Saturday, July 28, 2018

ஜூங்கா - சினிமா விமர்சனம்


ஹீரோவோட தாத்தா ஒரு பெரிய டான், அப்பாவும் தான், இந்த சரித்திர உண்மை தெரியாமயே ஹீரோ பெரிய ஆள் ஆகறார். அவர் டான் ஃபேமிலினு தெரிய வருது. பரம்பரை சொத்தான ஒரு சினிமா தியேட்டரை வில்லன் கிட்ட இருந்து எப்படி மீட்கறார் என்பதை பிளாக் ஹியூமர் திரைக்கதை மூலம் சொல்லி இருக்காங்க 

ஹீரோவா விஜய் சேதுபதி , இவர் டானாக வந்த 2 படங்களும் ஹிட் என்பதால் அந்த செண்ட்டிமெண்ட் படி இதுவும் ஒர்க் ஆகும்கற நம்பிக்கைல இப்டி ஒரு சப்ஜெக்ட் பண்ணி இருக்கார், பெரிய அளவில் எடுபடவும் இல்லை, ஒரே அடியா ஊத்திக்கவும் இல்ல, சராசரியா தப்பி இருக்கு


படத்துல இவர் கெட்டப் பெரிய ம், மைனஸ் , நாடக நடிகர் மாதிரி இருக்கு , இந்தக்காலத்துல விக் வைக்கற்து , ஒட்டு மீசை வைப்பது கேலிக்கூத்தாகவே பார்க்கப்படும் ( தலை சொட்டை, வழுக்கை மறைப்பதாக இருந்தாலும் )

கேரளாவில் பொண்ணூங்க கண் இமைக்கு அதிகப்படி மை வைப்பாங்க , அது அவங்களுக்கு அழ்கு, ஆம்பளையா இருந்தும் எதுக்கு ராமராஜன் மாதிரி இவரும் மை வைச்சிருக்கார்னு தெரில 

மற்றபடி இவரது பாடி லேங்க்வேஜ், அசால்ட்டான வசன உச்சரிப்பு , டயலாக் டெலிவரி  எல்லாமே அபாரம்



நாயகியா  சாயிஷா, பிரமாதமான ஃபிகர் எல்லாம் கிடையாது , மீடியம் ஃபிகர் தான், ஆனாலும் பாடல் காட்சிகளில் துப்பட்டாவை  ஓரமா வெச்சுட்டு அடிக்கடி குனிகிற அந்த பாந்தம் அபாரம்

ஸ்லீவ்லெஸ் போடு வரும் நாயகிகள் யாரும் ஹேண்ட்ஸ் அப் சொல்லாமலேயே அடிக்கடி தங்கள் 2 கைகளை தூக்கி ஒரு ஸ்டெப் ஆடுவாங்க, அது எதுக்குனு யாருக்கும் இதுவரைக்கும் தெரில, ஆனா நல்லா தெரியுது, மகிழ்ச்சி


இன்னொரு சைடு நாயகியா மடோனா செபாஸ்டின் டின் டிடிங்,. இவரு எதுக்காக வர்றார்? போறார் என்பது இயக்குநருக்கே வெளிச்சம்? ஊறுகாய் மாதிரி இருந்துட்டுப்போகட்டும்னு விடுட்டார் போல 



 காமெடியனா யோகி பாபு , மொக்கை அதிகம் போடாம கதையோட காமெடி ஒன்லைனர்கள் டெலிவரி பண்ணி சிரிக்க வைக்கிறார், வி சேதுபதிக்கும், இவருக்கும் காமெடி நல்லா செட் ஆகுது


ஹீரோவின் அம்மாவாக சரண்யா வின் நடிப்பும் அந்த பாட்டியின் நடிப்பும் கன கச்சிதம், ராதாரவி கொஞ்ச நேரமே வந்தாலும் சிக்சர் அடிக்கிறார்.


நச் டயலாக்ஸ்


1 இன்ஸ்பெக்டர் ,என்கவுண்ட்டர் பண்ண போறீங்க , துப்பாக்கி வாங்கிட்டுப்போங்க’


சரி , குடுங்க

 என்னய்யா , கோயில் பிரசாதம் வாங்கற மாதிரி கை இப்டி நீட்டறெ?  #Junga 



2 என்கவுண்ட்டர் ல இவனை நாம போடப்போறோம், இவன் ஜாலியா இருக்கான், நாம பதட்டமா இருக்கோம்? #junga


3  சக்சஸ் பார்ட்டியை  வீம்புக்கு வெச்சே பாழாப்போன குடும்பம் நம்முது #junga ( இது யாரைத்தாக்க?னு சொல்லனுமா?)



4 மர்டர் பண்ண வந்த இடத்துல செல் ஃபோனை சார்ஜ போட்ட ஒரே கொலைகாரன் நீதான் #junga


5  ஜேம்ஸ்பாண்ட் மாதிரி புல்லட்டை வேஸ்ட் பண்ணிட்டிருக்காத , ஒரே குண்டு #junga


6  20 வது மாடில இவனை சுடப்போறோம்

 அட லூசே, என் குண்டை வேஸ்ட் பண்றே? அவனை மாடில இருந்து கீழே தள்ளீவிட்டா அவன் பாட்டுக்கு செத்துடப்போறான் #junga



7 மத்தவங்களை கீழே இறக்கி விட்டுட்டு அந்த இடத்துக்கு நாம போக க்கூடாது, நாம முதல்ல அந்த இடத்துக்கு போய்ட்டு “ சார், கொஞ்சம் கீழே இறங்கிக்கறீங்களா?னு கேட்டா அவனா இறங்கிக்க மாட்டானா? #junga


8 ஒரு டான் தங்க பிஸ்கெட் கடத்தலாம், தவிட்டு பிஸ்கெட் சாப்பிட்டுட்டு இருக்கே? #junga

9  நீ  எல்லாம் ஒரு ஆளுன்னு நீ சொல்றதை நான் கேட்க வேண்டியதில்ல, இருந்தாலும் நீ சொல்றதை கேட்கறென் பார்த்தியா? அதுதான் ஃபிரண்ட்ஷிப் #junga



தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


விஜய்சேதுபதியோட சொந்தப்படமா?அட!! கதைக்களம் பொள்ளாச்சி

ஹீரோயின் ஓப்பனிங்க் சீன்ல ஸ்லோமோசன்ல ஓடி வர்றப்ப கேமராவை தரைல வைக்கறவர் புத்திசாலி,டாப் ஆங்கிள்ல வைக்கறவர் அதிபுத்திசாலி


கஞ்ச டான் காமெடிக்கு தியேட்டர்ல ஒரே சிரிப்பொலி,ஆன் லைன் விமர்சகர்கள் விமர்சித்தது போல் படம் அவ்ளோ மொக்கையா எல்லாம் இல்ல ,ஜாலியாத்தான் போய்க்கிட்டு இருக்கு

விஜய் மேல விஜய்சேதுபதிக்கு என்ன கோபமோ? விஜய் மாதிரி ஒரு ஆள பேச விட்டு "நீ எல்லாம் பாலிடிக்ஸ் பேசறே?"னு கலாய்க்கறாரு


ஒரு கெட்டப்ல விஜய் சேதுபதி மிமிக்ரி தாமு மாதிரியே இருக்காரு


6  வில்லன் இன்ன ஜாதி னு வெளிப்படுத்தறதை இப்ப டைரக்டர்ஸ் பேசனா வெச்சிருக்காங்க ,வியாபாரிக்கு விஷயம் தெரிஞ்சா கடுப்பாகிடுவாப்டி




சபாஷ் டைரக்டர்


1   சைடு நாயகி தன் விருப்பத்தை சொல்வது விஜய் டிவி நீயா ?நானா? நிகழ்ச்சில ஒரு பொண்ணு எனக்கு வரப்போற மாப்ளை ஹெலிகாப்டர்ல தான் வரனும், 365 புடவை வேணும் என சொன்னாரெ அதை நக்கல் அடிச்சு எடுத்த காட்சி



2  ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு ஹீரோ போகனும், ஃபிளைட்ல போனா எவ்ளோ செலவு ஆகும்>? பஸ்ல போனா எவ்ளோ செலவு ஆகும்>? கப்பல் ல போனா எவ்ளோ செலவு ஆகும்>? என விசாரிச்சுட்டு ஹீரோ செலவை குறைக்க நீந்தியே செல்வது செம காமெடி, தியேட்டரில் அபாரமான வரவேற்பு அந்த சீனுக்கு 


3  யோகி பாபு வெறும்  பன் மட்டும்தான்பா சாப்பிட்டேன் என சாப்பாட்டுக்குக்கூட கஞ்சத்தனம் காட்டும் ஹீரோவிடம் புலம்பும் காட்சி செம சிரிப்பு



லாஜிக் மிஸ்டேக்ஸ்



1  வில்லன் தன் மகள் ஃபோனில் அழுவதை எம்பி ஏமாறுவது, பாரீசில் கதை நடக்குது, எவ்ளோ டெக்னாலஜி வளர்ந்திருக்கு, வீடியோ ஃபோனை ஆன் பண்ணி அங்கே நடப்பதை பார்க்க முடியாதா?

2  5000 கோடிக்கு அதிபதியான வில்லனின் மகளையே கரெக்ட் பண்ணின ஹீரோ பேசாம அவளை மேரேஜ் பண்ணி சொத்தை அனுபவிப்பதை விட்டுட்டு பிசாத்து தியேட்டர் , பூர்வீக சொத்து என ஜல்லி அடிப்பது நகைப்பு



சி.பி கமெண்ட் -ஜூங்கா − சுருளிராஜன் ன் மாந்தோப்புக்கிளியே டைப் கஞ்ச காமெடி டான் கதை.முதல் பாதி டைம் பாஸ்,பின் பாதி ஓகே,யோகிபாபு ,விஜய்சேதுபதி காம்போ காமெடி குட் ,பிளாக் ஹ்யூமர் சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.விகடன் 41 ,ரேட்டிங் 2.75 / 5





ஈரோடு ஸ்ரீ சண்டிகா (பழைய முத்துக்குமார்) ரயில் நிலையம் எதிரே.எப்பவும் செகண்ட்ஷோ புல் ஆகிடும்.1125 சீட் கெபாசிட்டி.பாட்ஷா தான் அதிக நாட்கள் ஓடின படம் 85) ,இப்ப ஜூங்கா 11 am ஷோ .பால்கனி 100 ரூபா ,கீழே 80 ரூபா .ரெண்டே சீட். 60 ரூ 80 ரூ தான் கரெக்ட் ரேட்










0 comments: