Showing posts with label சசிகுமார். Show all posts
Showing posts with label சசிகுமார். Show all posts

Wednesday, January 13, 2016

'தாரை தப்பட்டை' -இளையராஜா, பாலா யாரோட ஆதிக்கம் அதிகம் ?-சசிகுமார் சிறப்பு பேட்டி

  • இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
    இயக்குநர் பாலாவுடன் சசிகுமார்
  • ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
    ‘தாரை தப்பட்டை’ படத்தில் வரலட்சுமி, சசிகுமார்
சசி இப்போது சன்னாசி! தாடி, மீசை, தடாலடி பார்வை என ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக குருநாதர் பாலாவின் வார்ப்பில் கூடுதல் மிரட்டலைக் கொடுக்கிறார், சசிகுமார். மணிரத்னம் கணக்காக, படம் வெளியாகும்போது மட்டுமே தரிசனம் கொடுக்கும் சசிகுமார், ஒரு பின்னிரவு நேரத்தில் ‘தி இந்து’வுக்கு கொடுத்த சிறப்பு பேட்டி:




பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த நீங்கள், இப்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறீர்கள். இந்த திருப்பம் எப்படி இருக்கிறது?


என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் இது. ‘சேது’வில் உதவி இயக்குநராக என்னை சேர்த்துக்கொண்ட பாலா அண் ணன், ‘தாரை தப்பட்டை’யில் நாயகனாக்கி இருக்கிறார். சினிமாவில் ஒரு சிஷ்யனுக்கு குருநாதர் கொடுக்கும் பெரிய வரம் இது. என் சந்தோஷத்தையும் மனநிறைவையும் எந்த வார்த்தையாலும் சொல்லிவிட முடியாது. ஒரு பெருமூச்சு மாதிரி எல்லா நெகிழ்ச்சியும் என் நெஞ்சுக்குள் அப்படியே இருக்கு. நம்மளோட பழக லட்சம் பேர் கிடைப்பாங்க. ஆனா, நம்மளை நெறிப்படுத்த, வார்த் தெடுக்க சிலர் வாய்க்கிறது அபூர்வம். பாலா அண்ணன் அபூர்வம். ஒரு நடிகனா அவரோட ஒவ்வொரு அசைவிலும் நிறைய கத்துக்கிட் டேன்.



‘இங்க பார்... அப்படித் திரும்பு... கண்ணை சிமிட்டு’ன்னு சொல்வார். அவர் சொன்னதை அப்படியே செய்வேன். அதை திரையில் பார்க்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய மாயாஜாலத்தை செய்திருக்கிறார்னு தெரியும். ‘தாரை தப்பட்டை’க்கு அண்ணன் அழைச்சப்ப ஒரு நடிகனா நான் போய் நிற்கலை. அங்கேயும் ஒரு உதவியாளராத்தான் நின்னேன். ‘நடிகன்’, ‘தயாரிப்பாளர்’ங்கிறது எல்லாம் மத்தவங்க எனக்குக் கொடுக்கிற அடைமொழி. என்னைக்குமே அவர் பின்னால கைக்கட்டி நிற்கிற, அவர் சொல்றதை முதல் ஆளா செய்யுற ‘முந்திரிக்கொட்டை’ உதவியாளன் நான். இது போதும் எனக்கு.


இளையராஜாவின் 1000-வது படத்தில் நீங்கள் ஹீரோ? இதை எப்படி பார்க்கிறீங்க?


நல்லது கெட்டது எதுவானாலும் ஒவ்வொரு மனுசனுக்கும் இளையராஜா சிநேகிதனா இருக்கார். எல்லாத்துக்கும் நாம ராஜா சாரைத்தான் தேடுறோம். அவர் சோகத்தை கழுவுறார். காதலிக்க வைக்கிறார். நம்பிக்கையை உண்டாக்குகிறார். நாடி நரம்புகளில் புகுந்து என்னென்னமோ செய்கிறார். சமீபத்தில் ஒரு வாசகம் படிச்சேன். ‘ஏ.ஆர்.ரஹ்மான் லாங் டிரைவ் போனால்கூட இளையராஜா பாடலைத்தான் கேட்பார்’னு. நாம சொல்ல முடியாத சிலிர்ப்பை எவ்வளவு குறைவான வார்த்தைகளில் ஒரு ரசிகன் சொல்லிட்டு போயிட்டான். தலைவாழை இலை விருந்தில் ஒரு துவையல் மாதிரி ராஜா சாரோட 1000-வது படத்தில் நான் இருக்கிறது சிலிர்ப்பா இருக்கு.


பாலாவின் படம் என்றாலே வருடக்கணக்கில் ஷூட்டிங் இழுக்கும். அதேபோல்தான் ‘தாரை தப்பட்டை’ படமும். ‘தெரிந்தே சிக்கிட்டாரே சசிகுமார்’னு சினிமா உலகம் முழுக்க பேச்சு இருந்துச்சே?


சினிமா உலகில் ஆயிரம் பேசுவாங்க. அதே சினிமா உலகில் உள்ளவங்கதான் பாலா சார் படத்தில் ஒரு இடத்திலாவது தலை காட்ட முடியாதான்னு தவிச்சுட்டு இருக்காங்க. அவர் படத்தில் ஹீரோவாகிற வாய்ப்பு எனக்கு சீக்கிரமே கிடைச்சிடுச்சு. இதைத் தவறவிட நான் விரும்பலை. தவில், நாகஸ்வரம், டான்ஸ்னு நான் எல்லாத்தையும் மெனக்கெட்டு கத்துக்கிட்டேன். அதில்தான் கொஞ்சம் லேட் ஆனது. படம் எவ்வளவு திருப்தியா வந்துகிட்டு இருக்குங்கிறதை நேர்ல பார்த்தவன் நான்.


காலையில் ஏழு மணிக்கெல்லாம் முதல் ஷாட் வைப்பார். ஒரு நாளைக்கு ரெண்டு ஸீன் முடியும். 85 நாளில் முடிஞ்சிருக்க வேண்டிய படம் அது. எல்லாரும் பேயா வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறப்ப நானும் என்னோட ஈடுபாட்டை காட்டணும் இல்ல? அதனால ஒரு சண்டைக் காட்சியில் ரொம்ப மெனக்கெட்டு நடிச்சேன். மூட்டு நழுவி துடிச்சுப் போயிட்டேன். என் கை சரியாக நாலு மாசம் ஆச்சு. அதுவரைக்கும் பாலா அண்ணன் காத்திருந்தார். அப்படியிருக்க, அவர்தான் தாமதம் செஞ்சார்னு எப்படி சொல்ல முடியும். ‘தாரை தப்பட்டை’ தாமதத்துக்கு முழுப் பொறுப்பும் நான்தான்.



படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்திருப் பதற்கு வன்முறை காட்சிகள்தான் காரணம் என்கிறார்கள். ‘சுப்பிரமணிய புரம்’ தொடங்கி ‘ஈசன்’, ‘போராளி’ என உங் கள் படங்களில் தெறிக்கும் ரத்தத்துக்கு அளவே இல்லை. இது உங்களுக்கு சலிக்கவில்லையா?


யதார்த்தம்தான் என்னோட கதை. அப்படியிருக்க நாட்டுல நடக்குற வன்முறையை மட்டும் நான் எப்படி வடிகட்ட முடியும்? தினமும் பேப்பர் படிக்கும் போது தெறிக்காத ரத்தமா என் கதையில் தெறிக்குது? நடப்பில் இல்லாத கொடூரத்தை நான் காட்டியிருக்கேனா? அப்பட்டமா நடக்குற கொலையை இன்னிக்கு சேனல் களில் நேரடியாவே காமிக்க ஆரம்பிச் சிட்டாங்க. வாட்ஸ்அப்பில் பரவுற வன் முறை ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் வந்திடுச்சே. அதை எப்படித் தடுப்பீங்க? வன்முறையை என் படங்களில் நான் விரும்பி வைக்கலை. விரும்பாததால்தான் வைக் கிறேன்.



நிர்பயா கொலைக் குற்றவாளி விடுதலை ஆகிறார்... பெண்களை கொச்சைப்படுத்தும் பாடல்கள் வைரலாகின்றன‌... பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறதே... இவையெல்லாம் உங்கள் பார்வையிலோ, படைப்பிலோ வராதா?


நீங்க ‘ஈசன்’ பார்க்கலையா? தலைநகர் சென்னைக்கு வரும் ஓர் இளம்பெண் எப்படி சின்னாபின்னம் ஆகிறாங்கிறதுதான் கதை. ‘ஈசன்' வந்தப்ப ‘இப்படி நடக் குமா'ன்னு கேட்டவங்க‌, இன்னிக்கு ‘இப்படி நடக்கலாமா?’ன்னு கேட்கிறாங்க.


பெண் கள் மீதான வன்முறையும் கொடூரமும் ஒவ் வொரு இருட்டுக்குள்ளயும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. அதில், வெளியே வர்றதை மட்டும்தான் நாம பேசுறோம். நாகரிகம் வளர்ந்த அளவுக்கு நம்மகிட்ட நல்லெண் ணம் வளரலை. நிர்பயா வ‌ழக்கில் மட்டும் இல்லை... பெண்களுக்கு எதிரான அத்தனை பிரச்சினையிலும் மகளிர் அமைப்புகள் மட்டும்தான் இறங்கிப் போராடுறாங்க. இது மகளிருக்கான பிரச்சினை மட்டும்தானா? மனுஷங்களா பிறந்த அத்தனை பேரும் களமிறங்கிப் போராட வேண்டிய பிரச்சினை இல்லையா?


நன்றி - த இந்து

Sunday, May 18, 2014

இளைய தளபதி விஜய் ஒரு கடல் , அவருக்கு என் அடுத்த படம் ? - எம் சசிகுமார் கத்திக்குத்து பேட்டி @ த ஹிந்து

''ரொம்ப வேதனையான உதாரணம்தான். ஆனால், என்னோட சந்தோஷத்தையும் வலியையும் அப்படியே சொல்ல இதைவிட வேற உதாரணம் தெரியலை. அழகான குழந்தையைப் பெத்துக் கையிலக் கொடுத்திட்டு பிரசவக் காயத்துல செத்துப் போற அம்மா மாதிரி கையில தேசிய விருதுக்கான படத்தை எடுத்துக் கொடுத்திட்டு பாலு மகேந்திரா சார் இறந்திட்டார். அந்த விருதைப் பார்க்குறப்ப எல்லாம் சந்தோஷமும் துக்கமுமா மனசு ரெண்டுபட்டுப் போயிடுது." - பாலு மகேந்திராவின் நினைவுகளில் இருந்து இன்னமும் மீளவில்லை சசிகுமார். 'தலைமுறைகள்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர், இப்போது 'தாரை தப்பட்டை' படத்துக்காக பாலாவின் பட்டறையில். 



''முதுமை கொடுக்கும் பரிசு மரணம்னு பாலு மகேந்திரா சாரே சொல்லியிருக்கார். நீங்கள் இன்னமும் அந்த இழப்பின் வலியிலிருந்து மீளவில்லையே..?"


 
''சமீபத்தில் சென்னை ரயில்வே ஸ்டேஷன் குண்டு வெடிப்பில் செத்துப்போன சுவாதியோட மரணம் என்னை பெரிசா பாதிச்சது. திருமணம் நிச்சயமான அந்தப் பொண்ணு எவ்வளவு கனவுகளோட ரயிலேறி இருக்கும்? அந்த அப்பாவிப் பொண்ணைக் கொன்னதன் மூலமா பயங்கரவாதமும் தீவிரவாதமும் என்னத்தை சாதிச்சிடுச்சு? முன்பின் அறியாத யாரோ ஒருத்தரோட மரணம்கூட நம்மள உலுக்குறப்ப, மனசுக்கு நெருக்கமானவங்களோட இழப்பு எவ்வளவு பெரிசா வலிக்கும்? பாலு மகேந்திரா சார் எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொடுத்திட்டுப் போயிருக்கார். முதல்ல சார் என்னைப் பார்க்க விரும்புறதா பி.ஆர்.ஓ நிகில் சொன்னார். 'நானே வந்து பார்க்குறேன்'னு சொன்னேன். 'நான் உன்னோட ஆபிஸ்க்கு வாரதுதான் முறை'ன்னு சொல்லி அவரே கிளம்பி வந்து 'தலைமுறைகள்' கதையைச் சொன்னார். 



படத்தோட பட்ஜெட்டை அவர் சொன்னப்ப, 'இந்த சின்ன தொகைக்குள் எடுத்திட முடியுமா'ன்னு கேட்டேன். சொன்ன பட்ஜெட்டுக்குள் படத்தை முடித்துக் கொடுத்தவர், 'இதே மாதிரி சின்ன பட்ஜெட் படங்கள் நிறைய வரணும். கோடிகளில் இருக்கும் சினிமாக்கள் லட்சங்களுக்கு மாறனும். ஈரான், கொரியா படங்களை எல்லாம் நாம ஆச்சர்யமா பார்க்குற காலம்போய் நம்ம படங்களை அவங்க ஆச்சர்யமா பார்க்கணும்'னு சொன்னார்.



 ஒரு தயாரிப்பாளராக‌ படப்பிடிப்பிற்கு நான் போகவே இல்ல. நடிகனா ஒரே ஒரு நாள் போனேன். அன்றைக்கு நிறைய கூட்டத்தை வைத்து படப்பிடிப்பு. முதலில் கூட்டத்தை வைத்து எடுக்க வேண்டிய ஷாட் எல்லாம் எடுத்துட்டு, கடைசியா என்னைக் கூப்பிட்டார். ரொம்ப இலகுவா என்னோட போர்ஷனை முடிச்சார். 'அவளவுதானா சார்'னு ஆச்சர்யமா கேட்டேன். படத்தில் அந்தக் காட்சியோட உருக்கத்தைப் பார்த்து வியந்து போயிட்டேன். அன்றைய ஷூட்டிங் முடிந்த உடனே மேனேஜர் உதயகுமாரை கூப்பிட்டவர், 'இன்னிக்கு 600 பேர் கேட்டிருந்தோம். அதில ஒரு பொண்ணு வரலை. அதனால 599 பேருக்குப் பணம் கொடுத்தா போதும்'னு சொன்னார். ஒரு தயாரிப்பாளருக்கு எல்லா விதத்திலும் உதவுற படைப்பாளியா அவர் இருந்தார். நானும் அப்படி இருக்கணும்" 



''பாலு மகேந்திரா இளையராஜா மீது பேரன்பு கொண்டவர். இளையராஜா பற்றி உங்களிடம் ஏதும் சொல்லியிருக்கிறாரா?"


 
''நிறைய சொல்லியிருக்கார். 'இளையராஜா இல்லாம நான் வேலை பார்க்கவே மாட்டேன் சசி'ன்னு சிலாகித்துச் சொல்வார். 'ஒரு காட்சி எடுக்குறப்ப இதுக்கு பின்னணி இசை இருக்கக்கூடாதுன்னு நினைச்சு எடுப்பேன். அவரும் அப்படியே பண்ணிக் கொடுப்பார். என்னோட மெளனத்தைப் புரிஞ்சுகிட்டவர் ராஜா மட்டுமே'ன்னு வியந்து பேசுவார். சினிமாவில் ஒருத்தரை ஒருத்தர் புகழ்வது வழக்கமானதுதான். ஆனால், இளையராஜா சார் பற்றி பாலு மகேதிரா சார் பேசுவது ஆத்மார்த்தமும் உண்மையுமா இருக்கும்." 



''தேசிய விருது மட்டும் அல்லாது சர்வதேச விருதுகளையும் 'தலைமுறைகள்' பெற்றுக் கொடுக்கும் என்கிற பேச்சு இருக்கிறதே?"


 
''FMS எனப்படும் வெளிநாடு வியாபாரத்திற்கு நான் படத்தைக் கொடுக்காததற்குக் காரணமே சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காகத்தான். பாலு மகேந்திரா சார் இருக்கும்போது ஒரு சிலர் வந்து பல திரைப்பட விழாக்களைச் சொல்லி அங்கெல்லாம் படத்தை அனுப்பச் சொன்னார்கள். ஆனால், அதன் பிறகு அவர்கள் வரவே இல்லை. திரைப்பட விழாக்கள் சம்பந்தமான விவரங்களைச் சொல்லக்கூட இங்கே உள்ள யாரும் முன்வரலை. மலையாளத்தில் உள்ள சிலரும் இந்தியில் உள்ள அனுராக் காஷ்யப் மாதிரியான ஆட்களும் சொல்லித்தான் எனக்கு இது சம்பந்தமான விஷயங்கள் தெரிய வந்தது. இப்போ ஒவ்வொரு விழாக்களையும் தேடிப் பிடிச்சு படத்தை அனுப்பிகிட்டு இருக்கேன். கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்புவதற்குள் தேதி முடிந்துவிட்டது." 



''விருது குறித்த விவரங்கள் சொல்ல ஆள் இல்லையா? இல்லை, இங்கிருப்பவர்களுக்கு விருது குறித்த விவரங்களே தெரியவில்லையா?"


 
''தெரியும். நல்லாத் தெரியும். எங்கெங்கு விழாக்கள் நடக்கின்றன... எந்தெந்த பிரிவில் விருதுக்கு அனுப்பலாம் என்கிற விவரங்களைத் தெரிந்துகொண்டு அவர்களின் படங்களை மட்டும் அனுப்பிவிடுகிறார்கள். ஆனால், தவறியும் அடுத்தவர்களுக்கு இந்த விவரங்களைச் சொல்வதில்லை. ஒரு மலையாளப் படம் விருது வாங்கினால் அது கேரளாவுக்கே கிடைக்கிற பெருமையா இருக்கு. ஒரு ஆந்திரப் படம் விருது வாங்கினால் அது ஆந்திர மாநிலத்துக்கே கிடைக்கிற விருதா இருக்கு. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் அந்த மனசு இல்லை. ஒரு தமிழ்ப் படம் விருது வாங்கினால், அதைத் தமிழ்த் திரையுலகிற்கே கிடைத்த விருதாத்தானே பார்க்கணும்.



 அந்த மனசோ பெருந்தன்மையோ இங்கே பலருக்கும் இல்லை. பெங்காலியில் ஒரு படம் நல்லபடி வந்தால், 'அதை அங்கே அனுப்பு... இங்கே அனுப்பு'ன்னு சொல்லி அத்தனை கலைஞர்களும் தோளில் சுமந்து கொண்டாடுறாங்க. இதைச் சொல்வதால் சிலர் மனசு வருத்தப்படலாம். படட்டும்... ஆனால், இந்த ஆதங்கத்தைச் சொல்றதால் இனியாவது நல்ல படைப்புகளுக்கு நல்ல வழிகாட்ட அவங்க முன் வருவாங்கன்னு நம்புறேன். என்னாலான முயற்சியா திரைப்பட விழாக்கள் எந்த நேரத்தில், எங்கெல்லாம் நடக்கின்றன என்பதைத் தொகுத்து ஒரு புத்தகமா போடப் போறேன். நான் பட்ட சிரமத்தைப் புதுசா வாரவங்க படக்கூடாது!" 



''சசிகுமார் படம்னாலே நட்பு மட்டும்தான்னு சொல்றாங்களே?"


 
''சொல்லட்டுமே... அறிமுகப் படத்திலேயே நட்பை ஆழமா சொல்லிட்டதால் இந்தப் பேராகிடுச்சு. 'நாடோடிகள்' அதை இன்னும் உறுதியாக்கிடுச்சு. 'போராளி' நட்புக்கான படமே கிடையாது. ஒரு தனி மனுஷனோட போராட்டம் அது. 'சுந்தரபாண்டியன்' நட்புக்கான அடையாளப் படமா வந்து, அந்தப் பேரை இன்னும் வலுவாக்கிடுச்சு. 'குட்டிபுலி' அம்மா பையனுக்கான பாசத்தைச் சொன்ன படம். 'பிரம்மன்' மறுபடியும் என்னை நட்பு வட்டத்திலேயே நிறுத்திடுச்சு. அடுத்தடுத்த படங்களில் நட்பைத் தாண்டிய நிறைய விஷயங்கள் இருக்கும்." 



''பிரம்மன் சக்சஸ் ஆகாததற்கு யார் காரணம்?"


 
''நான்தான் காரணம். என்னோட தோல்விக்கு வேறு யாரையும் நான் கைகாட்ட மாட்டேன். என் மீது எத்தகைய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதே தெரியாமல் அந்தப் படத்தில் ரொம்ப சாதுவா கேரக்டரில் நடிச்சிருப்பேன். என்னோட படங்களில் பெரிய அளவுக்கு ஆக்ரோஷம் இருக்கும்னு நினைக்கிறாங்க. அதை 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' படங்கள் ரொம்ப உறுதியாக்கிட்டு போயிருச்சு.



 'நாடோடிகள்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'குட்டிபுலி' இப்படி என்னோட படங்கள் எல்லாமே ரொம்ப டென்ஷான படங்கள். 'எத்தனை நாள்தான் நானும் கத்தியைத் தூக்கிட்டு திரியுறது, வேறொண்ணு பண்ணிப் பார்க்கலாமே'னு நினைச்சுதான் 'பிரம்மன்' பண்ணினேன். அதில், நான் ரொம்ப தன்மையான பையனா நடிச்சது பலருக்கும் உடன்பாடு இல்லாமல் போச்சு. 'பிரம்மன்' படத்தை 'சுந்தரபாண்டியன்' படத்திற்கு முன்னாடியே பண்ணியிருந்தால் நல்லா போயிருக்கும்." 




''எப்படி ரெடியாகுது பாலாவோட தாரை தப்பட்டை?"


 
''இன்னும் ஷூட்டிங் கிளம்பலை. அதனால படத்தைப் பற்றி இப்ப சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அண்ணனோட படத்தில் நடிக்கப்போற பரவசம் மனசு முழுக்க இருக்கு. பாலா அண்ணன் என்னை நடிக்க அழைச்ச நாள்தான் ஒரு நடிகனா நான் அங்கீகரிக்கப்பட்ட நாள்." 



''விஜய்யை வைத்துப் படம் இயக்கப் போறதா கிளம்புற செய்தி உண்மைதானே?" 

 
''சந்தித்தது உண்மை. கதை விவாதம் நடத்தியது உண்மை. மற்ற எந்த விஷயங்களையும் நாங்க இன்னும் தொடங்கலை. விஜய் இன்னிக்கு கடல் மாதிரி விரிஞ்சு கிடக்குறார். டெக்னிகல் விஷயங்கள் தொடங்கி டெய்லி அப்டேட் வரை அவருக்கு அத்துப்படி. அவரை வழிக்குக் கொண்டு வரணும்னா நாமளும் ஒரு கடலாத்தான் மாறணும். மாறிட்டாப் போச்சு!" 


நன்றி - த இந்து 





  • sadhasivasaravanan  from Salem
    இன்று தமிழக பல திரைப்படங்கள் சிறு துளியும் சமுக அக்கறை என்பது இல்லாமல் வருமானம் ஒனறுதான் நோக்கம் கொண்டு செயல்பட்டு வருகிரகள்.தேசிய விருது இரண்டவது சமுக அக்கறை என்பது முதல் இருக்க வேண்டும் அது இன்று இல்லை.ஆபாசம்,அட்டகாசம்,அட்டவடி,இரட்டை வசனம் பாடல்கள்.படங்கள்,தமிழக திரைப்படங்கள் எல்லாம் கறை படியந்து உள்ளது.
    about 17 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
  • sivashanmugam Vasu retd.,deputy secretarytogovt., at Government of Puducherry from Pondicherry
    தராதரம் எது என்ற புரிதல் இடத்திற்கு இடம் / மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது .





Monday, June 03, 2013

குட்டிப்புலி - சினிமா விமர்சனம்

 

டீ ,காபி கூட குடிக்காம சுத்த சைவம் மட்டும் சாப்பிடும் எந்த கெட்ட பழக்கமும்  இல்லாத நல்ல பசங்களை இந்த பொண்ணுங்க கண்டுக்கவே மாட்டாங்க . தண்ணியைப்போட்டுட்டு  தெருவோரம் விழுந்து கிடக்கும் பன்னாடைப்பரதேசிங்க , ஊர்ல சண்டித்தனம் , ரவுடித்தனம் பண்ணிட்டு திரியும் ரவுடிங்க , பொறுக்கிங்க , மொள்ள மாரிங்க இவங்களைத்தான் விழுந்து விழுந்து காதலிப்பாங்க . அப்படி ஒரு  கிராமத்து ( நல்ல)ரவுடியை காதலிக்கும் ஹீரோயின் என்ன ஆகறாங்க என்பதே கதை . 


இப்படியே கதை சொல்லிட்டா போர் அடிச்சுடும் என்பதால் அம்மா செண்ட்டிமெண்ட்ஸை அப்படியே மாங்காய் துண்டுகள் ல மிளகாய்ப்பொடி தூவுவது மாதிரி தூவி இருக்காங்க .


 அம்மா மீது அதீத பாசம் உள்ள ரவுடியா எம் சசிகுமார் அசால்ட்டாக நடிக்கிறார். டி ஆர்க்குப்பின் வெள்ளித்திரையில் வெற்றிப்பவனி வரும் தாடிக்காரர்.


 எம் சசிகுமாருக்கு கிடைக்கும் ஆடியன்ஸ் வரவேற்பு ஆச்சரியம் அளிப்பதாய் இருக்கு . தியேட்டரில் அவர் பேசும் வசனங்களுக்கு , சில ரி ஆக்‌ஷன்களுக்கு அப்ளாஸ் மழை !!



 ஆனால் அவர் விருமாண்டி கமல் ரேஞ்சுக்கு முயற்சி செய்வதும் , எம் ஜி ஆர் மாதிரி தன் கேரக்டரை வடிவமைத்துக்கொள்வதும் ரொம்ப ஓவர் . இதே மாதிரி 4 படங்கள் வரிசையா வந்தா போர் அடிச்சிடும். பேட்டர்னை மாத்துங்க பாஸ்,,. 


பத்தாங்கிளாசே இப்போத்தான் படிக்கும் பக்கா ஃபிகர் லட்சுமிமேணன் தான் ஹீரோயின் . கும்கியில் கும்மென வந்த வர் இதில் இன்னும் கொஞ்சம் பூசிய உடம்பில் இருக்கார் . ( எல்லாம் ஒரு வெற்றிப்பரவசம் தான் ) .இவரது கனகாம்பர நிற உதடும் ,மயில் தோகையில் இருக்கும் கண் மாதிரியான மயக்கும் கண்ணும் ,  திருஷ்டியில் கூட அழகு சிருஷ்டியாய் அமைந்த கன்னத்து தழும்பும் வரப்பிரசாதங்கள் . இவரது ஆடை அணியும் அழகு படத்துக்கு படம் கண்ணியமும்  , அழகும் கூடுகிறது  சபாஷ்.. 

( வர்ணிப்பை நிறுத்திக்கறேன், லிமிட் தாண்டக்கூடாதாம் - ஃபோனில் உத்தரவு. பிளாக் ரெகுலரா படிப்பாங்களாம் , அவ்வ் ) 


ஹீரோவின் அம்மாவாக வரும் சரண்யா அக்மார்க் கிராமத்து சினிமா அம்மா. பல காட்சிகளில் இவர் எல்லாரையும் நடிப்பில் தூக்கி சாப்பிடுகிறார், க்ளைமாக்ஸில்  இவரது ஆக்ரோஷம் மட்டும் கொஞ்சம் செயற்கை . 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. வில்லன்கள் வம்புக்கு இழுக்கும்போது  தானே களத்தில் இறங்காமல் ஹீரோ ஒரு சின்னப்பையனை தடி வரிசை சுத்திக்காட்டச்சொல்லும் இடமும் , அந்தப்பையன் செம கலக்கலாக  சிலம்பாட்டம் ஆடுவதும் தியேட்டரில் கைதட்டல்கள் 6 நிமிடங்கள் அள்ளிக்கிச்சு.. செம பில்டப் சீன் .



2.  நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் சார்பாக ஹீரோ ஹீரோயினிடம் லவ் லெட்டர் கொடுத்துட்டு வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு வெட்க தயக்கத்துடன் ஓடும் காட்சி அக்மார்க் எம் சசிகுமார் முத்திரை . செம சிரிப்பு 


3. ஹீரோயின் - ஹீரோ மேல் ஆசைப்படுவது , காதலை நாசூக்காக வெளிப்படுத்துவது அதைத்தொடர்ந்து வரும் காதல் காட்சிகள் இதம்


4. டூயட்  காட்சிகளிலும் சரி , குத்தாட்டபாடல் காட்சிகளிலும் சரி  திரையில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடைகளில் கண்ணியமோ கண்ணியம். பார்த்து பார்த்து உடைகளை தேர்வு செய்த ஆடை வடிவமைப்பாளருக்கு ஒரு ஷொட்டு 


5.  சரண்யாவின் அம்மா பாச நடிப்பு தாய்மார்கள் மனதை தொடும் விதம் மிக இயல்பாக அமைத்தது  அதற்கு உயிரோட்டம் அளித்த சரன்யாவின் பிரமாதமான நடிப்பு 


6. ஹீரோவை விட ஹீரோயின் 6 செமீ உயரம் என்பதால் எப்போதும் லாங்க் ஷாட்டிலேயே  ஹீரோவை காட்டி சமாளிப்பதில் ஒளிப்பதிவாளருக்கு வெற்றி . சாமான்யனின் கண்ணுக்கு இருவரும் ஒரே உயரம் என்றே தோணும் 


7. இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களை  ஆங்காங்கே பயன் படுத்தி இருப்பது புத்திசாலித்தனம் ( உபயம் - சுப்ரமணிய புரம் - இரு பொன் மணி )

8. ஹீரோவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பில்டப்பை கொடுத்து க்ளைமாக்சில் வைத்த ட்விஸ்ட்


9. படிச்ச பொண்ணான ஹீரோயினிடம் படிக்காத ஹீரோ  மடிச்சு விட்ட லுங்கியை எடுத்து விட்டு வாத்தியாருக்கு சொல்வது போல் அடக்க ஒடுக்க மாக வணக்கம் போடுவதும் , பெருமிதம் கலந்த வெட்கத்தோடு ஹீரோயின் அதை ரசிப்பதும் செம செம 


10 . ஹீரோயினை காதலிக்க ஏங்கும்  அந்த 4 பசங்க பண்ணும் அலப்பறைகள் , திட்டங்கள் , கலட்டாக்கள் இன்று போய் நாளை வா, கண்ணா லட்டு தின்ன ஆசையா பாதிப்பென்றாலும் ரசிக்க வைக்கிறது


11. ஹீரோயினின் தோழியாக வரும் அந்த தெத்துப்பல் அழகி கவனிக்க வைக்கும் அழகு , நடிப்பு 


கீழே உள்ள ஸ்டில்லில் மஞ்சக்காட்டு மைனா தான் நான் சொன்ன ஹீரோயின் தோழி



இயக்குநரிடம் சில கேள்விகள்


1. தன்னை மாப்பிள்ளை பார்க்க வரும் பெண் வீட்டார் மேல் ஹீரோ வேணும்னே அவங்களை வெறுப்பேற்ற அவர்கள் மேல் வாமிட் எடுக்கும் காட்சி உவ்வே... இந்த மாதிரி காட்சியை சென்சார் எப்படி அனுமதிக்குன்னு தெரியலை . ஆபாசம் , வன்முறைக்காட்சிகளை கட் பண்ணுவது மட்டும் அவர்கள்  வேலை அல்ல  . இந்த மாதிரி அசூயையான காட்சிகளை கட் பண்ணுவதும் அவர்கள் வேலை தான் 


2. எம் சசிகுமாருக்குன்னு தனி பாணி இருக்கும்போது எதுக்கு பருத்தி வீரன் கார்த்தி பாடி லேங்குவேஜ் , விருமாண்டி கமல் மாதிரி அடிக்கடி மீசை முறுக்கும் மேனரிசம்? 


3. வீடே பற்றி எரியுது . ஹீரோ ஒரு பெட்ஷீட்டை போர்த்திட்டு அந்த பொண்ணை  அசால்ட்டாக ஒரு தீக்காயம் கூட ஆகாம காப்பாத்தறதெல்லாம் ரீலோ ரீல் 



4.  ஆடுகளம் படத்தின் பின்னணி இசையை ஆங்காங்கே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கும் வாகை சூடவா இசை அமைப்பாளர் ஜிப்ரான் பற்றி கண்டுக்கவே இல்லையே , ஏன்?


5. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் பி சி செண்ட்டர் ரசிகர்களை கவரும் விதத்தில் படமாக்கப்ப்ட்டிருந்தாலும் நந்தா ஸ்டைலில் சரன்யா  வரக் வரக் என வில்லனை கழுத்தை அறுப்பது ஓவர். இன்னும் கண்ணியமாக காடி இருக்கலாம் 


6. சரண்யா பேங்க்ல டெபாசிட் பணம் போட்டு வெச்சிருக்காங்க . அந்த பாண்ட் பேப்பரை அடமானமா வெச்சு கடன் கேட்கறாரு ஒரு பிரைவேட் ஆள் கிட்டே . அந்த இடத்துல ஒரு வசனம் . மெச்சூரிட்டி பீரியட் முடியாம பணம் எடுக்க முடியாது அப்டினு . அது தப்பு . எடுக்கலாம். வட்டி கட் ஆகும் அவ்வ்ளவுதான். இந்தக்காட்சியைப்பார்க்கும் பாமர ஜனங்க மனதில் பேங்க் பற்றி தவறான எண்ணம் ஏற்படும் .




மனம் கவர்ந்த வசனங்கள்
  
1. நீ குடுக்கற பரிசு பார்த்து அவ அப்படியே ஷாக் ஆகனும். 



அப்போ கரன்ட் கம்பியைத்தான் குடுக்கனும்



2.  நிஜ வாழ்க்கைல யும் சரி.சினிமாவிலயும் சரி.பொண்ணுங்க சல்லிப்பசங்களைத்தான் லவ்வு பண்ணுதுங்க



3. பல ஆபத்தான சந்தர்ப்பங்கள் அமைஞ்சும் நம்ம உயிருக்கு எதுவும் ஆகறது இல்லையே? அதுக்கு என்ன அர்த்தம்? மனிதனின் சாவு அவன் கைல இல்ல




4. லேடி -யோவ்.நான் சொன்னதை எப்பய்யா கேட்டே? பகல்லயும் சரி ,நைட்லயும் சரி



5.  ஒரு பொண்ணு நினைச்சா மட்டும் தான் நீயும் ,நானும் ,யாரும் ஆம்பளை.


6. குடிகாரப்பயலுக்கும் கோவக்காரப்பயலுக்கும் வாக்கப்பட்ட பொண்ணுங்க வாழ்க்கை வீணாத்தான் போகும்


7 பொண்ணு எப்பவாவது உன்னைப்பார்த்து வெட்கச்சிரிப்பு சிரிச்சா உன் மேல லவ்வுன்னு அர்த்தம்.எப்போ பாரு கெக்கெபிக்கேனு சிரிச்சா லூசுன்னு அர்த்தம்


8. ஆம்பளை கெட்டுப்போனா ( உதவாக்கரையா ) அவன் குடும்பம் தான் அழியும்.பொம்பளை கெட்டா அவ வம்சமே அழியும்


9. தரைல விழுந்த பூவை தலைல வெச்சா குடும்பத்துக்கு ஆகாது



10. கடவுள் இல்லாத கோயிலும் ,கரகம் இல்லாத திருவிழாவும் எதுக்கு ?




 


11.  நான் எதுவும் செய்யலையேம்மா? 

 ம்க்கும், செஞ்சிருந்தாத்தான் குழந்தை பொறந்திருக்குமே?


12. உன் கிட்டே வாழ முடியலைன்னு ஒருத்தி செத்துப்போனா நீ எப்படி ஆம்பளை ஆக முடியும் ? 


13. ஒரு ஆம்பளை தன்னை ஆம்பளைன்னு சொல்லிக்கறதை விட அவ பொண்டாட்டி அவனை ஆம்பளைன்னு சொல்லிக்கறதுல தான் பெருமை



14. நல்லவங்க எப்பவும் நல்லா இருக்கனும், அதுக்கு நாம குறுக்கே நிக்கக்கூடாது 


14. பெத்த அம்மா, கட்டிக்கப்போற பொண்ணு 2 பேரும் நல்லவங்களா அமைவது ஒரு ஆணுக்கு கிடைக்கும் வரம்


15.  என் பையன் சிங்கம் மாதிரி இருப்பான், ஆனா பேரு புலி 


16. டேய், அவன் கிஸ் அடிக்கறானே?  உதட்டை அப்படியே குடிக்கறானா? 


17. பொம்பளை சாபம் விட்டா புழுப்பூத்துத்தான் சாவோம்னு நம்பிக்கை உள்ளவன் நானு, அதனால உன் பாவம் எனக்கு வேணாம்

18. போலீசையே அடிச்சுட்டானா? ரைட்டு , இன்னைக்கு இருக்குடி கச்சேரி 


19. பொண்ணு முகம் மட்டும் லட்சணம் இல்லை , முழுசும் லட்சணம் தான் . 


20. அம்மா, எப்போ வேணாலும் சாவு வரும்னு தெரியற  என்னை மாதிரி ரவுடிங்க ஒரு பொண்ணை நினைக்கறது பாவம்மா.. 

 டேய்..  கல்யாணம் பண்ணிக்கறது பாவமா? 

 ஆமா, அது பெரும்பாவம் 





 


சி பி கமெண்ட் - குட்டிப்புலி - எம் சசிகுமார் ன் அதே பார்முலாப்படம் - ,பி .சி சென்ட்டர்களில் சுமாரா ஓடிடும்விருதாச்சலம் கலெக்டரே! ஊர்ல தியேட்டர்ல 70% பேர் சரக்கு அடிச்சுட்டு பார்சல் புரோட்டா சாப்ட்டுட்டு இருக்காங்க.என்ன பண்ணிட்டு இருக்கீங்க?( செக்ண்ட் ஷோ @ விருதாச்சலம் ) 


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 39


குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் -  2.75 / 5 




 


Wednesday, September 19, 2012

புரோட்டா சூரி பேட்டி @ கல்கி - சுசி , சசி, ரசி , வி வி சி

பரோட்டா சூரி
 http://www.mysixer.com/wp-content/uploads/2011/12/Soori.jpg
வளர்த்தது சுசியண்ணே... வார்த்தது சசியண்ணே!

சஞ்சய்

சாப்பாட்டு ஐட்டங்களில் எனக்குக் கொஞ்சங் கூடப் பிடிக்காதது பரோட்டாதான். ‘வெண்ணிலா கபடிக்குழுபடத்துல வர்ற காமெடிக்காக பதிமூணு பரோட்டாவை சாப்புட வெச்சார் சுசீந்திரன் அண்ணன். ‘களவாணிபடத்துல பஞ்சாயத்து வாயில பால் டாயிலு ஊத்துவோமே... அந்த மாதிரி கொலை முயற்சிதான் என்னைய பதிமூணு பரோட்டா சாப்புட வெச்சதும். ஆனா, இன்னிக்கு பரோட்டா சூரிங்கிற பேரே நெலச்சுப் போச்சு.


சாமி கும்பிடாதீங்கன்னு soன்ன பெரியார் எப்படி கடைசி வரைக்கும் ராமசாமிங்கிற பேரைச் சுமந்து அலைஞ்சாரோ... அந்த மாதிரிதான் என்னோட நெலமையும்..."- சோக்க வைக்கும் வட்டார வழக்கில் வயிறு குலுங்க வைக்கிறார் சூரி. ‘மனம் கொத்திப் பறவை’, ‘பாகன்’, ‘சுந்தரபாண்டியன்என சமீப காலப் படங்களில் தவிர்க்க முடியாத காமெடிச் சூறாவளி சூரிதான்.


இந்த வெற்றி எத்தனை வருடப் போராட்டத்தின் பலன்?


வருஷமாண்ணே முக்கியம்? ஒரு தடவை ஆபாவாணன் soன்ன வார்த்தைங்கதான் ஞாபகத்துக்கு வருது. ‘சினிமாவுக்கு வராட்டி நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருப்பீங்க?’ன்னு அவர்கிட்ட கேட்டாங்க. ‘சினிமாவுக்கு வர முயற்சி பண்ணிக்கிட்டு இருப்பேன்னு soன்னார். 96-வது வருஷ லாஸ்டுல சென்னைக்கு வந்தவன். அலையாத தெரு இல்ல. பாக்காத ஆள் இல்ல. சினிமாவுல நுழையிற வரைக்கும் வயித்தக் காப்பாத்தணுமே... அதனால என்ன வேலை கிடைச்சாலும் செய்வேன்.


நான் பெயின்ட் அடிக்காத பில்டிங்கே தி.நகர் ஏரியாவுல இல்ல. 13 வருஷ போராட்டத்துக்கு அப்புறம்தான் சுசீந்திரன் அண்ணனோட பார்வை கிடைச்சது. சங்கம் தியேட்டர்ல உட்கார்ந்துவெண்ணிலா கபடிக்குழுபடம் பாக்குறேன். பரோட்டா காமெடியைப் பாத்துட்டு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்குது. ‘எனக்கா இத்தனை கைதட்டல்னு நெனச்சதுல ஃபிட்ஸ் வந்த மாதிரி கைகாலு ரெண்டும் இழுத்துக்கிச்சு. அத்தனை வருஷ போராட்டத்தையும் ஒத்த நிமிஷத்துல ஜெயிச்ச மாதிரி இருந்துச்சு!"


சமீபத்துல உங்களை சிலிர்க்க வெச்ச பாராட்டு?



‘போராளிபடம் பார்த்துட்டு சுசீந்திரன் அண்ணன் பேசினாரு. ‘சசிக்கும் சமுத்திரக்கனிக்கும் நீ ரொம்ப கடமைப்பட்டிருக்கடா... ரொம்ப சரியான இடத்துல உன்னைய கொண்டுவந்து நிறுத்தி இருக்காங்கன்னு சொன்னாரு. கண்ணுல தண்ணி வந்திடுச்சு. என்னைய வளர்த்தது சுசீந்திரன் அண்ணன்னா... நல்ல நடிகனாய் வார்த்தது சசியண்ணன்தான். அவரோடசுந்தரபாண்டியன்படத்துல என்னைய தூக்கி வெச்சுக் கொண்டாடி இருக்காரு. நாலு பேரை ஜெயிக்க வெச்சு ரசிக்கிற மனுஷன் சசியண்ணன். அந்த நாலு பேர்ல நானும் ஒருத்தன்."


சினிமாவுல நினைச்ச இலக்கை அடைஞ்சுட்டீங்களா?


இப்போதானே விழுந்து எழுந்து நடக்குற குழந்தையாகி இருக்கேன். இன்னும் நெறைய தூரம் ஓடுற அளவுக்கு ஆசையும் கனவும் இருக்கு. பாண்டிராஜோடகேடி பில்லா கில்லாடி ரங்கா’, கனி அண்ணனோடநிமிர்ந்து நில்’, சற்குணம் அண்ணனும் தனுஷும் இணைஞ்சு பண்ணுற படம்னு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். சமீபத்துல பொண்டாட்டிய அழைச்சுக்கிட்டு தி.நகர்ல உள்ள ஜவுளிக் கடைக்குப் போயிருந்தேன்.

நம்மையும் ஒரு மனுஷன்னு மதிச்சு சில பேரு ஆட்டோகிராப் கேட்டாங்க. அப்போ அங்கே நின்ன செக்யூரிட்டி கூட்டத்தை சரிபண்ண வந்தாரு. நான் அவரோட கையப் புடிச்சு, ‘அண்ணே என்னைய தெரியலையா... நாந்தாண்ணே இந்த ஃப்ளோருக்கு பெயின்ட் அடிச்சவன். நீங்ககூட சரியா அடிக்கச் சொல்லித் திட்டுவீங்களே... ஞாபகம் இல்லியான்னு கேட்டேன். நம்பவும் முடியாம நம்பாம இருக்கவும் முடியாம அவர் திகைச்சு நின்னாரு பாருங்க... யாருக்குள்ள யாரு ஒளிஞ்சிருக்காங்கன்னு யாருக்குமே தெரியாதுண்ணே..."