Monday, July 16, 2018

பினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு

தனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது நாமே திட்டம் பாதிப்பு


============


2 தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது- பிரகாஷ்ராஜ் மக்களுக்குத்தானே நல்லது செய்ய முடியாது?தன் வீடு,மனைவி(கள்),மக்கள்,மகள் களுக்கு நல்லது செய்யலாமே

=============


3 கண்ணகியை தமிழர்களுக்கு அறிமுகப் படுத்தியதே கருணாநிதி தான் - மதிமாறன் # நல்ல வேளை , கோவலனுக்கு முன்னோடியே எங்க தானைத்தலைவர்தான்னு அடிச்சு விடலை


============


4 முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பல கோடி மதிப்புள்ள பழங்கால நகைகள் கொள்ளை # இதெல்லாம்"பழைய டெக்னிக்.தன் வீட்ல தானே ஆள்"வெச்சு திருடி கணக்கு காட்றது


==============5 தருமபுரியில் 3 மாணவிகளை உயிருடன் எரித்து கொன்ற அதிமுக நிர்வாகிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு # அராஜகம்.5 , 10 திருடுனவனை மன்னிக்கலாம்.கொலைகாரனை மன்னிக்கலாமா?


===========


6 அன்புமணி ராமதாஸ் ஒரு பழைய கஞ்சி!" - பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கடும் தாக்கு! # கஞ்சி உடல் நலனுக்கு நல்லது,பழமை பாரம்பர்யம் நம்ம கலாச்சாரத்துக்கு உகந்தது=============

7 அமித்ஷா வருகை மாற்றத்தை ஏற்படுத்தும்; பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை # த்ரிஷா வை தெரிஞ்ச அளவு கூட தமிழ்நாட்ல அமாத்ஷா வை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

=========

8 தமிழ் தெரிந்தால் எந்த மொழியும் கற்கலாம்- மிஸ் இந்தியா அனுக்ரீத்தி # இதை பாஜக காரங்க கேட்கற மாதிரி சத்தமா சொல்லுங்க


============


9 கமல் ரஜினியால் மாற்றம் வராது.. வறட்சிதான் வரும்.._- ஜெயக்குமார்.
# அப்ப புரட்சிக்கலைஞர் விஜய்காந்த் வந்தா புரட்சி வருமா?

==========


10 பாஜக ஆட்சியின் மிகப்பெரிய பலமே சாதனைகள்தான் !! -தமிழிசை # மிகப்பெரிய பலவீனம் விவசாயிகள் வேதனைகள்தான்


==============


11 சத்துணவுக்கு கொள்முதல் செய்த முட்டையில் ஊழல் முறைகேடு-செய்தி. !# அரசாயல்வாதிங்க படிப்புல,கணக்குல முட்டை வாங்கறாங்க,ஆனா ஊழல் பண்றதுல,முறைகேடா சொத்து குவிப்பதில் முட்டை வாங்கறதில்ல,அவ்ளோ விவரம்


============


12 தமிழர்கள் மோடியை மறந்தால் அது மிகப்பெரிய பாவம் - பொன்னார் # மோடி விவசாயிகளை சந்தித்தால் மிகப்பெரிய புண்ணியம்


=============


13 வயலில் நின்று தினமும் மந்திரம் சொன்னால் நெல் விளைச்சல் அதிகரிக்குமாம்:கோவா அமைச்சர் உளறல்…! # செல்லூர் ராஜா மாதிரி "நெல்"லூர் ராஜா


============


14 கெஜ்ரிவால் அரசை செயல்பட விடுங்க: மத்திய அரசுக்கு சிவசேனா அறிவுரை # அவர "செயல் தலைவரா" செயல்பட விடுங்க,தமிழகம் மாதிரி செயல்படா தலைவரா ஆகிடப்போறார்


=============


15 கேரளாவில் புது சட்டம் : துணி, நகைக்கடைகளில் பெண் ஊழியர்கள் இனி நிற்க வேண்டாம் - சபாஷ் ! பினராயி விஜயன் மக்கள் மனசுல நின்னுட்டாரு


===============


16 5 ஆண்டுகளுக்குள் ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்தக் கூடாது; முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்- தம்பிதுரை # கணக்குல அதிமுகவுக்கு பிடிக்காத நெம்பர் 356 பிடிச்சது 420


==============


17 நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ் திரைப்படத்தில் சிகரெட் புகைப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது நஷ்ட ஈடாக மூவரும் தலா ரூ.10 கோடியை புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு கொடுக்க வழக்கு # கேஸ் நிக்காது,அரசுதானே விக்குது?

================


18 சென்னையில் 9 ஆம் தேதி பத்தாயிரம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார் - தமிழிசை # 10000 உறுப்பினர்கள் இருக்கறதே டவுட்,எப்டி 10,000 நிர்வாகிகள்?


===============


19 சத்துணவு,முட்டை கொள்முதலில் முறைக்கேடு ஏதும் நடக்கவில்லை. −ஜெயக்குமார் # தேவா பொழச்சுக்குவார் யாரு?டாக்டர் சொன்னாரா? தேவாவே சொன்னார் , தளபதி மொமெண்ட்


=============


20

"அரசியல் ரீதியாக என்னை ஏமாற்றி விட்டு, என்னிடம் இருந்த தொண்டர்கள் சிலரை ஒ.பி.எஸ் தன் பக்கம் இழுத்து கொண்டார். இதனால் அவர் செல்வாக்கு உயர்ந்துள்ளது"−ஜெ.தீபா # இப்டி சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக்காதீங்க,


===========

7

0 comments: