Saturday, July 14, 2018

பெஸ்ட் ஆப் இலக்கு

இணையவாதிகள் கவனத்துக்கு திருட்டுக்கும் கொள்ளைக்கும் வித்யாசம் இருக்கு.கொஞ்சமா திருடுனா அது திருட்டு.கோடி கோடியா அடிச்சா/திருடுனா அது கொள்ளை


==============


2 நான் தனிமைல இருக்கேன்
எனக்கு ஆறுதல்"சொல்ல யாரும்"இல்ல என்னை புரிஞ்சிக்கிட்டவங்க"யார் இருக்கா? மனம்,விட்டு அழ ஒரு மடி வேணும் இந்த மாதிரி FB ல ஸ்டேட்டஸ் போடறதெல்லாம் ஒரு டெக்னிக் தான்.(இன்ட்டர்)நெட் னாலே வலை தான்.அதுலயே இன்னொரு வலை


===========


3 டாக்டர்,வெள்ளை முடிக்கு எதாது தீர்வு இருக்கா?. அதிகமாகிட்டே போகுது. டை அடிக்க வெச்சிடும்போல..
டை கெமிக்கல்.சைடு எபக்ட்.இயற்கை வழி மருதாணி பெஸ்ட்.அஜித் ,ரஜினி மாதிரி இயற்கையை ஏத்துக்கிட்டு அப்டியே விட்டா நல்லது,விஜய்மாதிரி யூத் ஆக காட்டிக்க டை அடிச்சா பின் விளைவுகள்"i am waiting"


============


4 மழையை,இயற்கை"வளங்களை போட்டோ/வீடியோ அப்டேட் பண்றவங்க காருக்குள்ள உக்காந்துட்டு கார் கண்ணாடி வழியா காட்ற நோக்கம் கார் இருக்குங்கறதை காட்டத்தானே?டவுட் டேவிட்


==============


5 பொம்பள ஷோக்கு கேட்குதா?னு சில பெருசுங்க கிராமத்துல சக பெருசுங்களை கிண்டல் பண்றப்ப லேடீஸ் ஜோக்ஸ் னு நினச்ட்டேன்


============


6 பேஸ்புக் லைவ் பேட்டி ல ஜெ தீபா பிரமாதமான மேக்கப்.இந்த மாதிரி திரட்டி சுத்தற மாமன் பொண்ணுங்கதான் அலங்காரமா இருப்பாங்க

==========


7 டாக்டரா இருக்கற/ஆகப்போற பொண்ணுங்க கிட்ட நெட் தமிழன் dr dr னு மென்சன் போடறப்ப அவங்க டாக்டர்னுதான் தன்னைக்கூப்பிடறாங்கனு நம்பி புளகாங்கிதப்படுவாங்க.அவன் மனசுக்குள்ள டியர்னு நினச்சுதான் கூப்பிடுவான்


============


8 உன்னை எல்லாம் எவ்வளவு
பெரிய ரௌடினு நெனச்சேன் பொம்பள புள்ள ஸ்மைலி ரிப்ளை போட்டதுக்கு ஆனந்த கண்ணீர் வடிச்சிட்டு இருக்க? என்னமோ போ. ஏம்மா மின்னல்.எத்தனை டைம் சொல்றது?இதெல்லாம் ஆம்பளைங்களோட டெக்னிக்,இது புரியாம வாழ்வினிது அல்வா இனிது ன்னுட்டு


============


9 உடல் ஆரோக்யத்துல நமக்கே அக்கறை வேணும்.காதலி சொன்னதுக்காக 10 வருசமா சரக்கு அடிச்சுப்பழகுன குடியை விட்டேன் னு"சொல்றவங்களை நம்பி காதலி போனா எதிர்காலத்தில் இவரை,விட அழகான பொண்ணு சொன்னார் னு இவரை விட மாட்டார்னு என்ன நிச்சயம்? ஆண்கள் சைக்காலஜி


===========


10 சீக்கிரம் அழுக்கு ஆகவும் கூடாது,அப்டியே ஆனாலும் வெளில தெரியக்கூடாது.எல்லா கலர் சர்ட்டுக்கும் மேட்ச் ஆகனும்.ஆண்களுக்குக்கிடைத்த வரப்பிரசாதம்தான் கறுப்புக்கலர் பேண்ட்


================


11 இண்ட்டர்வ்யூலயோ,போட்டியிலோ பங்கேற்பவர்கள்கிட்டே பெஸ்ட் ஆப் லக் சொல்வதை விட பெஸ்ட் ஆப் இலக்கு என்பதே சரி


==============


12 பிரித்விராஜ் −பார்வதி யின் my story நடிகை காஞ்சனமாலாவின் உண்மைக்கதை என்றாலும் இப்பதான் ரிலீஸ் ஆன சாவித்ரி (மகாநதி தெலுங்கு /நடிகையர் திலகம்)யின் கதையும் ஒரு நடிகையின் கதை என்பதால் எடுபடுவது சிரமம்.கேப் விட்டு வந்திருக்கலாம் .அது போக மாய நதி என்று ஒரு மலையாளம் இதே கதை


=============


13 நடைபயிற்சிக்கு இயற்கை அளித்த இலவச பூமிப்பரப்பு கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தந்திருந்தாலும் நம்மாளுக ஜிம்ல பணம் கட்டி டிரட்மில்லில்தான் நடப்பேன்னு அடம் பிடிக்கறாங்க


================


14 டாக்டர் , Coconut milk குடிச்சா Hair white ஆகாது...னு சொல்றாங்களே ,அது உண்மையா?
அது உண்மையா இருந்தா தேங்காய் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கேரளாவில் பெண்களுக்கு முடியே நரைக்கக்கூடாதே?


===============


15 நீ விஐபி ஆக என்ன வழியோ அந்த வழியில் செல்.அரசியல்,சினிமா விஐபி களுடன் நின்று போட்டோ எடுத்து பெருமைப்படாதே!


================


16 கேரளா−கோட்டயம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.காலை 5 மணி யிலிருந்து இரவு 7 வரை தொடர் மழை.மழைநீர் சேகரிப்பு மிகச்சிறந்த வகையில்.விவசாயிகளுக்கு கொண்டாட்டம்


==============


17 இந்த வார ரிலீசில் பலராலும் சிலாகிக்கப்படும்/எதிர்பார்க்கப்படும் தமிழ்ப்படம் 2 வை விட யாராலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படாத கடைக்குட்டி சிங்கம் ஹிட் ஆகிடும் என எதிர்பார்க்கிறேன்

==============18 மழை வந்தால் காதலர்களுக்கு,புதுமணத்தம்பதிகளுக்கு கொண்டாட்டம்,ஆனால் சாலையில் பயணிப்பவர்களுக்கு திண்டாட்டம்,விபத்துக்கள் அதிகம் நிகழ வாய்ப்பு.குடிசை மக்களுக்கு உள்ளே புகுந்த மழைநீரை இரைத்து வெளியே ஊற்ற வேண்டிய அவலம்

===============19 கேரளா வில் எந்த ஹோட்டல் ,மெஸ் போனாலும்"குடிக்க சீரகத்தண்ணீர்தான்,நோய் எதிர்ப்பு சக்தி ,காய்ச்சல் தவிர்ப்புக்கு உகந்தது.சுடுதண்ணீர் + சீரகம் ஜீரணத்துக்கும் நல்லது

=============


20 கேரளாவில் கிணறு ,நீர்த்தொட்டிகளுக்கு கொசு வலை போர்த்துகின்றனர்,நல்ல ஐடியா=============


0 comments: