Tuesday, July 17, 2018

நெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா?

கோவில்களில் நெய் விளக்கேற்ற இடம் ஒதுக்கபட்டுள்ளதா? இல்லையேல் நடவடிக்கை - வானதி சீனிவாசன்
# சிலைத்திருட்டுக்கே இன்னும் விடை தெரியல,அதுக்குள்ள விளக்குத்திருட்டு பஞ்சாயத்து வரப்போகுது


==============


2 ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகர் மாதிரி மாறும் மதுரை.-
அமைச்சர் செல்லூர் ராஜூ.$ மீம்ஸ் க்ரியேட்டர்கள் இவரை சட்னி ஆக்கப்போறாங்க பழையபடி மதுரையா மாறுனாலே போதும்


==============


3 மோடியின் பெருமைகளை குறைந்தது ஐந்து பேருக்காவது எடுத்து சொல்லுங்கள் −தமிழிசை # அவங்க இன்னொரு 5 பேர்ட்ட சொல்வாங்க?ஆம்வே/மல்டிலெவல் மார்க்கெட்டிங்க் மாதிரி


=============


4 தனது தொகுதிக்குள் எம்.பி. நுழைய எப்படி தடை விதிப்பீர்கள்?- அன்புமணிக்கு தர்மபுரியில் அனுமதி மறுத்ததற்கு உயர் நீதிமன்றம் கேள்வி
MLA MP ங்க அவங்க தொகுதிக்கு வர்றதே அதிசயம்,அதையும் தடுத்துட்டா எப்டி?


===============


5 தமிழகத்தில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 2001-2011 காலத்தில் இரு மடங்காக அதிகரித்தது: செய்தி -அதாவது வடக்கே இருந்து வேலை தேடி வரும் ஆட்கள் டபுள் ஆகிட்டாங்க


=================


6 டாஸ்மாக் கடைகளை
மதியம் 2 மணிக்கு திறந்தால் என்ன என உயர்நீதிமன்றம் கேள்வி குடிக்கறவன் கை கால் எல்லாம் காலைல நடுங்குமே?எப்டீ வேலை செய்வான்?


===================


7 ரூபாய் மதிப்பு  கவலையடைய தேவையில்லை.# நிதி ஆயோக் துணைத்தலைவர்.
ரூபாய் மதிப்பிழப்புக்கே நாங்க"கவலைப்படலை,அடிக்கற வரை அடிங்க


=============


8 "திமுக ஆட்சிக்கு வரவேண்டும்
என்பதை விட இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே ஓங்கி நிற்கிறது" - மு.க.ஸ்டாலின் # கடைசிவரை நமக்கு உட்கார "சீட்"கிடையாது போல,ஸ்டேண்டிங்க்தான் மொமெண்ட்


============


9 துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புன்னு ரெண்டு வகையான பருப்புகளை கொடுத்தால் மக்கள் குழப்பம் அடைவார்கள் என்பதால் தான் ரேஷனில் துவரம் பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது - அமைச்சர் காமராஜ்
# பிரமாதம்,அடுத்ததா பச்சரிசி,புழுங்கல் அரிசி ல 1 கட்?


=============


10 கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகுவேன் : பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே
நிரூபிச்சா போதுமா?அந்த கடவுளே வந்து நிரூபிக்கனுமா?


==============


11 ஜெ.வின் கட்டளையே சாசனம்.. சட்டசபையில் பாகுபலி வசனம் பேசிய ஓ.பி.எஸ்! # அதெல்லாம் சரி,ஜெ மரண மர்மத்தில் கட்டப்பா யார்?னு கண்டுபிடிச்சாச்சா?


=============


12 அமித்ஷாவை வரவேற்கும் பேனர்கள்: ஹைகோர்ட் கேள்வி
சென்னையில் பல இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பேனர்கள் விதிமுறையை மீறி பேனர் வைக்கப்படுவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹைகோர்ட் # வெச்சதே"தமிழக அரசு தான்


===============13 அமித்ஷாவிற்கு நடராஜர் சிலையை பரிசாக வழங்கிய தமிழக பாஜக # ஏற்கனவே சிலை கடத்தல் பஞ்சாயத்து ஓடிட்டிருக்கு,இவங்க வேற நிலவரம் தெரியாம கலவரம் பண்றாங்க


============14 தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வருவோம் - அமித்ஷா
# தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி புரிவது திமுக ,அதிமுகதான்,!2 மே ஊழல் கட்சிகள் தானே?


=============


15 தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் - அமித்ஷா
# அதுக்கு 40% வாக்கு வங்கி வேணும்,நம்ம கிட்ட இருப்பது 4% தானே?


============16 ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன் அறிக்கை # மக்களுக்கு பொருள்களை எடை குறைச்சலா போடறவங்கதானே னு குறைச்சு எடை போட்றாதீங்க ங்கறாரா?


==============


17 அமித் ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது. இந்த மழையால் குளங்கள் நிரம்பும். குளங்கள் நிரம்பினால் தாமரை தானாக மலரும் - தமிழிசை
# திருச்சி முக்கொம்பு அணை பட்டுக்கோட்டை கன்யாகுமரி புதுக்கோட்டை ஆலங்குலம் இங்க மட்டும்தான் தாமரைக்குளம் இருக்கு,இது போதுமா? 234 தொகுதில 4


==============18 அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மழை பெய்துள்ளது- தமிழிசை # சரி விடுங்க,கூட்டம் தான் வர்ல,மழையாவது வந்துதேனு சந்தோசப்பட வேண்டியதுதான்


=============19 மார்ச் மாதத்திற்குள் பாஜக எங்கே இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள்.
- அமித்ஷா # பாஜக இங்கனயே தான் இருக்கும் ,மோடிதான் ரவுண்ட்ஸ்லயே இருப்பாரு,எங்கே இருக்காருனு சார்ட் பாக்கனும்


==============


20 தம் அடிக்கத் தெரியாது... டிரம் அடிக்கத் தான் தெரியும்...! - டி.ராஜேந்தர்
?நெட்டிசன்கள் மீம்சா போட்டு அடிக்கறது தெரியுமா?


============0 comments: