Monday, July 09, 2018

உங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது கணவரா?மனைவியா?....

குருவே!வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது

கூடவே காகிதப் பூ
எடுத்து சென்றால்
விபத்துக்கள் ஏற்படாது..னு சிலர் சொல்றாங்களே,அது உண்மையா?
எதிர்ல வர்ற லாரிக்காரன் ஓவர் லோடுல குடிகாரனா இருந்தா?மிதமான வேகம் தான் விபத்தை தவிர்க்கும்.


===========

2 யுவர் ஆனர்

1996-2001ல் வானூர் தொகுதி DMK MLA மாரிமுத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ16 லட்சம் சொத்து குவித்த வழக்குல 4 வருசம் தண்டனை தந்திருக்கீங்க
ஆமா
ஆனா 66 கோடி சொத்துக்குவிப்பு வழக்குல ஜெ+சசி க்கு 4 வருசம்தானா?உங்களுக்கு கணக்கு தெரிலயா?சட்டம் சரிஇல்லையா!?===============


3 மேனேஜர் எனக்கு முன்னாடி ஆபிஸ் வந்துட்டேன்னு காட்ட லேன்ட் லைன்ல இருந்து போன் பண்ணுவான்...அப்ப என்ன பண்ண?


அதை அட்டெண்ட் பண்ணாம நம்ம வீட்டு லேண்ட் லைன்ல இருந்து கால் பண்ணி இன்னும் வீட்ல தான் இருக்கேன் னு கடுப்படிச்சு விட்ரனும்==============


4 டாக்டர் ,foreign biscuits சாப்பிட்டா உடம்புக்கு நல்லதா?


மைதா மாவுல செஞ்ச எந்த பிஸ்கட்டுமே கெடுதல்தான்.பத்தாததுக்கு அதுல அஸ்கா சர்க்கரை வேற=============


5 டாக்டர், தூக்கம் வர மாட்டுது ..அப்டியே துங்குனா பேய் கனவா வருது


உடல் உழைப்பு இருந்தா தூக்கம் இரவில் சொக்கும்.திகில் படங்களா பாத்துட்டே இருந்தா அந்த நினைவுகள் கனவா வந்து தாக்கும்=============


6 பேரியம் + சோடியம் = வாழைப்பழம் னு உங்க பையன் எழுதி இருக்கான்


சரிதானே? Ba+Na2= ba+na+Na =banana===============


7 தலைவரே!நம்மை யாராவது எதிர்த்தா அவங்களை காவி அடிமை னு விளிப்பது ஏனோ?


பொதுமக்கள்ட்ட திருடன் மாட்டிக்கிட்டா அவன் என்ன செய்வான்?
ஒரு திருடனோட மனசு இன்னொரு திருடனுக்குதானே தெரியும்?நீங்களே சொல்லுங்க
அதோ திருடன் பிடி பிடி னு கத்திக்கிட்டே திருடன் ஓடி எஸ் ஆவான் அட ஆமா
அதே பார்முலா===============


8 டாக்டர்,நல்லவன் குடிச்சா குழந்தை ஆயிடுவான் கெட்டவன் குடிச்சா கொலைகாரன் ஆயிடுவான் என்பது உண்மைதான்


எவன்"குடிச்சாலும் முதல்ல மட்டை ஆகிடுவான்.தொடர்ந்து குடிச்ட்டே இருந்தா கட்டை ஆகிடுவான்==============


9 உங்க வீட்ல காலைல எந்திரிச்சதும் டீ போட்டுத் தருவது கணவரா?மனைவியா?....


பொண்டாட்டிங்க கரெக்டா டீ,காபி போட்டுத்தந்தா டீக்கடைங்க எப்படி வீதிக்கு வீதி கொடி கட்டிப்பறக்குது?==============


10 குருவே!பாதிரியாரிடம் பாவமன்னிப்புக்கேட்பதால் யாருக்கு பயன்?


இதுல என்ன சந்தேகம்?பாதிரியார்களுக்குத்தான்,பாவமன்னிப்பு கேட்க வர்ற பொண்ணுங்களை கரெக்ட் பண்ற நியூஸ் வந்துட்டே இருக்கே?=\===========11 கெட்ட வார்த்தை வச்சு பழமொழி வந்தா?? அது என்ன மொழி?


கெட்டுப்போன பழ மொழி=============


12 ஆட்சிக்கட்டிலில் நம்ம கட்சி அமரும்னு பேட்டி கொடுத்தீங்களா ,தலைவரே!?


ஆமா,ஒரு பில்டப்தான்
கட்டில்னாலே படுத்துக்கும்னு ஒரு செண்ட்டிமண்ட் இருக்கே?நம்ம கட்சியும் படுத்துக்குமோ?
=============


13 Love youவை விட அதிக போதை miss youவில்


அப்டியா?அப்ப முதல் பொய்யை குறைச்ட்டு 2 வது பொய்யை எடுத்து விட்ர வேண்டியதுதான்
==============14 குருவே!கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா?


எனக்குத்தெரியாது
ஓஹோ,நீங்களும் கழுதை மாதிரிதானா?
அதாவது கழுதைக்கு தெரியுமா?தெரியாதா?னு எனக்குத்தெரியாது=============


15 ப்ரியா,நீ இனிமே எதுவுமே சாப்பிடாத.ஹார்ட் அட்டாக் வருமாம்,நியூஸ்ல சொன்னாங்க

யோவ்.நல்லா படி.ப்ரியா நீ அல்ல.ப்ரியாணி சாப்ட்டா மாரடைப்பு வரும்


==================


16 தலைவரே!:
தலையில் முடிகொட்டியதை நினைத்து எப்போதாவது வருந்தியிருக்கிறீர்களா?
இல்ல,திருடனுக்கு தேள் கொட்டுனாலே வருந்த மாட்டான்,முடி கொட்னதை நினைச்சா வருந்தப்போறான்?முடியாட்சியை கைப்பற்ற முடி யலைனுதான் கவல


===============


17 பஸ்ல பொண்ணுங்க பசங்க பக்கத்துல போயி உட்கார்ந்ததும் 2 அடி ஜன்னலோரம் ஒதுங்கிப் போறானே அவன்தான் ஆம்பள

ஓஹோ,ஒரு சீட்டோட அகலமே 2 1/2 அடிதான், எப்டி 2 அடி ஒதுங்குவான்.அந்தப்பொண்ணு 3 அடி அகலம்


===============


18 பேயை பார்த்தேன் என்றால் நம்புவார்கள்!!
கடவுளை பார்த்தேன் என்று கூறி பாருங்கள்…நம்ப மாட்டாங்க
ஏன்? வேலு பிரபாகரன் இயக்கிய "கடவுள்" பாலா இயக்கிய "நான் கடவுள்" பாத்திருக்கலாமில்ல?


===============


19 ஒரு வருசமா இந்தக்கதைய எழுதிருக்கேன் 🤦🏻‍♂️

ஓஹோ,டைட்டில் "டைரி" னு வெச்சிடுங்க


============20 தப்பு நம்ம மேல இல்லாதப்ப
நமக்கு அட்வைஸ் குடுக்கிறவிங்கள லாம்
துபாய் அனுப்பிடனும்
துபாய் ஓசில போக ஆசைப்பட்டு ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க பாருங்க (இதுவும் ஒரு அட்வைஸ் தான்)


=============


0 comments: