Tuesday, July 10, 2018

கணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்?

அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா யாரும் மதவெறி சக்தியை தமிழகத்தில் காலூன்ற விட்டதில்லை - ஓ.பி.எஸ்
# தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக இவரு தான் அதுக்கு பந்தக்கால் நடப்போறாரு போல


===========


2 நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் - CM பழனிசாமி # இது உண்மைன்னா 100 மதிப்"பெண்கள்"
முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு இல்லையே?=============


3 ‘ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தாலே மதவாதம் ஒழிந்துவிடும்’ - கனிமொழி
# அப்டியே இந்த ஊழலை ஒழிக்க என்ன வழி?னு சொல்லிட்டா தேவல


==============


4 சேகர் ரெட்டி மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கின. # சேகர் னாலே சிக்காத ராசி போல.எஸ் வி சேகரு , சேகர் ரெட்டி


=============5 நடிகனாக இருந்திருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன் - துரைமுருகன் #
ஜெ உயிரோட இருந்தப்ப இதை சொல்லி இருக்கனும்,டப்பா டான்ஸ் ஆடி இருக்கும்============


6 சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சி வந்தால் அனுமதிக்க மாட்டோம் - ராமதாஸ் # குறிப்பா ரஜினி,விஜய் படங்கள்னா மட்டும் என்பதையும் சேர்த்துக்குங்க (அசுரவதம் ,செம போதை ஆகாத 2 லயும் தம் சீன் ஏகப்பட்டது இருக்கு,கண்டுக்கவே இல்ல)


=====================


7 புலி,கரடி,சிங்கத்துடன் வாழ்ந்த நான் நண்டுக்கு பயப்படமாட்டேன்-அமைச்சர் ஜெயக்குமார்
# பயந்தா பயக்குமார் னு சொல்லிடுவாங்க


===========


8 நான் 6 முறை சிறை சென்று இருக்கிறேன்.- எடப்பாடி # ஆர் சி சக்தி இயக்கி லட்சுமி நடிச்ச சிறை படத்தை எதுக்கு 6 தடவ பாக்கனும்?===========


9 24 மணி நேரமும் வேலை செய்யக்கூடிய தலைவர் நான் - தமிழிசை
# ஒரு டாக்டரா நான் என்ன சொல்றேன்னா தினசரி 8 மணி நேரத்தூக்கம் தேவைனு யாரும் அட்வைஸ் பண்ணலையா?============


10 திருப்பிச் செலுத்த தகுதியில்லாதவர்களுக்கு கல்விக் கடன் எதற்கு? - சென்னை உயர்நீதிமன்றம்
இதே கேள்வியை நீங்க ஏன் நீரவ்மோடி ,் மல்லையா மாதிரி பணமுதலைங்க கிட்ட கேட்கல


==================11 ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கருப்பு பணம் 50 சதவீதம் அதிகரிப்பு - செய்தி
ஒழிப்போம்னீங்களே? இந்தியாவைவிட்டு ஒழிச்ட்டமில்ல?=============12 சுவிஸ் வங்கியில் போடப்படும் பணம் அனைத்தும் கருப்புபணம் என நினைப்பது தவறானது..
நிதி அமைச்சர் அருண்ஜேட்லி... # சுவிஸ் வங்கி மேனேஜர் இதைக்கேட்டா சிரிச்சிடுவாரு,கணக்குல காட்டாத பணத்தை போட்டு வைக்கத்தானே ஸ்விஸ்?


=============


13 தொடர்ந்து 3 மாதம் ரேஷனில் பொருள் வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் - மத்திய அரசு # தொடர்ந்து 3 தடவை சட்டசபைல வெளிநடப்பு செய்தால் எம்எல்ஏ பதவி ரத்து செய்யப்படும்னு சொல்வாங்களா?


============14 நாடு முழுவதும் பாஜக வேகமாக பரவியுள்ளது −தமிழிசை # அது என்ன நிபா வைரஸ் காய்ச்சலா?பரவ==============


15 7 ஆண்டுகளுக்குள், காச நோய் இல்லாத இந்தியா உருவாக்கப்படும் - பிரதமர் மோடி நம்பிக்கை - செய்தி
# காசு நோய் ,பண(ஆசை)நோய்தான் ஜனங்களை பிடிச்சு ஆட்டி வைக்குது,அதுக்கு எதுனா தீர்வு இருக்கா?


==============


16 “பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசுதான் செயல்படுத்த உள்ளது!”- எடப்பாடி பழனிசாமி
# மாநில அரசு வழக்கம் போல வழிமொழிகிறேன் மட்டும்தானா?


=============


17 வளர்ச்சியை கருத்தில் கொண்டே பசுமை வழிச் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி வளர்ச்சியை?


============


18 எனக்கு வயது 65 ஆனாலும்
இன்னும் நான் மாணவன்தான் -ஸ்டாலின் #"மாண்புமிகு"மாணவன் ஆகற ஐடியாவே இல்ல போல?


==========19 விலைமதிப்பில்லா உயிர்களை காக்கவே 8 வழிச்சாலை.Eps டாஸ்மாக் எதுக்கு?ன்னும் ஒரு விளக்கம் தரவும்
]

==========20 சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பது பிடித்திருக்கிறது - பிரதமர் மோடி ஹாஷ்டாக்?
பிட்னஸ் வீடியோ? எது அதிகம் பிடித்தது?


===========

0 comments: