Sunday, August 25, 2013

ராஜா ராணி

 

 

புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய ‘ராஜா ராணி’

newly married couple must see Raja Rani
இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் படங்களில் உதவி இயக்குனராய் இருந்தவர் அட்லி. இவர் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ராஜா ராணி. இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: அறிமுகம் இல்லாத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைக்கும்போது அவர்களுக்குள் இருக்கும் ஈ‌கோ, திருமணத்திற்கு பிறகு அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சிறிது நகைச்சுவையுடன் கூறியிருக்கிறேன். இப்பொழுது பலர் வாழ்க்கையில் நல்ல புரிதலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இல்லாததால் விவாகரத்து அதிகரிக்கிறது. இதைத் தடுக்கும் விதத்தில் ஒரு ஸ்கிரிப்ட். ரொம்ப பாசிடிவ்வான படம். படத்தில் நல்ல புரிதல் தெரியும்.

படத்தின் கதையைக் கேட்டவுடன் ஆர்யா, ‘நான்  செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார். நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்த நேரம் என்பதால் அவரிடம் தயக்கத்துடன் கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் ‘நான் நடிக்கிறேன்’ என்று அவரும் ஒப்புக்கொண்டார். 3 வருடம் கழித்து ஒரு எனர்ஜியுடன் இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் ஆர்யா - நயன் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியுள்ளது. இப்படத்தில் ஜெய், நஸ்ரியாவும் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல மிகவும் சாதாரணமாக நடித்து அசத்தி இருக்கிறார்கள். ராஜாராணி படம் மக்களிடம் நல்ல அன்பையும் புரிதலையும் ‌சொல்லும் என்பது உண்மை.

இப்படத்தை 87 நாட்களில் முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிட்டோம். இந்த படத்திற்கு அதிகம் சப்போர்ட் செய்த முருகதாஸ் சாருக்கு நான் நன்றி சொல்லணும். அவர் இல்லாவிட்டால், நான் நினைத்தமாதிரி இப்படத்தை கொண்டுவந்திருக்க முடியாது. புது மணமக்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்‌.ராஜா ராணியில் ஜெய்யுடன் நெருக்கமான காட்சிகளில் நயன்தாரா

Jai - Nayanthara close in Raja Rani film
 இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் அட்லீ இயக்கும் ராஜாராணி படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்பட இருக்கிறது. படத்தில் ஆர்யாவும், நயன்தாராவும் திருமண கோலத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டு, அவர்கள் திருமணம் செய்யப்போகிறார்கள் என்ற பில்டப்பை எகிற விட்டு ஏகத்துக்கு பப்ளிசிட்டி அடித்து வருகிறார்கள். இதன் அடுத்த பகுதியாக தற்போது ஜெய்யும் நயன்தாராவும் நெருக்கமாக இருக்கும் படங்களை வெளியிட்டு அடுத்த பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள்.

இதுவரை படத்தில் ஜெய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்றுதான் சொல்லி வந்தார்கள். இப்போதுதான் அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. நயன்தாரா ஆர்யாவுடன் நெருக்கமாக இருந்த படங்களை விட ஜெய்யுடன் இருக்கும் படம் இன்னும் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இதுவரை வெளிவந்த போட்டோக்களை வைத்து பார்க்கும்போது ஆர்யாவும் நஸ்ரியா நசிமும் நெருக்கமான காதலர்கள். அதேபோல ஜெய்யும், நயன்தாராவும் லவ்வர்ஸ். சந்தர்ப்ப வசத்தால் ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது. அதன்பிறகு அவர்களது பழைய காதலன் காதலி அவர்கள் வாழ்க்கையில் எப்படி வருகிறார்கள். அதனால் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது மாதிரியான கதை என்பதை யூகிக்க முடிகிறது.

இவர்களின் பில்டப்புகள் எல்லாம் ஓகேதான். அந்த அளவுக்கு படம் இருக்குமா? என்பதுதான் ரசிகனின் கேள்வி.ஆர்யாவும், நயன்தாராவும் புகுந்து விளையாடிட்டாங்க! கிளுகிளுப்பேற்றும் ஜெய்!!

Arya-Nayanthara has more romance says Jai
திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களிலுமே ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நஸ்ரியா நசீம். இந்த படங்களில் ராஜா ராணியில் அவர்களுக்கிடையிலான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,. இதுகுறிதது ஜெய்யிடம் கேட்டால், அதெல்லாம் எதுவும இல்லை சார். நஸ்ரியாவுக்கும், எனக்கும் காதல் ட்ராக்தான் என்றாலும், ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல்தான் எங்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்று சலித்துக்கொள்கிறார்.

அதேசமயம், ராஜாராணியில் ஆர்யா-நயன்தாராவின் ரொமான்ஸ் பற்றி சொல்லும்போது அவரது விழி விரிந்து போகிறது. அடேங்கப்பா, அவங்களுக்கிடையே என்னவொரு கெமிஸ்ட்ரி. அதுவும் புதுசா கல்யாணமான தம்பதிகளாக படத்துல நடிச்சிருக்காங்க. அதனால் அவங்க ட்ராக்குல கிளுகிளுப்புக்கு பஞ்சமே இல்லை. ரெண்டு பேருமே புகுந்து விளையாடியிருக்காங்க.

ஆர்யா, நயன்தாரா ரெண்டு பேரும் ரொம்ப நல்லா ஒத்துழைச்சிருக்காங்க. அதனால் அவங்களுக்குத்தான் இந்த படத்துல அதிக நெருக்கமான காட்சிகள் இருக்கு. அதனால் ஆர்யா-நயனோட அட்டகாசத்தை பார்க்கிறவங்க நானும், நஸ்ரியாவும் நடிச்சதையெல்லாம் நெருக்கம்னு சொல்லவே மாட்டாங்க என்கிறார் ஜெய்.


திருமண உறவு எட்டிக்காயா..? - பதில் சொல்கிறது ராஜா ராணி

Raja Rani explains about marriage life
திரை உலக வல்லுனர்களால் ‘பிரகாசிக்கக்கூடியவர்’ என கணிக்கப்பட்ட அட்லீ இயக்கும் படம் ‘ராஜா ராணி’. ‘ஆர்யா - நயன்தாரா திருமணம்’ விளம்பரம் மூலமாகவும், எந்தக்கதை என்பதை ஊகிக்க வைப்பதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ராஜா ராணி. தன்னைப்பற்றியும் தன் படத்தைப்பற்றியும் படத்தின் இயக்குனரான அட்லீ மனம் திறக்கிறார்.

இது திருமணத்திற்குப் பின் உள்ள காலகட்டத்தைப் பற்றிய குடும்ப படமாகும். திருமண உறவை எட்டிக்காயாய் பாவிக்கும் இளைஞர்களின் மனதை மாற்றும் படமாக இருக்கும். ஆர்யா - நயன்தாரா பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்வதிலும், உதவி செய்வதிலும், வாஞ்சையுடன் அழைப்பதிலும் அவர்களுக்குள் திரையைத் தாண்டிய ஒரு உறவு பட்டவர்த்தனமாக இருப்பது தெரிகிறது.

என் விளம்பர யுத்திக்கு அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு மிக அருமை. இந்த படத்தின் கதையைப் பற்றிய சர்ச்சைகள் என்னை காயப்படுத்தினாலும், தரமான படத்தைக் கொடுப்பதே இதற்கான மருந்து என உணர்ந்து உழைக்க ஆரம்பித்தேன். நான் சங்கர் சார் பாசறையில் பயின்றவன் என்ற பெருமை எனக்கு உண்டு. கதையைக் கேட்டவுடனேயே என் மேல் நம்பிக்கை வைத்து படம் பண்ணலாம் என்று கூறி எனக்கு அட்வான்ஸ் கொடுத்த முருகதாஸ் சாரையும் என்னால் மறக்கமுடியாது.

பாக்ஸ் ஸ்டார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு நான் படம் செய்யும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்‌லை. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் மற்றும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இருவரும் முக்கிய தூண்கள். இப்படத்தில் ஆர்யா, ஜெய், சத்யன், சந்தானம், நயன்தாரா மற்றும் நசிரியா நசீம் ஆகியோர் நடித்துள்ளதை வைத்தே இது எவ்வளவு பெரிய படம் என்பது தெரியவரும்.

ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும், செப்டம்பர் மாதம் படமும் வெளியிடப்பட உள்ளது. இப்படம் நிச்சயம் இளைஞர்களக் கவரும் என்று கூறுகிறார் அட்லீ.

ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா கோபம்!!

Nayanthara angry over Raja Rani wedding invitation
நயன்தாராவுக்கும், ஆர்யாவுக்கும் திருமணம் நடக்கப் போவதாக போலி அழைப்பிதழ் அனுப்பியதால் டைரக்டர் முருகதாஸ் மீது கோபத்தில் இருக்கிறாராம் நயன்தாரா. சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களுக்கு ஒரு திருமண அழைப்பிதழ் வந்தது. அதில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என்ற ஆங்கில வாசகத்துடன் நயன்தாரா விரலில், ஆர்யா மோதிரம் அணிவிப்பது போல் படமும் அதில் இடம் பெற்று இருந்தது. இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு டி.வி. சேனல்கள் செய்தி வெளியிட்டன. இதனால் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விசாரித்த போது ராஜா ராணி படத்தின் விளம்பரத்துக்கு அது வெளியிடப்பட்டது தெரிய வந்தது. இப்படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். படத்தின் பப்ளிசிட்டிக்காகவும், டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காகவும் அப்படி ஒரு திருமண அழைப்பிதழை ஏ.ஆர்.முருகதாஸ் அச்சிட்டு வெளியிட்டு இருந்தார். நயன்தாரா ஒப்புதலோடு இதை வெளியிட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. போலி திருமண அழைப்பிதழ் விவகாரம் நயன்தாராவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாம். ஏ.ஆர்.முருகதாசை போனில் தொடர்பு கொண்டு சண்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாராவை தூக்கி, தமிழ் நடிகைகளை தாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ்! - ராஜா ராணி ஆடியோ விழா அப்செட்!!

Raja Rani movie Audio upset
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது!
இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், கால்ஷீட் சொதப்பி இவ்விழாவிலும் கலந்து கொள்ளாத நஸ்ரியாவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக, பொதுவாக தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி மிக்கவர்கள், தான் உண்டு தன் வேலையுண்டு என்று அலட்டி கொள்ளாமல் ஷூட்டிங்கிற்கு வந்து போவார்கள். நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கல்ல! இதை இப்போது புதிதாக வரும் மலையாள நடிகைகளும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளாவில் இருந்து சமீபமாக இறக்குமதியாகி இப்படத்திலும் நடித்து கால்ஷீட், சொதப்பிய நஸ்ரியாவை தாக்கினார். கூடவே மற்ற தமிழ் நட்சத்திரங்களையும் தாக்கி பேசியது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது!

அதேமாதிரி ஆர்யா தன் ஜோடி நயன்தாரா பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடாமல் பேசியதும், ஜெய்-நஸ்ரியா ஆப்செண்ட் ஆனதும் ராஜா ராணி ஆடியோ விழாவை அப்செட் ஆக்கிவிட்டது! பாவம்!!


thanx- dinamalar


1 comments:

'பரிவை' சே.குமார் said...

ராஜாவும் ராணியும் நல்லாயிருக்கட்டும்.