Tuesday, July 03, 2018

கல்லானாலும் கணவன் என்று சொன்னவர்கள்.. மண்ணானாலும் மனைவி என்று ஏன் சொல்லவில்லை..?

குருவே!மன்னிக்கப்பட்ட குற்றங்களுக்குத் தண்டனை யார் தருவார்!?
காலம்


============


2 SBI
Education loan தருவாங்களா??? என்ன பார்மாலிட்டிஸ் தெரிந்த நல்ல உள்ளங்கள் சொல்லலாமே???? தருவாங்க.ஆனா உறிஞ்சு எடுத்துடுவாங்க.கனரா வங்கி ,மாதிரி வேற முயற்சிக்கவும்.வங்கிகளிலேயே பெரிய கொள்ளைக்காரன் SBI.


=============


3 கடன் வாங்கியவரால் தற்போது கடன்/வட்டி கட்டமுடியாத நிலைமை.
அதற்காக, அந்த கடனோடு சம்பந்தம் இல்லாத ஒரு நிலப்பத்திரத்தை (ஜாமீன் கையெழுத்து போட்டவரின்) தரமாட்டேன் என்று வங்கி சொல்லலாமா?! தாராளமா சொல்வாங்க.சட்டப்படி அந்த நிலத்தை ஏலம் விட முடியாது,ஆனா பத்திரத்தை முடக்கலாம்


============


4 ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்துக்குள்ளும்
"சொந்த வீடு" என்ற கனவு!. 100 வருடங்களுக்குள் காலி செய்து கிளம்ப வேண்டிய வாடகை வீடு இந்த உலகம்


=============


5 ஒரு நாளும் இல்லாத திருநாளா புருசன் பூ வாங்கித்தந்தா பொண்ணுங்க சிலாகிக்கத்தேவை இல்லை,பூக்காரியை கரெக்ட் பண்ணக்கூட இருக்கலாம்============


6 வசதி வாய்ப்புகள்,பணம் கிடைக்கிறது என்பதற்காக மதம் மாறுபவர்களும் ,பதவிக்காக கட்சி மாறுபவர்களும் சமூக நலனுக்கு கேடு விளைவிக்கத்தயங்காதவர்கள்


===========


7 இட்லி,தோசைக்கு தொட்டுக்க தான் சட்னி ,சாம்பார்.நம்மாளுங்க ஊற வெச்சு அடிக்கறாங்க


===========


8 ஏதாவது நல்ல ஹேர் கலர் சொல்லுங்கள்
லாங் டேஸ் இருக்கனும் ப்ரவுன் கலர் கிடைக்கனும் 15 மின்ட் குள்ள யூஸ் பன்ற மாதி வேனும் சைட் எபக்ட் இருக்க கூடாது மருதாணி அரைத்து தேய்த்துக்குளிக்கவும்.அரை மணி நேரம் ஊற வைத்தபின்.25 நாட்கள் இயற்கை மெரூன்/ப்ரவுன்


==============


9 ஆன் லைன் வீரம் என்பது
மாற்றுக்கருத்து கூறுவோரை அன் பாலோ பண்ணாமல் பிளாக் பண்ணாமல் கெட்ட வார்த்தை பிரயோகிக்காமல் தன் போக்கில் இருப்பதே! நீங்கள் வீரரா?கோழையா?


==========


10 சேகுவாரே சர்காரை எதிர்த்து ஜெயித்தவர்தானே? #2018 தீபாவளி


=============


11
மயில் கழுத்து நிற (peacock neck colour) உடை மயில்களுக்கு மட்டுமல்ல,முருகர்களுக்கும் எடுப்பானதே!


==============


12 டாக்டர்,நமது உடல் எடைல திடீர்னு 5% எடை குறைஞ்சா சுகருக்கான அறிகுறி ன்னும் ,10% குறைஞ்சா எய்ட்ஸ்க்கான அறிகுறினும் எடுத்துக்கலாமா?
நீங்களா எந்த முடிவும் எடுத்துக்காதீங்க.இரத்தப்பரிசோதனை நிலையம் எதுக்கு இருக்கு?6 மாசத்துக்கு ஒரு தடவை செக்


===========


13 குருவே!படித்தவர்கள் மட்டும் தான் அறிவுரை சொல்லனுமா? படிப்பறிவு இல்லாம அனுபவ அறிவு மட்டும் இருந்தா?
அனுபவ அறிவுதான் சிறந்தது,ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.உதா ஆன் லைனில் எந்தக்கட்சிக்கு செல்வாக்கு இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் உருவாகுதோ அது தோற்கும்

=============


14 அதிமுக அடிமைகள் பாவம் எம்ஜிஆர் ,ஜெ,சசிகலா னு மாத்தி மாத்தி கால்ல விழுந்தாங்க.
திமுக அடிமைகளுக்கு பிரச்சனை இல்லை,ஒரே வம்சம் கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் அவரோட மகன் அவரோட பேரன் இப்டி விழுந்தா போதும் இதுல காமெடி என்னன்னா திமுக வுல எல்லாரும் மெத்தப்படிச்சவங்க வேற


===============


15 தலைவரே!சிங்கப்பூர்ல பதவியில் இருக்கும் எம் பி களுக்கு சம்பளம் அதிகம்,அதே மாதிரி தமிழ்நாட்லயும் செஞ்சா லஞ்ச லாவண்யம் குறையுமா?
நிச்சயம் குறையாது,மக்கள் வரிப்பணத்தைத்திருடறவன் திருடிட்டுதான் இருப்பான்.


===============16 ஆடுறவர் மனசு நாட்டியத்தில் இருக்கணும், யார் கை தட்டுறாங்கன்னு பார்த்துட்டு இருக்கக்கூடாது என்பது சாத்தியமா?
அங்கீகாரத்துக்கு மயங்காதவன் படைப்பாளியே இல்லை.கே தட்டல் ஒலி கிரியா ஊக்கி


==============


17 கல்லானாலும் கணவன் என்று சொன்னவர்கள்.. மண்ணானாலும் மனைவி என்று ஏன் சொல்லவில்லை..?
ஏன்னா, தாய் மண் என சொல்லிப்பழகிட்டோம்


=============18 ரஜினி,கமல்,விஜய் போன்ற விஐபிகளின் ட்விட்டர் அக்கவுண்ட் 2 மேனேஜர்களால் நிர்வகிக்கப்படுது.புது ட்வீட் போடறது,மென்சனுக்கு பதில் சொல்றது எல்லாம் அவங்கதான்,இது புரியாம பலரும் தன் கூடவே அவர் பேசறதா புளகாங்கிதம் அடையறாங்க,குறிப்பா விஜய் ரசிகைகள்


=============


19 சில நெட் தமிழர்கள் சினிமா/அரசியல் விஐபி களிடம் வாண்ட்டடாப்போய் வம்பிழுத்து பிளாக் வாங்கிட்டு அதைப்பெருமையா ss எடுத்து தனி ட்வீட்டா போட்டு "நானும் ரவுடிதான்" னு ஜீப்ல ஏறுவது எல்லாம்....


===============20 இந்து,முஸ்லீம்,கிறிஸ்டியன் னு எந்த மதத்தை எடுத்தாலும் அந்த மத சாமியார்கள்,மத போதகர்கள் மக்களின் பக்தியை மிஸ்யூஸ் பண்ணிக்கறாங்க.குறிப்பா பொண்ணுங்க ஏமாறுவது அதிகம்=============

0 comments: