Saturday, August 24, 2013

திருமாவளவனை குருமா ஆக்கிய கோவை கில்மா லேடி ,அரசியல் உலகம் அதிர்ச்சி

 

கோவை: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, கவிதா என்ற பெண் கோவை போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சுந்தரத்தின் மகள் கவிதா. இவர், திருமணமாகி விவாகரத்து பெற்று தனியாக கணபதி பகுதியில் வசித்து வருகிறார். மேலும், எஸ்.டி.கே.எஸ் என்ற பெயரில் நர்சரி பள்ளி ஓன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கவிதா, இன்று கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை அளித்தார்.


இது குறித்து கவிதா நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் திருமாவளவனை சந்தித்தபோது எங்களுக்கு நட்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, என்னை திருமணம் செய்து கொளவதாக திருமாவளவன் கூறி ஏமாற்றி விட்டார்.

மேலும், திருமாவளவன் ஆதரவாளார்கள் விஜயகுமார், சவுந்தர்ராஜன், கார்த்திக், ஜெயந்தி, சந்துரு உள்ளிட்டோர் மூலம் எனது பள்ளியை அபகரித்து விட்டனர். அதேபோல், எனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்க முயல்கின்றனர். திருமாவளவனை திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன். ஆனால், திருமாவளவன் எனது சொத்துகளுக்காக காதல் நாடகமாடி அபரிக்க முயல்கிறார்.

அதேபோல், எனக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் இருந்து கொலை மிரட்டல் வருகிறது. என்னை ஏமாற்றி வாங்கப்பட்ட சொத்துகளை மீட்டு தருவதுடன் எனக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன். நான் தத்தெடுத்து வளர்த்து வரும் குழந்தையின் பிறந்தநாள் விழாவில் கூட திருமாவளவன் கலந்து கொண்டிருக்கிறார்.காதல் நாடகமாடி, தனது ஆதரவாளர்கள் கார்த்திக் உள்ளிட்டவர்களின் ஆதரவுடன் என்னை ஏமாற்றிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

கவிதாவின் மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.


பிரபல அரசியல் கட்சித்தலைவர் மீது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 மக்கள் கருத்து


 1.காதல் ஜோடிகளை உருவாக்கி கட்ட பஞ்சாயத்து பண்ணி வரும் பணத்தில் திருமாவுக்கும் கப்பம் கிடைக்குமே? அப்புறம் எதற்க்கு தனியா ஒரு பெண்ணிடம் ஆட்டய போடுறாரு?
2.மக்களுக்கு உழைக்கும் தலைவர் மீது வன்மம் கக்கத் தொடங்கி விட்டது. என்னதான் புழுதிவாரி தூற்றினாலும் தூய தொண்டின்முன் எதுவும் நிற்காது.

திருமாவை தமிழகம் அறியும் ....தன்னலம் அறியா உழைப்பாளி...இந்த நாடும் ஏடும் அறிந்தது...யாராக இருப்பினும் அவர்களின் மாண்பைக் குலைக்கப் பரப்பப்படும் பச்சை அவதூறுகளை ஊடகங்கள் தவிர்க்க வேண்டுகிறோம் ...

திருமா
சாதி ஒழிப்பின் சரியான அடையாளம்...
களங்கங்கள்
அவரைக்
காயப்படுத்தாது..3. ஏம்மா, தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடாம இப்படி கேஸ் போட்டிருக்கீங்களே? என்ன ஆச்சு உங்களுக்கு?4. திருமாவளவன் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்த மாமனிதன். இந்தக் கலியுகத்திலும் தனக்குத் திருமண வாழ்க்கையே வேண்டாம் என்று எண்ணி மக்கள் தொண்டே மகத்தான பணி என்று உதாரண அரசியல்வாதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாமனிதன். திருமாவளவன் சரி என்று சொன்னால் எத்தனையோ பெண்கள் அவரைத் திருமணம் முடிக்கத் தயாராக இருக்கிறார்கள். அவரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க ஒரு சில அற்பப் புத்தி கொண்ட அரசியல்வாதிகள் எடுத்திருக்கும் ஆயுதமே இந்தப் புகார். இது போன்ற புகார்களை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் புறந்தள்ளி, தமது உயரிய மக்கள் பணியைத் தொடர்வதுதான் திருமாவளவனுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அழகு. 5. இதற்கும் சிபிஐ விசாரணை கேட்காமல் இருந்தால் சரி. சாதி பெயரை சொல்லி நாடகம் ஆடும் இவர்கள் இந்த பெண்ணின் குற்றசாட்டுக்கு என்ன பதில் தர போகிறார்கள் ?. சொத்துக்களை இழந்த இந்த பெண் பொய் சொல்ல வாய்ப்பில்லை. இவர் பாணியிலேயே..... நீதி அரசர் தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைத்து விசாரணை அறிக்கையை நீதி மன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.6. நிச்சயமாக உண்மையாக தான் இருக்கும். ஒரு பெண் நேரடியாக போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் அளிக்கிறார் என்றால் பொய்யாகவா இருக்கும்?. இவரிடம் ஏமாந்த இந்த பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் பள்ளியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். . வீ. சி கட்சியினர் சொத்துக்கள் எவ்வளவு என்பது தெரியுமா?? சாதி ரீதியாக கட்ட பஞ்சாயத்து செய்வதை இனி மேலாவது தடுத்து நிறுத்த வேண்டும். இளவரசன் மரணத்திற்கு நேர்மையான போலீஸ் அதிகாரிகளை எவ்வளவு பாடாய் படுத்தினார்கள் இவர்கள். 7. திருமாவளவனைத் திருமணம் செய்து கொள்வதற்காகவே எனது கணவரை விவகாரத்து செய்தேன்" இதிலிருந்தே இந்தப் பெண்ணின் ஒழுக்கம் தெரியவில்லையா?


8. எது உண்மை என நம்ப முடிய வில்லைநன்றி  - விகடன்வெப்

0 comments: