Showing posts with label .அனுபவம். Show all posts
Showing posts with label .அனுபவம். Show all posts

Tuesday, May 10, 2011

நடிகைகள் ஃபோட்டோ மட்டும் தான் பிளாக்ல போடனும்னு சட்டமா?


                                         

 மேலே உள்ள 2 ஃபிகர்ல மஞ்சள் காட்டு மைனா சரி இல்ல..நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா ஓக்கே..
                    


 அழகிப்போட்டில கலந்துக்கறவங்க யாரும் மங்களகரமா குங்குமப்பொட்டு வைக்கனும்கற நாலெட்ஜே இல்லாம போச்சு... வருத்தமான விஷயம்..
         


 மேலே உள்ள ஃபிகர்களில் மொத ஃபிகர் ஐஸ்வர்யா ராய் சாயல்ல கொஞ்சம் இருக்கு.அவங்க போட்டிருக்கற சுடி கலர் செமயா இருக்கு ஆனா துப்பட்டா பியூர் ரெட்டா இருந்திருந்தா இன்னும் கலக்கலா இருக்கும்.2வது ஃபிகர் தலைக்கு ஆயில் போடற பழக்கமே இல்ல போல.. 3வது  ஃபிகர்  காதுல போட்டிருக்கற ஸ்டெட் நல்லாவே இல்ல.. அந்த ஃபிகர் போட்டிருக்கற டிரஸ்ஸூம் புலி வேஷம் போட்ட மாதிரி இருக்கு,,4வது ஃபிகருக்கு லிப்ஸ் குட்டியா க்யூட்டா இருக்கு. 4 ஃபிகருங்களுமே லைட்டா லிப்ஸ்டிக் போட்டீருக்கறது நீட்.. சில ஃபிகருங்க அப்பி இருப்பாங்க..                 

 மேலே உள்ள ஃபிகர்கள்ல ஒரு ஃபிகர் கூட தலைக்கு ஆயிலே போடலை.. அதே போல் யாரும் குங்குமம் வைக்கவே இல்ல.. ஹூம்..


  
         


 இந்த ஃபிகருங்க பெரும்பாலும் கூந்தலை முன்னால எடுத்து விட்டிருக்காங்க..அதாவது துப்பாட்டாவுக்கு ஆல்ட்டர்நேட் அரேஞ்ஜ்மெண்ட்ஸ் போல.. ஆனா யாரும் தலையை பின்னும் பழக்கமே இல்லை போல..


                           
                                              
 பஃப் கை ஜாக்கெட் எல்லாம் 15 வருஷத்துக்கு முன்னமே காலாவதி ஆகிடுச்சு..பாப்பா காதுல இருக்கற ரிங்க் ரொம்ப பெரிசா இருக்கு..
               
    

 நீளமான கூந்தல் அழகு உள்ள பெண்களை பார்க்கறதே அரிதா இருக்கு. பாப் கட்டிங்க் ஃபேஷன் ஆகிப்போச்சு.. பராமரிப்பு நலன் கருதியா?ன்னு தெரில..

         
 ஸ்கைபுளூ + ரோஸ் அல்லது பஞ்சு மிட்டாய் காம்பினேஷன் சரி இல்ல. பாப்பா புருவம் வேற சரி இல்ல. ஓவர் லிப்ஸ்டிக் வேற ..இடமிருந்து வலமா 3 வதா இருக்கற ஃபிகர் நல்லாருக்கு.
             
                             


           
             
                  
                   
                       
     

மச்சான்.. ஃபிகரு உன்னைத்தாண்டா பார்க்கறா.. விட்ராதே..

http://3.bp.blogspot.com/_v6buP4xVz9w/TBcBG_cygwI/AAAAAAAAAYE/6AyCHZ30FX0/s1600/photography,water,girl,rain,umbrella,woman-05097c2965381f5ec356908386b85c97_h.jpg

1.பசங்க மெசேஜ் அனுப்ப 1 நிமிஷம், பொண்ணுங்க மெசேஜ் அனுப்ப 10 நிமிஷம்.டைப்பிங்க் ஸ்பீடு பத்தாதுன்னு இல்ல. தவிக்க விடுவதில் அலாதி இன்பமாம் # லேடீஸ் சைக்காலஜி

 -------------------------------

2. அவ என்னைப்பார்த்து சிரிச்ச மாதிரியே இன்னும் 34 பேர்ட்ட சிரிச்சா.. ஏன்னு கேட்டா அது குரூப் ஸ்மைலிங்காம். அடிங்க்கொய்யால்...#குரூப் மெசேஜ்ஜாலஜி

 -----------------------------
 3. நான் நாசமா போனதுக்கு காரணமே என் நண்பன் தான். மச்சான்..அவ உன்னைத்தாண்டா பார்க்குறானு அவன் தான் என்னை கோர்த்து விட்டான்#ஃபிரண்ட்ஷிப்பாலஜி
http://th06.deviantart.net/fs21/300W/i/2007/234/8/7/Rain_Girl_by_serisphotography.jpg
------------------------

4. சாந்தி அப்புறம் நித்யா சவுண்ட் எஃப்ஃபக்ட் பிரச்சனையால் வெளி வர தாமதம்# அதுக்குன்னு ஆறு மாசமாவா? அம்புட்டு சத்தமா படத்துல இருக்கு?

---------------

5. வைகோ பேச்சு- எவ்வித பிரதிபலனும் பாராமல், மக்கள் பணியை செய்கிறோம். # அண்ணே டூ லேட்.. இனி டீஎன்னைக்கும் வராது..

--------------------

6. மனைவியின் பின் பதுங்கிய ஒசாமா பிடிபட்டான் #பயங்கரவாதத்திடம் அடைக்கலம் ஆன பயங்கரவாதம்?


http://3.bp.blogspot.com/_jGvlYsRa-K0/TBTbCf2PCKI/AAAAAAAAF9o/_G87zZKBpUo/s1600/2.jpg
-----------------------------
7. ஒவ்‌வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறேன்: நடிகர் கரண் #ஆனா விழற ஒவ்வொரு அடியும் மரண அடியா இல்ல இருக்கு?அவ்வ்


-----------------------


8. ஜி.கே.மணி பேச்சு : ஆட்சி மாற்றம் வரும் என்ற சிலரின் கனவு பலிக்காது. #அப்போ வழக்கம் போல தமிழக மக்களுக்கு ஏமாற்றம் தானா?

----------------------

9. அரசியலில் வீழ மாட்டேன்: கனிமொழி ஆவேச பேட்டி#இந்த கனல் மொழி வசனம் எல்லாம் அப்புறம்..சி பி ஐ கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாச்சா?

-----------------------------

10. பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை தூக்கிலிட வேண்டும் : காந்தி உதவியாளர் ஆவேசம்#அப்புறம் மீடியாக்கள் பொழப்பை ஓட்டனுமே?

------------------- 


டிஸ்கி 1 - திடீர்னு ஒயிட் & பிளாக் ஃபோட்டோ எதுக்கு போட்டிருக்கேன்னா  அப்பத்தான் கலர் ஃபோட்டோ இன்னும் தூக்கலா தெரியும்.... ஏற்கனவே செம தூக்குத்தான் ஃபிகருங்க.. அழகுக்கு அழகு மாதிரி இது தூக்கலுக்கு தூக்கல்


டிஸ்கி 2 - பொதுவா ஃபிகருங்க மருதாணி வைக்கறப்ப புறங்கைல வைக்கிறாங்க.. அது அழகை குறைக்குது.. அந்தக்கால வழக்கப்படி உள்ளங்கைக்கும், நகத்துக்கு மட்டும் வெச்சாத்தான் நல்லாருக்கும்.அதே மாதிரி நெற்றிச்சுட்டி இன்னும் சின்னதா இருந்தா நல்லாருக்கும்#டிப்ஸாலஜி இன் டிஸ்கியாலஜி

Monday, May 09, 2011

நாட்டு நடப்பும் நையாண்டிச்சிரிப்பும்

1. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கல்பாக்கத்தில், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக அணு உலை மின்சாரம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக்கூடும்.

அதான் இலங்கைல மொத்தமா உலை வெச்சுட்டாங்களே.. இனி என்ன மிச்சம் இருக்கு இழக்க நமக்கு.. ?

----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: "ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக வாதாட அரசு தரப்பில் ஏற்கனவே, மூத்த வக்கீல் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சுப்பிரமணியசாமியை அரசு தரப்பு வக்கீலாக நியமிப்பது ஏற்புடையதல்ல' என, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேலும் வாதாட இருப்பதாக சுப்பிரமணியசாமி கோரினார். வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரியஸா டிராமா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு காமெடி? காமெடியன் ரோல்?னு நினைச்சிருப்பாங்களோ?

-------------------------------

3. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் எட்டு குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரியும், காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.காஞ்சிபுரம் காய்ஞ்சிபுரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே.. இனி மாய்ஞ்சி மாய்ஞ்சி போராடி என்ன பண்ணப்போறீங்க.. விடுங்க.. 

----------------------------------------------
4. பத்திரிகைச் செய்தி: மாமல்லபுரம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள, 296 மதுபானக் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டன.


பேச்சுவார்த்தை பார்ல சுமூகமா கமுக்கமா நடந்ததா? 

-----------------------------------------

5. தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம்
தாழ்த்தப்பட்டோர் பிரிவில், 15 லட்சத்து, 41 ஆயிரம், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 14 லட்சத்து, 40 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 28 லட்சத்து, 93 ஆயிரம், இதர பிரிவினரில், ஐந்து லட்சத்து, 56 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மே 13 க்குப்பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

-----------------------------------------

6. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப்பகுதியில் இலங்கை அரசு, அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை, கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே, அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அண்ணே.. நல்லாதான் கூவுறீங்க.. இதையே தானைத்தலைவர்ட்ட போய் கூவுங்களேன் பார்ப்போம்..?

---------------------------------------

7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி :சோனியா உண்மையான இந்தியரே அல்ல; அவரின் குறி, இந்தியாவைச் சுரண்டி உலக நாடுகளில் சொத்துகள் சேர்க்க வேண்டும் என்பதே. இவற்றை விரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்.

சீக்கிரம்.. மே 13க்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு...அப்புறம் காங்கிரஸ் இருக்கற இடமே தெரியாம போயிடும்.. அதுக்குள்ள அம்பலப்படுத்திடுங்க.. 

-----------------------

8. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பா.ஜ., ஓட்டு வங்கி இந்தத் தேர்தலில் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில், பா.ஜ., தமிழக மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அதன் ஓட்டு வங்கி இருக்கும்.

ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க? மீறி மீறிப்போனா 2 % ஓட்டு வாங்குவீங்களா? எதுக்கு இந்த அலப்பறை.. 

------------------------------

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நிலை.

அதான் எங்க தானைத்தலைவரும் சொல்றாரு..இது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டும் அல்ல. 3 குடும்பங்களின் கூட்டுக்குடும்ப ஆதிக்கம்னு.. நீங்க தான் புரிஞ்சுக்கலை.. 

-------------------------------


10. பா.ஜ., பொதுச் செயலர் ஜகத் பிரகாஷ் நட்டா பேட்டி: ஊழல் பிரச்னைகளில், தி.மு.க.,வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரசின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி, தி.மு.க., ஊழல் நடவடிக்கைகளை துவங்கியது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஊழலில் தான் கூட்டணி அமைத்திருக்கின்றனர். ஊழல் என்ற பிரச்னை வரும்போது அவர்கள் சமரசமாகி விடுவர்.


கூட்டணி ஆட்சின்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா கூட்டு ஊழல்னா ஒத்துக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது..?

---------------------------------

Saturday, May 07, 2011

சகல கலா டாக்டர் டாக்டர்.. அகில உலக அழகி நர்ஸூ நர்ஸூ

''முதுகு வலிக்கு டாட்டா!''

நம்பிக்கை கொடுக்கும் டாக்டர் டிப்ஸ்..


முதுகு வலி... பைக் ஓட்டுபவர்களைப் பயமுறுத்தும் பூதம். இரண்டு-மூன்று ஆண்டுகள் தொடர்ந்துஅதிக நேரம், அதிக தூரம் பைக் ஓட்டுபவர்களுக்கு, இந்தப் பிரச்னை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. கார், பஸ் ஓட்டும் டிரைவர்களும் முதுகு வலிக்குத் தப்புவது இல்லை!

நம்முடைய முதுகு, வாகனத்தில் உட்காரும் வசதிக்காக உருவானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனால், தொடர்ந்து பைக் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. 'முதுகு வலியில் இருந்து விடுபட வழியே இல்லையா?’ என்று கேட்பவர்களுக்கு, சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர், ஆறுதலாக சில ஐடியாக்கள் வழங்குகிறார்.

''தொடர்ந்து பைக், கார் ஓட்டுபவர்களுக்கு முதுகு வலி பிரச்னைகள் வருவதற்கான சாத்தியம் அதிகம். இதற்குக் காரணம், பைக் மற்றும் கார்கள் அல்ல. நம் ஊர்சாலைகள்தான்! குண்டும் குழியுமான மோசமான சாலைகளில் பயணிக்கும்போது முதுகுத் தண்டில் வலி ஏற்படும். அதிக தூரம் பைக் ஒட்டுவதோடு, கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் என்றால், இந்தப் பிரச்னை இன்னும் அதிகரித்துவிடும். பொதுவாக, ஸ்கூட்டர்கள் ஓட்டுவது (குறைந்த தூரப் பயணங்களுக்கு) ஓரளவுக்கு முதுகு வலித் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும்.

அதேபோல், புல்லட் போன்ற எடை அதிகமான பைக்குகளை ஓட்டும்போது பைக் அதிர்வுகளும், குதிப்பதும் குறைவாக இருக்கும். இதனால், முதுகு வலி பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு. முதுகு வலிப் பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, எடை அதிகமான பைக்கைப் பயன்படுத்தலாம்.

அடி முதுகுக்கு என்று தனியாக விற்பனை செய்யப்படும் 'லம்பர் சப்போர்ட்’ பெல்ட்டை அணிந்து கொண்டும் பைக் ஓட்டலாம். முதுகு வலி வராமல் தடுப்பதற்கு 'பேக் எக்ஸர்ஸைஸ்’ நிறைய இருக்கின்றன. யோகாவும் செய்யலாம்!'' எனச் சொல்லும் டாக்டர் ஸ்ரீதர், மேற்கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் இங்கே பட்டியல் போடுகிறார்...


பர்ஸைக் கவனியுங்கள்!

பர்ஸில் தேவையில்லாத பல்வேறு விஷயங்களை வைத்துக்கொண்டு தடிமனான பர்ஸோடு பலரும் பயணிக்கிறார்கள். பின் பக்கம் பர்ஸ் கனமாக இருப்பதால், கார் ஓட்டும்போதோ அல்லது பைக் ஓட்டும்போதோ நம்மை அறியாமலேயே பர்ஸ் இருக்கும் பக்கத்துக்கு எதிர்ப் பக்கமாக சாய்ந்து உட்காருவோம். இது நாளடைவில் முதுகு வலியை ஏற்படுத்தும். அதனால், பர்ஸின் தடிமனைக் குறைவாக வைத்துக் கொள்ளுங்கள்.


பெல்ட்டின் இறுக்கத்தைத் தளர்த்துங்கள்!

மிகவும் இறுக்கமான பேன்ட், பெல்ட் அணிந்துகொண்டு பைக் ஓட்டுவதை நிறுத்துங்கள். பேன்டும், பெல்ட்டும் இறுக்கமாக இருக்கும்போது, நம்மால் சரியான பொசிஷனில் உட்கார்ந்து பைக் ஓட்ட முடியாது. இது, முதுகுவலிப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதனால், நீண்ட தூரப் பயணங்கள் செய்யும் போது, எப்போதுமே இறுக்கமான உடைகள் அணிந்துகொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும்போது இடுப்பில் இறுக்கம் இல்லாமல் ரிலாக்ஸாக உட்கார்ந்து ஓட்டப் பழகுங்கள்.

அடி முதுகுக்கு சப்போர்ட் தேவை!

அடி முதுகு (லம்பர்) பகுதிக்கு எப்போதுமே சப்போர்ட் தேவை. லேட்டஸ்ட் கார்களில் 'லம்பர் சப்போர்ட்’ கொண்ட இருக்கைகளே வந்துவிட்டன. அதேபோல், அலுவலகத்தில் உட்காரும்போதும் முதுகுக்குத் தொல்லை தராத, வசதியான இருக்கையில் உட்கார வேண்டியது முக்கியம்.

அடி முதுகுக்கு சப்போர்ட்டாக சின்ன தலையணையைக் கூட பின்பக்கமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது பெரிய டவலை முக்கோண வடிவில் மடித்து பின் பக்கம் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம்.

பிரேக் வேண்டும்!

தொடர்ந்து பைக் அல்லது கார் ஓட்டுவதை நிறுத்துங்கள். தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் வாகனம் ஓட்டுவது என்பது வாகனத்துக்கும், ஓட்டுபவருக்கும் நல்லதல்ல!

2 மணி நேரத்துக்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்திவிட்டு கை, கால்களை நீட்டி மடக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அதேபோல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால், அடிக்கடி கால்களை நீட்டி மடக்குவது நல்லது.

சரியான பாதைகளைத் தேர்ந்தெடுங்கள்!

குண்டும் குழியுமான மோசமான சாலைகள் வழியாகத்தான் பயணிக்கப் போகிறோம் என்றால், முடிந்தவரை அந்த வழியைத் தவிர்த்துவிடுவது நல்லது. குண்டும் குழியுமான சாலைகள்தான் முதுகு வலித் தொல்லைகள் ஏற்பட முக்கியக் காரணம். கார் ஓட்டுபவர்களைப் பொறுத்தவரை டிரைவரின் சரியான உயரத்திற்கேற்ப ஸ்டீயரிங் பொசிஷனை மாற்றி வைத்துக்கொள்வது நல்லது!

உடற்பயிற்சி தேவை!
 
தினமும் அரைமணி நேரம் நடப்பது, முதுகுவலி உள்பட பல்வேறு வலிகள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும். ஸ்டீம் தெரபி, மசாஜ் ஆகியவை முதுகு வலிக்கு நிவாரணமாக அமையும்.  நீச்சல் பயிற்சி செய்வதும் நல்லது!

நன்றி - டாக்டர் விகடன்

Thursday, May 05, 2011

எதிர் வீட்டு ஃபிகர் உங்களைப்பார்த்ததும் கதவை மடார்னு சாத்துனா என்ன அர்த்தம்?

http://cdn.buzznet.com/assets/users16/poxline/default/katie-holmes-family-girl--large-msg-11896481471.jpg. 1.உனக்குக்கூடப்பிறந்தவங்க யாருமே இல்ல.. ஆனா கல்யாணம் ஆகாத 4 தங்கைகள் இருக்காங்கன்னு ஏன் பொய் சொன்னே உன் ஆள்ட்ட?

மேரேஜை எப்போ வெச்சுக்கலாம்கற கேள்வியை  அவ ஜென்மத்துக்கும் கேட்கக்கூடாது அதுக்குத்தான்..

-------------------------------------

2. நான் 30 வருஷமா லவ் சப்ஜெக்ட்ஸ் படமா எடுக்கறேன்.. 

அதுக்காக எக்காலத்திலும் காதலுக்கு வக்காலத்து வாங்குபவர்னு  சொல்றதா?

---------------------------

3. ஃபேஸ்புக்ல பொண்ணோட ஃபோட்டோவைப் பார்த்தியே ஓக்கேவா? பொண்ணு  வீட்டுக்காரங்க ஃபோன் பண்றாங்கப்பா..

ட்விட்டர்ல என் கருத்தை பப்ளிஷ் பண்ணி  இருக்கேன்.. பார்க்க சொல்லுங்க..

-----------------------
http://www.melisai.com/gallery/data/media/72/TamilBeat.Com%20-%20Padma%20Priya%20019.jpg
4. இந்தப்படத்துல ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி இரண்டையும் நல்லா தாக்கி இருக்கேன்.. 

சரி.. உங்க உடம்புல ஏன் இத்தனை பேண்டேஜ்..?

நான் தாக்குன 2 கட்சி ஆளுங்களும் என்னை செமயா தாக்கிட்டாங்க.. 

---------------------------

5. வரலாற்றுப்படம் எடுத்தேன்.. ஓடலை... 

கதைக்களன் சரித்திரமா இருந்தது ஓக்கே.. ஆனா கதை தரித்திரமா இருக்கே?

-------------------------

6. டெக்னாலஜி ரொம்ப டெவலப் ஆகிடுச்சு.னு எப்படி சொல்றீங்க?

பொண்ணு பார்த்த மாப்ளை வீட்டார்ட்ட பொண்ணு பிடிச்சிருக்கா?ன்னு கேட்டதுக்கு ஊருக்குப்போய் மெயில் பண்றோம்னு சொல்றாங்களே?

------------------------------
http://www.moviestarsmovies.com/Images/KateWinslet.jpg
7. எதிர் வீட்டு ஃபிகர் உன்னைப்பார்த்ததும் ஏன் கதவைப்பூட்டுது?

எப்போ பாரு அவ கிட்டே ஒரே மாதிரி கடலை போட்றது அலுப்பூட்டுது போல..

-------------------

 8. எங்க ஆஃபீஸ்லயே அவர் தான் சீனியர்.. பழம் தின்னு கொட்டை போட்டவர்.. 

பழம் சாப்பிடற எல்லோருமே கொட்டையை கீழே போட்டு ட்டு போறவங்க தான்.. யார் விழுங்கறாங்க?

----------------------------

9. தலைவர் செம கேடின்னு எப்படி சொல்றே?

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எங்க ஆட்சில தான்னு உதார் விடறாரே?

-------------------------

10 . தலைவர் ஏன் செம கோபமா இருக்கார்?

அவருடைய ஃபர்ஸ்ட் நைட் ரூம் வாசல்ல “ முதல் இரவுக்கு வருகை தரும் அன்பு உள்ளங்களை வருக வருக என வரவேற்கிறோம்” அப்டினு பேனர் வைச்சிருக்கே?

---------------------------------


”ஆ”ர்யா .. என்க்கு நெறையா கத்தூக்கொட்த்தார்... எமி ஜாக்ஸன் கலக்கல் பேட்டி - காமெடி கும்மி

http://2.bp.blogspot.com/_Uno_emuDLJc/TEnKeKqiZDI/AAAAAAAAGz0/rUGFkXDzR78/s1600/Amy%252BJackson.jpg 

றந்துட்டியா?’ என்று மனதுக்குள் 'தானா தோ தனன... தானானே நானா’ மீட்டிய எமியை மறக்க முடியுமா?

சி .பி. -ஹா ஹா நாம எந்தக்காலத்துல பொண்ணுங்களை மறந்துருக்கோம்? கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கறவரை பின்னாலயே சுத்துவோம் இல்ல?

எங்கே இருக்கிறார் என்று தேடினால்,''இந்தி 'விண்ணைத் தாண்டி வருவாயா?’ ஷூட்டிங்ல இருக்கேன்!'' என்று சிரிக்கிறார் எமி.

சி .பி. -அவர் ஏன் தொட்டதுக்கெல்லாம் சிரிக்கிறார்?தொடலைன்னாக்கூட சிரிப்பாரா? #டவுட்டு

1. ''தமிழ்நாடே உங்களுக்காகத் தவிச்சுட்டு இருக்கு. திடீர்னு இந்திப் பக்கம் போயிடீங்களே?''
'' 'மதராசப்பட்டினம்’ பார்த்துட்டு நிறையப் பேர் கதை சொன்னாங்க.

சி .பி. -ஆமாமா செமயா ஜொள்ளி இருப்பாங்களே? (ஜொள்ள மறந்த கதைகள்)

எந்தக் கதையை செலெக்ட் பண்றதுன்னு குழப்பம். அப்போதான் டைரக்டர் விஜய், என்னை கௌதம் மேனன்கிட்ட அறிமுகப்படுத்தினார். 'நீங்க என்னுடைய இந்தி ரீ-மேக் படத்தில் நடிக்கிறீங்களா?’ன்னு கௌதம் கேட்டார். ஸ்கிரீன் டெஸ்ட் வெச்சார். எல்லாமே பெர்ஃபெக்ட். இப்போ, நான்தான் இந்தி ஃபீல்டுக்கு 'ஜெஸ்ஸி’!''

 சி .பி. -எல்லாமே பர்ஃபெக்ட்ட்டா? அப்படின்னு கவுதம் அண்ணன் சொன்னாரா? ஹி ஹி வெளங்கிடுச்சு.. 
http://lh4.ggpht.com/_xsbB05fhd9A/TFlt5rqY7vI/AAAAAAAAC-A/W9SZ0Qm5ZsI/2589_1236758534.jpg
2. '' 'விண்ணைத் தாண்டி வருவாயா’ தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பின படம். த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சு. அதை உங்களால் ஈடு செய்ய முடியுமா?''

  சி .பி. - த்ரிஷா கேரக்டர் ரொம்பவே பேசப்பட்டுச்சா? உரசப்பட்டுச்சா?

''படம் வந்ததும் என்னை ஜெஸ்ஸின்னு சொன்னா தான் அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு ஹோம்வொர்க் பண்ணியிருக்கேன்.

 சி .பி. -அடடா.. அப்போ ஷூட்டிங்க் ஸ்பாட்ல ஒர்க் பண்ணலையா?

மூணு வேளை சாப்பிடுறேனோ இல்லையோ, தினம் மூணு முறை 'விடிவி’ டி.வி.டி-யைப் பார்க்கிறேன். மொழிதான் பெரிய பிரச்னை. இந்தி கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். அடுத்ததா, தமிழ் கத்துக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?''

சி .பி. -நாங்க சொல்ல என்ன இருக்கு. உங்களுக்கு தமிழ் டியூஸன் ஃபிரீயா சொல்லித்தர நாங்க ரெடியா இருக்கோம்.. 

http://narumugai.com/wp-content/uploads/2010/12/amy-jackson.jpg
3. ''நல்ல விஷயம்... தமிழ் ரசிகர்களுக்கு குத்துவிளக்கு மாதிரி அறிமுகம் ஆகியிருக்கீங்க. அந்த இமேஜைத் தொடர்ந்து காப்பாத்துவீங்களா?''

சி .பி. -குத்து விளக்கா? கும்மாங்குத்தாட்ட விளக்கா? 


''அது அந்த கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றி. 'மதராசப்பட்டினம்’ 1940-ல் நடந்த கதை. அதனால், கதைப்படி அடக்கமாதான் இருக்கணும்.

சி .பி. - நீங்க அடக்கமாத்தான் இருந்தீங்க.. ஆனா எங்களாலதான் அடக்க முடியல.. ஹி ஹி ஆர்வத்தை சொன்னேன்.. 


என்னால் எல்லா விதமான ரோலிலும் நடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. அதனால, கிளாமராவும் நடிப்பேன்!''

சி .பி. -உங்க மொழில கிராமர் மிஸ்டேக் வந்தாக்கூட தமிழன் தாங்கிக்குவான். ஆனா உங்க கிளாமர்ல எந்த மிஸ்டேக்கும் வந்துடாம பார்த்துக்குங்க.. அதை தமிழனால தாங்கவே முடியாது ஹி ஹி 
http://3.bp.blogspot.com/_ZCAwgWwQSdI/TNa_udlNdHI/AAAAAAAAOu8/zIRpoGtF4kQ/s400/Amy-Jackson-hot-stills-31.jpg
4. ''உங்களுக்கும் ஆர்யாவுக்கும் காதல்னு கிசுகிசு வந்தது தெரியுமா?''

''ஜீசஸ்... நிஜமாவா சொல்றீங்க? ஆர்யா... ஒரு அற்புதமான மனிதர்.அவர் கிட்ட இருந்து நிறைய நல்ல விஷயங் களைக் கத்துக்கிட்டேன். மத்தபடி எதுவுமே இல்லை. இது பிராமிஸ்!''

சி பி - அந்த நல்ல விஷயங்கள் எல்லாம் என்ன?ன்னு சொன்னா நாங்களும் கத்துக்குவோம்.. இப்போ விருந்து,இந்து நேசன்,திரைச்சித்ரா எல்லாம் தடை பண்ணிட்டாங்க.. ஹி ஹி  என்னது பிராமிஸ்ஸா? பிரா மிஸ்ஸா?


5. ''எமின்னா என்ன அர்த்தம்?''

சிபி - என்ன அர்த்தமா இருந்தா நமக்கு என்ன? அவரை லவ் பண்னறவங்க எமி ஆர் யூ லவ் மீ என ரைமிங்கா  கேட்கலாம்.. 

''ஃப்ரெஞ்ச் மொழியில் 'என் பிரியத் துக்கு உரியவளே’ன்னு அர்த்தம்!''

ரீப்ளேஸ் த வார்த்தை என் பை  (by) எங்க.. ஹி ஹி 

நன்றி - விகடன்

Wednesday, May 04, 2011

ஸ்டெனோவின் லோ ஹிப் சேலையும், தடுமாறிய கான்செண்ட்ரேஷனும்

http://www.pixvix.com/data/media/1/peshawar_beautiful_girls_in_rain.jpg 

1. வேலைல கான்செண்ட்ரேஷன் வேணும்னு மேனேஜர் மீட்டிங்க்ல சொல்லும் போதுதான் ஸ்டெனோவின் லோ ஹிப் சேலை கண் முன் செண்ட்டர் ஆஃப் அட்ராக்‌ஸனில்#காலி

------------------------------------
2. காதல் என்பது முட்டாள் தனம் தான்.ஆனால்பெரும்பாலான ஆண்களும் முட்டாளாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள்#லவ்வாலஜி - ஃபெயிலியர் டிப்பார்ட்மெண்ட்

--------------------------
3. லேட்டாக தியேட்டரில் எண்ட்ரி ஆகும் எல்லா புத்திசாலிகளும் எண்ட்ரி ஆனதும் கேட்கும் முதல் கேள்வி அண்ணே படம் இப்போதான் போட்டானா?#ஆடியன்சாலஜி
http://farm4.static.flickr.com/3488/3284859062_7e21058b9f.jpg
-----------------------------
4. சக பெண் ஸ்டாஃப்ஃபின் டிஃபன் பாக்ஸில் விள்ளலை எடுத்து ருசிப்பவர்கள் ஆஹா அபாரம் உங்களைக்கட்டிக்கப்போறவர் குடுத்து வெச்சவ்ர் என கூசாமல் பொய்

---------------------------
5, பெண்களைப்பார்த்துப்பேசும்போது அவர்கள் முகத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தான் ஒவ்வொரு ஆணும் நினைக்கிறான்.ஆனால் விதி சதி செய்கிறது

--------------------------
6. 1008 நல்லது பண்ணும்போது கண்டு கொள்ளாத சமூகம் ஒரு சின்ன தப்பு பண்ணும்போது தன் 10,000 கரங்களை நம் முகம் முன் நீட்டி குற்றம் சுமத்துது

http://funandentertainment.net/wp-content/uploads/2010/08/pakistan-girls-in-rain1.jpg
--------------------------
7. அப்ரைசல் என்ற ஒரே ஆயுதத்தை பயன் படுத்தி ஆஃபீசில் பணிய வைக்கிறார்கள்,விசும்பல் என்ற ஆயுதம் காட்டி வீட்டில் பணிய வைக்கிறார்கள்#சுயம் போச்சு

-------------------------
8. அம்மா வீட்டுக்கு போயிடுவேன் என மிரட்டும் மனைவிக்கு தெரிவதில்லை, தன் கணவனுக்கு சுக்கிர திசை தொடங்கி விட்டதே தன்னால் தான் என்று..

------------------------------
9.ஆஃபீசில் மேனேஜரை வெறுக்காத ஆட்கள் யாரும் இல்லை.. அதே சமயம் ரிஷப்ஷனிஸ்ட்டை விரும்பாத பணி ஆட்களும் யாரும் இல்லை#ஆஃபீஸ் அரிச்சுவடி

----------------------------------
http://www.tribuneindia.com/2008/20080417/chd5.jpg
-10. முதல் இரவில் “என்னை பிடிச்சிருக்கா?” என்ற அரதப்பழசான கேள்வியை எல்லா புத்திசாலி ஆண்களும் கேட்டுத்தொலைக்க வேண்டி இருக்கு# ஃபார்மாலிட்டி
------------------------

உங்க சம்சாரம் உங்களை எளக்காரமா நடத்தறாங்களா?

http://1.bp.blogspot.com/_Wrhrc-AKRuw/SQLeJGdEDFI/AAAAAAAAAQw/t591Z6VggLs/s400/1.jpg 

1. நீ எப்பவும் ஸ்வீட் தான் சாப்பிடறே.. காரமே சாப்பிடறதில்லை.. காத தூரம் ஓடிடறே.. ஏன்?

என் மனைவி என்னை இளக்காரமா நடத்தறா..அதுல இருந்து எனக்கு காரம்னாலே அலர்ஜி ..

-----------------------------------

2. தலைவருக்கு எந்த வியாதியும் கிடையாதே.. எதுக்காக கேன்சருக்கான ட்ரீட்மெண்ட் எடுக்கறார்?

ஊழல் ஒரு புற்று நோய் அப்டின்னு அன்ன ஹசாரே சொன்ன பிறகு அவருக்கு பயம் வந்துடுச்சாம்.

---------------------------

3. அந்த கிரிக்கெட் வீரருக்கு 18 சின்ன வீடுகளாம்.

ஓஹோ.. பல களம் கண்டவர்னு சொன்னாங்களே.. இதானா?

-----------------------------------------
http://www.gogooes.com/wallpaper/images/mallu6/img1.jpg
4.அரசியல் உலகில் ஜாம்பவான்னு பெயர் எடுத்த நம்ம தலைவரு  திடீர்னு வேற கட்சிக்கு ஜம்ப் பண்ணீட்டாரே?

ஓஹோ.. அரசியல் உலகின் ஜாம்பவான் இப்போ ஜம்பவான் ஆகிட்டரா?

----------------------

5. இந்தப்படத்துல பல் டாக்டராவும்,மன நலம் குன்றியவராவும்,டபுள் ஆக்ட் பண்றேன்..

ஓஹோ.. டெண்டல் கேரக்டர் + மெண்டல் கேரக்டர்னு சொல்லு.. 

----------------------------

6. தலைவருக்கு கேரளா,ஆந்திரா,கர்நாடகா என மாநிலத்துக்கும் மாநிலம் சின்ன வீடு இருக்காம்.

ஒருங்கிணைந்த தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலப்போம்னு சொன்னாரே.. இந்த அர்த்தம் தானா?

-------------------------
http://lh3.ggpht.com/_SvdS-j65QEo/TJENU98aqnI/AAAAAAAAAHQ/V_iP1XpoMww/pakistani-school-girls.jpg
7. இந்தப்படத்துக்கு கதை,திரைக்கதை,வசனம்,ஒளீப்பதிவு,டைரக்‌ஷன்,தயாரிப்பு, எல்லாம் நான் தான்.

ஆடியன்ஸூம் நீங்கதானா?

----------------------------

8. அந்த யுனிவர்சிட்டில என்ன கலாட்டா?

கட்சி ஆளுங்க சிலர் வந்து டாக்டர் பட்டம் 5 பார்சல் அப்டின்னு ஆர்டர் பண்ணுனாங்களாம்.

--------------------------------

9. இந்தபடத்துல என் உயிரைக்குடுத்து நடிச்சிருக்கேன்.

ஓஹோ.. அதான் படம் பார்த்த ஆடியன்ஸ்  அடடா. உயிரை எடுக்கறானுங்க அப்படின்னு அங்கலாய்ச்சாங்களா?

-------------------------------
http://www.snegidhi.com/2010/105-24-06/uthiram_actress_15.jpg
10. மகளிர் அணித்தலைவி தன்னை ஏமாற்றி விட்டதா தலைவர் கேஸ் போட்டிருக்காரே?

மகளிர் அணித்தலைவியே ஒரு கேஸ் தான். அது மேல இவரு கேஸ் போட்டிருக்காரா? சுத்தம் வெளங்கிடும்..

------------------------

Tuesday, May 03, 2011

ராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்+ பரிகாரங்கள்

ராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்

ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, 8-ஆம்வீட்டில் சென்று மறைகிறார் ராகு. மன நிம்மதி, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும்.
தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி சொத்துச் சிக்கல்கள் நீங்கும். ஆனால் எதிர்பாராத செலவுகளும், வீண் பயணங்களும் அதிகரிக்கும். தம்பதிக்குள் சிறு கருத்து மோதல் களும் ஏற்படும். அந்தரங்க விஷயங்களில் மூன்றாம் நபரை நுழைக்காதீர்கள். மனைவிக்கு, பெண்களுக்கே உரிய உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த கால கட்டத்தில் திடீர் பயணம், வாகனச் செலவுகள் வந்துபோகும். சொத்துப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. பழைய வழக்கில், வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்கவேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குழப்பம், காரியத் தடங்கல் வரக்கூடும். அடுத்தவர் பிரச்னையில் தலையிட வேண்டாம்பழைய கடன் தொந்தரவு மனசை வாட்டும். அரசு காரியங்கள் தடைப்பட்டு முடியும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில் பெரிய பதவியில் இருப்பவரின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். 


குழந்தை பாக்கியம் கிட்டும். வீடு கட்டும் பணியைத் தொடர வங்கிக் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.மகனுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விமர்சனங்கள் எழுந்தாலும் உங்களின் புகழ் கூடும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை; அசைவம் தவிர்க்கவும். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது, வீட்டு பாதுகாப்பைப் பலப்படுத்துங்கள். எவருக்கா கவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள், உயர் கல்வியில்
கூடுதல் கவனம் செலுத்தவும். அரசியல்வாதிகள், அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை வசூலிப்பதில் போராட்டம் உண்டு. கமிஷன், ஷேர், புரோக்கரேஜ் வகைகளால் முன்னேற்றம் உண்டு.


வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. பங்குதாரர்கள், உங்களின் நிர்வாகத் திறனை மதிப்பர். உத்தியோகத்தில் தொல்லை தந்து வந்த மேலதிகாரியே, இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். இழந்த சலுகை மீண்டும் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு பரிசும், பணமுடிப்பும் உண்டு.

கேது பகவான் தரும் பலன்கள்

 
16.5.2011 முதல் கேது பகவான், ராசிக்கு 2-வது வீட்டில் நுழை கிறார். சாதுரியமான பேச்சால் சாதிப்பீர்கள். சிலநேரம், பேச்சால் பிரச்னைகளும் ஏற்படலாம்! பல் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். எனினும், உங்கள் யோகாதிபதியின் நட்சத்திரங்களில் கேது செல்வதால் இடையிடையே பண வரவு, யோக பலன்களும் உண்டாகும். மகனுக்கு, எதிர்பார்த்த வேலை கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் இருந்த சிக்கல்கள் நீங்கி, திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது பகவான் செல்வதால், இந்த காலகட்டத்தில் கௌரவப் பதவிகள், பண வரவு, சகோதர உதவி உண்டு. 19.9.2011 முதல் 25.5.2012 வரை ரோஹிணி நட்சத்திரத்தில்  கேது செல்வதால் புகழ், கௌரவம் உயரும். புது இடம் வாங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை. 26.5.2012 முதல் 30.11.2012 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வீண் டென்ஷன், தாழ்வு மனப்பான்மை, சலிப்பு வந்து நீங்கும். வீண்பழியும் ஏற்படலாம். சொத்துப் பிரச்னையில் நிதானம் தேவை. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும்.    

வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து செயல்படுங் கள். உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன் பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, ஓரளவு பண வரவையும் மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல், ராகு உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், உங்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். டென்ஷன், மன உளைச்சல்கள் நீங்கி, இனி உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். குடும்பத்தினருடன் விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.
கணவன்- மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலைக்கும். எனினும், களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், மனைவியுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்படலாம்; பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, ரத்த அழுத்தம் வந்து நீங்கும். அவர் வழி உறவினர்களால் கருத்துமோதல்கள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகும் அறிவும் மிகுந்த குழந்தைச் செல்வம் வாய்க்கும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அரசு காரியங்களில் தடுமாற்றம் விலகும்.ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், பிள்ளைகளால் செலவு கள் உண்டு. எனினும் அவர்களால் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் தீர்வு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷத்தில் ராகு செல்வதால், தந்தைவழிச்
சொத்து கைக்கு வரும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். புது வீடு கட்ட லோன் கிடைக்கும். வேலை கிடைக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் அலைச்சல், பணப் பற்றாக்குறை, மூத்த சகோதர வகையில் கருத்து மோதல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும்.பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவர். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தடைப்பட்ட காரியங்களும் முழுமை பெறும். எவருக்காகவும் ஜாமீன் போடாதீர்கள். மதிப்பு கூடும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் பாச மழையில் நனைவர். மாணவர்களுக்கு, விளையாட்டின்போது கவனம் தேவை.
வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் சாதிப்பீர்கள். ஷேர், கமிஷன், அரிசி குடோன், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. வேலை ஆட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில், உயரதிகாரி நேசக் கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு வேலை அதிகரிக்கும். கலைத் துறையினர் போட்டி- பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், நேரத்துக்கு தக்கவாறு பேச வைப்பார். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தாரின் இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். மகளுக்காக வரன் தேடி அலைவீர்கள். மகனின் வேலை- படிப்பு குறித்தும் அதிகப் போராட்டம் இருக்கும். தலை சுற்றல், ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் கையிருப்பு கரையும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சகோதரர்கள், நண்பர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை, மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தின் முற்பகுதி கொஞ்சம் சவாலாக இருக்கும். பிற்பகுதியில் ஓரளவு பண வரவு உண்டு. மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு சிறு சிறு விபத்துகள் ஏமாற்றங்களும் நிகழலாம். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், இந்த நட்சத்திரக்காரர்கள், சாட்சி கையப்பம் இடவேண்டாம். இருசக்கர வாகனத்தில் கவனம் தேவை. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் வீண் கவலை, விரயம், சோம்பல், வந்து நீங்கும். கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் எவரையும் நம்பி ஏமாறாதீர்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.    

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாகும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசுக்கான வரிகளை முறையாகச் செலுத்துவது நல்லது. உத்தி யோகத்தில் வேலை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, இடைவிடாத முயற்சியால் எண்ணியதை எட்டிப் பிடிக்க வைக்கும்.ராகு பகவான் தரும் பலன்கள்

ராகு பகவான் 16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 6-வது இடத்தில் வந்து அமர்வதால், எதிலும் முன்னேற்றம்தான். சந்தேகத்தால் பிரிந்த தம்பதி ஒன்றுசேர்வர். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாழ்க்கைத் துணையின் தேக ஆரோக்கியம் மேம்படும். மறுமணத்துக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல சேதி வந்துசேரும். வரவேண்டிய பணம் தாமதமின்றி வந்து சேரும்; கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
புதிதாக ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். வழக்கில் வெற்றி உண்டு.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதரப் பகை நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு, அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். தந்தைவழியில் சொத்து சேரும். ராகு பகவான், 1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் தடைப்பட்டு முடியும். அதேநேரம், வி.ஐ.பி-களிடமிருந்து எதிர்பாராத உதவிகள் வந்துசேரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசியும் உண்டு.
மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திரு மணம் இப்போது கூடிவரும். சகோதர - சகோதரிகள் உறுதுணையாக இருப்பர்.கன்னிப் பெண்கள், தடைப்பட்டிருந்த கல்வியை மீண்டும் தொடருவர். நல்ல வேலை கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். பணப் பற்றாக்குறையால் தடைப்பட்ட கட்டட வேலைகள், இனி முழுமை அடையும். பூர்வீகச் சொத்து வழக்குகள் சாதகமாகும். அதிகாரிகளின் துணையுடன் அரசு காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில், புதிய அணுகுமுறையால் லாபத் தைப் பெருக்குவீர்கள். மருந்து வகை, எண்ணெய் வித்துகள், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், மேலதிகாரி கனிவுடன் நடந்துகொள்வார். இழந்த சலுகையை மீண்டும் பெறுவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினர் குறித்த வதந்திகள் விலகும். பெரிய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.
கேது பகவான் தரும் பலன்கள்

16.5.2011 முதல் 12-ல் சென்று அமர்கிறார் கேது. உடல்நிலை மேம்படும்.
பேச்சில் தெளிவு பிறக்கும். எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மகனுக்கு தடைப்பட்ட திருமணம் முடியும். சகோதர- சகோதரி வகையில் அலைச்சல் இருந்தாலும் மகிழ்ச்சி குறையாது. சொத்துப் பிரச்னைகள் தீரும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. இந்த காலகட்டத்தில், மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணியில் செல்கிறார் கேது. புண்ணிய தலங்களுக்குச் செல்வீர்கள்.
வீடு கட்ட லோன் கிடைக்கும். இழுபறியான வேலைகளையும் பேச்சு சாதுரியத்தால் செய்து முடிப்பீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். கேது 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத் தில் செல்கிறார். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவர். புது வேலைவாய்ப்பும் உண்டு.
மதிப்பு கூடும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலர், புதிதாக வாகனம் வாங்குவர். கன்னிப் பெண்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவ-மாணவியருக்கு நினைவாற் றல் பெருகும். மதிப்பெண் உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.


வியாபாரத்தில் பற்று- வரவு உயரும். வேலையாட்கள்  விசுவாசமாக நடந்துகொள்வார்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகத்தில் பிரச்னைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்துக்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும் பதவி உயர்வும் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களை அதிர்ஷ்டசாலிகளாக்கி, எல்லா வசதிகளையும் பெற்றுத் தருவதாக அமையும்

.

ராகு பகவான் தரும் பலன்கள்

ராகு பகவான் 16.5.2011 முதல், 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் நீங்கும். எனினும் புத்தி ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு அமர்வதால், எல்லோரையும் ஒருவித சந்தேகக் கண்ணுடன் பார்ப்பீர்கள். மனதில் வீண் குழப்பம் எழும். நண்டு ராசியில் பிறந்த உங்களுக்கு, யோக வீடான தேள் வீட்டில் கருநாகமான பாம்பு அமர்வதால் எதிலும் வெற்றி உண்டு. குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளுடன் சச்சரவுகள் எழுந்தா லும், உங்களது கருத்துகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம்.
கர்ப்பிணிகள் நீண்டதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு பகவான். எதிர்பார்த்த
பணம் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வீடு- மனை வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷம் நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்தக் காலகட்டத்தில் பணப்பற்றாக்குறை, எதிர்மறை சிந்தனை, சிறுசிறு நெருப்புக் காயங்கள், வீண் டென்ஷன் வந்து போகும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சகோதர உதவி, அரசு காரியங்களில் தீர்வு, வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாய்வழிச் சொத்துகளில் சிக்கல்கள் விலகும்.

பிள்ளைகளின் நட்பு வட்டத்தில் ஒரு கண் வையுங்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்பப் பிரச்னைகளில் அறிவுப்பூர்வமான அணுகுமுறை தேவை. கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். உயர்கல்வியில் வெற்றி உண்டு. மாணவர்கள், படிப்பதுடன் விடைகளை எழுதிப் பாருங்கள். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில் அவசர முடிவுகள் வேண்டாம். அரசியல்வாதிகள், எவரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் கூற வேண்டாம். வியாபாரத்தில், அனுபவ அறிவால் மாற்றங்கள் நிகழ்த்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். பாக்கிகளை வசூலிப்பதில் கறார் வேண்டாம். ஹோட்டல், இரும்பு, கமிஷன் மற்றும் எண்ணெய் வகையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரியுடன் மோதல்போக்கு நீங்கும். வேலை குறையும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் அமர்வதால் ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்கும். பிரபலங்களைப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். வங்கி லோன் மூலம், வீட்டை கட்டி முடிப்பீர்கள்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத முன்னேற்றம் உண்டு; பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து சேரும். கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலையில் அமர்வீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், சிக்கனம் தேவை.வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம்.
உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பதவி தேடி வரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் உங்கள் மீதான வீண் பழி விலகும். கணினித் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள், போட்டிகளில் பரிசு பெறுவார்கள். உயர் கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.
மொத்தத்தில், ராகுவால் கொஞ்சம் டென்ஷன் ஏற்பட் டாலும், கேதுவால் வாழ்வில் நிம்மதியும், பொருளாதார முன்னேற்றமும் உண்டாகும்.ராகு பகவான் தரும் பலன்கள்

16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 4-வது வீட்டில் ராகு வந்து அமர்வதால், மன நிம்மதி தருவார். தடைப்பட்ட வேலைகள் இனி முழுமை பெறும். வீட்டில் அமைதி திரும்பும். தாம்பத்தியம் இனிக்கும். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய வங்கிக்கடனை அடைக்க வழி பிறக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்றுசேருவீர்கள். வழக்கு சாதகமாகும். தாயாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கலாம். சிலர், புறநகர்ப் பகுதிகளுக்கு குடிபெயர்வர்
.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. பண வரவு உண்டு.  சிறு அறுவை சிகிச்சை, வீண் செலவுகள் வந்து போகும். வீடு- வாகனம் சேரும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.  22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. எனவே, பணத் தட்டுப்பாடு, சொத்துப் பிரச்னைகள் நீங்கும். பழைய பிரச்னைகள் தலைதூக்கும். குடும்ப விஷயங்களை வெளியே விவாதிக்க வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத் திரத்தில் ராகு செல்கிறார். எதிர்பார்த்த பணம் வரும். மகளுக்குத் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவியுண்டு.

5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால், பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்கவும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிகள், கனமான பொருட்களைத் தூக்க வேண்டாம். மாடிப்படியில் ஏறி- இறங்கும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு, கௌரவப் பதவிகள் தேடி வரும். வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் கூடும்.
வியாபாரத்தில், ராஜ தந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். கனிவான பேச்சால் பாக்கிகளை வசூலிப்பீர்கள். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் எவரையும் விமர்சிக்க வேண்டாம். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் அயல் நாட்டில் வேலை கிடைக்கும். கலைத் துறையினருக்கு, பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது 10-வது வீட்டில் வந்தமர்வதால், எதையும் திறம்பட முடிக்கும் மனோபலத்தைத் தருவார். சேமிக்கத் தொடங்குவீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடி வரும். சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வீடு கட்டும் பணி முழுமை அடையும். வீடு- மனை வாங்கும்போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலை தொடர்பாக நல்ல சேதி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உதவுவர். ரோஹிணி நட்சத்திரத்தில் 19.9.11 முதல் 25.5.12 வரை கேது செல்வதால், புது சொத்து வாங்குவீர்கள். திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.  26.5.12 முதல் 30.11.12 வரை கேது கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். தொட்டது துலங்கும்

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும், வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பைக் கரைக்க வேண்டி வரும். தந்தை வழி உறவுகளால் செலவும் அலைச்சலும் உண்டு.ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், புதிய நட்பால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள்.
வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த, புது யுக்திகளைக் கையாளுவீர்கள். அரசுக்கான வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். உத்தியோகத்தில், காலநேரமில்லாமல் உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் போராடி பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி, உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதுடன், திடீர் முன்னேற்றங்களைத் தருவதாகவும் அமையும்.


ராகு பகவான் தரும் பலன்கள்

16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்களின் ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து ராகு அமர்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். உற்சாகம் கூடும். சவாலான விஷயங்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உங்களின் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். நீங்களும் கடனையெல்லாம் அடைத்துவிட்டு, கம்பீரமாக வலம் வருவீர்கள்.
தாயாருக்கு ஆரோக்கியம் கூடும். பிள்ளைகளை மேல்படிப்பு, வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். மகளின் திருமணம் குறித்து, மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து நல்ல பதில் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அழகான குழந்தை பிறக்கும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வழி பிறக்கும்.  நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை, கனவுத் தொல்லைகள் நீங்கும்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, ராகு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால் அனுபவ அறிவு வெளிப்படும். திடீர் பண வரவு உண்டு. வழக்குகளில் நெருக்கடி நீங்கும். உங்கள் ரசனைக்கேற்ப புது இடம் வாங்குவீர்கள். 22.1.12 முதல் 30.9.12 வரை ராகு அனுஷ நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் வெற்றி உண்டு. நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும். அரசியலில் செல்வாக்குக் கூடும். சுப நிகழ்வுகளால் வீடு களைகட்டும். 1.10.12 முதல் 30.11.12 வரை, விசாக நட்சத்திரத்தில்  ராகு  செல்வதால், சேமிக்கத் தொடங்குவீர்கள். அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய்வழி உறவுகளுடன் மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களின் கனவு வீட்டை கட்டி முடிக்கும் வாய்ப்பு கூடிவரும். கன்னிப் பெண்கள், பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வார்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, தலைமையின் ஆதரவு  உண்டு. என்றாலும், வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். லோன் உதவியால் புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில், உங்களின் அணுகுமுறை மாறும். பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலியுங்கள். விளம்பரங்களால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். ஷேர், புரோக்கரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். பதவி உயர்வு உண்டு. கலைஞர்கள், வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வர்; உங்களின் படைப்புகளை அனைவரும் பாராட்டுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது ராசிக்கு 9-ஆம் இடத்தில் வந்தமர்வதால், சமயோசிதமாகச் செயல்பட வைப்பார். மனைவியின் பேச்சுக்கு மதிப்பு கொடுங்கள். சேமிக்கத் துவங்குவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பர்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால், பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வருமானம் உயரும். வீடு- மனை வாங்குவது- விற்பது லாபகரமாக அமையும். 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். மூத்த சகோதரர் ஆதரவாகப் பேசுவார். 26.5.12 முதல் 30.11.12 வரை, கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பெரிய பதவிகள், பிரபலங்களின் நட்பு, நாடாளுபவர்களால் பலன் கிடைக்கும்.
கேது 9-ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும். தந்தைவழி சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு புது வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடியுங்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை குறையும். சலுகைகளுடன் கூடிய வேறு வாய்ப்புகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு - கேது பெயர்ச்சி பலவிதங்க ளிலும் உங்களைச் சாதனையாளராக மாற்றும்.ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் அமர்ந்து பலன் தரப் போகிறார் ராகு. தடைப்பட்டிருந்த பல காரியங்கள், இப்போது முழுமை பெறும். ஆனால், அவர் வாக்கு ஸ்தானத்தில் நுழைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. வருமானம் உயர்வதுடன், செலவுகளும் துரத்தும். குடும்பத்தில் சந்தோஷம் குறையாது.உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களும், தேடி வந்து பணம் தருவர். பயணங்களால் ஆதாயம் உண்டு.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும். ராகு, அனுஷ நட்சத்திரத்தில் 22.1.12 முதல் 30.9.12 வரை செல்கிறார். தாய்வழி உறவுகளால் அலைச்சலும் செலவும் உண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு கூடும்; வீடு- மனை சேரும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த காலகட்டத்தில், சிறு விபத்துகள் நிகழலாம்.பணப் பற்றாக்குறையும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய காரியங்களில் இறங்குவதோ, வீண் விவாதங்களோ வேண்டாம்.
மகனுக்கு, வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் அமைவாள். மகளுக்கு, உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். வெளியூர் பயணங்களால், உடம்பு லேசாகப் பாதிக்கும். பத்திரங்களில் கையெழுத் திடும்போது கவனம் தேவை. வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். கன்னிப் பெண்கள், பெற்றோரின் அறிவுரையை ஏற்பீர்கள்; கல்யாணம் கூடி வரும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். வீடு- மனை வாங்குவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சமூக சேவையில் ஆர்வம் பிறக்கும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. லாகிரி வஸ்துகளைத் தவிர்க்கவும். வழக்குகளில் இழுபறி காணப்படும். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவர்.
வியாபாரத்தில், பழைய பிரச்னைகளைத் தீர்க்க புது வழி கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் உண்டு. உத்தியோகத்தில்,  உங்களின் பொறுப்பு உணர்வால் புதிய பதவி, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆனால், யோசித்து முடிவெடுக்கவும். கலைத் துறையினரை, பழைய நிறுவனங்கள் அழைத்துப் பேசும்.

கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். அலைச்சல் இருந்தாலும் நிம்மதி உண்டு. குடும்பத்தாரின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுங்கள். தடாலடி முடிவுகள் வேண்டாம். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போகவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் மற்றொரு வீடான ரிஷபத்தில் கேது அமர்வதால் கெடு பலன் குறைந்து நல்ல பலன்கள் அதிகரிக்கும்.

கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்கிறார் கேது. வயிற்று வலி, தலை வலி வந்து நீங்கும். சகோதரர்களை அனுசரிக்கவும். வீடு-மனை விற்பது வாங்குவதில் விழிப்பு தேவை. 19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், வேலை கிடைக்கும். சவாலான காரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். ஆபரணங்கள் சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் மன இறுக்கம் நீங்கும். கொடுக்கல்-வாங்கலில் நிதானம் தேவை. வங்கிக் காசோலைகளை கவனமாகக் கையாளுங்கள்.
கேது ராசிக்கு 8-ல் வந்தமர்வதால் முன் கோபம் அதிகமாகும். சிலருக்குச் செலவுகள் இரட்டிப்பாகும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். அரசு காரியங்களை முடிப்பதில் தடுமாற்றம் இருக்கும். அதேநேரம் ஆன்மிகச் சிந்தனை, யோகா- தியானத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
நேரந்தவறி வீட்டுக்குச் செல்வதால் கருத்து மோதல்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
மொத்தத்தில் கேதுவால் அலைச்சலும் அச்சமும் ஏற்பட்டாலும் ராகுவால் ஆதாயமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார் ராகு. உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அவர்களுக்கு, படிப்பில் இருந்த அலட்சியம் மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளும் துரத்தும். வீண் செலவுகளைக் குறையுங்கள். உணர்ச்சி வேகத்தில் தவறான முடிவுகள் எடுக்கவேண்டாம்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், இந்த நட்சத்திரக் காரர்களுக்கு சிறிய அளவில் உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம். பொறுமையான அணுகுமுறை தேவை. எவருக்கும் ஜாமீன்  போடவேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. இந்த நட்சத்திரக்காரர்கள், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பெரிய நோய்கள் இருப்பது போன்று பிரமை ஏற்படும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. குடும்பத்தில் நிம்மதி, பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு கட்ட லோனும் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்கள் தேடிவந்து உதவுவர். கன்னிப் பெண்கள், பிறரை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டாம். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். மாணவர்கள், கணிதத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். தெய்வ பலத்தால் பிரச்னைகளைச் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தை கவனமாகக் கையாளுங்கள். பங்காளிப் பிரச்னை தலைதூக்கும். வெளி உணவுகள், வறுத்த- பொரித்த உணவுகளைத் தவிருங்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம். அயல் நாட்டுப் பயணங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், தலைமையை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள். புது ஆர்டர்களைப் போராடி பெறுவீர்கள். அரசாங்க வரி விஷயத்தில் தாமதம் வேண்டாம். உத்தியோகத்தில், உங்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம் ஆவீர்கள். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத் துறையினருக்கு பரிசு - பாராட்டுகள் குவியும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைப்பதால், வீண் பயம் விலகும். எதிர்ப்புகள் அடங்கும். உங்களின் திறமைகள் வெளிப்படும். பிரபலங்கள் அறிமுகமாவர். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பர். சகோதரியின் திருமணத்தை கோலாகல மாக நடத்துவீர்கள். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்கு இடையே காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். மனைவிக்கு லேசாக முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறு வந்து நீங்கும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்லவேண்டாம்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சொத்து விஷயம் நல்லபடியாக முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பண வரவு அதிகரிக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர். தந்தையாரின் உடல்நிலை பாதிக்கலாம். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி உண்டு. 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால் செல்வாக்குக் கூடும்; சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை செய்து முடிப்பீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்கள், புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். மாணவ-மாணவியருக்கு நினைவாற்றல் கூடும். பதக்கம், பரிசு கிடைக்கும். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் போராடி ஜெயிக்க வேண்டியிருக்கும். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வெடிக்கும். உத்தியோகத்தில், பதவி உயரும். எந்த நிலையிலும் நேர்பாதையில் செல்வது நல்லது.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி யதார்த்தமான முடிவுகளாலும் கடும் உழைப்பாலும் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.


ராகு பகவான் தரும் பலன்கள்

16.5.2011 முதல் 30.11.2012 வரை, ராசிக்கு 12-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், நிம்மதி பிறக்கும். உடல்நலக் குறைபாடுகள் நீங்கும். தைரியம் பிறக்கும். பேச்சிலும் செயலிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சந்தேகத்தாலும், வாக்குவாதத்தாலும் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வர். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில்  கல்யாணம், கிரகப் பிரவேசம் என நல்லது நடக்கும். வெளி மாநில புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: கேட்டை நட்சத்திரத்தில் 16.5.2011 முதல் 21.1.2012 வரை செல்கிறார் ராகு. சாதுரியமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். அனுபவ அறிவு கூடும். திடீர் பயணங்களும் செலவுகளும் அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷத்தில் செல்கிறார் ராகு. தைரியமாக புதிய முதலீடுகள் செய்வீர்கள். சுப நிகழ்ச்சி களால் மகிழ்ச்சி தங்கும். வழக்கு சாதகமாகும். வீடு மாறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் செல்கிறார் ராகு. சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
பிள்ளைகளை உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவீர்கள். பூர்வீகச் சொத்தில் சிக்கல்கள் விலகும். கன்னிப் பெண் களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். கல்யாணம் நடக்கும். மாணவர்கள், அதிக மதிப்பெண் எடுக்கும் அளவுக்கு முன்னேறுவர். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். நாடாளுவோரின் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்களின் பலத்தை நிரூபித்து தலைமையிடம் நல்ல பெயரெடுப்பார்கள். சிறு சிறு விபத்துகளும் நிகழலாம் என்பதால் கவனம் தேவை. கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில், புதிய முதலீடுகளால் லாபம் வரும். சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வீர்கள். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதியால் அதிக லாபம் வரும். கூட்டுத்தொழிலில் புது முதலீடுகளைச் செய்வீர்கள். பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும், இறுதியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்படுவர். உத்தியோகத்தில், மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்பு டைய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். கலைஞர்கள், புதிய வாய்ப்புகளால் புகழ் பெறுவர்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். பிரச்னைகளின் அடிப்படைக் காரணங்களை அறிந்து, அதைத் தீர்க்கும் வல்லமையைத் தருவார். இழந்த அமைதியை மீண்டும் பெறுவீர்கள். தாம்பத்தியம் இனிக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதக மாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். ஷேர் லாபம் தரும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை கேது, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செல்வதால் மதிப்பு கூடும். சொத்துப் பிரச்னை தீரும். அரசால் ஆதாயமடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது உதவிகள் கிடைக்கும். கமிஷன், ஃபைனான்ஸ் வகைகளால் பணம் வரும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தர வேண்டாம். வேலை கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். திருமணம் கூடி வரும். புது மனை புகுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
ராசிக்கு 6-ல் கேது நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். பழைய கடனையும் பைசல் செய்யுமளவிற்கு வருமானம் கூடும். சொந்த ஊர் கோயில் விழாக்களுக்குத் தலைமை தாங்குவீர்கள். வியாபாரத்தில் போராட்டங்கள் நீங்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி வைப்பீர்கள். பங்கு தாரர்களுடன் பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில், உழைப்புக்கேற்ற உயர்வு உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உன்னதமான நிலைக்கு உங்களை உயர்த்துவதுடன், சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருவதாக அமையும்.


ராகு பகவான் தரும் பலன்கள்


16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ஆம் வீட்டுக்கு வருகிறார். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை சிரமமின்றி நிறைவேற்ற முடியும். சேமிக்கும் அளவுக்கு பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி ஆனந்தம் நிலவும்; உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கணவன் - மனைவி இருவரும் நகமும் சதையுமாகத் திகழ்வார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிக்கு, குழந்தைச் செல்வம் வாய்க்கும். அதிக வட்டிக் கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள், உயர்கல்வியில் வெற்றி பெறுவர். மகனின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.
ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், எதிர்பார்த்த பணம் வந்துசேரும். வீடு-மனை வாங்குவீர்கள். திடீர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். செல்வாக்கு கூடும். ஷேர் மூலம் பணம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷ நட்சத்திரத்தில் ராகு செல்வதால், கல்யாணம் ஏற்பாடாகும். வழக்குகள் சாதகமாகும். வாகனத்தை மாற்றுவீர்கள். நிர்வாகத் திறமை கூடும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். 1.10.12 முதல் 30.11.12 வரை விசாக நட்சத்திரத்தில் ராகு செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உறவுகளின் விமரிசனங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
ராசிக்கு 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால், பாதியில் நின்றுபோன வேலைகளை முழுமூச்சுடன் செய்துமுடிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் அமையும். சொத்து வழக்குகள் சாதகமாகும். எதிரிகளும் நண்பர்கள் ஆவர்.
கன்னிப் பெண்களுக்கு, தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். தடைப்பட்ட கல்வியை முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவர். வியாபாரத்தில், மறைமுகப் போட்டிகளை சாதுரியமாக சமாளிப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவசாலிகளை வேலைக்குச் சேர்ப்பீர்கள்.விலகிச்சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவர். உத்தியோகத்தில், அதிகாரிகளுடன் இருந்த மோதல்போக்கு விலகும். ஊதிய உயர்வு உண்டு. உங்களின் திறமை வெளிப்படும். கணினித் துறையினருக்கு, அதிகச் சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும். கலைத் துறை யினருக்கு வேற்று மொழி வாய்ப்புகள் தேடி வரும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமை சேரும். கர்ப்பிணிகள், தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும். சொந்த வீடு வாங்குவீர்கள். எனினும், உள்மனதில் வீண் சஞ்சலங்கள் வந்து நீங்கும். மாணவர்களுக்கு அதிரடி முன்னேற்றம் உண்டு.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.11 முதல் 18.9.11 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். பூர்வீகச் சொத்தை பராமரிக்க அதிகம் செலவு செய்வீர்கள்.
19.9.11 முதல் 25.5.12 வரை, ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் உதவுவார்கள். தள்ளிப்போன திருமணம் தடபுடலாக நடக்கும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால், எதிர்பாராத காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆனால், திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும்.


கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள் புதிய நட்பால் சிறப்படைவர். வியாபாரத்தில் பற்று - வரவு உயரும். தொழில் ரீதியாக பிரபலங்களின் நட்பு கிட்டும். பங்குதாரர்களிடையே பனிப்போர் நீங்கும். உங்களது ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில், கேதுவால் கொஞ்சம் குழப்பங்கள் ஏற்பட்டாலும், ராகுவால் திடீர் யோகமும், நினைத்ததைச் சாதிக்கும் வல்லமையும் உண்டாகும்.


ராகு பகவான் தரும் பலன்கள்
16.5.2011 முதல் 30.11.2012 வரை, உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்து அமர்வதால், கடந்த கால உழைப்புக்கான நற்பலன்கள் தேடிவரும். தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். சுயதொழில் செய்யும் வல்லமையையும் தருவார் ராகு. உங்களின் பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் கருத்துமோதல்கள் விலகும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு-வாகன வசதி பெருகும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். உங்களின் திட்டமிடலால் அலைச்சல் குறையும். நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் இழப்பால் சில நேரம் வருந்துவீர்கள்.ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை, கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். 22.1.12 முதல் 30.9.12 வரை, அனுஷ நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால்,  திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் நெஞ்சு வலி, முதுகு வலி வந்து நீங்கும். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 1.10.12 முதல் 30.11.12 முடிய ராகு பகவான் விசாக நட்சத்திரத்தில் செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாகக் கிடைக்கும். அதேநேரம், அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
ராசிக்கு 10-ல் ராகு வருவதால் வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். மகனின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய நண்பர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். கன்னிப் பெண்கள் தடைப்பட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்த வீட்டுக்குக் குடிபெயரும் யோகமும் உண்டு. மங்களகரமான செய்திகள் தேடி வரும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே வெற்று பெறும். அரசியல்வாதிகள், தலைமையை அனுசரித்துப் போகவும்.
வியாபாரத்தில், புதிய யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் தன்னிச்சையான முடிவுகள் வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில், திடீர் இடமாற்றம் உண்டு. வேலை அதிகரித்தாலும் புதிய அனுபவங்கள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வேலை தொடர்பான நெருக்கடிகள் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்தாலும் யோசித்து முடிவெடுப்பது நல்லது.கலைஞர்களுக்கு, வெகுநாட்களாக அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்கும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது இப்போது உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். தடைகள் நீங்கி சுப காரியங்கள் கூடிவரும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஆபரணம் சேரும். சொந்த வீடு வாங்கவேண்டும் எனும் உங்களின் நீண்டகாலக் கனவு நனவாகும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு. சொத்துகள் வாங்கும்போது, தாய் பத்திரத்தை சரிபார்ப்பது அவசியம். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால் பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்கிறார். திருமண யோகம் கூடிவரும்.
ராசிக்கு 4-ஆம் வீட்டில் கேது அமர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. எவரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். வீடு- வாகனப் பராமரிப்பு மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். மாணவர்கள், போட்டிகளில் பதக்கம் பெறுவார்கள். வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். உத்தியோகத்தில், பாராட்டும் பதவி உயர்வும் உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, விடா முயற்சியாலும் கடின உழைப்பாலும், உங்களைச் சாதிக்க வைப்பதாக அமையும்.


ராகு பகவான் தரும் பலன்கள்


16.5.2011 முதல் 30.11.2012 வரை 9-ஆம் வீட்டில் வந்து அமர்வதால், சோம்பல் நீங்கும். வாழ்க்கை பிரகாசிக்கும். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சுப காரியங்களால் வீடு களைகட்டும். கணவன் - மனைவிக்கு இடையே அந்நியோன்யம் பிறக்கும். கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 21.1.2012 வரை கேட்டை நட்சத்திரத்தில் ராகு செல்வதால், வேலைச்சுமை இருக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா பிரச்னை தலைதூக்கும். சில விஷயங்களில் வி.ஐ.பி-களின் ஆதரவு உண்டு. 22.1.12 முதல் 30.9.12 வரை அனுஷம் நட்சத்திரத்தில்  ராகு செல்வதால் இழுபறியான வேலைகள் விரைவில் முடிவடையும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். வீடு- மனை வாங்குவீர்கள். திடீர் செலவுகளாலும், பயணங்களாலும் தடுமாறுவீர்கள்.  1.10.12 முதல் 30.11.12 வரை விசாகம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால் செல்வாக்கு கூடும். பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு மேலை நாட்டில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். வாழ்க்கைத் தரம் உயரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் அப்பாவுடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். கனிவான பேச்சால் பிரச்னைகளைத் தவிர்க்கப் பாருங்கள். கன்னிப் பெண்களுக்கு நல்ல மணமகன் அமைவார். அரசியல்வாதிகளின் மதிப்பு கூடும்; அவர்கள் வீண் விமர்சனத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள், உயர் கல்வியில் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் தளரும். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி வகைகள், உணவு, இரும்பு, கணினி உதிரி பாகங்கள், மருந்துப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில், பிரச்னைகள் நீங்கும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். சிலருக்கு, புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைத் துறையினரின் படைப்புகள், பட்டிதொட்டியெங்கும் பேசப்படும்.
கேது பகவான் தரும் பலன்கள்

கேது பகவான் இப்போது, 3-வது வீட்டில் வந்து அமர்கிறார்.  குடும்பத்தில் சந்தோஷம் கரைபுரளும். எதிர்பார்த்த வகையில் உதவி கிடைக்கும். தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகள், உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். ஆனால், இளைய சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து மறையும். விட்டுக்கொடுத்துப் போகவும். சொத்துப் பிரச்னைகளை கவனமாகக் கையாளுங்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 16.5.2011 முதல் 18.9.2011 வரை மிருகசீரிட நட்சத்திரத்தில் கேது செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். பண வரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.  விலகியிருந்த உறவினர், சகோதரர்கள்... இனி, உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். 19.9.11 முதல் 25.5.12 வரை ரோஹிணி நட்சத்திரத்தில் கேது செல்வதால், குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். தெய்வ நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். சொத்து சேரும். 26.5.12 முதல் 30.11.12 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் கேது செல்வதால். நீண்டநாட்களாக இருந்த முதுகு வலி, கழுத்து வலி நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
சொந்த ஊரில் உங்களின் மரியாதை கூடும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். சிலர் சொந்த வீட்டுக்கு குடிபுகுவார்கள். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. நீங்களும் அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டு. உங்களால் பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கன்னிப் பெண்களின் கனவு நனவாகும். மாணவ- மாணவியருக்கு தேர்வில் மதிப்பெண் கூடும். வியாபாரத் தில், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு அதிக சம்பளம் - சலுகையுடன்கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி, சமூகத்தில் பெரிய அந்தஸ்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.


நன்றி - சக்தி விகடன்