Saturday, July 21, 2018

SKY SCRAPER -சினிமா விமர்சனம்

Image result for skyscraper poster

உலகத்துலயே பெரிய உயரமான 130 அடுக்கு மாடி கட்டப்படுது , அதனோட செக்யூரிட்டி சிஸ்டம் எல்லாம் கரெக்டா இருக்கா?னு செக் பண்ண ஹீரோ வர்றார். அவரோட ஃபேமிலி ( ஒரு சம்சாரம் , 2 குழந்தைங்க ) 120 வது மாடில இருக்காங்க. 96 வது மாடில இன்சூரன்ஸ் கிடையாது , இதை பயன்படுத்தி வில்லன் க்ரூப் அந்த பில்டிங் ஓனரை கார்னர் பண்ண ஒரு தீ விபத்தை ஏற்படுத்தி அழிக்கப்பார்க்கறார். ஹீரோ அந்த பில்டிங்க்ல இருக்கற தன் ஃபேமிலியை எப்படி காப்பாத்தி , வில்லனோட திட்டத்தை முறியடிச்சார் என்பதே கதை 

ஹீரோவா  ராக் புகழ் Dwayne Johnson . ஆள் மைக்கேல் மதனகாமராஜன் பீம் பாய் மாதிரி ஆஜானுபாவக தோற்றம். ஆக்சன் காட்சிகளில் அதகளம் பண்றார். குழந்தைகளிடம் செண்ட்டிமெண்ட்டாக பேசுவது , மனைவியிடம் பிரியம் காட்டுவது எல்லாம் ஓக்கே , ஆனா மசாலா படங்களுக்கே உரிய ஓவர் சர்க்கஸ் காட்சிகள் , நம்ப முடியாத சாகசங்கள்  கிராஃபிக்ஸ் உதவியுடன் பிரம்மாண்டமா காட்சிப்படுத்தி இருப்பது கொஞ்சம் மைனஸ் , கொஞ்சம் பிளஸ்


வில்லனாக  வருபவர் பெருசா எதும் சாதிக்கல , அந்த வில்லி கேரக்டர் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு, அவர் ஃபைட் சீனை இன்னும் பிரம்ம்மாண்டமா நீளமா எடுத்திருக்கலாம். ஹீரோ புரூஸ்லீ போல் லீன் பாடியாகவோ , ஜாக்கிசான் போல் ஃபிலெக்சிபிள்  பாடியாகவோ இருந்தால் இந்த கதை நாயகன் ரோலுக்கு சரி, ஆனா இரும்பு மனிதர் மாதிரி இருக்கும் ஹீரோ கட்டத்தில் அந்தரத்தில் சர்க்கஸ் வேலை செய்வது  ரொம்ப காதுல பூ ரகம், ஆனாலும் ரசிக்க முடியுது


 அந்தக்காலத்துல எல்லாம் ஆபத்தான கட்டத்துல ஹீரோ சாகசம் பண்ணுவது கை தட்டல்  விசில் எல்லாம் தியேட்டரில் பறக்கும், இதுல பெரிய அளவில் அப்டி இல்ல. எப்டியும் ஹீரோ காப்பாத்தத்தானே போறார் என்ற அசால்ட் இப்போ ஆடிய்ன்ஸ் மனதில் வந்ததும் ஒரு காரணம்


ஒளிப்பதிவு , கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ம் ஆக்சன் ஸ்டண்ட் காட்சிகள் இயக்கம் அனைத்தும்,  குட் 


 ஒரு சீன் கூட போரடிக்கல , ஒண்ணே முக்கால் மணி நேரம் டைம் பாஸ் படம், ஃபேமிலியோட பார்க்கலாம்
Image result for skyscraper movie stills

நச் டயலாக்ஸ்

1` ph ஆக இருந்தாலும் சரி ,சிஸ்டமா இருந்தாலும் சரி அதை ஆப் பண்ணி ஆன் பண்ணா பல பிரச்னைகள்"சரி ஆகிடும்,ஹேங் ஆனாலும்"அதே"பார்முலா


எல்லார்"கிட்டயும் ஒரு வீக்னெஸ்"இருக்கும்,அதைக்கண்டுபிடிச்சு"அவன் கிட்ட இருந்து பிரிச்சுட்டா"நம்ம வழிக்கு வந்துடுவான்


ஆபத்துல இருக்கற குழந்தையோட அப்பா எல்லாவற்றையும் விட"ஆபத்தானவன்



Related image
லாஜிக் மிஸ்டேக்ஸ் 


1 கோடிக்கணக்கில் செலவு செஞ்சு கட்ன பில்டிங்கின் செக்யூரிட்டி சிஸ்ட டேப்லெட்டை பில்டிங் ஓனர் ஹீரோ கிட்டே தர்றார். அது போல் ஒரு காப்பி இவர் வெச்சுக்க மாட்டாரா? எப்பவும் புது வீட்டின் ஒரிஜினல் சாவி ஹவுஸ் ஓனர் வெச்சிருப்பாரே?

2  ஹீரோவோட மகளை கைப்பற்றும் வில்லன் அங்கேயே ஹீரோ கண் எதிரிலே சுட வாய்ப்பிருந்தும் அவர் தண்டமா டைம் பாஸ் பண்ணி டயலாக் பேசி  மோடி ராகுல் கிட்டே மொக்க வாங்குனது மாதிரி சொதப்புவது நெருடல் 


3  படத்தின் முக்கிய ட்விஸ்ட்டே அந்த 96 வது மாடியில் தீ விபத்து நடப்பதே , அந்த ரகசியத்தை யாராவது வெளியே தெரிவிப்பார்களா? 

4  ஹீரோவின் மனைவி டோட்ட்ல் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கே ஐடியா கொடுப்பது , அவர்கள் ஆ வென வாய் பிளந்து நிற்பது எல்லாம் சீமான் மேடையில் ஆமைக்கறி சாப்ட்டேன், கடல்ல நீந்திப்போய் பிரபாகரனைப்பார்த்தேன் காமெடி ரகம், நம்ப முடியல 


5  தீ விபத்து நடந்த பகுதியில்  புகை கிளம்பி என்ன நடக்குதுன்னே பொதுவா தெரியாது , ஆனா கீழே நின்னு ஒரு க்ரூப் சினிமா பார்ப்பது போல் ஆனு வேடிக்கை பார்க்குது


6   பில்டிங்கில் உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் லாக் ஆகிடுச்சு , அதனால  தீயை அணைக்க முடியல ஓக்கே , ஆனா ஃபயர் சர்வீஸ்னு ஒண்ணு இருக்கே? இருக்கா? நம்ம செயல் தலைவர் போல் அதுவும் டம்மியா தெரில , அலட்டிக்கவே இல்ல 
Image result for skyscraper movie stills

சி.பி கமெண்ட்Sky scraper - உலகின் உயரமான"கட்டிடத்தில் தீ விபத்திலிருந்து தன் மனைவி,குழந்தைகளைக்காப்பாற்றும் ஹீரோவின் ஆக்சன்"கதை,105 நிமிடங்கள்,ஒர்த் டூ வாட்ச்.பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் ,ரேட்டிங்க் 3/5.
CG ஒர்க் ,ஸ்டண்ட் காட்சிகள்,செண்ட்டிமெண்ட் சீன்கள் குட்


ஈரோடு தேவி அபிராமி , Sky scraper (eng)


--



0 comments: