Wednesday, August 14, 2013

கார்ட்டூன் போட்டி - கமெண்ட்ஸ் போட்டி -பட்டாசுபடப்போட்டிக்கான விதிமுறைகள்...

1. #Hiline என்ற டாக் ஒவ்வொரு கீச்சிலும் இருக்க வேண்டும்.

2. அறிவிக்கப்படும் வெற்றியாளார்கள், தங்கள் தொலைபேசி இலக்கத்தை [email protected] ற்க்கு அனுப்பினால் அடுத்து வரும் ஞாயிற்றுக் கிழமைக்குள் 500 ரூபாய் டாப் அப் செய்யப்படும்.

3. படத்திற்கு கவிதை, துணுக்கு, ஜோக் எதுவாக இருந்தாலும் ஒரு கீச்சுக்குள் எழுதலாம். டுவீட் லாங்கர் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


4. ஒருவர் எத்தணை முறைகளும் முயற்சிக்கலாம்.

5. அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் உடனேயே ப்லாக் செய்யப்படுவார்கள்.
6. 07/08/13 அன்று இந்திய நேரம் மாலை 6 மணிக்கு போட்டி முடிவடைகிறது.. 1. அனியத்திப்புறா ங்கற கவித்துவமான டைட்டிலை அனி அத்தையின் பிரா -னு டைட்டில் மாத்தி டப் பண்ணியது நீதானே? ராஸ்கல்ஸ்

---------------------------


2. தலைவா" என்ன லுக்கு? இது சும்மா " ஆரம்பம்" தான் ----------------------


3. சுறாவைக்கூட துணிச்சலா தியேட்டர்ல தனியா பார்த்த ஆள் நீ! புறாவைப்பார்த்து ஏன் இப்படி பம்முறே? ------------------------


4. லவ் பேர்ட்ஸ் னு எங்களைப்பாத்து யாரோ பாடுனாங்கன்னு  ராம்தாஸ் அய்யா எங்களைத்துரத்திட்டு வர்றார்.காப்பாத்துங்க


--------------------------5. பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் னு பாடிட்டு சிக்கன் சாப்டடு சாப்ட்டு எங்க இனத்தை அழிக்கும் இனம் நீ


------------------------------6. புறாவுக்கே பெல் அடிச்சவன்னு பஞ்ச் டயலாக் பேசுனியே.ஏன் டல் அடிச்சவன் போல் இன்னும் எழாம இருக்கே?--------------------


7.டேய்.பறக்கா வெட்டி.6 அறிவு உள்ளவன்னு அலம்பல் பன்றியே? எங்களை மாதிரி வானில் பறக்க முடியுமா? உன்னால்?


-------------------------------


8. மணிப்புறா, மாடப்புறா, கடல் புறா -னுசொல்லி எல்லாம் சேல்ஸ் பண்ண முடியாது, விஸ்வரூபம்ல நடிச்சபுறானு சொல்லுங்க  "---------------------------9. அமாவாசைன்னா காக்காவுக்கு சோறு வைக்கறீங்க , பவுர்ணமிக்கு  எங்களுக்கு வெச்சா என்னவாம் ? குறைஞ்சா போவீங்க?    "--------------------------10.   புறவழிச்சாலைமாதிரி  புறா வழிச்சோலை  உருவாக்கித்தரும் வரை  எங்கள் போராட்டம் தொடரும்  "
-------------------------


11. சிக்கனமாக்கட்டுன வீட்டைஎல்லாம் புறாக்கூ(ண்)டு மாதிரி இருக்குன்னு  சொல்லி எங்க இனத்தை கிண்டல் பண்றீங்களே நியாயமா?   "-----------------------------


12.  தானத்துக்கு உதாரண புருஷனாய் கர்ணன் இருக்கும்போது , , சமாதானத்துக்கு  உதாரண பொண்டாட்டியா நாங்க இருக்கக்கூடாதா?   "
---------------------------


13. தன் துணையைத்தவிர வேறு  இணை  தேடாத  ஒரே இனம் எங்க புறா இனம் தான் தெரியுமா? "-------------------------


14. புறாவைப்பார்த்ததுக்கே  இப்படிபயப்படறியே, சுறாவை 70 MMல க்ளோசப்ல  தனியா தியேட்டர்ல பார்த்திருந்தா  108 தான் வரனும்  "-------------------------


15. புற நானூறுதான் படிக்கலை , புறா நானூறாவது பாரு  "
----------------------


16. புற முதுகிட்டு ஓடியவன்  கோழைன்னா  புறா முதுகில் இட்டவனை என்னசொல்ல?   "----------------------


மேலேஉள்ளவை நான்   எழுதுனது , வெற்றி  பெற்றவர்  நம்ம நண்பர்


நாங்க இருந்த மரத்தைவெட்டி அந்த இடத்துல வீடுகட்டி மரத்துமேல நீ படுத்தா நாங்க எங்க போறது.. ""
Reply to