Sunday, July 01, 2018

பாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை

"2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மத்திய அரசின் இலக்கு!"- பிரதமர் நரேந்திரமோடி # 8 வழி சாலை போடறோம்னு நிலத்தை கையகப்படுத்தி அடிமாட்டு ரேட்டு தருவாரு.எப்டி டபுள் ஆகும்?


===========
2 65 லட்சம் மரம் வளர்க்கிறோம்;


சேலம் 8 வழிச்சாலைக்காக 8
லட்சம் மரங்களை வெட்டுவதில்
பிரச்னை இல்லை - சுற்றுச்சூழல்
அமைச்சர் கே.சி.கருப்பணன் # நல்லா சுத்தராறு ரீலை.காதில் பூ"சுற்று"சூழல் அமைச்சர்=============


3 இந்திராகாந்தி முதலமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தது −விஜயபாஸ்கர் # ராமர் அண்ணா ,மதுரை முத்து ,மாதிரி ஸ்டேண்ட் அப் காமெடி நல்லா வருது இவருக்கு

============


4 விஜய் படத்தை 20 முறை பார்த்தேன்” - காலா இயக்குநர் பா.ரஞ்சித் # மனோ தைரியம் மிக்கவர் தான்,அடுத்த படத்துக்கு துண்டு போடறாப்ல


=============


5 திமுக ஆட்சிக்கு வரும் போது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும் சிறை செல்வார்கள்" - மு.க.ஸ்டாலின் # அடப்பாவமே?அப்போ பத்து பதினைஞ்சு வருசம் அவங்க வெளில சுதந்திரமா சுத்திட்டுதான் இருப்பாங்களா?


==============


6 தூய்மை நகரங்கள் பட்டியலில் தேசிய அளவில் சென்னை மாநகராட்சி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்: முதல் 3 நகரங்களில் திருச்சி, கோவை, ஈரோடு # விருந்தோம்பலில்,மரியாதை தருவதில் கொங்கு மண்டலம் எப்போதும் நெ 1. தூய்மையில் நெ3


================


7 இந்த விலை உயர்வுக்கு ஸ்டெர்லைட்ட மூடுனது தான் காரணம்
செம்பு விலை உயர்வால் கலக்கம் : பம்ப் செட் விலை 10 சதவீதம் உயரும்
# ஏறட்டும்.ஆயிரக்கணக்கான மக்களை கேன்சரில் இருந்து காப்பாத்த இந்த விலை தரலாம்==============8 ராஜ்பவன் செலவை 80 சதவீதம் குறைத்து அசத்திய தமிழக ஆளுநர் # "நிர்மூலம்" பண்ணிட்டாரு போல


===============


9 மோடி தான் உண்மையான சூப்பர் ஸ்டார்!' - திருப்பூர் விழாவில் ஆவேசமடைந்த பா.ஜ.க எம்.பி வசூல் மன்னன்?=============10 பசுமை வழிச்சாலைக்காக தரிசு நிலங்களே எடுக்கப்படுகின்றன - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்#
# தரிசு நிலத்துக்கு 3 மடங்கு விலை தர்றாங்களா? ஆச்சரியமா இருக்கே?

வயல்வெளி எல்லாம் இவங்க கண்ணுக்கு மட்டும் தரிசா தெரிது போல


===============11 ஜெயலலிதா வழியிலேயே ஆட்சி தொடர்கிறது: ஓபிஎஸ்
புரட்சித்தலைவி இதயதெய்வம் னு முன்னே எல்லாம் ஒரு மானஸ்தரு பம்முவாரு,அவரை பாத்தீங்களா?


================


12 வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமை -எடப்பாடி பழனிசாமி # மக்கள் போற சாலைகளை உருவாக்க மக்களின் வாழ்வாதாரத்தை,வயல்களை கபளீகரம் செய்வது மடமை


===============


13 என்னைப் பற்றி பதிவு போட அன்புமணிக்கு தகுதி உள்ளதா? - தமிழிசை ஆவேசம்
# நாங்க கூடத்தான் டெய்லி பதிவு போடறோம்,எங்களுக்கு தகுதியா இருக்கு? சும்மா டைம் பாஸ் தான்,என்ன ஆனாலும் பாஜக தமிழகத்தில் பெயில் தான்


===============


14 தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு # பயப்படாதீங்க,அந்த அளவுக்கெல்லாம் செயல்தலைவருக்கு டேலண்ட் இல்ல


==============


15 ஆளுநர் ஆய்வு பணி செய்வதை தடுத்தால் 7 ஆண்டு சிறை # ஆட்டுக்கு தாடியும் ,நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை னு அறிஞர் அண்ணா சொன்னாரே ,அவருக்கும் தண்டனை உண்டோ?


===============


16 பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து பசுமை வழிச்சாலைக்கு நிலங்களை வழங்கியுள்ளனர்!” - முதல்வர் பழனிசாமி # நல்லவேளை,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டடிபட்டவர்கள் தாமாகவே முன் வந்து துப்பாக்கிக்குண்டை ஏற்றுக்கொண்டனர்னு சொல்லல


===============


17 அமித்ஷா தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் பணமதிப்பிழப்பு சமயத்தில் 700+ கோடிகள் 5 நாட்களில் மாற்றப்பட்டுள்ளது.
# 2000 ரூ க்கு சேஞ்ச் கிடைக்காம ,அதை மாத்த முடியாம அல்லல்படறோம்,இவ்ளோ பெரிய எக்சேஞ்ச் நடந்திருக்கு

===============18 தமிழர்கள் இந்தி கற்று கொள்வது நல்லது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் யோசனை! # வடக்க ஹிந்தி கத்துக்கிட்டவங்க இங்க வந்து பானிபூரிதானே விக்கறாங்க?


================19 உணர்வுள்ள இந்துக்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் கூட வேண்டும் - H.ராஜா
# ஒரு குடைக்கு கீழே அதிக பட்சம் 2 பேர் தாங்க கூட முடியும்


==============


20 பாஜகவில் ஜாதிகள்
கிடையாது - வெங்கய்யநாயுடு
# சொன்னவர் பேருலயே ஜாதி இருக்கே?

அப்ப பாஜக மகளிர் அணி ஜாதி மல்லி ஜாதி முல்லை கூட வைக்க மாட்டாங்களோ?


==============

0 comments: