Thursday, July 12, 2018

நமக்கு ஓவியாவைக்கண்டா பொறாமை,

கமல்ஹாசனுக்கு தான் என்கின்ற திமிர் அதிகமாகிக் கொண்டிருக்கிறது” - ராம சுப்ரமணியன் # படைப்பாளிகளிடமும் ,திறமைசாலிகளிடமும் திமிர் இருப்பது இயற்கை,குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சொம்பு அடிப்பவர்களுக்கு அது தெரியாது


===========


2 ஜெயலலிதாவுக்கு, போயஸ்கார்டனில் முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை அப்பல்லோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம் # பில் மட்டும் 133 கோடி தீட்டுனாங்களே ,அது எதுக்கு?


==============


3 நாடு முழுவதும் ஜூலை 20 முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
-அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் குல்தரன் சிங் # அப்பாடா,ரோட்ல நிம்மதியா நடமாடலாம்


============


4 `பாதிரியார்களைக் கைதுசெய்யத் தடை இல்லை' - பாலியல் வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் அதிரடி!# என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளவும்,பாவமன்னிப்பு கேட்டுக்கலாம்


============5 இந்தியாவிலேயே அதிக போராட்டம் நடந்த "மாவட்டம்" தமிழகம் தான்- எடப்பாடி பழனிசாமி $ இதுக்கு எங்க செயல் தலைவரே பரவால்ல,அவருக்கு ஜனவரி 26 க்கும் ஆகஸ்ட் 15 க்கும் வித்யாசம் தெரியாது.இவருக்கு மாநிலம் ,மாவட்டம்


=============


6 முதியோர்களுக்கு இலவச பேருந்து பாஸ் சென்னையில் மட்டுமே, மற்ற மாவட்டங்களுக்கு கிடையாது - போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் #
மற்ற மாவட்டங்களிலெல்லாம் முதியோர் வாக்கு (ஓட்டு) தேவையில்லயா?இல்ல அங்கே முதியோர்களே இல்லையா?


==============


7 காவல்துறையினருக்கு ஏன் வார விடுமுறை தரக்கூடாது? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி
# அவங்க லீவ் னா திருடன் ஓ.டி பாப்பானே?


============8 பணத்தை கொடுப்பீங்களா..? மாட்டீங்களா..?: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை # சிஸ்டம் சரிஆனதும் தந்துடுவாங்களாம்
கடனை திருப்பி தர்லைன்னா போராட்டம் பண்ணுவாங்களோ,ரஜினிக்கு போராடுனா பிடிக்காது


==============


9 சென்னை-சேலம் 8 வழி சாலை அமைப்பதில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை-அமைச்சர் ஜெயக்குமார்
# தொடர்புக்கு டெல்லி கோட் (code) அழுத்தவும்


=============10 பாஜக ஆட்சியில், உணவு பொருட்களின் விலை பாதியாக குறைந்துள்ளது - ஹெச்.ராஜா
# "அரைகுறை"யா விலைப்பட்டியலை படிச்சிருப்பாரோ?


============


11 துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புன்னு 2 வகையான பருப்புகளை கொடுத்தால் மக்கள் குழப்பம் அடைவார்கள் என்பதால்தான் ரேஷனில் துவரம் பருப்பு மட்டும் வழங்கப்படுகிறது -அமைச்சர் காமராஜ்
தமிழக அரசு பாஜக வா?அதிமுகவா?னு கூடதான் மக்கள் குழப்பத்துல இருக்காங்க. அப்போ அதையும் நீக்க வேண்டியது தானே


=============


12 ஈரானில் மழை பெய்வதைத் தடுப்பதற்காக இஸ்ரேல் மேகங்களைத் திருடிச் செல்கிறது
- ஈரான் நாட்டு ராணுவ தளபதி ஹோலம் ராஜா.. நாட்டு லயும் ஒரு செல்லூர் ராஜு


============


13 நான் மிகப்பெரிய மன்னன் அல்ல: பிரதமர் மோடி # வரி வசூலிப்பில் மன்னன் ,சக்ரவர்த்தி


============


14 நிச்சயம் ஆன பின்பு மணமகனின் பேஸ்புக் பதிவுகளை பார்த்து கல்யாணத்தை நிறுத்திய பெண் வீட்டார். # இதுக்குதான் பேக் ஐடில வலம் வரனும்கறது


=============


`15 கேரளா 5 பாதிரிகள் செய்த வன்புணர்வு சம்மதம் பெற்றே நடந்ததாம். கேரளHC யில் பாதிரிகள் சோனி வர்கீஸ் , ஜாப் மேத்யூ வாதம். # அப்ப குற்றத்தை இவனுங்களே ஒத்துக்கறாங்க?தில்லுதான்.அத ஏன் புனித இடமான சர்ச்லயே பண்ணுனீங்க?னு ஜட்ஜ் கண்டனம் தெரிவிக்கலயா?


============


16 இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அவசியம் அணிய வேண்டும்
- உயர்நீதிமன்றம் உத்தரவு # ஹெல்மெட் வாங்கறவரை வீட்லயே இரு னு நம்மாளு சம்சாரத்தை நைசா கழட்டி விட்டுட்டு சோலோ பர்பார்மென்ஸ் பண்ணுவாப்டி


===============17 தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான்~~திருநாவுக்கரசர்
# ஜோக் டெலிவரி பண்ணிட்டீங்க,ஆனா சிரிப்பு வர்ல=============18 ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறை
மற்றும் அவரின் மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!# விஞ்ஞானப்பூர்வமா ஊழல் பண்ண தெரில போல,பாவம்


=================19 அரசியலில் கமல் எல்கேஜி
ரஜினி பேபி க்ளாஸ் - அன்புமணி # நமக்கு ஓவியாவைக்கண்டா பொறாமை,கமல் ,ரஜினி வாங்கற (வாங்கப்போகும்) ஓட்டு % மட்டும் தெரிஞ்சுது கலைஞரும் ,டாக்டர் அய்யாவும் தூங்க மாட்டாங்க


=============20 தமிழ்நாட்டில் 10 ஆயிரம் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் - சுப்பிரமணியன் சுவாமி
கட்சிக்காரங்களை சொல்றாரா?


=============

0 comments: