Showing posts with label த்ரிஷா. Show all posts
Showing posts with label த்ரிஷா. Show all posts

Saturday, July 28, 2018

மோகினி - சினிமா விமர்சனம்

Image result for mohini movie
வில்லன் ஒரு கில்மா பார்ட்டி , ஆதரவற்ற /மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் காப்பகத்துல பல சிறுமிகளை கில்மா பண்ணி கொலை பண்ணிடறார்,.அதை எதேச்சையா நேர்ல பார்த்த நாயகியை போட்டுத்தள்ளிடறார்,நாயகியோட இன்னொரு சகோதரி வில்லனை பழி வாங்குவதுதான் கதை 


அருந்ததில அனுஷ்கா ஸ்கோர் பண்ணுன மாதிரி தனக்கும் ஒரு பேய்க்கதை வேணும்னு அடம் பிடிச்சு இந்த கதையை தேர்வு செஞ்சதா கேள்விப்பட்டேன். மயிலைப்பார்த்து வான்கோழி மேக்கப் போட்ட கதை தான் 


 திரைக்கதை ரொம்ப பலவீனம்,   த்ரிஷாவுக்கு பேய் முறைப்பு எடுப்டலை , ஓவர் மேக்கப் வேற 

வில்லன் தண்டம், காமெடியன்கள்: 3 பேரு அதுக்கும் மேல தண்டம்

 பி , சி செண்ட்டர்ல சுமாரா போகும்


Image result for trisha hot in ragalahari
நச் டயலாக்ஸ்

லவ் பெய்லியர் ஆனா லைபே பெய்லியர் ஆகிடுச்சுனு அர்த்தம் இல்ல


யோகிபாபு = சுவாமி! பின்னால இருந்து பாத்தா பேய் மாதிரி இருக்கீங்க

சாமியார் = நீ முன்னால பாக்கவே அப்டித்தான் இருக்க

தூர் வாராத ஏரி மாதிரி ஒரு மூஞ்சி ,யோகிபாபு ட்ரோல்டு பை த்ரிஷா


தற்செயலான சந்திப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை ,உன்னைப்பார்க்கும் வரை

வலம்புரி சங்கை பூஜை ரூம்ல வெச்சிருந்தா குடும்பத்துல நல்லது நடக்கும் என்பது ஐதீகம் !

நீ முதல்ல அவ கிட்ட சாரி கேளு

முடியாது
ஏன்?
அவதான் ஜீன்ஸ் போட்டிருக்காளே? ( இநத் காமெடியை சொல்லிட்டு யோகிபாபு 10 நிமிஷமா சிரிச்ட்டு இருக்காரு,இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்லயே?சிரிச்சாதான் சம்பளம்னு சொல்லீட்டாங்களா? )

7 நரபலி அதிகமாகிட்டே வர்றதுக்குக்காரணமே மூட நம்பிக்கைதான்.போர்ல ஜெயிக்க,தொழில்ல சுபிட்சம் அடைய நரபலி கொடுக்கறாங்க


பாவம் பண்றவங்க ஒண்ணா பணக்காரங்களா இருப்பாங்க,இல்ல பதவில இருப்பாங்க


செத்துப்போனவங்களோட ஆத்மா ஒரு வருசம் பூமிலயே சுத்திட்டு இருக்கும் ,திதி,ஈமக்கிரியை எல்லாம் முடிஞ்சபின் தான் நீங்கும்

Image result for trisha hot instagram pics

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

கேரளா"வில் ( கோட்டயம் ,ஆலப்புழா ) விஜய்சேதுபதி நடிச்ச"ஜூங்கா ரிலீஸ் ஆகல,ஆனா"த்ரிஷா நடிச்ச"மோகினி"ரிலீஸ்"ஆகி இருக்கு,அவ்ளோ"பெரிய அப்பாடக்கராம்மா நீ?  

2  விஜய் தோன்றிய மதுர,விஜயகாந்த்தின் அரசாங்கம் ,படங்களை இயக்கிய ஆர் மாதேஷ் தான் மோகினி இயக்குநர்


40 வயசான த்ரிஷா பாவாடை தாவணி ல டான்ஸ் ஆடுது,ஆனா சிக் குனு தான் இருக்கு

த்ரிஷா கால்ல விழுந்து யோகிபாபு மன்னிப்பு கேட்கற சீன்.முறைப்படி பாதத்தைத்தானே தொட்டுக்கும்பிடனும்?யோகிபாபு த்ரிஷா தொடையைத்தடவிட்டு இருக்காப்டி,இது என்ன புது மன்னிப்பா இருக்கு?

வழக்கமா பேய்ப்படம்னா ஒரு பாழடைஞ்ச பங்களாவில கத நடக்கும்,இதுல பாரீன் லொக்கேஷன்.புரொடியூசர் பாவம் ,ஜப்பானில் கல்யாணராமன் ,பூ மழை பொழியுது ரிசல்ட் தெரிஞ்சிருக்க மாட்டாரு

சமையல் கலைஞரா த்ரிஷா வர்றதால ஏகப்பட்ட சமையல் குறிப்புகள் படம் பூரா,பெண்கள் கூட்டம் அள்ளும்னு எண்ணம் போல

பேய் வர்ற பிஜிஎம் போட்டா தியேட்டர்ல இருக்கற 2 கார்னர் சீட் கள்ளக்காதல் ஜோடியும் ஜெர்க் ஆகி கட்டிப்பிடிச்சுக்கறாங்க,அந்தப்படத்தை விட இந்தப்படம் நல்லாருக்கே

கேரக்டருக்காக கமல்,விக்ரம்,சூர்யா எல்லாம் உடம்பையே மாத்திக்கறாங்க,தலைவி த்ரிஷா பேய் கேரக்டருக்காக 2 இஞ்ச் நீளத்துக்கு 10 விரல்லயும் நகம் வளர்த்தி இருக்கு,வாட் எ டெடிகேஷன்

குளியல் திலகம் த்ரிஷா படம் பூரா
குர்தி டைப் நீள அங்கி அணிந்து புல் கவரேஜ் பண்ணி கண்ணியமாக உலா வருவது அதிர்ச்சி அளிக்கிறது −எதுக்கெடுத்தாலும் ஜெர்க் ஆவோர் சங்கம்


10 லொள்ளுசபா சாமிநாதன் ,ஆர்த்தி கணேஷ்,யோகிபாபு 3 பேரும் ஸ்க்ரீன்ல தன்னை ஹைலைட் பண்ண தத்துபித்துனு ஏதோ உளறிக்கிட்டு இருக்காங்க,ஒரு ஜோக்காவது சொல்வாங்களா?னு பாப்பம்

11 படத்துல வர்ற காமெடி நடிகைக்கு காஸ்ட்யும் 25000 ரூபா மதிப்புள்ள நைலக்ஸ் நைட்டி.பட்ஜெட் பெருசா?

12 தலைவி ்த்ரிஷா அம்பர்லா கட்டிங்க் சுடி போட்டுட்டு வருது,மழைல நனையற சீன் வரப்போகுது போல


13 இந்த ஜென்மத்துல நாயகியோட காதலனோட அப்பாவா வர்றவருதான் போன ஜென்மத்துல நாயகியை ரேப்புனவரு,என்ன ஒரு சிந்துசமவெளி ட்விஸ்ட் ?

14 flashback த்ரிஷாவோட ஓப்பனிங்க் சீன்ல பாத்டப்ல குளிக்கற சீன்.கட்டி இருக்கற டர்க்கி டவலை கழட்டிட்டு டர்க்கிடவலைவிட சின்னதா ஒரு டிரஸ் போட்டுட்டு வெளில கிளம்புது த்ரிஷா,இதுக்கு டர்க்கிடவலோடயே போய் இருக்கலாம்.பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் மொமெண்ட்

Image result for trisha hot instagram pics


சபாஷ் டைரக்டர்

போஸ்டர்   டிசைன் நல்லா இருக்கு , த்ரிஷா டபுள் ஆக்ட் என்பதை படம் ரிலீஸ் ஆகும் வரை வெளியிடாத சாமார்த்தியம் குட் ( வெளியிட்டா என்ன அதை வெளியிடலைன்ன என்ன?)


2  த்ரிஷா வுக்கு ஓப்பனிங் சீனில் பாத்டப்பில் குளியல் காட்சியாய் வைத்த இயக்குநர் குறும்பு ( அவரும் அந்த பிட்டைப்பார்த்திருப்பாரோ? டோட்டல் தமிழ்நாடே பார்த்தாச்சு, அவர் பார்த்திருக்க மாட்டாரா>?)








லாஜிக் மிஸ்டேக்ஸ்


Image result for trisha hot instagram pics


லாஜிக் மிஸ்டேக் 1 − ஏற்கனவே ரேப் பண்ணி கொலை செய்த பொண்ணோட அதே உருவ ஒற்றுமைல இன்னொரு லேடி வந்ததும் வில்லனுக்கு டவுட் வராதா?அதையும் ரேப் பண்ண ட்ரை பண்றாரு

லாஜிக் மிஸ்டேக் 2 − பெண் சபலிஸ்ட்டான வில்லன் தன்னை போலீஸ்ல மாட்டவெச்ச நாயகியை ரேப் பண்ணாம மர்டர் பண்றானே?

3 இறந்த மோகினி எதுக்கு 2 வருசம் வெய்ட்டிங் லிஸ்ட்ல வில்லனை வெச்சிருக்கு? அதுக்கான பதில் இல்லை 


4 முதல் சகோதரி த்ரிஷாவை கொலை செய்த வில்லன் கூட்டம் 2 வது த்ரிஷாவைப்பார்க்கும்போது அடையாளம் தெரியாதா? யாருமே ஜெர்க் ஆகல


5  குழந்தைகளை ரெகுலரா கொல்லும் ஒரு புரொஃபஷனல் கில்லர் யூனிஃபார்மை அவ்ளோ அசால்ட்டா கிரவுண்ட்ல ஆதாரமா விடுவானா?



சி.பி கமெண்ட் -மோகினி− முதல்பாதி அச்சு பிச்சு காமெடி,பின் பாதி வழக்கமான பேயின் பழிவாங்கல்.மொக்கைத்தனமான காட்சிகள்,புளித்துப்போன திரைக்கதை ,பெண்களுக்குப்பிடிக்கும் ,பி ,சி சென்ட்டர்கள்ல சுமாரா போகும்.விகடன் 40 ,ரேட்டிங்க் 2.5 / 5




கேரளா ,கோட்டயம் ,ரம்யா ,11 am ஷோ
த்ரிஷா win மோகினி


===============







Tuesday, November 10, 2015

தூங்காவனம்'

கமலஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
* தனது சரக்கை திருடிய போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தும் போதைப்பொருள் கும்பலின் தலைவன். சரக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறான். தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற போலீஸ் தந்தை போடும் திட்டமே படம் 'தூங்காவனம்'.
* கமல், த்ரிஷா, கிஷோர் மூவரும் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாகவும் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் 50-வது படம் இது.
* 60 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு படப்பிடிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்குச் சொல்லும் முன்பு படக்குழுவினர் அனைவருக்குமே நடிப்புப் பயிற்சியில் பங்கேற்றதால் தான் விரைவில் முடிக்க முடிந்தது என்கிறது படக்குழு
* தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட், போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்துக்கான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
* முரட்டுத்தனமாகாவும் அதே வேளையில் ஸ்டைலாகவும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அப்போது, தமிழ் மக்களுக்காக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இதே போன்றதொரு தோற்றத்தில் இருந்திருக்கிறார். கமலிடம் "உங்களது தோற்றம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று அந்த போராட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார். இயக்குநர் சொன்னதும், கமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
* படப்பிடிப்பு நடைபெறும்போது எடிட்டிங்கும் அங்கேயே நடைபெற்று இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் முதல் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டார்கள். எடிட்டிங்கிற்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லை.
* ஒரு நாள் விபத்துக் காட்சிக்கு ஒப்பனை செய்ய ஒப்பனைக் கலைஞரை படக்குழுவினர் அழைக்கவில்லை. ஆனால் அந்த கலை கமலுக்குத் தெரியும் என்பதால், அவரே அன்று ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கிறார்.
* இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மதுஷாலினி. இப்பாத்திரத்துக்கு மதுஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கதைப்படி கிடையாது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமலே பாடியிருக்கிறார்.
* ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்துக்காக ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட்டப் போடப்பட்டு, அதனுள் பிரத்யேக காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
* இப்படத்தில் த்ரிஷாவின் வேடத்துக்கு பல்வேறு மேக்கப் செய்து பார்த்தார்கள். போலீஸ் வேடம் என்பதால் இறுதியில் எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் நடித்திருக்கிறார். கண்ணுக்குக் கூட மேக்கப் போடப்படவில்லை.
* 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்'. ப்ரெஞ்ச் படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் அனைவருமே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.
* பாரில் உள்ள சமையல் செய்யும் இடத்தில் கமல் - த்ரிஷா - கிஷோர் மோதும் ஒரு சண்டைக்காட்சி இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான விளக்குகள் எல்லாம் போடாமால், படப்பிடிப்பு தளமே முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் மொத்த படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.
* வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் போது, இயக்கத்தில் தலையிடுவார் கமல் என்பார்கள். அது குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்டால், "கமல் சாரிடம் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது பாருங்கள் என்று கேட்டால், படத்தின் இயக்குநர் நீங்கள் தான், அதைப் பார்க்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன்" என்று கமல் சொன்னதாக தெரிவித்தார்.
* இப்படத்துக்கான ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை படக்குழு செய்திருக்கிறது.
* படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதால் சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
* இதுவரை கமலின் தெலுங்கு படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் டப்பிங் பேசியிருக்கிறார். கமல் முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய படம் இது தான்.
* தெலுங்கில் நாகார்ஜுன் மகன் அகிலின் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதால், 'தூங்காவனம்' தெலுங்கு பதிப்பு நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. அதுவரை ஆந்திராவில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு பதிப்புகளின் வெளியீடுமே இல்லை என்கிறது படக்குழு.
* 13 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் கமல் - அஜித் படம் வெளியாகிறது. 'தூங்காவனம்' - 'வேதாளம்' படங்களுக்கு முன்பாக ஒரே நாளில் வெளியான கமல் - அஜித் படம் 'பம்மல் கே.சம்பந்தம்' - 'ரெட்'.

-thanx- the hindu

Thursday, October 08, 2015

'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ehidu
thanx-thehinndu

Monday, April 20, 2015

ஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில்லர்

'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
கமல்ஹாசன் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இவர், கமல் உடன் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
'உத்தம வில்லன்' மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'பாபநாசம்' வெளியீட்டு தேதியை முடிவு செய்ய இருக்கிறார்கள். தனது அடுத்த படத்தை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், "முதலில் தானே இயக்கி நடிப்பது என முதலில் கமல் முடிவு செய்திருந்தார். தற்போது தன்னிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வரும் ராஜேஷை இயக்க சொல்லியிருக்கிறார்.
'மன்மதன் அம்பு', 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ராஜேஷ்" என்று படக்குழு தெரிவித்தது.
'ஓர் இரவு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
"இப்படத்தின் கதை குறித்து த்ரிஷாவுடன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவரும் இப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார். விரைவில் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவார்" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். உலகளவில் உள்ள முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல் - ஜிப்ரான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் 4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி  -த இந்து

Friday, February 06, 2015

என்னை அறிந்தால்?அதிரடி ஹிட்டா? ஸ்லோ பிக்கப் ஹிட்டா?- ஒரு அலசல்

அஜித் ரசிகர்களின் தன்னை மறந்த உற்சாகக் கொண்டாட்டங்களுடன் வெள்ளித் திரையில் தோன்றி மறைந்தது 'என்னை அறிந்தால்' என்ற படத் தலைப்பு. அந்த ஆரவாரத்தின் சொச்சம், திரையில் தோன்றிய நடிகை அனுஷ்காவுக்கும் கிடைத்தது.
'தெறி மாஸ் என்ட்ரி'யாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டில் இருந்து எழுந்த 'தல' ரசிகர்களுக்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் அழகியலுடன் அஜித்தைக் காட்டியதிலேயே, கெளதம் வாசுதேவ் மேனன் குறிப்பால் சொல்லிவிட்டார், இது 'இந்த' இயக்குநரின் படைப்பு என்று.
புத்தம் புது தோற்றத்துடனும் தோரணையுடனும் சத்யதேவ் எனும் கதாபாத்திரத்தில் அஜித் நடந்து வருவதைக் கண்டதும், ஹாரிஸின் பின்னணி இசையை விழுங்கிவிட்டன விசில் சத்தங்கள். அடுத்த சில காட்சிகளிலேயே நடிகர் விவேக், நடிகர் அருண் விஜய் ஆகியோரை ரசிகர்கள் அமர்க்களமாக வரவேற்க, திரையில் விரிகிறது கதையும் கதைக் களமும்.
காவல் துறை உலகம், நிழல் உலகம் மற்றும் இவ்விரு உலகைச் சேர்ந்தவர்களின் அக உணர்வுகளுடனான கதை கொண்ட திரைக்கதைப் பயணிக்கிறது.
அஜித் ரசிகர்கள் தங்கள் ஆரவாரத்தை மூட்டை கட்டிவிட்டு, கெளதம் வாசுதேவ் மேனனின் படத்தைப் பார்க்கத் தொடங்குகின்றனர். அதாவது, திரையரங்கில் அமைதி நிலவத் தொடங்குகிறது.
'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு' படங்களின் மேம்பட்ட பதிப்பில், அதிரடி போலீஸாக வலம் வருவதைக் கொண்டாடிய ரசிகர்கள், 'வாரணம் ஆயிரம்' உணர்வுபூர்வ காட்சியமைப்புகளையும், 'விண்ணைத்தாண்டி வருவாயா' பாணியிலான காதல் உரையாடல்களையும் அஜித் அலட்சியமாகக் காட்டியதை அமைதியாகப் பார்த்து வியக்கத் தவறவில்லை.
நடிகை த்ரிஷாவின் பங்களிப்பு கச்சிதமாக இருந்தது. தேவையற்ற கவன ஈர்ப்பு தரவில்லை என்பதால், அவர் மீதான ரசிகர்களின் ஈடுபாடு குறைவாகவே இருந்ததைக் காண முடிந்தது.
விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் தோன்றியதில் இருந்து, அவருடன் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் விரிந்தது வரையில் அவரது கதாபாத்திரம் ஓரளவு கவனத்தை ஈர்த்தது.
சில பல பரபரப்புகளுக்குப் பின் 'இதான் டாக்டர் நடந்தது' என்று ஃப்ளாஷ்பேக் முடிந்த பிறகு, அடுத்த 'ஆட்டம்' தொடங்குவதற்கான அச்சாரத்துடன் இடைவேளை விடப்பட்டது. முதல் காட்சிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையானோர் அஜித் ரசிகர்கள் என்பதால், அவர்களது 'தல'யைத் திரையில் காண முடியாத ஏமாற்றம் அவர்களிடம் இருந்தது. எனினும், இது அவர்களுக்கு வேறு விதத்தில் புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
காபி குடித்தபடி நின்றுகொண்டிருந்த ரசிகர் ஒருவரிடம் பேச்சுகொடுத்தபோது, "'தல' படம் மாதிரி 'மாஸ் மேட்டர்' இல்லை... பட், ஓகே படம் இன்ட்ரஸ்டிங்கா போகுது" என்ற நிலைத்தகவலை நேரடியாகச் சொன்னார்.
இடைவேளைக்குப் பின், இது கெளதம் வாசுதேவ் மேனன் படம்தான் என்று ஒருமனதாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். அவர் உருவாக்கிய கதாபாத்திரமான சத்யதேவ் மூலம் அஜித் வெளிப்படுத்தும் உடல்மொழிகளுக்கும், வசன உச்சரிப்புகளுக்கும், மிடுக்கான செய்கைகளுக்கும், தோற்றப் போலிவை காட்டிய விதத்துக்கும் கூட அவ்வப்போது விசிலடிக்க ஆரம்பித்தனர்.
பின்னர், டாப் கியரில் பயணிக்கத் தொடங்கிய திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டது. இதுதான் அடுத்தடுத்து நடக்கக் கூடும் என்ற கணிப்பதற்கான சாத்தியங்களை, தனது முந்தையப் படைப்புகள் மூலம் இயக்குநர் ஏற்படுத்தித் தந்திருந்தாலும், அதை எப்படி அஜித்தை வைத்து விறுவிறுப்பூட்டுகிறார் என்பதில் கவனம் சென்றது.
அதேநேரத்தில், சுமார் ஒன்றைரை மணி நேரம் அஜித்தின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்த ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும், தனது தோற்றத்தாலும், நடிப்பாற்றலாலும் ஈர்க்கத் தொடங்கினார் 'விக்டர்' அருண் விஜய். அவ்வப்போது அவருக்கும் விசில் பகிரப்பட்டது. ஒரு கட்டத்தில், கதையை நகர்த்துவதே அருண் விஜய்தான். அந்த அளவுக்கு வலுவான கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் அருண் விஜய்.
ஆனால், ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் விஷயத்தில் அனுஷ்காவும் த்ரிஷாவும் வாய்ப்பைத் தவறவிட்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் கவனம் முழுவதுமே அஜித் மீதுதான் இருக்கும். அந்த அளவுக்கு அஜித் கதாபாத்திரத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
அஜித், அருண் விஜய்க்கு அடுத்தாக, ரசிகர்களை 'அட' போட வைத்திருக்கிறார் பேபி அனிகா. கண்களால் பேசி கரகோஷத்தை வாங்கிச் சென்ற அவர், மலையாளத்தில் '5 சுந்தரிகள்' படம் மூலம் வெகுவாக பாராட்டைப் பெற்ற குழந்தை நட்சத்திரம்.
'பச்சைக்கிளி முத்துச்சரம்' ஜோதிகா கதாபாத்திரத்தை நினைவூட்டிடக் கூடாது என்பதற்காகவே அருண் விஜய்யுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கரம் பிடித்த பார்வதி நாயரின் கதாபாத்திரத்தைப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் ரசிகர்கள் மனதில் பதியாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
தேவையான அளவில் பின்னணி இசையையும், காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பாடல்களையும் தந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அதாரு பாடலுக்கு தியேட்டர் ஆட்டம் கண்டது. அதேவேளையில், மெல்லிசைப் பாடல்களுக்கு இயக்குநர் அமைத்த உணர்வுபூர்வ காட்சிகளை ரம்மியமாக ரசித்தனர் ரசிகர்கள். ஒளிப்பதிவு உள்ளிட்ட உள் விவகாரங்களை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.
ஒட்டுமொத்தமாக, ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்தபோது, கெளதம் வாசுதேவ் மேனன் 'வாய்ஸ் ஓவர் விவரிப்பு' உள்ளிட்ட தனக்கே உரிய தனித்துவத்துடன் மிடுக்கான காவல் அதிகாரிகள், துடுக்கான தாதாக்கள், இவர்களின் இழப்பு, சோகம், காதல், பிரிவு, பழிவாங்கல், வன்மம், தோல்வி, வெற்றிக் கொண்டாட்டங்கள் அடங்கிய அக வாழ்க்கையை அஜித், அருண் விஜய் உள்ளிட்டோரின் யதார்த்த நடிப்பு என்ற பக்க பலத்துடன் 'என்னை அறிந்தால்' என்ற படத்தைத் தந்திருப்பதைக் காண முடிந்தது.
குறிப்பாக, துருத்தாத தூய தமிழில் உரையாடலை வசனமாக வடிவமைத்தது தனிச்சிறப்பு. வழக்கம்போல் ஆள்கடத்தல் விவகாரத்தைத் தொட்டிருந்தாலும், அதற்கான காரணமாக 'மருத்துவ' பின்னணியை காட்டியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு புதுத் தகவல். இரண்டாம் பாதியில் அஜித் - அருண் விஜய்க்கு இடையிலான பரமபத / ஆடுபுலியாட்டம் 'ஆரண்ய காண்டம்' பார்க்கத் தவறியவர்களுக்கு அருமை விருந்து.
அஜித் ரசிகர்களிடம் இடைவேளையில் இருந்த வெறுமை, படம் முடிந்த பிறகு காணவில்லை. " 'தல'யோட தாறுமாறு பெர்ஃபார்மன்ஸ்ல ஜி.வி.எம்.மின் பக்கா 'காப்' மூவி பாஸு..." என்றார் ஒரு ரசிகர். "ஃபர்ஸ் ஆஃப்ல 15 மினிட்ஸ், செகண்ட் ஆஃப்ல 10 மினிட்ஸ் ட்ரிம் பண்ணிட்டா படம் தெறி மாஸு" என்று வாய்மொழியில் எடிட்டிங்கில் ஈடுபட்டார் இன்னொரு ரசிகர்!


நன்றி- த இந்து

  • suriya  
    படம் நல்ல இருக்குனு சொன்ன சில பேருக்கு பொறுக்க முடியல... பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கு வெயிட் பண்ணனுமாம்...நீங்க படம் பாத்து நல்ல இருக்கானு சொல்லுங்க...
    about 12 hours ago ·   (25) ·   (11) ·  reply (0) · 
    • svta  
      hello, pl wait for the box office report
      about 13 hours ago ·   (5) ·   (8) ·  reply (0) · 
      • Vignesh  
        Nice பிலிம் அஜீத் சூப்பர் அனுஷ்க சூப்பர் அக்டிங்
        about 13 hours ago ·   (16) ·   (6) ·  reply (0) · 
        • பெஸ்ட் பிலிம் இன் 2015
          about 13 hours ago ·   (21) ·   (14) ·  reply (0) · 
          • Naan தளபதி ரசிகன் நான் படம் பார்த்தேன் நல்ல வந்துர்க்கு
            about 13 hours ago ·   (47) ·   (9) ·  reply (0) · 
            • Good kraim & thriller movie
              about 13 hours ago ·   (14) ·   (7) ·  reply (0) · 
              • Ithai Vida oru alakana Tamil padam yeduka mutiyathu really Fantastick movie
                about 13 hours ago ·   (14) ·   (14) ·  reply (0) · 
                •  Lee Vinoth at Allure Entertainment/ Allure Girls 
                  Time waste money waste mokka padam
                  Points
                  320
                  about 13 hours ago ·   (24) ·   (55) ·  reply (0) · 
                  • Ajith good performance and gvm used Ajith in good way and arun Vijay after a long struggle he has goodbreak with the help of Ajith and gvm hatts off to yennai arinthal team
                    about 13 hours ago ·   (16) ·   (4) ·  reply (0) · 
                    • Mokka
                      about 13 hours ago ·   (16) ·   (46) ·  reply (0) · 
                      • படம் சுமார்.கள்ள காதலை தவிர்திருக்கலாம்
                        about 13 hours ago ·   (17) ·   (35) ·  reply (0) · 
                        •  Sakthi Sakthivel at Chennai, Tamil Nadu 
                          படம் சூப்பர்
                          about 13 hours ago ·   (22) ·   (11) ·  reply (0) · 
                          • damu  
                            பிலிம்ஓகே
                            about 14 hours ago ·   (12) ·   (7) ·  reply (0) · 
                            • Karthik  
                              மிகவும் அருமையான கருத்து கணிப்பு... நன்றி தி இந்து நாளிதழ்...
                              about 14 hours ago ·   (28) ·   (5) ·  reply (0) · 
                              • Excellent and Superb movie. Ajith on Top, Goutham is back to bang. Harris and camera awesome. Worth to watch 3 to 5 times. I am not anybody fan. Normal movie goer with family
                                about 14 hours ago ·   (22) ·   (10) ·  reply (0) · 
                                • masshit screen play super
                                  about 14 hours ago ·   (14) ·   (19) ·  reply (0) · 
                                  • படம் சூப்பர் தல தலதான்
                                    about 14 hours ago ·   (31) ·   (23) ·  reply (0) · 
                                    • kutty  
                                      Padam sumaar dhan
                                      about 14 hours ago ·   (20) ·   (26) ·  reply (0) · 
                                      • kutty  
                                        Padam sumar dhan ...
                                        about 14 hours ago ·   (26) ·   (22) ·  reply (0) · 
                                        • Vikram  
                                          படம் நன்றாக வந்துள்ளது. சிலர் பொறாமையினால் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அஜித்தைப் பிடிக்காதவர்களுக்குப் படத்தை எவ்வளவு நன்றாக எடுத்தாலும் பிடிக்காது. அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. என்னை அறிந்தால் ஹாட்ரிக் ஹிட்...
                                          Points
                                          1345
                                          about 14 hours ago ·   (74) ·   (25) ·  reply (0) · 
                                          • Nicky  
                                            இயக்குனரின் ஹீரோ'வாக தலை'யை பார்ப்பது கஷாயம் குடிக்கிற மாதிரி! கொஞ்சம் கசப்புதான், ஆனாலும் நல்லதுக்கு தான் :) என்னை அறிந்தால் = CLASS MASS !!!
                                            Points
                                            270
                                            about 14 hours ago ·   (42) ·   (8) ·  reply (0) · 
                                            • //ஒளிப்பதிவு உள்ளிட்ட உள் விவகாரங்களை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.// பார்த்துட்டாலும்..
                                              Points
                                              1150
                                              about 15 hours ago ·   (18) ·   (1) ·  reply (0) · 
                                              • தல தெறி மாஸ் ! தல வாழ்க பல்லாண்டு !!! டேய் பண்டாரம் (வட மாஸ்டர்) பான்ஸ் கொஞ்ச நாளைக்கு வெளிய வராதீங்க !!!
                                                Points
                                                570
                                                about 15 hours ago ·   (11) ·   (8) ·  reply (0) · 
                                                • தல தல தான்
                                                  Points
                                                  480
                                                  about 15 hours ago ·   (11) ·   (6) ·  reply (0) · 
                                                  • already trummed for 20 mins..
                                                    about 15 hours ago ·   (4) ·   (0) ·  reply (0) · 
                                                    • Venu  
                                                      தலன்ன தலதாண்டா....சூப்பர் படம்....பின்னி பெடல் எடுத்திட்டிங்க தல...குடும்பத்துடன் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம்....
                                                      about 15 hours ago ·   (17) ·   (9) ·  reply (0) · 
                                                      • i am going to see thala film today second show....
                                                        Points
                                                        215
                                                        about 15 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) · 
                                                        • மிகவும் நேர்த்தியான படம்!! நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித்தின் நடிப்பில் வெளிவந்த வித்தியாசமான படம் என்று கூறுவேன்.
                                                          Points
                                                          670
                                                          about 15 hours ago ·   (19) ·   (5) ·  reply (0) · 
                                                          • டிக்கெட் புக் பண்ணியிருக்கேன். நாளைக்கு காலைல பாத்துட்டு, மாலைல கமெண்ட் பண்றான். அதுவரை, silence is my language .
                                                            Points
                                                            2140
                                                            about 15 hours ago ·   (13) ·   (2) ·  reply (0) · 
                                                            • kumar  
                                                              கௌதம் படம் எப்போதும் ஹீரோவுக்காக இல்லை . டைரக்டர் மட்டும் . அஜித் நடித்தாலும். படம் ஓடாது
                                                              about 15 hours ago ·   (24) ·   (129) ·  reply (2) · 
                                                              • Vikram  
                                                                உங்கள் எண்ணம் படத்தின் மீது அல்ல. அஜித்தின் மீது தான். உங்களை போன்றவர்களுக்கு இது தான் எங்களது பதில்: படம் நன்றாக வந்துள்ளது. சிலர் பொறாமையினால் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அஜித்தைப் பிடிக்காதவர்களுக்குப் படத்தை எவ்வளவு நன்றாக எடுத்தாலும் பிடிக்காது. அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை. என்னை அறிந்தால் ஹாட்ரிக் ஹிட்...
                                                                about 14 hours ago ·   (64) ·   (8) ·  reply (0) · 
                                                                • Are you vijay fan?