Sunday, August 18, 2013

பாலிவுட்டின் இரவு விருந்து கலாச்சாரம் கோலிவுட்டிலும் ( singam2 )

ஆடி ஆடி மயங்கிய நடிகைகள்!


'இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்' என்பது பாலிவுட்டில் அடிக்கடி நடக்கிற சமாச்சாரம்! எதற்காக உற்சாக பானத்தோடு ஒரு பார்ட்டி? இந்த கேள்விக்கெல்லாம் அங்கே இடமே இல்லை! பிறந்த நாள்... ஆடியோ ரிலீஸ்... படத்தின் வெற்றி... படத்துக்கான ஆரம்ப சூட்டிங்... இப்படி எதற்கெடுத்தாலும் அங்கே உற்சாகத்தோடு இரவு பார்ட்டி என்பது நட்சத்திர ஓட்டல்களில் அமர்க்களப்படுவது வாடிக்கையான ஒன்றுதான்! திரை நட்சத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் கட்டித் தழுவி ஆடி ஆடி அசந்தே போய், தள்ளாடியபடியே காரில் ஏறி வீட்டுக்கு போகும்போது விடிந்தே போய் விடுமாம்!
 இது பாலிவுட் நட்சத்திர பிரபலங்களுக்கு பழகிப் போன ஒன்றாக இருக்கலாம்! ஆனால் அதே போன்று ரேஞ்சுக்கு தமிழ் திரை உலகம் ஒரு புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்து இருக்கிறது சமீப காலமாக! 100 பேர் என்றால் நட்சத்திர ஓட்டல்! 10 பேர் என்றால் நடிகர்கள் வீட்டில்! என்கிற அளவில் விருந்தும், மருந்தும் தினசரி சம்பவமாக மாறி வருகிறது தமிழ் சினிமா உலகம்! ஆட்டம்! பாட்டம்! கூத்து... கும்மாளம் என்று விடிய விடிய இந்த இரவு பார்ட்டி அமர்க்களப்படுகிறதாம்! ஒரே ஒரு போன் கால் போதும்... ஓடி வர காத்திருக்கிறது உற்சாகத்தில் மிதக்க ஒரு நட்சத்திர கூட்டம்! தீயாக வேலை செய்து சமீபத்தில் வெளிவந்தது ஒரு படம்! முதல் நாள் காட்சியிலேயே முண்டியடித்த கூட்டத்தையும், காமெடி சீன்களில் எழுந்த கைதட்டலையும், கவர்ச்சியூட்டும் பாடல்கள் வந்தபோது எழுந்து குத்தாட்டம் போட்ட ரசிகர்களையும் தியேட்டரில் நேரில் பார்த்ததும்... ஆகா, படம் சக்ஸஸ்! என்று துள்ளிக் குதித்தது படத்தின் தயாரிப்பாளர் மட்டும் அல்ல; இயக்குநர் உள்பட எல்லோருமேதான் என்கிறார்கள்! அன்று இரவு அவசர அவசரமாக ஒரு சக்சஸ் பார்ட்டிக்கு ஏற்பாடானது! அண்ணாசாலையில் ஹாயாக உயர்ந்து நிற்கும் ஒரு நட்சத்திர ஓட்டலில் சம்பந்தப்பட்ட படக் குழுவினர் மட்டும் அல்ல! நண்பர்கள் வட்டாரம் என்று ஒரு பட்டாளமே அங்கு திரண்டது! வெற்றி வெற்றி என்ற கோஷத்தோடு உற்சாக வெள்ளத்தில் மிதந்தார்களாம் அத்தனை பேரும்! ஆடிய ஆட்டத்தில் நேரம் போனதே தெரியாமல் ஒவ்வொருவராக காரில் ஏறி பறந்தபோது அதிகாலை 3 மணி என்கிறார்கள்! இதேபோல நடந்த இன்னொரு இரவு பார்ட்டி ரொம்பவே விஷேசமானது என்றார் அதில் கலந்துகொண்ட ஒருவர்! சங்கமாய் சிலிர்த்த படம் அது! தியேட்டரில் அலை மோதியது கூட்டம்! விசில் சப்தம் விண்ணைத் தொட்டது! காட்சிக்கு காட்சி கைதட்டல்! படம் மிகப்பெரிய வெற்றி! வசூலில் சக்கை போடு போட்டு சாதனை படைக்கப் போகிறது என்ற கருத்து கணிப்பு காலையிலேயே வந்து சேர்ந்தது சம்பந்தப்பட்டவர்களுக்கு...! ஆந்திராவிலும் அதேபோன்றுதான்! வெற்றிப் படம் என்ற தகவல் வந்த வண்ணம் இருந்தது! இந்த மகிழ்ச்சியை எப்படி கொண்டாடி மகிழ்வது? படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பட்டியலே ரொம்ப பெரியது. அதற்கு மேல் நட்பு வட்டாரம்... நட்சத்திரங்கள், நடனமணிகள் எல்லோரும் அழைப்பு பறந்தது. 3வது நாளிலேயே அழைக்கப்பட்டவர்கள். ஒன்றாக கூடினார்கள்! வெள்ளை மாளிகை மாதிரி ஒரு பிரபலமான பார்க்கான ஓட்டலில் நடந்ததாம் அந்த இரவு விருந்து!
 இப்படி ஒரு வெற்றிக்காக எதிர்பார்த்து காத்திருந்த கதாநாயகனே மகிழ்ச்சியோடு எல்லோரையும் அலைபேசியில் அழைத்தபோது தட்டாமல் ஆஜர் ஆனார்களாம் அத்தனை பிரபலங்களும்! இதில் பெண் நட்சத்திரங்களின் பட்டியலே பெரியது என்கிறார்கள்! பாதி வெளிச்சத்தில் இரவு முழுவதும் ஆடிய ஆட்டம், யாரோடு யார்?... எப்போது முடிந்தது என்றுகூட தெரியவில்லையாம் பல பேருக்கு! படமும் சக்சஸ்! பார்ட்டியும் சக்சஸ்! இவ்வாறு சக்ஸஸ் பார்ட்டி என்ற பெயரில் நடந்த இரண்டு விருந்தும் அந்த வாரம் முழுவதும் பரபரப்பான பேச்சாக இருந்தது சினிமா வட்டாரத்தில்!


 பாலிவுட்டின் இரவு விருந்து கலாச்சாரம், மெல்ல மெல்ல கோலிவுட்டிலும் பரவி வருவது நல்ல விஷயம் தானா? சொல்லுங்க-


thanx - dinamani 

0 comments: