Thursday, July 12, 2018

ஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்"


1 அஜித் ரசிகர் = ரீமெக் இல்லாமல் உங்க ஆளால வெற்றி படம் கொடுக்க முடியுமா?-
விஜய் ரசிகர் = துப்பாக்கி ARM இல்லாமல்? - தெறி,மெர்சல்
சத்ரியன் ,அபூர்வ சகோதரர்கள்
இப்ப முதல் கேள்வியை மறுபடி படிங்க புரியல==============


2 இவங்கதான் என் தோழி மேரி ஷீலா


ஓஹோ!marry sheela ங்கறது கட்டளை வாக்கியமா?
ஆமான்னா என்ன செய்வீங்க?
அன்புக்கட்டளை"வாக்கியம்னு சிலாகிப்பேன்=============


3 டாக்டர்,நாய்கள் என்னைய மட்டும் தினம் ராத்திரி துரத்திகிட்டே இருக்கு, எப்படி தப்பிக்குறது? 😢😢


கண்ட நாய்ங்களுக்கு எல்லாம்"டீ வாங்கித்தர்றீங்க,இந்த நாய்க்கு பொறை பிஸ்கெட்,ரொட்டி வாங்கித்தந்தா வாலாட்டிட்டு போய்டாதா?=============


4 அஜித்,விஜய் இரண்டு ஹீரோக்களுக்கும்"ரசிகரா இருப்பவருக்குத்தான் இனிமே அரசாங்கப்பணி னு உத்தரவு போடப்போறோம்


ஏன் தலைவரே?
அப்பதான் "சர்கார்" க்கு "விஸ்வாசம்" ஆக இருப்பாங்க===============


5 தவைவரே!8வழி சாலை திட்டத்துக்கு அனுமதியை மத்திய அரசிடம் போராடிப்பெற்றிருக்கிறோம்னு நீங்க தானே சொன்னீங்க?


ஆமா
இது மத்திய அரசின் திட்டம்,மாநில அரசுக்கு சம்பந்தம் இல்லை னு இப்ப பல்டி அடிக்கறீங்க?
அது போன மாசம்,இது இந்த மாசம்=============


6 ஜட்ஜ் = பாவ மன்னிப்பு கேட்க வந்த பாவை யை சர்ச்லயே பங்கம் பண்ணி இருக்கீங்க,அது ஏன்?


பாதிரி ஒரு மாதிரி = மேட்டரை முடிச்ட்டு கையோட பாவமன்னிப்பு கேட்டுக்க வசதியாதான்==============


7 சரக்கு சங்கரலிங்கம் = டாக்டர்,நீங்க சொன்னபடி குடிக்கறதை படிப்படியா குறைச்ட்டேன்


வெரிகுட்
முதல்ல டெய்லி 2 படி (full) குடிச்ட்டு இருந்தேன்,இப்ப ஒரு படி தான்
============


8 டாக்டர் ,உப்புமா சாப்ட்டா வாழ்க்கையில்

பொறுமைங்கற விசயம் நம்மள அறியாமலே வருமாமே?உண்மையா?
ஆமா,கூடவே நம்ம சகிப்புத்தன்மை யும் வளரும்==============


9 ஏம்மா,இங்கே இத்தனை வகைக்கீரைகள் இருக்கு,எல்லாமே ஒரு கட்டு 15 ரூபாதான்.ஆனா இதுக்கு மட்டும் பல மடங்கு ஜாஸ்தி ரேட் ஏனோ?


அது கரிசலாங்"கன்னி"க்கீரை ஆச்சே?================


10 நமக்குத் தெரியும் என்பதைவிட, அடுத்தவருக்குத் தெரியாது என்பதே நமது +


ஆமா. பொண்ணுங்களுக்கு சமையல்============


11 குருவே!சிவனுக்கு தமிழ் தெரியாது னு சொன்னீங்க,ஓகே,பார்வதிக்கு தெரியுமா?


பார்வதி ஓமனக்குட்டனுக்கே தெரியும் பார்வதிக்கு தெரியாதா?=============


12 டீ ,காபி இரண்டில் எது நல்லது?எது அதிகம் பேர் விரும்புவது?


2 மே கெடுதல்தான்.அதிக சேல்ஸ் டீ தான்
எப்டீ?
வீதிக்கு வீதி டீக்கடை இருக்கு,காபிக்கடை அதுல 10 ல 1 பங்கு கூட இல்ல================


13 விஜய் ரசிகர்களுக்கு டீ பிடிக்காதா?இது என்ன புது உருட்டா இருக்கு?


அதுக்கு 2 காரணம்
1 வீரம் FL ல / போஸ்டர் ல அஜித் டீ குடிக்கற போஸ் ஹிட் ஆச்சு
2 விஜய்க்கு காபி பண்றது பிடிக்கும்,(உதா −மகேஷ்பாபு ,அட்லீ சகவாசம்)அந்த பார்முலாபடி விஜய் ரசிகர்களுக்கு காபி பிடிக்கும்=================


14 டாக்டர்,தினசரி 8 கப் காபி குடிச்சா நீண்ட நாள் உயிர் வாழலாம்னு சிலர் சொல்றாங்களே?அது உண்மையா?


ஆமா,காபிக்கொட்டை டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ,காபிக்கடைக்காரங்க நல்லா சம்பாதிச்சு நீண்ட நாள் வாழ்வாங்க=============15 டைரக்டர் சார்,உங்க பட டைட்டிலை ஏன் "ஷாப்பிங்க் மால் குட்டி சிங்கம்"னு மாத்தீட்டீங்க?


கடைக்குட்டி சிங்கம் னா லோ பட்ஜெட்னு நினைக்கறாங்க================


16டேய் ,பைக்க நிறுத்து,கோர்ட் என்ன சொல்ச்சு?
பைக்ல போறப்ப 2 பேரும் ஹெல்மெட் போடனும்னு சொல்ச்சு
ஒரு ஹெல்மெட் இங்க இருக்கு,இன்னொண்ணு எங்கே?
அந்த இன்னொண்ணுதாங்க இது=============17 ரைட்டர் சார்,உங்க நாவல் ல முன்னுரை ,அணிந்துரை எதுவுமே இல்வையே?


எங்க?நம்ம கதையையே கடைசி பேரா மட்டும்தான் படிக்கறாங்க==============


18 குருவே!அமாவாசைக்கு தான் பயப்படனும் ,அஷ்டமிக்கில்ல னு சொல்லப்படுவது நிஜமா?


ஆமா,அமாவாசைங்க நாகராஜசோழன் ஆகறதுக்காக கூட இருக்கறவங்களையே முதுகுல குத்தற துரோகிகளா இருப்பாங்க===============


19 குருவே!பெண்ணின் வாயை அடைக்க எவனோ கண்டு பிடித்ததுதான் முத்தம்! னு மகாநதில கமல் பேசும் வசனம் உண்மையா?


எவனோவா இருக்காது,ஒரு வாயாடியோட புருசனாதான் இருக்கும்==============


20 எங்க தலைவரைப்பற்றி அவதூறு பரப்பிட்டு இருக்கீங்க


ஓஹோ,என்ன அவதூறு?
அவர் ஒரு ஊழல்வாதினு
சார்,ஒரு டவுட்
உங்க கட்சி ஆளுங்க ஒருத்தர் கூட "தலைவர் ஊழல் பண்ணவே இல்லை"னு வாதிடலை.எல்லாருமே "குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலை,போதிய ஆதாரம் இல்லை"னுதான் சொல்றாங்க,அது ஏன்
கேளு=============

0 comments: