Wednesday, July 04, 2018

சொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார்

நெருக்கடி நிலை காலத்தில் தேசம் எப்படி இருந்தது என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்பில்லை : பிரதமர் மோடி# அதான் இப்ப கண்கூடா பாக்கறமே
1 பண மதிப்பிழப்பு 2 தூத்துக்குடி போராட்டம் 3 சேலம் சென்னை !8 வழி சாலை


\==========2 தாடி வைத்தவர்கள் எல்லாம் பெரியார் ஆகவும், அடுக்குமொழி பேசுவோர் எல்லாம் அண்ணா ஆகவும் முடியாது -கடம்பூர் ராஜூ
# தெர்மாக்கோல் யூஸ் பண்றவங்க"எல்லாம் செல்லூர் ராஜூ ஆகமுடியாது


============


3 உளவுத்துறையினர் தொடர்ந்து என்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்!" - ஜெ.தீபா # குழந்தைங்க தூங்கும்போது அதை பாக்கக்கூடாதுனு பெரியவங்க சொல்வாங்களே,அது அவங்களுக்கு தெரில போல


=============


4 தோஸ்த் படா தோஸ்த்.. என்னையும் ஓபிஎஸ்சையும் யாராலும் பிரிக்க முடியாது.. சட்டசபையில் முதல்வர் கலகல # சும்மானாச்சுக்கும் ஒரு பேச்சுக்கு "இனி நீங்க துணை முதல்வர் கிடையாது"னு சொல்லிப்பாருங்க


==============


5 பசுவின் அருமை
பெருமைகளை தீவிரமாக பரப்ப கோமாதாவுக்கு கதை சொல்ல 211 அந்தனர்களை நியமித்துள்ளது ராஜஸ்தான் அரசு -செய்தி # தமிழ்நாட்ல அவ்ளோ செலவு தேவையில்லை.எங்க ஊரு பாட்டுக்காரன் ல ராமராஜன் "பேச்சி பேச்சி நீ பெருமை உள்ள பேச்சி னு ஒத்தைப்பாட்டுல மொத்த ஜோலியையும் முடிச்ட்டாப்டி &senbagamae senbagamae

=============


6 சேலம்-சென்னை
8 வழிச்சாலை திட்டத்தால் 5 மாவட்டங்கள் பயன் அடையும் -தமிழிசை # பூனை,குறுக்க போகுது,சகுனம் சரி இல்லயே?


============


7 திமுக எம்.எல்.ஏ. காந்தி சுமங்கலி கேபிள் விஷன் செட்டப் பாக்ஸ்க்கு மாற மிரட்டுவதாக புகார் - செய்தி
# எதிர்க்கட்சியா இருக்கறப்பவே இவ்ளோ ஏத்தம்னா,ஆளுங்கட்சியா வந்துட்டா..... ஆட்டுக்கு வாலை அளந்துதான் வெச்சிருக்கு இயற்கை=============8 நடிகனாக நானிருந்தா ஜெயலலிதாவோட நடிச்சிருப்பேன் : துரைமுருகன் # MGR-உயிரோட நான் இருந்தா தோட்டத்துல புதைச்சிருப்பேன்===========9 8 வழிச்சாலை வேண்டாம் என்று போராடுபவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை_ அமைச்சர் கருப்பனன் நல்லாருக்கனும்,விவசாயம் செழிக்கனும் அப்டினு நினைக்கற சமூகநல ஆர்வலர்கள்


=============10 பிரனாப் முகர்ஜியின் பங்கேற்பை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவோர் எண்ணிக்கை 5 மடங்காக உயர்வு - செய்தி #
5*zero=zero


=============


11 புதுச்சேரியில் முதல்வர் அமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் ஆளுநர் ஆய்வு நடத்த கூடாது
மாங்கனி திருவிழாவை தொடங்கி வைத்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி # EPS சை இப்டி ஒரு வரி தில்லா சொல்லச்சொல்லுங்க பாப்பம்


============


12 புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும்!!! - கர்நாடக அமைச்சர்
# பிரமாதம்,ஏகப்பட்ட "அட்லி"ங்க உருவாகப்போறாங்க,பெருமையா இருக்கு=============


13 பெரிய ஜீயருக்கு ஆண்டுக்கு ரூ.1.5 கோடி: திருப்பதி தேவஸ்தானம் ஊதிய உயர்வு அறிவிப்பு # கடவுள் சேவைக்கு காசு எதுக்கு?னு யாராவது அதை திருப்பி தந்த வரலாறு உண்டா


==============


14 நடிகர் சங்க நில மோசடி தொடர்பாக சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு
29 சென்ட் நிலத்தை 2006ம் ஆண்டு காஞ்சிபுரம்dt வேதமங்களத்தில் நடிகர் சங்க நிலத்தை முறைகேடாக விற்றதாக கூடுவாஞ்சேரி போலீசிடம் விஷால் புகார் # ராதிகாவின் கணவர் ,ராதிகாவின் சகோதரர்னு நாளை நியூஸ் வரும்


===============


15 சிங்கம், புலியெல்லாம் பார்த்திட்டுதான் அரசியலில் வந்திருக்கேன் - அமைச்சர் ஜெயக்குமார் #
# சூர்யா,விஜய் படம் பாத்தா அரசியலுக்கு வந்துடலாமா?ஒரு வருசம் முன்னே வாயே திறக்காதவங்க எல்லாம் பஞ்ச் பேசறாங்க


============16 சொர்க்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார் ஜிம்பாப்வேயில் கைது- செய்தி # அதிர்ஷ்ட் மோதிரம் விக்கறவன் தன் கைல எந்த மோதிரமும் போட்டிருக்க மாட்டான் (போட்டா அத விக்க முடியாதில்ல).ஜனங்க முட்டாள்தனமா ஏமாறுவதை சாமியார்/பாதிரி கூட்டம் காசாக்கறாங்க


================17 சுவிஸ் வங்கியில் போடப்படும் பணம் அனைத்தும் கருப்புபணம் என நினைப்பது தவறானது..
நிதி அமைச்சர் அருண்ஜேட்லி... # அரசியல்வாதிகள் ,MLA,M.P க்கள் அனைவரும் யோக்கியர்கள் என்று நினைப்பது மாதிரி?


==================


18b சொரக்்கத்திற்கு போக டிக்கெட் விற்ற பாதிரியார் ஜிம்பாவேயில் கைது - செய்தி #
லாக்கப்ல நொங்கு எடுத்து நரகம்னா என்ன?னு காட்டனும்


================


19 முதலமைச்சர் பழனிச்சாமியை கரிகால் சோழனாக விவசாயிகள் பார்க்கின்றனர்: அமைச்சர் உதயகுமார் - # அறிக்கை விடும் அதிமுக அமைச்சர்களை மக்கள் தெனாலிராமன்களாக பார்க்கிறார்க

================


20 உளவுத்துறை என்னை கண்காணிக்கிறது-ஜெ.தீபா # அவ்ளோ வெட்டியாவா இருக்கு?அந்த உளவுத்துறை?


================

0 comments: