Wednesday, July 11, 2018

நமீதா,மாளவிகா,ஆண்ட்ரியா , manthraa

கும்ப கர்ணனுக்கு கும்ப ராசி தானே?னு யாரும் இன்னும் கிளம்பலையா?


==========


2 கல்யாணத்துக்கு வர்ற பிரண்ட்ஸ்,கொலீக்ஸ் க்கு சரக்கு செலவு ,ரூம் செலவுக்கே மொய்ப்பணத்துல பாதி செலவாகிடும் போல

=============


3 காய வைத்த துணி திடீர் மழையால நனைஞ்சா பதட்டப்படாதீங்க.எப்படியும் நாம ஒழுங்கா அலசி இருக்க மாட்டோம்.===========


4 ஞாயித்துக்கிழமை 6 நாள் சேர்த்து வெச்ச துணிகளைத்துவைக்கும்போது நாளைல இருந்து அன்னன்னைக்கு துவைச்ட்டா ஈசினு தோணும்,ஆனா நாளை "சரி,சன்டே பாத்துக்கலாம்"னு தோணும்


===========


5 கல்யாணமாகாத பொண்ணுங்களோட டிஎம் ல பேசறது கடலை டப்பா,
ஆன பொண்ணுங்களோட பேசறது கடலை பர்பி டப்பி, டைவர்ஸ் ஆன பொண்ணு கூட பேசறது கடலை உருண்டை டப்பா # கோவில்பட்டி அகராதி (இது கேள்வி அறிவு)


============


6 சதுரங்க விளையாட்டில் பின்வாங்குதல் கவுரவக்குறைவு அல்ல,போர் தந்திரம்


==========


7 ஈரோடு ரயில்வே ஸ்டேஷன்ல 9 டிக்கெட் கவுண்ட்டர் இருக்கு,அதுல 4 ல தான் ஆள் இருக்கு.ஒரு க்யூ ல 30 பேர் .4×30=120 பேர். 9 மணிக்கு ஏற்காடு எக்ஸ்ப்ரெஸ் சென்னை போகத்தான் 90% பேர்.நெருக்கடியை சமாளிக்க கண்டக்டர் /டிடிஆர் நியமிச்சு ரயில்லயே டிக்கட் தரலாம்


===========


8 பட்டால்தான்
புத்தி வரும் ஆண்களுக்கு! "பட்டால்"தான் செலவு,அதிகம் பெண்களுக்கு # பட்டுப்புடவை பைத்தியங்கள்


=========9 31 ந்தேதி சம்பளம் கைக்கு வந்துட்டா அது செலவாகி முடியும் வரை வேலைக்குப்போக பலருக்கு பிடிக்காது.மறுபடி 3 ந்தேதில இருந்து வேலைக்குப்போக ஆரம்பிச்சிடுவாங்க.


==============


10 வறுமையும் ,தேவைகளும் தான் உழைப்புக்கு ஆதாரம்


============11 பேங்க்லோன் ட்யூ/கடன்/கைமாத்து வசூல் பண்ண நேரில் செல்லவும்,போன் பண்ணி பணம் ரெடியா?வரலாமா?ன்னா ஒரு பய வா னு சொல்ல மாட்டான்.நேர்ல போனாதான் பிரஷர் ஏத்துனாதான் பணம் வெளில வரும்
=========


12 ஒரு சிறுகதை/நாவல்/கவிதை எழுதி யதும் அதை அப்படியே வாசகனுக்குத்தந்திட வேண்டும்.
ட்ரிம் பண்ணிட்டு இருக்கக்கூடாது.பிறந்த குழந்தைக்கு ஒப்பனை எதற்கு?


=============


13 ஓடும் ரயிலில் கீசெயின்,பாசி விற்கறவங்க செம டெக்னிக்கா அத்தனை பொருட்களையும் ஒரே கொக்கில இணைச்சுடறாங்க.பிரமாதமான ஐடியா.பேக்ல போட்டு வெளில எடுக்கற வேலை மிச்சம்============


14 தமிழக கோயில்களில்
அடிக்குகிற சிவப்பு - வெள்ளை பெயின்ட் ஏன்னு தெரியுமா?? ரத்ததானம் செய்வது நல்லது,செய்பவருக்கும் ,சமூகத்துக்கும் வெள்ளை தூய்மையின் நிறம்,நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும் தூய்மையாய் வைத்திருக்கனும்


==============


15 தனது மனைவியை பொது இடங்களில் ,விசேஷங்களில் மற்றவர் முன் அளவுக்கு அதிகமாக கொஞ்சுபவன் ஏதோ தப்பை மறைக்க முற்படுபவனாகவும் இருக்கலாம்


============


16 மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர்கள் நமீதா,மாளவிகா,ஆண்ட்ரியா , manthraa


==================17 மைக்ரேனுக்கு இந்தியால என்ன மாத்திரை யூஸ் பண்றீங்க?
சுடுதண்ணில மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்கறோம். மைக்ரேன் ,ஒற்றைத்தலைவலி,மூக்கடைப்பு எல்லாத்துக்கும் ஒரே தீர்வு


============


18 இன்னைக்கு
யார்கிட்டேயும் கோவிச்சிக்க கூடாது சண்டை போட கூடாது decided னு பொண்டாட்டிங்க ஸ்டேட்டஸ் போட்டா புருசனுக்கு சம்பள நாள் என அறிக!


=============19 மாதா மாதம் சேமிக்கும் பழக்கம் நல்லதுதான்,ஆனால் அதை வெளில சொல்லிட்டு இருக்காதீங்க,உங்கள் சேமிப்பு கடனாக/கை மாத்தாக கைமாறிவிட வாய்ப்பு உண்டு


===========


20 வியாபாரத்தில் லாப %
1 டாஸ்மாக் 60% 2 மருந்துக்கடைகள் 50%−55% 3 டீக்கடை/பஜ்ஜி,போண்டா கடை −75% 4 ஜவுளித்தொழில் (பெரிய கடைகள்) = 50%−60% சின்னக்கடைகள் =40%−50% 5 பேன்சி ஸ்டோர்ஸ் 35%−45% அரசியல் = சுருட்டுனவரை லாபம்================

0 comments: