப்போ விஜய் டர்ன். விஜய் - என்னை நாடு கடத்தாம இவரு விட மாட்டார் போல ------------------------------


17. விஜய் - எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே நீ நதி போலே ஓடிக்கொண்டிரு #அதான் அணை போட்டுட்டாங்களே----------------------------18. கேப்டன் டூ விஜய் - ஆபாவாணனின் காவியத்தலைவனே கவுத்துடுச்சு.அப்பவாவது உஷார் ஆகி இருக்க வேணாமா?

--------------------------------


19. காவலன் படத்துக்கு  mu ka  செய்தது போல் ஜெ தலைவா வுக்கு தொந்தரவு கொடுத்தால் அவருக்குத்தான் கெட்ட பெயர்.விஜய் இமேஜ் உயரும்-----------------------20. 9 8 2013 ரம்ஜான் ஸ்பெஷல் கிடா வெட்டு @ ட்விட்டர்.அனைவரும் வருக;-)))----------------------------

21. ஸார்.நீங்க விஜய் படத்தை மட்டும் தான் ஓட்டுவீங்களா?  ஷகீலா படத்தைக்கூட ஓட்டுவேன்.தியேட்டர் ஆபரேட்டர்னா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கனும் -------------------------------


22. டாடி.பட ரிலீஸ் அன்னைக்கு 10,000 பேருக்கு அன்ன தானம் பண்றோமே எதுக்கு ? படத்துக்கு கதை தானம் வாங்குனோம்னு தெரியாம இருக்கத்தான் -----------------------------------


23. ஷாருக்கான் ன் சென்னை எக்ஸ்பிரசை விஜய் ன் தலைவா பாக்ஸ் ஆபீசில் முந்தும் என மும்பை டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கணிச்சிருக்காங்களாம் # துப்பாக்கி---------------------------24. அமலா பால் - நான் வர்ற சீன்ஸ் எல்லாம் ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்பாங்க 
-----------------------------


25. சத்யராஜ் - என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க? விஜய் - ஷூட்டிங்கே முடிஞ்சாச்சு.என் கேரக்டர் என்னான்னே புரிஞ்சுக்க முடியுல --------------------------------

26. விஜய் - தலைவா ல அரசியலை டச் பண்ணி இருக்கேன்.  அட போங்க.அப்போ அமலா பாலை டச் பண்ணலையா? ---------------------------


 a

27. விஜய் - சாரி , மணிரத்னமா இருந்தாலும் 2 வருசத்துக்கு கால்ஷீட் நோ , ஃபுல். பி ஏ - சார் , அவர் வந்தது அவரோட நாயகன் -னை ஏன் உல்டா?னு கேட்க--------------------------------


28. விஜய் -இந்தத்தடவை மிஸ் ஆகாது . ஜெ - ரிலீசே ஆகாதுங்கறேன்---------------------------


29. இனி தமிழ் நாட்டில் பாம்பு படம் எடுத்தால் கூட அரசிடம் அப்ரூவல் பெற வேண்டும்.ஜெ அதிரடி உத்தரவு .அரசுத்துறை அதிர்ச்சி # சும்மா


---------------------------


30. விஜய் - மேடம்.உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா படத்தை ஒரு டைம் பார்த்துடுங்க .ஜெ - அய்யய்யோ.அந்த ரிஸ்க் நான் எடுக்க மாட்டேன்.------------------------------

 அ31. ஒரு பொய்யாவது சொல் கண்ணே.தலைவா மெகா ஹிட் என்று.அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் # விஜய் ரசிகன் டூ அஜித் ரசிகை-------------------------32. விஜய் - சி எம் மை பார்க்கனும். வாட்ச்மேன் - அதோ அந்த ஜன்னல் வழியா பார்த்துட்டு போய்டுங்க # கொடநாடு----------------------------


33. தலைவர் சரியான பாதையில தான் போய்கிட்டிருக்காரு-குஷ்பு # தலைவா விஜய் கோட நாடு போய்ட்டு இருக்கும் ரூட் மேப் ஹவ் யூ கெட்?்
---------------------------


34. ஹவுஸ் ஓனர் சம்சாரம் தீவிர விஜய் ரசிகையாம்.FB் லஇருக்காம்.தலைவா காமெடி கும்மி போஸ்ட் படிச்சுட்டு 500 ரூபா வாடகை ஏத்திடுச்சு # அடங்கோ----------------------------


35. நல்ல வேளை.தலைவா போஸ்டர்களில் விஜய் எதிலும் வேட்டி சட்டையில் இல்லை # அதுக்கும் தடை போட்டாலும் போடுவாங்க-------------------------------


36. தலைவா வை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்! # கவர்மென்ட் சம்பளம் வாங்கிக்கிட்டு ஆபீஸ் டைம்ல OCல பார்க்கறாங்க.வாழ்வு தான்----------------------------


37. தலைவா அரசியல் படம் அல்ல -விஜய் திட்டவட்டமாக அறிவிப்பு #சரிங்ணா.தலைவா வுக்கும் ,டைம் டூ லீடு க்கும் என்ன அர்த்தம்ங்க்ணா?-----------------------------


38. என் வீட்டில் வெடி குண்டு வைக்க வரும் விஜய் ரசிகர்கள் சங்கு சக்கரம் ,புஷ்பாவானம் சாரி புஷ்வாணம் ,மத்தாப்பும் வைக்குமாறு கேடடுக்கொள்கறேன் , ஓ சி ல தீபாவளிகொண்டாடிக்கறேன்------------------------------------


39. நேத்து என் கனவுல விஜய் சி எம் ஆகிட்டாரு.அஜித் எ க தலைவர்.அமலா பால் டெபுடி சி எம் ஹி ஹி--------------------------


40. தலைவா விமர்சனம் எழுதினால் வீட்டில் வெடிகுண்டு வைப்போம் - விஜய் ரசிகர்கள் மிரட்டல் #, அண்ணே ஒரு விளம்பரம்
------------------------------------

0 comments: