Wednesday, July 11, 2018

சாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித்யாசம்?

டாக்டர்,நான் டெய்லி 10 காபி/டீ குடிக்கறேன்,எனக்கு சுறுசுறுப்பு வருமா?

சுகர்,பித்தம் வேணா வரும்.சுறுசுறுப்பு எப்டி வரும்?


============


2 டியர் ,இன்னைக்கு ஜிஎஸ்டி நைட் கொண்டாடலாமா?

அப்டின்னா?
நாடு பூரா ஜூலை 1 ஜிஎஸ்டி டே கொண்டாடறாங்களாம்.நாம நைட் கொண்டாடுவோம்


=======


3 ஒவ்வொருத்தருக்கும் ஒரு போதை,எனக்கு வாசிப்பு ஒரு போதை.

அடடே!என்னென்ன நாவல்/சிறுகதை வாசிச்சிருக்கீங்க?
யாராவது யாருக்காகவாவது எழுதுன லவ் லெட்டர்ஸ்


============


4 எப்பவும் மற்றவர்களுக்காக சமைப்பதைவிட நமக்காக சமைக்கும்போது சுவை குறைவாகவே தெரியும் .உப்பும் கம்மியாவே தெரீது,ஏன் அப்டி?

2 க்கும் ஒரே காரணம் தான்
அ"சால்ட்"


============


5 டாக்டர்,என் தலைல அடிக்கடி அடி பட்டு செப்டிக் ஆகிடுது

எப்டி?
குட்டு பட்டாலும் மோதிரக்கையால குட்டுப்படனும்னு ஆர்வக்கோளாறு=============6 டாக்டர்,கூட்டுக்குடும்பம்கறதால டெய்லி 3 கிலோ வெங்காயம் உரிக்கவேண்டியதா இருக்கு,இதனால கண்ணுக்கு பாதிப்பு வருமா?

டெய்லி வாட்டர் வாஷ் பண்ணுன ஸ்கூட்டி மாதிரி உங்க கண் பளபளனு ஆகிடும் ,கவலைப்படாதீங்க


=============


7 மெத்தையில் secret locker இருக்குனு விளம்பரம் பண்றான்.
விளம்பரத்தில் வந்த பிறகு அது எப்படி சீக்ரட் ஆகும் ?
அதுல ஒரு சீக்ரெட் மேட்டர் என்னான்னா.... வேணாம் ,சொன்னா சீக்ரட் லீக் ஆகிடும்


==============


8 Eyeliner போட்டு Hairstyle பண்ணி Saree கட்றக்கே 1500 கேக்கறாங்க..

ஆம்பளைங்களுக்கு மட்டும்தான் மேக்கப் செலவு ,நகை செலவு இல்ல,ஆனா பொண்ணுங்க பண்ற செலவு ஆம்பளைங்க தலைலதான் விடியும்,அப்பா/கணவன்/காதலன்


===============9 என் Whatsapp க்ரூப் ல பெண்கள் இல்லை,ஆம்பளைங்க மட்டும்தான், நான் பெருமிதம் கொள்கிறேன்

சேர்த்திருக்கறது எல்லாமே எருமை,இதுல என்ன பெருமை ?


===============


10 எதாவது விஷேத்துக்கு போகனும்னா பூக்கடைல வாங்க மாட்டேன்..ரோஜா செடியே வாங்கிருவேன் அதுல 3 rose பூத்து இருக்கும்..செடியும் 50Rs தான்

அப்ப பலாச்சுளை வேணும்னா பலா மரம் வாங்குவீங்களா?அதுல 10 காய் இருக்கும் 10× 120 சுளை= 1200 சுளை மிச்சம்


===============


11 தேர்தல் நடந்தால் சமக தனித்து போட்டியிடும்!சமக தலைவர் சரத்குமார்.
# நீங்க இன்னமுமா கட்சியைக்கலைக்காம இருக்கீங்க?


===============


12 சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: முன் ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசி தரூர் மனு # அதென்ன மரண வழக்கு,கொலை வழக்குனு ஓப்பனா நியூஸ் போடுங்க,ஊருக்கே தெரிஞ்சது மீடியாவுக்கு தெரியாதா?


===============


13 என் Watsapp contacts ல Boys இல்லை சொல்லிட்டு கர்வம் கொள்கிறேன்...ஏன்னா நான் பசங்களோட பேசுனா என் கணவருக்குப்பிடிக்காது

ஓஹோ,உங்க 5008 பாலோயர்ஸ்ல 17 பேர் கூட fbல பேசறீங்களே,அதுக்கு 1ம் சொல்ல மாட்டாரா?


==============


14 முன்னாடிலாம் ஊட்டுக்கார் திட்டினா கோவமும் அழுகையுமா வந்து சண்டை பெருசாகும்..
இப்பல்லாம் சிரிப்பு வருது
ஏன்?திட்டும்போது எதுனா ஜோக் சொல்லுவாரா?
இல்ல,திட்டிட்டே கிச்சு கிச்சு பண்ணி விட்ருவாரு


===============


15 குருவே!திருவிளையாடல் படம் பாத்துட்டீங்களா?

இல்ல
விஜய் டிவி ல சீரியல்?
இல்ல.ஏன் கேட்கற?
சிவனுக்கு தமிழ் தெரியாதுன்னீங்களே?இந்த ரெண்டுலயும் சிவன் செந்தமிழ்ல வெளுத்து வாங்கறாரே?


===============


16 குருவே!ஒருவர் விமர்சனத்திற்கு உட்படாத வரை அவர் உருப்படியா 1 ம் செய்யலனு அர்த்தம் னு சொல்றாங்களே,அது உண்மையா?

பிரேக்கிங்க் நியூஸ் பார்த்துப்பார்த்து மக்களுக்கு பரபரப்பு பிரியர்கள் ஆனதுதான் காரணம்.எத்தனையோ பேர் சத்தம் இல்லாம சாதிச்ட்டுதான் இருக்காங்க


===========17 டாக்டர் ,மின்னல் வெட்றப்ப செல்பி எடுத்தேன்,செல்போன் புட்டுக்கிச்சு

நல்லவேளை,அந்தப்பக்கமா நின்னு செல்பி எடுத்தீங்க,டைரக்டா எடுத்திருந்தா கண்ணு போய் இருக்கும்


==============


18 மேடம்,கார்ட்டூனோ ,போட்டோவோ போட்டா அதுல உங்க கையெழுத்தைப்போட்டு போஸ்ட் பண்றீங்களே ,எதுக்கு?

"சித்ரம் பத்ரம்.ஆளாளுக்கு மை க்ளிக் னு காபி பேஸ்ட் பண்றத தடுக்கத்தான்


==============


19 சார்,பாவமன்னிப்பு கேட்க சர்ச் போகனும்.ரூட் தெரியல.சர்ச்க்கு எப்டி போகனும்?

காலம் கெட்டுக்கிடக்குது,கூட ஆம்பளைத்துணையோட போங்க மேடம்


==============


20 சார்,சாதா பிரண்டுக்கும் ,பேவரைட் பிரண்டுக்கும் என்ன வித்யாசம்?

பேவரைட் பிரண்ட்னா நீங்க என்ன ட்வீட் போட்டாலும் அதை பேவரைட் பண்ணுவான்


=============

0 comments: