Sunday, August 04, 2013

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான்.-டைரக்டர் சேரன் பேட்டி

என் மகளை வைத்து பணம் பறிக்க முயற்சி: டைரக்டர் சேரன் பேட்டிஎன் மகளை வைத்து பணம் பறிக்க முயற்சி: டைரக்டர் சேரன் பேட்டி


 மகளின் காதல் விவகாரம் குறித்து டைரக்டர் சேரன் மனைவி செல்வராணியுடன் இன்று பகல் 12.30 மணிக்கு வடபழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–


என் மனைவியை இதுவரை வெளி உலகுக்கு நான் அறி முகப்படுத்தியதில்லை. இப்போது அறிமுகம் செய்கிறேன். இதுதான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. எனவே என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன்.


மகளை தோழியாக பார்க்க வேண்டும், சுதந்திரமாக நடத்த வேண்டும், காதலித்தால் எதிர்க்க கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். நானும் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். இன்று வரை என் இளைய மகளுக்கு நாங்கள் என்ன ஜாதி என்று சொன்னதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளைய மகள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தது. எனவே செல்லமாக வளர்த்தோம். 


அவருக்கு 18 வயதில் காதல் வந்தது. நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம். அதன்பிறகு பையனைப் பற்றி விசாரித்தோம். அவனது பின்னணி பயத்தை ஏற்படுத்தியது. இருதய நோயுள்ள தாயுடன் வாழ்ந்தான். வேலை இல்லை. நான் நேரில் பையன் (சந்துரு) குடும்பத்தினரை சந்தித்தேன். மாதம் 10, 15 ஆயிரம் சம்பளத்துக்கு வழி செய்து கொள். வாழ்க்கையில் முன்னேறிக்காட்டு. 3 வருடத்துக்குப்பின் திருமணம் செய்து வைக்கிறேன். அது வரை இருவரும் வெளியில் சுற்றாமல் இருங்கள் என்றேன். அதை ஏற்றுக் கொண்டான்.

ஆனால் எனக்கு தெரியாமல் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எனது மகளை எங்களுக்கு எதிராக தூண்டி விட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்து விடுவேன் என்று என் மகளையே என்னிடம் பேசச் செய்தான். உடனே நான் போன் செய்து அவனுடன் மகளை பேச வைத்தேன். எந்த அப்பனும் செய்யாததை செய்தேன். பிறகு அவன் நடவடிக்கைகள் வேறு மாதிரி இருந்தது. நிறைய பொய் பேசினான். என் மகளிடம் பேசக் கூடாது என்று சொன்ன நாட்களில் வேறு சில பெண்களுடன் இரவு வெகு நேரம் சந்துரு பேசி இருக்கிறான். அந்த ஆதாரங்களை திரட்டினோம்.

என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.

எழில் இயக்கும் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று மகளே என்னிடம் கூறினாள். என் மகளை வைத்து சொத்துக்களையும் பணத்தையும் பறிக்க திட்டமிட்டு இருப்பதை உணர்ந்தேன். அவனை அடிக்கவில்லை. கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை. என் மகளே ஒரு கட்டத்தில் மனம் மாறி அவனை வேண்டாம் என்றாள். இப்போது திடீர் என்று அவளது மனதை மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான்.

இவ்வாறு சேரன் கூறினார்.

டைரக்டர் அமீர் கூறும் போது, ‘‘சந்துரு நல்லவன் அல்ல. குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. 3 பெண்கள் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். நல்ல குடும்பம் என்றால் நானே சேர்த்து வைப்பேன். குடும்ப பின்னணியை உளவுத்துறை கண்டு பிடிக்க வேண்டும் என்றார். சேரனும், மனைவியும் அழுது கொண்டே பேட்டி அளித்தார்.டைரக்டர் சேரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து அளித்த புகாரில், தாமினியின் காதலன் சந்துரு மீது பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். 3 பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தனது மகள் தாமினியின் ‘பேஸ்புக்’ விஷயங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டும், அல்லது பெரிய தொகையை எனக்கு தர வேண்டும். இல்லையென்றால் உனது குடும்பத்தை அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் சந்துரு மிரட்டியதாக சேரன் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் தாமினி பற்றி பேஸ்புக்கில் ஆபாசமான தகவல்களை வெளியிடுவேன் என்று சந்துரு மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குற்றச் சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று சேரன் கோரிக்கை விடுத்துள்ளார். 
எனது பெயரை கெடுக்க சேரன் சதிதிட்டம்: தாமினியின் காதலன் பேட்டிஇது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சேரனின் குற்றச்சாட்டு குறித்து தாமினியின் காதலன் சந்துரு இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:–

நான் சினிமாவில் டான்சராக உள்ளேன். மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளேன். என்னை பற்றி தவறான பல தகவல்களை சேரன் கூறி இருக்கிறார். நான் குடிகாரன் என்றும், பல பெண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி உள்ளார். என்னை பற்றி தாமினிக்கு தெரியும்.

நான் நல்லவன் இல்லை என்று அவர் கூறட்டும். எங்கள் இருவரையும் பிரிப்பதற்கு டைரக்டர் சேரன் சதி திட்டம் தீட்டி செயல்படுகிறார். நாங்கள் இருவருமே சேர்ந்து வாழ விரும்புகிறோம். எனவே போலீசார் இதற்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தாமல் எங்களை சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

இது தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் குடும்பவிசயம்! சேரன் சினிமாக்காரர் என்பதால் மீடியாக்கள் பெரிதுபடுத்துவதாக எண்ணுகிறேன்! ஒரு தந்தையின் நோக்கில் இதைஅணுகினால் பிரச்சனையின் தீவிரம் புரியும்!