Tuesday, July 17, 2018

நடிகர் சந்தானம் vs தலைவா

ஃபாலோயர்ஸ் தேத்தவோ ஆர்டிக்கோ இங்க வரல... டைம்பாஸாக மட்டுமே....


ஓஹோ,அப்போ வாரா வாரம் உங்க அக்கவுண்ட்டை டீ ஆக்டிவேட் பண்ணீட்டு புது அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க பாப்போம்===========


2 இன்னைக்கு முத்த தினம் னு இப்ப தான் தெரியும்,என்ன பண்ண?


கவலைப்படாதீங்க,இன்னைக்கு கன்ன முத்த தினம் தான் ,அடுத்த மாசம் லிப் லாக் டே வருது,இப்டி யே 12 மாசத்துக்கும் ஒவ்வொண்ணு===============

3 குருவே!ஒவ்வொருத்தங்களுக்கும் மடத்தனம் இருக்கும் என்பது உண்மையா?


ஆமா,வசதி இருக்கறவங்க லாட்ஜ்ல ,ஹோட்டல்ல தங்கறாங்க,மிடில் க்ளாஸ் ஆளுங்க வெளியூர் போனா முடிஞ்ச வரை சாமியார் மடம் ,வடலூர் வள்ளலார் மடத்துல தங்கறாங்க.இது மடத்தனமா?==============


4 டைரக்டர் சார்,உங்க பையன் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்காப்லயே,அதுக்கு யார் காரணம்?


இந்த அரசாங்கம்தான்
எப்டி?
அரசு தானே டாஸ்மாக்ல சரக்கு விக்குது.அது வித்ததாலதானே இவன் குடிச்ட்டு கார் ஓட்டும்போது மாட்டிக்கிட்டான்"?
ரஜினிரசிகர்கள் டூ பாரதிராஜா=க்ரீஸ் டப்பாவை எப்டி உதைச்சே?===========


5 டாக்டர்,அடிக்கடி காலை நேரத்துல பட்டினி இருந்தா அது டயட்ல சேருமா?


சீக்கிரம் அல்சர் வந்து ஹாஸ்பிடல்ல வேணா சேரலாம்


============


6 காலா காலத்துல கல்யாணம் பண்ணிக்கனும்கறாங்களே?காலா காலம்னா ் என்ன காலம் ?


ரஜினியோட காலா ரிலீஸ் ஆனதுல இருந்து 100 வது நாள் விழா வரை காலா காலம்================


7 டாக்டர் ,புரோட்டா வை மத்தவங்க பாக்கற மாதிரி சாப்ட்டா கண்ணு பட்டு வயித்து வலி வருமாமே?


யாருக்குமே தெரியாம ரூம்ல ஒளிச்சு வெச்சு சாப்ட்டாலும் புரோட்டா வால வயிற்று வலி வரும்,நாக்கு ருசிக்கு ஆசப்பட்டு உடல் ஆரோக்யத்தை இழக்காதீங்க
==============


8 வரலாறு மிஸ் வனஜா = சிலம்புச்செல்வன் என அழைக்கப்படுபவர் யார்?


மாண்புமிகு மாணவன் = சிலம்பரசனுக்கு (சிம்பு) கல்யாணம் ஆகி அந்த தம்பதிக்கு ஒரு பையன் பிறந்தா அவர்தான் சிலம்புச்செல்வன்


==============


9 டாக்டர்,அடிக்கடி பாஸ்வோர்டு மறந்துடுது,என்ன பண்ண?


சிம்ப்பிள்,இந்த உலகத்துலயே அதிகம் பேரால் உபயோகிக்கப்படும் "password"டையே நீங்களும் யூஸ்"பண்ணுங்க
என்ன பாஸ்வோர்டு? அதான் சொன்னேனே? புரியலை
password தான் பாஸ்வோர்டு=============


10 ஒரு விளம்பரத்தில்


சின்ன பசங்க நாங்க பொய் சொல்ல மாட்டோம்
அதான் சொல்லீட்டீங்களே?இதுவே ஒரு பொய்தான்
=============


11 மாப்ளை!பொண்ணு கோதுமை கலர்ல இருக்கும்


ஓஹோ!ரேஷன் கடைல போடற கோதுமை கலர்லயா? நல்ல கோதுமை கலர்லயா?============12 தலைவரே!நீங்க மரங்களை வெட்றது சமூக நலனுக்கா?எப்டி?புரியல

சிகரெட் பிடிக்கறது கெடுதல்தானே?
ஆமா
சிகரெட் பிடிக்க தீக்குச்சி அவசியம்தானே?
ஆமா
தீக்குச்சி தயாரிக்க மரங்கள் தேவைப்படுது,அந்த மரங்களை வெட்டிட்டா?

=============


13
டியர்,என்னை விட்டுட்டுப்போயிடுவீங்களோ?னு பயமா இருக்கு
வாடகை வீடுன்னா விட்டுட்டுப்போய்டலாம்,இது சொந்த வீடு,அட்ரஸ் விசாரிச்சு வந்துடுவியே?அதான் யோசிக்கறேன்===========


14 தலைவரே!நம்ம கட்சியோட மிகப்பெரிய தோல்வியே, பழைய வரலாறுகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்லாததுதான்...னு ஒரு பேச்சு நிலவுதே?

அதை எடுத்துச்சொன்னா ரெய்டு வந்து எல்லாத்தையும் அள்ளிட்டுப்போய்ட்டா?50 வருசம் கஷ்டப்பட்டு ஊழல் பண்ணி சம்பாதிச்சது


=============


15 தேவைப்பட்டா என் சம்சாரத்தையே நான்எதிர்ப்பேன்

ஓஹோ,பிரமாதம் சார்,இதுவரை எத்தனை தடவை எதிர்த்திருக்கீங்க?
அதான் தேவைப்படலையே?


================16 மேடம்,பிரமாதமா எழுதறீங்க,உங்க கிட்ட பயிற்சி எடுக்க வரனும்

ஆல்வேஸ் வெல்கம்
சரி ,அட்ரஸ் குடுங்க


=================


17 தலைவரே!உங்க 200 ரூபா கோஷ்டிகள்ல பலரும் ஷோபனா ரசிகர்களா இருக்காங்க,இது கட்சிக்கொள்கைக்கு மாறானது ஆச்சே?

எப்டி?
இது நம்ம ஆளு படத்துல ஷோபனா "நான் ஆளான தாமரை" னு பாடுதே?தாமரை மலரக்கூடாது னு சொல்றாங்க,இது மட்டும் ஓகேவா?


==============18 தலைவரே!நீங்க போட்டிருக்கற பட்டு கோட் என்ன விலை இருக்கும்?

5 லட்சம் இருக்கும்
நீங்க வெச்சிருக்கற காரு?
10 கோடி இருக்கும்,இதெல்லாம் நீ எதுக்கு கேட்கறே?
வாழும் காமராஜரே னு உங்க கட்சி ஆளுங்க போஸ்டர் அடிச்சிருக்காங்களே? அலப்பறைகள்


==================


19 நடிகர் சந்தானம் எப்போமே பாரும் பாட்டிலும் கையுமாவே நடிக்கிறாப்டி! அவரை மட்டும் ஏன் எதிர்க்கலை?எங்க தலைவா வை மட்டும் டார்கெட் பண்றாங்க ஏன்?

சந்தானத்தோட ரசிகர்கள் எண்ணிக்கை எவ்ளோ இருக்கும்?
தமிழ்நாட்ல மொத்தமா ஒரு 1 லட்சம் பேரு
அதான்
ரஜினி,விஜய்க்கு? சுமாரா ஒரு கோடி பேரு


================


20 குருவே! பிரச்சினைகளைக் கண்டு பயந்து ஓடாம அதோடவே ட்ராவல் பண்ண பழகிட்டோம்னா வாழ்க்கை அழகாயிடும்னு சொல்றாங்களே அது உண்மையா?

ஆமா,அதனாலதான் ஆம்பளைங்க அவங்கவங்க சம்சாரம் கூட ட்ராவல் பண்றாங்க


=============

0 comments: