Wednesday, July 25, 2018

தோட்டக்காரன்,வேலைக்காரன்,டிரைவர்,வாட்ச்மேன்

2019 மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பிரதமர் மோடி !!
-செய்தி.! பிரச்சாரத்துக்கு"வர்றப்ப வே எல்லாரும் நல்லாப்பாத்துக்குங்க,அடுத்த இந்தியா விசிட் 2024 லதான்


==============

2 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்ததால், இனி இது சூப்பர் வழிச்சாலை.
- ஆர்.பி.உதயகுமார் வேளை,கமல் ஆதரிக்கல,உலகநாயகன் றதால உலக வழிச்சாலை ஆகி இருக்கும்


============


3 தமிழக ஆட்சி நிர்வாகத்தில் பாஜக அரசு தலையிடுகிறது - திருமாவளவன் #
என்னது..?நயன்தாரா விக்னேஷ் "சிவன்" பக்தையா?இப்பதான் தெரியுமா?


===============


4 "என் கல்யாண வாழ்க்கைல முட்டாள்தனம் பண்ணிட்டேன்!" கலங்கும் ஷர்மி # கல்யாணம் பண்றதே முட்டாள்தனம்தானே?


==============


5 தனது கடந்த காலத்தை அறிந்து தன்னை விரும்பி ஏற்றுக்கொணடால் திருமணத்திற்கு தயார் -நடிகை ஸ்ரீரெட்டி ,வேலைக்காரன்,டிரைவர்,வாட்ச்மேன் னு"வடிவேல்"காமெடி தான்"நினைவு"வருது


================


6 பாஜகவின் நிறம் காவியல்ல. சுத்தமான வெள்ளை நிறம் - தமிழிசை # நெட்டிசன்கள்எல்லோரும் கழுவி கழுவி ஊத்தியதால வெளுத்து டுச்சோ என்னவோ?


==============


7 ஸ்டாலின் லண்டன் சென்றதால் அணைகள் நிரம்பியுள்ளது - எடப்பாடி # அப்போ அரசாங்க"கஜானா நிறையனும்னா யார்"எங்கே போகனும்?


==============


8 "ரஜினியும் பாஜகவும் இணைந்தால் காமராஜர் ஆட்சி" - இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் நம்பிக்கை"# காமராஜர் எப்போ வாடகை பாக்கி வெச்சாரு?செக் பவுன்ஸ் பண்ணாரு?


==============


9 2019 தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கிடைக்கும்.. மமதா எச்சரிக்கை # குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா,தமிழகம் ல மட்டும்.மத்த இடங்கள் ல டப் பைட் நடக்கும்


==============


10 பாஜக − திமுக தொண்டர்கள் சண்டை போட்டுக்கறது"பாக்க"ஜாலியா இருக்கு,இதுல காமெடி என்னன்னா திமுக இப்போதைக்கு (2026 வரை) தமிழ்நாட்ல அதிகம்"ஜெயிக்காது,பாஜக"என்னைக்கும் 4 சீட் கூட ஜெயிக்காது

==============


11   நான், பல ஆண்டுகளாக, பா.ஜ.,வில் இருக்கிறேன். பா.ஜ., என்னை விட்டுவிடவில்லை; நானும் அதைவிட்டு விலகவில்லை.- சத்ருகன் சின்ஹா:  # நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கை விடுவதும் இல்லை - இந்த டயலாக்கை எங்கயோ கேட்ட மாதிரி இல்ல>


==============


12  ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, கடந்த நான்கு ஆண்டுகளில், 29 முறை டில்லிக்கு சென்றுள்ளேன்.  - சந்திரபாபு நாயுடு:   # நீங்க டெல்லி போனப்ப எல்லாம் பிரதமர் வெளி நாடு போய் இருப்பாரே?


==============


13  சி.பி.ஐ.,க்கு அளிக்கப்படும், அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே, என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. -   ப.சிதம்பரம்:   # கோர்ட்டே சிபிஐ யின் மெத்தனப்போக்கை கண்டிச்சிருக்கே? மடில கனம் இல்லைன்னா வழில பயம் ஏன்? புலம்பல் ஏன்?

============


14   என் தீவிர அரசியல் செயல்பாட்டை, மூன்று அல்லது ஆறு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள் - அழகிரி:  # மூணு மாசமா? ஆறு மாசமா?ங்கறதையே சரியா சொல்ல முடியல


==============


15  அமைச்சர் ராஜ்நாத் சிங்: வரும், 2030க்குள், பொருளாதாரத்தில் வளர்ந்த, முதல் மூன்று நாடுகளுக்குள், இந்தியா இருக்கும்; இதை, எதிர்க்கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை. 

# இந்த டகால்ட்டி எல்லாம் வேணாம்,2015-2018 பொருளாதார முன்னேற்றம் எந்த அளவில் இருக்கு? அதை மட்டும் பேசுங்க , நாளைக்கு கிடைக்கும் பலாக்காயை அப்பறம் பாப்போம், இன்னைக்கு கைல இருக்கும் கிலாக்காயை பார்ப்போம்


==================


16  மத்திய அரசிற்கு, தமிழக அரசோடு சுமுக உறவு நீடித்து வருகிறது. ஆனால், அரசியல் ரீதியாக, அ.தி.மு.க.,வோடு கூட்டணி கிடையாது.- ஹெச் ராஜா # சுமூக உறவு நீடிப்பதே  எதிர்கால கூட்டணீக்காகத்தானே?


=====================


17  தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவுக்கு வந்துவிட்டது -  பொன்.ராதாகிருஷ்ணன்
#ஒருக்கால்"அது
சொந்தக்கால் இல்லாமல் அதிமுக வுடைய பந்தக்கால் ஆக இருந்தா"அது"கணக்குல வராது================


18 வெளியில் புலி... சட்டமன்றத்தில் எலி... - திமுக குறித்து செல்லூர் ராஜூ விமர்சனம். # விஜய்"நடிச்ச புலியும் ஜெயிக்கல,வடிவேலு"நடிச்ச எலியும் ஜெயிக்கல னு சூசகமா சொல்றார் போல


================


19 மதுக்கடைகளை மோடியால் மட்டுமே மூட முடியும் - # பொன்.ராதாகிருஷ்ணன்#
அப்புறம் ஏன் பாஜக ஆளும் மாநிலங்களில் 4 வருசமா மூடலை?


===============


20 "தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அம்மா இனி மோடிதான்" - தமிழிசை
# பொதுவா அம்மாக்கள் வீட்டை விட்டு வெளில போகமாட்டாங்க,இவரு நாட்லயே இருக்க மாட்டாரே?


==============

0 comments: