Tuesday, July 24, 2018

வர்றேன்,வரப்போறேன்,இதோ வந்துட்டேன்

தந்தை கடனை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறி மகளுக்கு கல்விக்கடன் மறுப்பு தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் SBI பதிலளிக்க உத்தரவு அது சரிதான்,அந்தப்பொண்ணு வேற பேங்க் ல லோன் வாங்கத்தடை இல்லை


=============


2 பொய் மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
# யாரு,அவரா? கொடுக்கறதா சொல்வாரு,10 பைசா வாங்கிடுங்க பார்ப்போம்? கோடிக்கணக்குல கொள்ளை அடிச்ச பணம் இருந்தாலும் தேர்தல் நிதி வேணா தொண்டர்கள்கிட்ட திரட்டுவாரு

============


3 150 தொகுதிகளில் ரஜினிக்கு செல்வாக்கு
உளவுத்துறை அறிக்கை.." # "உளவுத் துறையில் கூட ரஜினி ரசிகர்கள் ஊடுருவி இருப்பாங்க போல


==========4 தமிழக அரசை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், மொழி பெயர்ப்பில் தவறு நடந்திருக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் ஜெயக்குமார் # நம்பினாதான் சோறு னு சொன்னா நாங்க கூடதான் நம்புவோம்
அப்ப ஹெச் ராஜாக்கு ஹிந்தி,தமிழ் சரியா தெரில ங்கறாரா?


=============


5 டாஸ்மாக் பார்களில் தரமான உணவு விற்க நீதிமன்றம் உத்தரவு. - செய்தி
,அல்பாயுசு ஆட்கள் ஆச்சே?


============


6 கிருஷ்ணரை விட கருணாநிதி ஆளுமை மிக்கவர் - ஆ.ராசா || # நீங்களே இப்டி அவரை கலாய்ச்ட்டா எப்டி? கோகுலத்து கண்ணா கண்ணா......

=============


7 திரையுலகில் உள்ள மேலும் சிலரது பெயர்களை வெளியிடுவேன்" - நடிகை ஸ்ரீ ரெட்டி || பொன்னியின் செல்வன் நாவல் மாதிரி ஏகப்பட்ட அத்தியாயம்"வரும் போல==========


8
திமுக தலைவரின் பேரன், செயல் தலைவரின் மகன் என்பதை விட திமுக-வின் கடைக்கோடி தொண்டன் என்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி - உதயநிதி # கடைக் "கோடி" தொண்டன் ,குறியீடு


==============


9 கருணாநிதி ஒரு தீர்க்கதரிசி....ஜெ.வுக்கு பிறகு அதிமுக உடையும் என முன்கூட்டியே சொன்னார்- துரைமுருகன் # அவரு ஏதோ நப்பாசைல சொன்னாரு,நடந்துடுச்சு,ஆனா அதனால திமுக க்கு லாபம் இல்லையே?=============


10 தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள்: மத்திய மற்றும் உத்தரப்பிரதேச அரசுகள் மீது உச்சநீதிமன்றம் காட்டம்! # பாதுகாக்க முடியலைன்னா ரிசைன் பண்ணட்டும்,இடி ன்னா இதான் சாக்கு னு இடிச்சிடுவாங்க


============


11 டாஸ்மாக் பார்களில் தரமான உணவு விற்க நீதிமன்றம் உத்தரவு.
# தரமான சாராயம் கிடைக்குமிடம் தமிழக டாஸ்மாக்,அடடே!


===========


12 ரஜினி ஆட்சிக்கு வந்தால்தான் ஊழல் ஒழியும்”-அர்ஜூன் சம்பத்
முதல்ல அரசியலுக்கு வந்தாதானே ஆட்சிக்கு வர?அந்த முடிவை எடுக்கவே மாமாங்கம் ஆகும் போல


=================


13 ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வழங்கிய ஆவணங்களில் குளறுபடி இருப்பதை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கண்டுபிடித்ததாக தகவல் # அப்போலோவில் அட்மிட்டே ஆகலை,எல்லாம்"செட்டப்னு"ஒரு குண்டை தூக்கி போடப்போறானுக


=================14 எடப்பாடி பழனிசாமி சம்பந்தி சுப்பிரமணியத்திடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை; சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை வெடியை ,356 ஆன் த வே==============


15 “இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி வந்துள்ளதால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்கிறார்!” - துரைமுருகன் # அண்ணா வழியில் நடப்போம்,அண்ணாமலையை எதிர்ப்போம்,இதுதான்"இப்ப திமுக பார்முலாவா?


=============


16 ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால் நேரமும், பணமும் மிச்சமாகும் - நடிகர் ரஜினிகாந்த்
# தனித்தனியா"நடந்தா"தானே ஓட்டுக்கு"2 தடவை பணம் வாங்க முடியும்?−பொதுஜனம்================


17 சமத்துவ மக்கள் கட்சி 6 மாதங்களில் மிகப்பெரிய சக்தியாக மாறும்- சரத்குமார் #
6 வருசமா வளராத ஆலமரம்"6 மாசத்துல எப்டிங்க"வளரும்?===============


18 சமூகவலைதளங்களில் ஸ்டாலினை விமர்சிக்க கூடாது என மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்...!
# டீக்கடைல,சலூன்ல விமர்சிக்கலாமுங்களா?


=============19 மக்களை ஏமாற்றும் வேலையை கமல்ஹாசன் செய்யாமல் இருக்க வேண்டும் - தமிழிசை # வர்றேன்,வரப்போறேன்,இதோ வந்துட்டேன் னு ஏமாற்ற அவர் என்ன ரஜினியா?
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்னு சொல்லி ஏமாத்துனது நீங்கதானே?


==============


20 நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்று அறிவு வாங்கி வந்துள்ளார் - துரைமுருகன் # வருத்தப்படாதீங்க,செயல்தலைவர் லண்டன்ல இருந்து வர்றப்ப உங்களுக்கும் வாங்கிட்டு"வருவார்


==========

0 comments: