Sunday, July 22, 2018

bhayanakam -2018 (மலையாளம்) - சினிமா விமர்சனம் ( சர்வதேச விருதுகள் குவித்த படம்)

Image result for bhayanakam

2017ம் ஆண்டின் சிறந்த இயக்குநர் விருது பெற்ற படம் , சிறந்த ஒளிப்பதிவு , சிறந்த நடிப்பு , என சர்வதேச விருதுகள் குவித்த படம், என பல பெருமைகள் கொண்ட இந்தபப்டம் தகழி எழுதிய 'KAYAR" என்ற நாவலில் வரும் 2 அத்தியாயங்களை மட்டும் ஹை லைட் பண்ணி எடுக்கப்பட்ட படம், 105 நிமிடங்கள்


1960 ல் இருந்து 1990 க்குள் பிறந்தவர்களுக்கு மட்டும் தபால்காரர் பெருமைகள் புரியும், ஏன்னா இந்தக்காலத்துல கடிதம் எழுதும் கலாச்சாரமே வழக்கொழிந்து விட்டது , எல்லாம் மெயில் , வாட்சப் தகவல்கள் தான், அந்தக்காலத்துல எல்லாமே கடிதங்கள் தான், வைரமுத்து வின் வை ர வரிகளில் காதலித்துப்பார் தபால்காரன் தெய்வம் ஆவான் என்பதும் இந்தக்கால ஆட்களுக்கு அனுபவ உணர்வை தராது


முதல் உலகப்போர் நடந்து சில ஆண்டுகளுக்குப்பின் அடுத்த போருக்கு ஆயத்தங்கள் நடக்கும்போது நிகழும் சம்பவங்கள். ராணுவத்துக்கு ஆள் எடுக்கறாங்க , கிராமங்களில் பலரும் ராணுவத்தில் ஆர்வமா சேர்கிறார்கள் . அந்த கிராம மக்களுக்கு மணி ஆர்டர் , கடிதம் , தந்தி ( இறப்புச்செய்தி ) என வாழ்வின் முக்கிய அங்கமாக தபால்காரர் இருக்கார்


தபால்காரர் போரில் குண்டடி பட்டு ஒரு காலை இழந்தவர் , மாற்றுத்திறனாளியான அவர் கிராமம் முழுக்க நடந்தே போய் கடிதங்களை , மணி ஆர்டர்களை டெலிவரி செய்யறார்.மணிஆர்டர் பெறும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆள்வது , இழவு செய்தி கேட்கும் மக்கள் துக்க வசப்படுவது என பல மனசைத்தொடும் சம்பவங்களின் தொகுப்பு தான் படம்


நாயகனா ரஞ்சி பணிக்கர் , பிரமாதமான ஆக்டிங் , மிக பொறுமையான , தத்ரூபமான நடிப்பு


நாயகியா ஆஷா சர்த் , நாயகனுக்கு அடைக்கலம் தருபவர்

படத்தில் வில்லன் எல்லாம் யாரும் கிடையாது , காதல் , காமெடி டிராக் எதுவும் இல்லை


ரொம்ப ஸ்லோவான படம், நிகில் ஒளிப்பதிவு அட்டகாசம், இயக்கம் ஜெயராஜ் ,
Image result for bhayanakam
சபாஷ் இயக்குநர்


1 திரைக்கதை மிகத்தெளிவு ,சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளோ , அச்சு பிச்சு காமெடி காட்சிகளோ கிடையாது

2 மிலிட்ரிக்கு ஆள் எடுக்கும் காட்சியில் உயரம் லிமிட்க்கு ஒரு கட்டை வெச்சிருப்பாங்க . அந்த மட்டத்துக்கு தலை டச் ஆனா ஆள் செலக்டட், இல்லைன்னா ரிஜக்ட்டட், ஒரு ஆள் வந்து நிக்கும் போது அவர் கழுத்தே அந்த மட்டத்துக்கு இருக்கும், அவ்ளோ உயரம், சிறப்பான காட்சி


3 க்ளைமாக்ஸில் கிராமத்துக்கு , மக்களுக்கு வந்த பல இழ்வு செய்தி தந்திகளை தபால்காரர் டெலிவரி செய்யாமல் காகிதக்கப்பல் செய்து ஆற்றில் விடுவது கவித்துவமான காட்சி

4 ஒயிட் & பிளாக் பேக் கிரவுண்டில் ஒளிப்பதிவு செய்தது
Image result for bhayanakam

லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 தனிமையில் வசிக்கும் ஆஷா சரத் நாயகனுக்கு அடைக்கலம் தருவது இருவரும் ஒரே வீட்டில் தங்குவது குறித்து கிராமத்து மக்கள் பொறனி பேசாமல் இருப்பது ஆச்சரியம் , பிக் பாஸ் வராத காலகட்டமாக இருந்தாலும் இது மைனஸ் தான்


2 ஒரு சீனில் ஒரே பாயில் தபால்காரரான ஹீரோவும் , ஆஷா சரத்தும் ஒருவருக்கு ஒருவர் முதுகைக்காட்டிக்கொண்டு எதிர் எதிர் திசையை நோக்கி படுத்திருக்காங்க 2 பேரும் விடிய விடிய உறங்கலை, ஆஷா சரத்க்கு கில்மா வில் இஷ்டம், நாயகனுக்கு போர் பற்றிய சிந்தனைகள் , இந்துதான் சிச்சுவ்வேஷன், இதில் இந்தக்காட்சியில் இயக்குநர் என்ன சொல்ல வர்றார்? எதுக்கு அந்த சீன்>? பல வருடங்களாக தனிமையில் வாடும் இருவரும் எதிர் பால் துணையுடன் ஒரு இரவில் ஒரு குடிசையில் தனிமையில் இருந்தும் கில்மா வில் இறங்காமல் இருப்பாங்களா?

3 ஒரு கல்யாண வீடு . அந்த வீட்டு விசேஷத்தில் விருந்து நடக்குது. தபால்காரரை சாப்பிடக்கூப்பிடறாங்க், அவர் முகம் இருண்டு கிடக்கு , ஏன்னா அந்த வீட்டுக்கு ஒரு இழவு செய்தி தந்தி மூலம் வந்திருக்கு, சொல்லலை, ஆனா அந்த இருண்டு போன முகம் பார்த்து யாருக்குமே டவுட் வராம இருப்பது எப்;படி?

Image result for bhayanakam

theaterical updated tweets
1 கேரளா,கோட்டயம் ,ரம்யா
Bhayanakam (மலையாளம்)
சர்வதேச விருதுகளை குவித்த படம் ,2017 சிறந்த மாநில மொழி பட விருது உட்பட. தகழி எழுதிய kayar நாவல் தழுவி எடுக்கப்பட்ட படம்2 நம்மள மாதிரி பெஞ்ச் டிக்கெட் ,தர லோக்கல் ஆளுங்களுக்கு அவார்டு பிலிம் ஒத்து வராது போலயே?மணியார்டர் பார்ம்ல ஒரு பெருசு சைன் பண்றதை 10 நிமிசமா"காட்றாங்க (malaiyalam)


3 த்ரிஷ்யம் (பாபநாசம்)ல கமிஷனரா கும்முனு (கம்பீரம் என பொருள் கொள்க)வந்த கர்லிங் ஹேர் கட்டழகி,"மை"விழி மைதிலி ஆஷா சரத் முதல் மரியாதை வடிவுக்கரசி"மாதிரி லூஸ் ஜாக்கெட்ல சாதா லேடியா வர்றது அதிர்ச்சியா இருக்கு (malaiyalam)


4 இயக்குநர் ஹரி யை ஜெயராஜ் இயக்கிய 4 விருதுப்படம் பாக்க விட்ரனும்.எப்ப பாரு கேமராவை ஆட்டிட்டே இருப்பாரு.இதுல கேமராவை ஒரு கோணத்துல வெச்சா 20 நிமிஷம் நகர்த்தறதில்ல (malaiyalam)


5 கதைக்கோ,திரைக்கதைக்கோ,கேரக்டருக்கோ சம்பந்தமே இல்லைன்னாலும் ஹீரோ தம் அடிப்பது,சரக்கு அடிப்பதை காட்டிட்டே இருப்பதை இயக்குநர்கள் நிறுத்தனும்


Image result for ashasarath hot


 nach dialogues

1 ராணுவ வீரனுக்கு ஓணம்,சித்திரக்கனி விசேஷ நாள் எதுவும் கிடையாது,அந்தந்த நாளில் உயிர் பிழைச்சு இருந்தாலே அது விசேஷ நாள்தான் (malaiyalam)


2 மனோரஞ்சிதம் மலரை தலையணை அடில வெச்சு படுத்துத்தூங்கினா இஷ்டப்பட்டவரோட ஜோடியா உலா போவது போல் கனா வரும் னு ஒரு ஐதீகம் (மலையாளம்)


3 ஆஜானுபாவ அழகி ஆஷா சரத் (ரொமாண்டிக் மூடுடன்) = பவளமல்லி ப்பூ வாசம் முகர்ந்திருக்கீங்களா?

ஹீரோ − ஒரு ராணுவ வீரனுக்கு வெடிச்சத்தமும் ,வெடி மருந்து வாசமும்தான் பரிச்சயம் (மலையாளம்)


4 போர் நடக்கும் ,மரணம் சம்பவிக்கும்னு தெரியாமயே/எதிர்பார்க்காமயே பலரும் மிலிட்ரில சேர்றாங்கனு தோணுது (மலையாளம்)


Image result for ashasarath hot

c.p.s comment- Bhayanakam(மலையாளம்)− முதல் உலகப்போர் நடந்த பின் வந்த காலகட்டத்தில் மாற்றுத்திறனாளியான தபால்காரர் ஒரு கிராமத்தில் சந்திக்கும்"அனுபவங்கள்தான் கதை,பிரமாதமான ஒளிப்பதிவு ,ஆஷா சரத் நடிப்பு +
ரேட்டிங் 3/5 .படம் ரொம்ப ஸ்லோ.விருதுகள் பல பெற்றவை.பால்கனி ஆடியன்சுக்கு

==========


0 comments: