Sunday, August 25, 2013

ரேப் செய்யப்பட்ட மும்பை ஃபோட்டோகிராஃபர் பர பரப்பு வாக்குமூலம்

என்னையும் நண்பரையும் கொலை செய்வதாக மிரட்டினர்: பெண் போட்டோ கிராபர் வாக்குமூலம்என்னையும் நண்பரையும் கொலை செய்வதாக மிரட்டினர்: பெண் போட்டோ கிராபர் வாக்குமூலம்


 மும்பையில் 5 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட 22 வயது பெண் போட்டோ கிராபர் நடந்த சம்பவம் பற்றி போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:–


நான் சக்தி மில்லில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் பற்றி படம் பிடித்து எழுதுவதற்காக 22–ந்தேதி (வியாழன்) மாலை 5 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டேன். என்னுடன் அதே பத்திரிகையில் பணிபுரியும் 21 வயது ஆண் நண்பரையும் துணைக்கு அழைத்துச் சென்றேன். எங்கள் இருவரிடமும் போட்டோ எடுக்கும் பணியை பத்திரிகை நிறுவனம் ஒப்படைத்து இருந்தது.மகாலட்சுமி ரெயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கினோம். 1–வது பிளாட்பாரத்தில் இருந்து நடந்து சென்று அதனையொட்டியுள்ள சக்தி மில்லை அடைந்தோம். அந்த இடம் பாழடைந்து புதர்கள் நிரம்பி இருந்தது. அப்போது நேரம் 5.30 மணி இருக்கும். உள்ளே சென்றால் பாதுகாப்பு இருக்காது என்று கருதினோம்.
அந்த சமயத்தில் மில் காம்பவுண்டில் இருந்து 2 பேர் வெளியே வந்தனர். மில்லுக்குள் செல்ல வழி இருக்கிறது என்று கூறி எங்களுக்கு வழி காட்டி ஒரு சுவரையொட்டியுள்ள பகுதி வழியாக அழைத்துச் சென்றனர். அதில் நடந்து செல்லக்கூடிய வகையில் பாதை இருந்தது. நாங்கள் அதன் வழியே சென்று சில போட்டோக்கள் எடுத்தோம்.


அவர்கள் இருவரும் தங்களை ரெயில்வே ஊழியர்கள் என்று அறிமுகம் செய்ததால் சந்தேகம் வரவில்லை. நாங்கள் மும்முரமாக போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம்.


அப்போது 3–வதாக ஒரு வன் வந்தான். அவனும் ரெயில்வே ஊழியர் என்று சொன்னான். நீங்கள் படம் எடுப்பதை எங்கள் அதிகாரி பார்த்து விட்டார். அவரிடம் வாருங்கள்’’ என்று எங்களை அழைத்தான். ‘‘சரி நாங்கள் வருகிறோம் என்று சொன்னோம். ஆனால் அவன் அதிகாரியிடம் அழைத்துச் செல்லாமல் தன்னுடன் வாருங்கள் என்று அழைத்தான்.


உடனே நான் பத்திரிகை அலுவலகத்துக்கு போன் செய்தேன். போன் கிடைக்க வில்லை. சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. எங்கள் பிரிவு பொறுப்பாளர் பேசினார். சில ரெயில்வே ஊழியர்கள் எங்களுடன் வாக்குவாதம் செய்யும் விவரத்தை தெரிவித்தேன். அவர் இனி அங்கு இருக்க வேண்டாம், புறப்பட்டு வாருங்கள் என்றார்.


உடனே நானும், நண்பரும் வெளியே செல்ல புறப்பட்டோம். அப்போது ஒருவன் திடீர் என்று எனது நண்பரை தடுத்து நிறுத்தினான். சில நாட்களுக்கு முன்பு இங்கு ஒரு கொலை நடந்தது. அந்த கொலையை செய்தவன் நீ தான் என்று மிரட்டினான்.


நான் அவர்களிடம் பேச முற்பட்டபோது என்னைப் பார்த்து சத்தம் போட்டு மிரட்டினான். எங்கள் இருவரையும் பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான். எங்களிடம் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா, செல்போன் இருக்கிறது எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினோம்.


அவர்கள் விடவில்லை. பெல்ட்டால் நண்பரின் கைகளை கட்டிப் போட்டான். அப்போது மேலும் 2 பேர் வந்து சேர்ந்து கொண்டனர். 3 பேர் நண்பருடன் இருந்து கொண்டனர். மற்ற 2 பேர் சுவரின் மறைவு பகுதிக்கு இழுத்துச் சென்றனர்.


அங்கு போனதும் எனது தாயாரிடம் இருந்து போன் வந்தது. உடனே ஒருவன் அவரிடம் இங்கு எல்லாம் நல்லபடியாக நடக்கிறது என்று சொல்லுமாறு மிரட்டினான். அதன்படி தாயிடம் சொன்னேன். அதன் பிறகு மீண்டும் தாய் போன் செய்தார். அப்போதும் ஒருவன் மிரட்டிய தால் தாயிடம் எல்லாம் சரியாக நடக்கிறது என்று சொன்னேன்.அதன் பிறகு 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக என்னை கற்பழித்தனர். முதலில் கற்பழித்தவன் கடைசியாக மீண்டும் ஒரு முறை கற்பழித்தான். அவர்களிடம் கடுமையாக போராடினேன். அவர்கள் பீர் பாட்டிலை உடைத்து வைத்துக் கொண்டு என்னையும், நண்பரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியபடி இருந்தனர். இதனால் எதுவும் செய்ய இயலவில்லை.


கடைசியாக எங்கள் இருவரது பையையும் சோதனையிட்டனர். எதையும் நாங்கள் திருடவில்லை. நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டி நான் எடுத்த போட்டோக்களை பறித்துக் கொண்டனர். பின்னர் ரெயில் தண்டவாளம் வழியாக நடந்து தப்பிச் சென்று விட்டனர்.


அதன் பிறகு நடந்த விவரங்களை கட்டிப் போடப்பட்டு இருந்த நண்பரிடமும், எனது அலுவலகத்துக்கும் தெரிவித்தேன். உடனே எனது நண்பர் என்னை ஐஸ்லோக் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தார்.


இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.

பாழடைந்த கட்டிடத்தில் நடந்தது என்ன ? கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் ‘போட்டோகிராபர்’ பரபரப்பு வாக்குமூலம்


:போட்டோ கிராபருக்கு பாலியல் கொடுமை: 5 குற்றவாளிகளும் கைது

 
 மும்பையில் பத்திரிகை பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் போலீஸ் காவல் வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பை, தெற்குபகுதியில், மகாலெட்சுமி ரயில்வே ஸ்டேஷன் அருகே, சக்தி மில் என்ற, பாழடைந்த கட்டடம் உள்ளது. இதை புகைப்படமெடுக்க, மும்பையிலிருந்து வெளியாகும், ஆங்கில பத்திரிகையின், 22 வயது இளம் பெண் போட்டோகிராபர், தன் ஆண் நண்பருடன், 22ம் தேதி இரவு சென்றார். அப்போது, ஐந்து பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும், பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது


5 குற்றவாளிகளும் கைது


20 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். முகமது அப்துல், சலீம் அன்சாரி, காஸிம் பெங்காலி, சிராஜ் ஷேக், விஜய் ஜாவத் ஆகிய 5 குற்றவாளிகளின் வரைபடத்தை வெளியிட்டு தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து மறுநாள் ( 23-ம் தேதி) முக்கிய குற்றவாளி, முகமது அப்துல் என்பவ ன் முதலில் கைதானான். இதையடுத்து நேற்று இருவரையும்,இன்று இருவர் என ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இன்று கைதான காஸிம் பெங்காலி, சலீம்அன்சாரி ஆகிய இரு குற்றவாளிகள் சிக்கினர்.இவர்களில் கடைசியாக சலீம் அன்சாரி, டில்லியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டான்.

இந்த வழக்கு மும்பை குறறப்பிரிவு போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது. முக்கிய குற்றவாளிகளில் 3-வது மற்றும் நான்காவது குற்றவாளிகள் , இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களின் காவல் ஆக.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதான குற்றவாளிகளில் ஒருவரான சிராஜ் ஷேக் என்பவன் வயது 16 என அவனது உறவினர்கள் கூறி வருகின்றனர்.

பெண் உடல்நிலை முன்னேற்றம்

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் போட்டோகிராபர், மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு பெண் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து கண்காணி்தது வருகின்றனர்.அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மும்பையில் நேற்று முன்தினம் இரவு புகைப்பட பத்திரிகையாளரை 5 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் குற்றவாளி சந்த் ஷாயிக்கை போலீசார் நேற்று முன்தினம் இரவே கைது செய்தனர்.

அதன்பின்னர் விஜய் ஜாதவ் என்ற குற்றவாளி இன்று காலையில் பிடிபட்டான். அவர்கள் இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் குற்றவாளியான சந்த் ஷாயிக், சிறுவன் என்று அவனது பாட்டி தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. 16 வயது சிறுவனை 19 வயது வாலிபர் என்று போலீசார் சித்தரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் நபர்களில் 3-வது நபரான சிராஜ் ரஹ்மான் இன்று மாலை கைது செய்யப்பட்டான். அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் உடல்நிலை தேறி வருகிறது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய அவர், குணமடைந்த பிறகு மீண்டும் வேலைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார்.


நன்றி - மாலை மலர்

0 comments: