Showing posts with label J.POLITICS. Show all posts
Showing posts with label J.POLITICS. Show all posts

Monday, May 09, 2011

நாட்டு நடப்பும் நையாண்டிச்சிரிப்பும்

1. ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கல்பாக்கத்தில், வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படப் போகும் அதிவேக அணு உலை மின்சாரம், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சர்வதேச போர்க் குற்றவாளி கூண்டில் நிற்கும் இலங்கைக்கு விற்கப்படக்கூடும்.

அதான் இலங்கைல மொத்தமா உலை வெச்சுட்டாங்களே.. இனி என்ன மிச்சம் இருக்கு இழக்க நமக்கு.. ?

----------------------------------------

2. பத்திரிகைச் செய்தி: "ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக வாதாட அரசு தரப்பில் ஏற்கனவே, மூத்த வக்கீல் லலித் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, சுப்பிரமணியசாமியை அரசு தரப்பு வக்கீலாக நியமிப்பது ஏற்புடையதல்ல' என, சி.பி.ஐ., தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, மேலும் வாதாட இருப்பதாக சுப்பிரமணியசாமி கோரினார். வழக்கு விசாரணை, 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சீரியஸா டிராமா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு காமெடி? காமெடியன் ரோல்?னு நினைச்சிருப்பாங்களோ?

-------------------------------

3. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரிகள் மூடப்பட்டதைக் கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் எட்டு குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரியும், காஞ்சி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம்.



காஞ்சிபுரம் காய்ஞ்சிபுரம் ஆகி ரொம்ப நாள் ஆச்சே.. இனி மாய்ஞ்சி மாய்ஞ்சி போராடி என்ன பண்ணப்போறீங்க.. விடுங்க.. 

----------------------------------------------




4. பத்திரிகைச் செய்தி: மாமல்லபுரம் அருகே, டாஸ்மாக் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள, 296 மதுபானக் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டன.


பேச்சுவார்த்தை பார்ல சுமூகமா கமுக்கமா நடந்ததா? 

-----------------------------------------

5. தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம்
தாழ்த்தப்பட்டோர் பிரிவில், 15 லட்சத்து, 41 ஆயிரம், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியர் பிரிவில், ஒரு லட்சத்து, 12 ஆயிரம், மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 14 லட்சத்து, 40 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில், ஒரு லட்சத்து, 88 ஆயிரம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், 28 லட்சத்து, 93 ஆயிரம், இதர பிரிவினரில், ஐந்து லட்சத்து, 56 ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

மே 13 க்குப்பிறகு வேலை வாய்ப்பில்லாதவர்கள் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும்.

-----------------------------------------

6. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: வன்னிப்பகுதியில் இலங்கை அரசு, அப்பாவி மக்களான ஈழத் தமிழர்களை, கனரக ஆயுதங்கள் மூலம் கொன்றிருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே, அந்த மண்ணுக்குரிய தமிழர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது.

அண்ணே.. நல்லாதான் கூவுறீங்க.. இதையே தானைத்தலைவர்ட்ட போய் கூவுங்களேன் பார்ப்போம்..?

---------------------------------------

7. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி பேட்டி :சோனியா உண்மையான இந்தியரே அல்ல; அவரின் குறி, இந்தியாவைச் சுரண்டி உலக நாடுகளில் சொத்துகள் சேர்க்க வேண்டும் என்பதே. இவற்றை விரைவில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன்.

சீக்கிரம்.. மே 13க்கு இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு...அப்புறம் காங்கிரஸ் இருக்கற இடமே தெரியாம போயிடும்.. அதுக்குள்ள அம்பலப்படுத்திடுங்க.. 

-----------------------

8. தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, பா.ஜ., ஓட்டு வங்கி இந்தத் தேர்தலில் உயரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த தேர்தலில், பா.ஜ., தமிழக மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அதன் ஓட்டு வங்கி இருக்கும்.

ஏன் இப்படி மானத்தை வாங்கறீங்க? மீறி மீறிப்போனா 2 % ஓட்டு வாங்குவீங்களா? எதுக்கு இந்த அலப்பறை.. 

------------------------------

9. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடும்பத்தினர் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல. கட்சியே ஒரு குடும்பத்தின் ஆதிக்கமாக மாறிவிடக் கூடாது என்பது தான் எங்கள் நிலை.

அதான் எங்க தானைத்தலைவரும் சொல்றாரு..இது ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மட்டும் அல்ல. 3 குடும்பங்களின் கூட்டுக்குடும்ப ஆதிக்கம்னு.. நீங்க தான் புரிஞ்சுக்கலை.. 

-------------------------------


10. பா.ஜ., பொதுச் செயலர் ஜகத் பிரகாஷ் நட்டா பேட்டி: ஊழல் பிரச்னைகளில், தி.மு.க.,வும், காங்கிரசும் கைகோர்த்து செயல்படுகின்றன. காங்கிரசின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்படி, தி.மு.க., ஊழல் நடவடிக்கைகளை துவங்கியது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஊழலில் தான் கூட்டணி அமைத்திருக்கின்றனர். ஊழல் என்ற பிரச்னை வரும்போது அவர்கள் சமரசமாகி விடுவர்.


கூட்டணி ஆட்சின்னா ஒத்துக்க மாட்டாங்க.. ஆனா கூட்டு ஊழல்னா ஒத்துக்குவாங்க.. என்ன கொடுமை சார் இது..?

---------------------------------

Sunday, April 24, 2011

ரஜினியை தாக்கினேனா? - இயக்குநர் அமீர் VS விகடன் பேட்டி - காமெடி கும்மி

http://lh6.ggpht.com/__KO8CeenItc/SxCQcAZ9A_I/AAAAAAAACxQ/E7NHGoaV2xc/yogi_thumb3.jpg'


து வந்தாலும் சரி’ என்கிற தைரியத்தில் இதயம் திறப்பவர் இயக்குநர் அமீர். 


1. ''அமளிதுமளிபிரசாரம், அமோக வாக்குப்பதிவு... அடுத்து யாருடைய ஆட்சின்னு நினைக்கிறீங்க?'' எனக் கேட்டதுதான் தாமதம்... சிதறு தேங்காயாகச் சீறத் தொடங்கிவிட்டார் அமீர்.

இதுக்கு ஏன் சீறனும்? யோகி படம் உல்டான்னு சொல்றாங்களே.. அது நிஜமா?ன்னு கேட்டாத்தானே கோபம் வரனும்?

''என்னோட 'ஆதிபகவான்’ படத்தைப் பற்றிக் கேட்பீங்கன்னு பார்த்தா, அடுத்த முதல்வர் யாரா? அதிகமான வாக்குப் பதிவு யாருக்குச் சாதகம்னு தெரியாமல் இரண்டு கட்சிகளுமேஅல்லாடும் நிலையில், 'தலைப் பிள்ளை ஆண்... தப்பினால் பெண்’ என நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்?

ஆதிபகவன்.. டைட்டிலைப்பார்த்தாலே தெலுங்கு டப்பிங்க் வாசனை தெரியுது.. சத்தியமா படம் தேறாது.. 

இந்தத் தேர்தலில் ஜெயிச்சது வாக்காளர்களும் தேர்தல் ஆணையமும்தான். ஆனால், இந்தத் தேர்தலில் அரசியல் நாகரிகம்தான் பலிகடாவாகிவிட்டது. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்குத் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் கட்ட விழ்த்து விடப்பட்டன. 

ஆமா.. அண்ணன் அசிஸ்டெண்ட் டைரக்டர்சை திட்டற மாதிரி ஹி ஹி 

திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளையும் பற்றிப் பேசாமல், 'குடிக்கிறார், அடிக்கி றார்’ என்று பேசி சந்தி சிரிக்கவைத்துவிட்டார்கள். நேற்று வரை அரசியல் அரிச்சுவடி தெரியாத சிரிப்பு நடிகர்கள் இன்றைய தேர்தலைத் தீர்மானிக்கும் கருவிகளாக உருமாற் றப்பட்டார்கள். இந்தக் கேலிக்கூத்துகளைத்தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!''

 அண்ணன் வடிவேல் கால்ஷீட் கேட்டு கிடைக்காத கோபத்தை இப்படி தீர்த்துக்கறார் போல.. ஹி ஹி 

2.''வடிவேலுவின் பிரசாரத்தைச் சொல்கிறீர்களா?''


''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகனும் இன்றைக்கு எங்கே போனார்கள்?


 சிம்ரன் புருஷன் கூட குடும்பம் நடத்தபோய்ட்டார்( அவரோட புருஷன் கூடத்தான்.. யாரும் ஜெர்க் ஆகாதீங்க.. ). சினேகன் இப்போ சினேகா கூட சினேகமா இருக்காராம்.. ஹா ஹா நல்லா கேட்கரார்யா டீட்டெயிலு..


காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? 

அப்போ கேப்டன் கூட எந்த பிரச்சனையும் இல்லையே..?

விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம். 

அப்போ அரசியல் என்ன இதுக்குத்தான் பயன் படுத்தனும்?ஊழலும் பண்ணக்கூடாது,சொத்துத்தகராறுக்கும் யூஸ் பண்ணக்கூடாதுன்னா எப்படி?

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன்.

 இல்லையே. நீங்க ஃபாரீன் டி வி டி யை கவனிச்சு சுட்டுட்டு இருக்கறதா சொல்றாங்களே..? ஹி ஹி
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhV__HkeEGx3NqF5J1Me9boRba3Y2JZOG24SdFBO7fgPFjr69qn6KTdvhjAzDyNGb5YwLeZC7X78V81x-dokG17bZ9P2geHuLd7LkcLXGDNk4KE94Ah62xq6My-pNtRoMaLw5GhkBCpOaE/s1600/ameer.jpg
வடிவேலு அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன. அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!''


 என்ன ஒரே வித்தியாசம்னா ரேஷன் கடைல லேடீஸ் கூட்டம் அதிகமா இருக்கும், டாஸ்மாக்ல ஜென்ட்ஸ் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும்.. 

3. ''அப்படி என்றால், மது குடிப்பது தவறு இல்லை என்கிறீர்களா?''

''ஒரு தாய் என்ன கொடுத்தாலும் குழந்தை அதைச் சாப்பிடுகிறது. காரணம், தாய் விஷத்தைக் கொடுக்க மாட்டாள் என்கிற நம்பிக்கை. மது குடிப்பது தவறு. ஆனால், அரசாங்கமே ஊற்றிக் கொடுக்கும் நிலையில், குடிப்பவனை எப்படிக் குற்றம் சொல்ல முடியும்? உலகக் கோப்பை வாங்கிய மகிழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்க ஷாம்பெயின் பாட்டிலைத் திறந்து, சச்சினும் டோனியும் குடிக்கிறார் களே... அது மது இல்லையா?''

அப்போ.. அரசாங்கம் டாஸ்மாக்கை இழுத்து மூடிட்டா எல்லா பயல்களும் திருந்திடுவாங்களா? ஒரு பயலும் பாண்டிச்சேரிக்கோ,கேரளாவுக்கோ போக மாட்டானா?

4. ''வேட்பாளரை விஜயகாந்த் அடிச்சதா பரபரப்பு கிளம்பியதே?''

''அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், நிச்சயமா அது தப்புதான். விஜயகாந்த் வேட்பாளரை அடிச்சாரா இல்லை, உதவியாளரைத் தட்டினாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

 தெளிவா தெரியலயா? ஏன்? நீங்களும் மப்புல இருந்தீங்களா? 

ஆனால், அவர் அடிச்ச மாதிரியான காட்சிக்கு பின்னணி இசை எல்லாம் அமைச்சு, கிராஃபிக்ஸ் வேலைகளைக் காட்டியது, அடிச்சதை விட மோசமான விஷயம். குடிச்சதையும் அடிச்சதை யும் சொல்லிச் சொல்லியே, மக்களோட பிரச்னை களை மறக்கடிச்சிட்டாங்களே... அதுதான் ஜீரணிக்க முடியாத துரோகம்!''


 அதெல்லாம் யாரும் மறக்கலை.. மே 13 பாருங்க.. ரிசல்ட்டை.. மஞ்சள் துண்டைக்காணோம்.. ராசா துணியைக்காணோம்னு ஆளாளுக்கு ஓடரதை.. 

5. ''வடிவேலுவின் பேச்சுக்கு பெரிய அளவில் கூட்டம் திரண்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''சாமி ஊர்வலத்துக்கும் கூட்டம் வரும். சாவு வீட்டுக்கும் கூட்டம் வரும். வேடிக்கை பார்ப்பது தமிழ் மக்களோட தவிர்க்க முடியாத கலாசாரம். யாரையும் திட்டிப் பேசினா, நாலு பேர் கேட்கத்தானே செய்வாங்க. அந்த மாதிரிதான் வடிவேலுக்கும் சிங்கமுத்துக்கும் செந்திலுக்கும் கூட்டம் வந்தது. 'விஜயகாந்த்துக்கு கேப்டன்கிற பட்டம் ஏன்?’னு கேட்கிற வடிவேலுக்கு 'வைகைப் புயல்’ என்கிற பட்டம் மட்டும் பொருத்தமா?


 இந்தப் புயல் எந்த மரத்தை பேத்துச்சு... எந்த வீட்டை இடிச்சுச்சு? வட்டச் செயலாளர் தொடங்கி ரௌடிங்க வரைக்கும் அத்தனைப் பேருக்கும் பட்டம் கொடுத்தே இந்த ஊரு பழகிடுச்சு. விஜயகாந்த்தைப் பத்தி இவ்வளவு பேசுற வடிவேலு, அந்த அம்மையார் விஷயத்தில் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கணும்? ஆட்சி மாறி னால் அதோ கதி ஆகிடும்கிற பயம்தானே? 'எப் போதுமே அம்மையார் என்றுதான் அழைப்பேன்!’ என 87 வயதிலும் நாகரிகத்தோடு பேசுகிறார் முதல்வர் கலைஞர். அந்த அசாத் திய நாகரிகத்துக்குப் பக்கத்தில் ஒரு சாக்கடையோட சப்போர்ட் எதுக்கு? 

ஆமாமா.. கலைஞரின் அரசியல் நாகரீகம் உலகறிந்ததுதான்..

சினிமாவில் ஒரு காமெடி நடிகரோட ரோல்... ஹீரோ பின் னால் ஒளிந்துகொள்வதுதான்! நிஜத்திலும் வடிவேல் அதைத் தான் பண்ணி இருக்கார். கலைஞர், ஸ்டாலின், அழகிரிங்கிற ஹீரோக்கள் பின்னால் ஒளிஞ்சு நின்னு பேசினார்!''

 வில்லன்களை ஹீரோக்கள் என சொல்லும் காலம் இது.. 



6. ''இப்போ இவ்வளவு வெளிப்படையா பேசுற நீங்க, தேர்தலுக்கு முன்னரே பேசி இருக்கலாமே... தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பழகன் தயாரிப்பில் படம் பண்றதால் தயங்கிட்டீங்களா?''

''தயாரிப்பாளர் அன்பழகன் என்னிடம் இதுவரைக்கும் அரசியல் பேசியதே இல்லை. ஓர் இயக்குநரா என்னை அவர் மதிக்கிறார். அதைவிட அதிகமா நான் அவரை மதிக்கிறேன். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்குமான உறவுதான் எங்களுடையது. தேர்தலுக்கு முன்னர் இதை நான் பேசி இருந்தால், அ.தி.மு.க-வுக்கு ஆதரவு பாடுவதா முத்திரை குத்தி இருப்பாங்க. மூச்சுக் காத்துக்குகூட முத்திரை குத்துற ஊர் இது. மே 14-ம் தேதி முதல்வர் பதவியில் யார் உட்கார்ந்தாலும், அவங்களுக்கு என்னோட அன்பான கோரிக்கை... நீங்க முதல்வரான உடனேயே திரைத் துறையில் இருந்து ஒரு கூட்டம் ஓடி வரும். மாலை மரியாதை செய்து, 'பாராட்டு விழா நடத்துறோம்... தேதி கொடுங்க’ன்னு கேட்கும். அய்யாவா இருந்தாலும், அம்மாவா இருந்தாலும், ஒருபோதும் அதுக்கு மயங்கிடாதீங்க. அந்தக் கூட்டத்தை விரட்டி அடிங்க. சினிமாவை சினிமாவா மட்டும் பாருங்க. அதில் அரசியலைக் கலக்காதீங்க.

 தானாத்தேடி வர்ற புகழை. பாராட்டை யாராவது வேணாம்னு சொல்வாங்களா?

நடிகர்கள் அரசியல் ஆசையோட அலையுறாங்கன்னா, அதுக்குக் கட்சிகள்தான் காரணம். பிரசாரத்துக்கு கூப்பிடுறாங்க... வாய்ஸ் கொடுங்கன்னு சொல்றாங்க... உடனே கூடுற கூட்டமும் கிடைக்கிற வெற்றியும் தன்னால் நடந்ததா நடிகர்கள் கனவோட திரியுறாங்க. நாளைக்கே வடிவேலு தனிக் கட்சி ஆரம்பிச்சாலும், ஆச்சர்யம் இல்லை. யாரோ ஒருத்தர் எழுதிய வசனங்களைப் பேசிப் பழகிய வாய்கள் நாளைக்கு யாரை நோக்கியும் திரும்பும்!''


ரஜினியை மறைமுகமாத்தாக்கறீங்களோ?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihutaWQb4YM_vqi71v0dfR6pbIyrk9UTrEpEpXPxDZZAzxqKqQs2QBM3wvBPppMTumgcrs177EvSq99gjwCtjdGsJRLR-xAQQkoOKtwbLRbqtbVeXU8q5zScM2JJBus9t_9ysb-Oskqp0/s1600/viddiyaabalan.jpg
7.''அப்படின்னா திரைத் துறையினர் அரசியலுக்கு வரவே கூடாதா?''



''அப்படிச் சொல்லலை. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை சினிமாவில் மூழ்கிக்கிடந்திட்டு, திடீர்னு அரசியல் அவதாரம் எடுப்பதைத்தான் கண்டிக்கிறேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலுக்கு வர உரிமை இருக்கு. 2016 தேர்தல் களத்தில் நிச்சயம் இந்த அமீர் இருப்பான். இதை வைத்து, ஆட்சியைப் பிடிக்கிற ஆசைக்காரர்களில் என்னையும் ஒருத்தனா நினைச்சுடாதீங்க.

 மாணவ ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதன் மூலமா அனைவரையும் வாக்களிக்கவைக்கிறதுதான் நான் செய்யப் போற அரசியல். 'மாணவ மறுமலர்ச்சித் திட்டம்’னு ஆரம் பித்து, ஏழை மாணவர்களின் படிப்புக்கு மாணவர்களே உதவும் திட்டத்தை கும்பகோணம் கல்லூரியில் தொடங்கிவைத்து, பல கல்லூரிகளிலும் அதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

 இன்றைக்கு ஒற்றை மனிதரா ஊழலுக்கு எதிரான ஒருங்கிணைப்பை அண்ணா ஹஜாரே ஏற்படுத்தி இருக்கார். தள்ளாத வயதில் அவர் செய்ததை துள்ளும் வயதில் உள்ள நம்மால் செய்ய முடியாதா என்ன?!''

சினிமாக்காரங்க சி எம் ஆக நினைக்கறது தப்பில்லை.. ஆனா எல்லா சினிமாக்காரங்களுமே தான் தான் அடுத்த சி எம்னு நினைச்சுக்கறாங்க.. அதான் தப்பு.. 

Thursday, April 07, 2011

ஜெ-வை விட கேப்டனே டேலண்ட்- தமிழருவி மணியன் அதிரடி பேட்டி VS ஆனந்த விகடன் - காமெடி கும்மி

1.  ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?'' 

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

அது கரெக்ட்டுங்க.. ஆனா 41 வேட்பாளரையும் மகாராஜா ஆக்கனும்னு பார்க்கறாரு.. வலிக்குதுங்க.. அவ் அவ்வ்வ்வ்வ் ....



2. '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?'' 

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

நடக்கும் என்பார் நடக்காது.. நடக்காது என்பார் நடந்து விடும் .

.
3. ''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?'' 

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

நடப்பது மன்னராட்சியா? மன்னரோட வாரிசு  மக்கள் ஆட்சியா?


'4. 'என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''


'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம்.

இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

தி மு க , அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... தி மு க கமுக்கமா ,விஞ்ஞானபூர்வமா அடிப்பாங்க.. அதிமுக வுக்கு அந்த வல்லமை பற்றாது.. டாம் டூம்னு அடிச்சு ஈஸியா மாட்டிக்குவாங்க.. 

5. ''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?'' 


''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

முதன் முதலாக  முதன் முதலாக  இலவசமாக இலவசமாகத்தான்... 

ஏமாளி...தமிழா...


6. ''வைகோ...?'' 

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

வகை தொகை இல்லாமல் வகையாக ஏமாற்றப்பட்ட புலி... 

7. ''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?'' 

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும்.

மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும்.

ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

செகண்ட்ஷோ சினிமா பார்க்கறது உலகிலேயே தமிழன் தான் அதிகமாம்.. அதனால விழிப்புணர்வு கம்மி.. பாவம் லேட் நைட்ல படுக்கறான்.. 


8.''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' 

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

அரசியல் நாகரீகம் பற்றி பேசுவதே அநாகரீகம் ஆகி விட்டதே இப்போது?


9. ''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?'' 

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

ஏமாந்த சோனகிரிக்கும்,லைஃப் டைம் அன்வேலிட் சிம்கார்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.

 

 
'10. சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?'' 


''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

இந்தப்படத்தை இன்னுமா தமிழ்ல ரீமேக் பண்ணாம இருக்காங்க.. ஜெயம் ரவி, விஜய் எல்லாம் எங்கேப்பா போனீங்க?



11. ''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?'' 

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

இந்த அரசியல்வாதிகள் விடாம பேசிட்டே இருக்காங்களே.. அவங்களை எலக்‌ஷன் முடியற வரை மவுன விரதம் இருக்க வைக்கனும்.. 

12. ''சுயமரியாதை என்றால் என்ன?'' 

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

எத்தன குடும்பத்துக்கு..?


13. ''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?'' 

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

 தமிழனை ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை வெறுக்க வைத்து அவனை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்தது..

14. ''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?'' 

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

ஒவ்வொரு தொகுதிக்கும் வெவ்வேறு விதமான ஓட்டு ரேட் என்பதை மாற்றி ஃபிக்சடாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஓட்டுக்கு இவ்வளவு என்று நிர்ணயிப்பதே நேர்மையான தேர்தல்.. 


'15. 'தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?'' 

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

தமிழக அரசியல் ஒரு நாடக மேடை.. அதில் கலைஞர், ஜெ இருவரும் சிறந்த நடிகர்கள்..