Tuesday, July 03, 2018

டாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை தருமா?

மிளகு சாதம் எல்லாம் நான் சாப்பிட்டதே இல்லை..
வெண் பொங்கல் சாப்பிட்டிருக்கீங்களா? யா பச்சரிசிக்கு பதிலா புழுங்கல் அரிசில வெண் பொங்கல் வச்சா அதுதான் மிளகு சாதம்

=============


2 நான்"ட்விட்டர் அக்கவுண்ட்டை டி ஆக்டிவேட் பண்ணப்போறேன்,நாளைல இருந்து ட்விட்டர் வரமாட்டேன்,ஐ மிஸ் யூ ஆல்
னு இதுவரை 377 பேர்"சொல்லி இருக்காங்க,ஆனா யாரும் அப்டி செஞ்சதில்ல.சொல்றவன் செய்யமாட்டான்.செய்யறவன் சொல்லிட்டு இருக்க மாட்டான்


===========


3 பைக் வேகமாய் ஓட்டுவதற்கும்
மெதுவாய் ஓட்டுவதற்கும் பின்னால் அமர்ந்திருப்பது சொந்த சம்சாரமா?அடுத்தவன் சம்சாரமா?என்பதைப் பொறுத்து அமையும் (கேள்வி அறிவு)


==============4 மக்களுக்கு எட்டு வழி சாலை
அரசியல்வாதிகளுக்கு துட்டு(க்கு) வழி(வகுக்கும்) சாலை


=============


5 உடன்பிறப்பே!2017 ஆம் ஆண்டில் வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு
2015− 1763 வழிப்பறிகளும் 11196 திருட்டு சம்பவங்களும், 2016−் 1680 வழிப்பறி, 12128 திருட்டு சம்பவங்களும் 2017−1850 வழிப்பறி, 15422 திருட்டும் . கழக ஆட்சியிலே வெளி ஆட்களை திருடவிட்டதில்லை


=================


6 கன்னி ராசிக்காரங்கதான் ஜெமினிகணேசன்களா,கமல்களா,கார்த்திக்களா,அர்ஜூன்களா இருப்பாங்கனு ஒரு மூடநம்பிக்கை உண்டு,ஆனா மீன ராசிக்கு தான் அப்டியாம்.
(ராசி ங்கறதே மூடநம்பிக்கைதான் கறது வேற விஷயம்)


==============


7 ஒரு ஊரோட, நாட்டோட பெருமை அந்த இடத்துல உள்ள இயற்கை வளங்களை வச்சா,
இல்ல அங்கு வாழ்கின்ற மனுசங்கள வச்சா? 2ம்தான்.முன்னதுக்கு உதா கேரளா,பின்னதுக்கு உதா தமிழ்நாடு


=============


8 என் உருவம்/குணாதிசியம்/கருத்துக்கள் எதனோடாவது தொடர்புறும்படி ஒரு நல்ல டிபி தாருங்கள் னு யாரும் யார் கிட்டயும் கேட்க அவசியம் இல்லை,அவரவர் சொந்த டிபி யே கண்ணாடி போல் உள்ளது காட்டும்,உள்ளத்தைக்காட்டும்


=============


9 வாழ்வில் நிறைய ஏற்ற, இறக்கங்களை பார்த்தவர்..
1 தினசரி மலைப்பாதையில் வாக்கிங்/ஜாகிங் செல்வோர் 2 கட்டிட மேஸ்திரி ,இஞ்சினியர் 3 லிப்ட் ஆபரேட்டர் 4 அடுக்குமாடி குடியிருப்பு வாசல் கூட்டும் பணியாளர் 5 பஸ்,லாரி,கார் ,வேன் டிரைவர்கள் 6 ஸ்டாக் ,ஷேர் ஹோல்டர்கள் 7 டெய்லர்.


===============10 இந்தியாவில் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியல்
1 திருப்பதி வெங்கடாசலபதி 2 அம்பானி 3 டாட்டா 4 பிர்லா 5 கலைஞர் 6 ஜெ+சசி 7 ராஜீவ்+சோனியாகாந்தி

=============


11 இந்திய அளவில் அதிகம் சம்பாதித்தோர் பாகம் 2
8 ப சிதம்பரம் ,கார்த்தி சிதம்பரம்,உற்றார்,உறவினர் 9 ஆ ராசா +கனிமொழி 10 விஜய்மல்லய்யா 11 அமித்ஷா ,அவர் மகன் 12 பதஞ்சலி சாமியார் 13 கோவை கஞ்சா சாமியார் சத்குரு 14 கில்மா சாமியார் நித்யானந்தா 15 லலிதா ஜூவல்லர்ஸ் 16 சரவணாஸ்டோர்


===============12 இந்திய அளவில் அதிகம் சம்பாதித்தோர் பாகம் 3
17 சன் டிவி கலாநிதிமாறன 18 சன்டிவி தயாநிதி மாறன்் 19 கும்பிடு குருசாமிகள் ops&eps 20 தினகரன் (டிடிவி) 21 சசிகபூர் 22 சீமான் 23 இளைய தளபதி யை வைத்து படம் எடுத்த ,எடுக்கிற,எடுக்கப்போகும் அனைத்து தயாரிப்பாளர்கள் 62 பேர்


================


13 நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுபவன் எழுத்தாளன்
அதிகாலையில் எழுந்து எழுதுவதற்கென்றே நேரம் ஒதுக்குபவன் தீவிர எழுத்தாளன் எந்நேரமும் எழுத்தைப்பற்றிய சிந்தனை,செயல்பாடுகளுடனே இருப்பவன் அதிதீவிர எழுத்தாளன்


===========


14 கம்மியா சாப்பிடறவங்களோட கூட கல்யாணத்துக்கு போகக்கூடாது. 1 இட்லி 1 பூரி தான் சாப்பிட முடிஞ்சுது
மொய் வைக்கப்போகும்போது கூட்டத்தோட கோவிந்தா போடனும்.பந்திக்கு தனியாதான் போகனும் .அதுவும் பரிமாறும் பாத்திரங்கள் உள்ள டேபிள்க்கு பக்கத்து கார்னர் சீட்


=============


15 டாக்டர் காலையில் சாப்பிடாம இருக்கிறது மனிதனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை தருமா?
அல்சர் வரும்.நைட் 9 மணிக்கு சாப்பிட்டது.12 மணி நேர கேப்.மதிய,இரவு உணவு சாப்பிடமுடியலைன்னாக்கூட காலை உணவு சாப்பிட்டே ஆகனும்.


==============


16 விதவையான தயிர் சாதம்...
சுமங்கலியாகிவிட்டது... ஊறுகாயின் வரவால்...! ஊறுகாய் உடல் நலனுக்கு ஊறு(தீங்கு) தரக்கூடியது.மாதுளை முத்துக்கள்(விதைகள்) சேர்த்தால் ஆரோக்யத்துக்கு நல்லது.பிபி கண்ட்ரோல்ல இருக்கும்


=============17 கலைஞரை பலரும் ஒருமையில் விளிப்பதற்கு கண்டனம்.என்னதான் மக்கள் வரிப்பணத்தைத்திருடி இருந்தாலும்.5 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருந்தாலும்,பரம்பரை மன்னர் ஆட்சிக்கு அடிகோலி இருந்தாலும் இந்துக்களை ,இந்துப்பண்டிகைகளை கேலி செய்திருந்தாலும் அவர் வயதுக்கு மரியாதை தர வேண்டாமா?


==============18 குருவே!விமர்சிக்கத் தெரிந்தவனுக்கு, உருவாக்கத் தெரியாது என்பது நிஜமா?
தேவையில்லை.ஒரு விமர்சகன் படைப்பாளியாக இருந்தே ஆகனும் என்ற அவசியம் இல்லை.படைப்பு பற்றிய அறிவு கூட தேவை இல்லை.இது நல்லாருக்கு ,நல்லால என தேங்காய் உடைச்ச மாதிரி மக்களுக்கு சொல்வதே அவன் பணி


=============19 கடன் கொடுப்பதை விட பெரிய ரிஸ்க் கடனுக்கு ஜாமீன் ஏற்றுக்கொள்வது.குறிப்பாக வங்கிகளில்


================


20 ரத்தசொந்தம் தவிர வேறு யாருக்கும்,எந்த சூழ்நிலையிலும் உங்க வீட்டு/நில பத்திரங்களை அடமானம் வைத்து வங்கியில் ஜாமீன் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.ரிஸ்க்.வாங்குனவன் ஓடிப்போய்ட்டா மாட்றது நீங்கதான்============

0 comments: