Showing posts with label ERODE BLOGGER MEET. Show all posts
Showing posts with label ERODE BLOGGER MEET. Show all posts

Tuesday, December 27, 2011

பதிவுலகை கலங்கடிக்கும் பாலிடிக்ஸ் - ஈரோடு பதிவர் சந்திப்பு பாகம் 3

 

15 பேருக்கு அவார்டு குடுத்ததும்  அவங்க கிளம்பிட்டாங்க .கில்மா படம் ஓடற சினிமா தியேட்டர்ல  பிட் ஓட்டிட்டு இடைவேளை விட்டதும் நம்ம ஆளுங்க இடத்தை காலி பண்ணுவாங்களே, அப்படி ஹால்ல பாதி பேரை காணோம்.சிறப்பு விருந்தினர் ,விழா ஏற்பாட்டாளர்கள் உட்பட எல்லாரும் கிளம்பிட்டாங்க, அப்போ மணி 12.30 .இப்போ மண்டபத்துல (ஹால்) சல சலப்பு ஏற்பட்டுச்சு.. பல ஊர்களில் இருந்தும் வந்திருந்த பதிவர்கள் கடுப்பாகிட்டாங்க.. இவங்க விருது வாங்கறப்ப கை தட்டத்தான் நாம வந்தமா?பதிவர்கள் கூடி பேச வந்தா ,இப்படி கூட்டத்தை கூட்டி காட்டவும்,வேலை முடிஞ்சதும் கழட்டி விடுற செயலும் ஏன்?ன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க..

மேடைல பதிவர்கள் அவங்கவங்களை அறிமுகப்படுத்திக்குங்கன்னு சொன்னாலும் யாரும் அவ்வளவா ஆர்வம் காட்டலை.. யாருமே இல்லாத கடைல யார் டீ ஆத்தறதுன்னு நினைச்சுட்டாங்க போல.. முறைப்படி என்ன செஞ்சு இருக்கனும்னா  விழாவில் முதல் நிகழ்ச்சியா புதுமுக பதிவர்கள் அறிமுக நிகழ்ச்சி நடந்திருக்கனும், அதுக்குப்பிறகு விருது வழங்கும் விழா நடந்திருக்கனும்.. 

ஃபிலாசபி பிரபா, ஆரூர்மூனா செந்தில்,மீ, ஜாக்கி,-----,யுவகிருஷ்ணா, கே ஆர் பி செந்தில் ,அதிஷா

இந்த சந்தர்ப்பத்துல சென்னைல நடந்த ஒரு பாலிடிக்ஸ் மேட்டரையும் சொல்லிடறேன்.. கேபிள் சங்கர்  சார் நடத்தற யூ டான்ஸ் + ஆதி ,பரிசல் சவால் சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா ஈரோடு பதிவர் சந்திப்பு நடந்த அதே நாள்ல நடத்தப்பட்டது.. இது பிளான் பண்ணி செஞ்சாங்களா? அல்லது எதேச்சையா நடந்ததா? தெரில , ஆனா வந்திருந்த பல பதிவர்கள் பேசுனதை வெச்சு பார்த்தப்ப பதிவர்கள்  ஜாக்கிசேகர் குரூப், கேபிள்சங்கர் குரூப் என 2 பிரிவுகளாக பிரிந்ததை உணர முடிஞ்சது. ( இந்த மேட்டர் விழாவுக்கு வந்த சென்னை பதிவர்கள் சொன்னது)

சென்னையில் நடந்த பரிசளிப்பு விழா வேற தேதில நடத்தி இருந்தா  2 விழாவும் இன்னும் சிறப்பா நடந்திருக்கும்.. அரசியல் வாதிகள் கூட்டம் கூட்டி பலத்தை காட்ற மாதிரி சும்மா வீம்புக்காக போட்டி  கூட்டம் நடத்திட்டாங்க.. இது வரும் காலங்களில் தவிர்க்கப்பட்ட வேண்டும்..

ஈரோட்டில் உள்ள முக்கியமான பதிவர்கள் நண்டு நொரண்டு வக்கீல் சார், நல்ல நேரம் சதீஷ்குமார் இருவரும் வரவில்லை. காரணம் கேட்டதற்கு உள்ளூர் ஆட்கள் எங்களை  விழா அமைப்பாளர் தனிப்பட்ட முறையில் அழைக்கவில்லை.எங்களுக்கு ஃபோன் நெம்பர் இருக்கு, மெயில் ஐ டி இருக்கு , ஆனா 4 நிமிஷம் ஒதுக்கி அழைக்காம இருக்கறப்ப நாங்க ஏன் வரனும்? என்றார்கள்.





போன வருடம் நடந்த சங்கமம் கூட்டத்தில் இது தெரிய வந்தது..இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஈரோடு சங்கமம் எனும் அமைப்பில் ஈரோடு பதிவர் யாரும் உறுப்பினர் இல்லை. மேடையில் அவர் சங்கமம் குழுமம் என அறிமுகப்படுத்திய 10 பேரில் எனக்குத்தெரிந்த முகங்கள் கோபி கோமாளி செல்வா, சித்தார் சங்கவி சதீஷ் மட்டும்தான்.

ஈரோடு நகரைச்சார்ந்த நண்டு நொரண்டு வக்கீல் ராஜசேகரன் சாரோ, சித்தோடு சதீஷ்குமாரோ, மற்றும் , சித்தோடு ஜேம்ஸ்பாண்ட் 07 சதீஷோ ,  கருங்கல் பாளையம் காட்டுவாசியோ  யாரும் இதில் உறுப்பினராக இல்லை.. ஏன்? அவர்களை முறைப்படி அழைத்துப்பேசி  எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே என் அவா.. 

வால்பையன் , ரோஹினிசிவா

போன வருடம் பணி நிமித்தமாக  நான் ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத போது நான் விழா அமைப்பாளர் க்கு போட்டியாக ஒரு அமைப்பை ஏற்படுத்த முயல்பதாகவும், அவர் மேல் எனக்குப்பொறாமை எனவும் ஒரு பேச்சு பதிவுலகில் கிளம்பியது.. அவை அனைத்தும் வெறும் யூகத்தின் அடிப்படையில் கிளப்பப்பட்டவை..

விழா அமைப்பாளர் பல சமூக நிறுவனங்கள் ,அமைப்புகளில் தொடர்பு உள்ளவர்.. நகரின் பல பெரிய மனிதர்களிடம்  பழக்கம் உள்ளவர்.. அவரைப்போன்ற திரமைசாலிகள் தான் சங்கமம் போன்ற ஒரு அமைப்பை நடத்த தகுதியானவர்.. நான் ஆஃபீஸ் வேலை பார்த்துக்கிட்டு, அப்பப்ப சினிமா பார்த்து விமர்சனம் எழுத மட்டுமே நேரம் உள்ளவன்.

இந்த கட்டுரையின் நோக்கம் யாரையும் தாக்கவோ, மனம் புண்படும்படி நடத்தவோ எழுதப்பட்டது அல்ல.. அனைத்து பதிவர்களும் ஒன்றாக எதிர்காலத்தில் கூடி மகிழ வேண்டும், சந்தோஷமாக எண்ணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை.. போட்டி அமைப்பு , போட்டி குழு ஏற்படுத்தும் எண்ணம் இல்லை என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.


 திருப்பூர் சேர்தளம் குரூப்,இடம் இருந்து வலமாக 4 வது நபர்தான் ஜீரோ கிலோ மீட்டர் குறும்பட இயக்குநர் ரவிக்குமார்