Sunday, July 01, 2018

sarkar vs spider

மாமியார்−மருமகள் பிரச்சனையை/ஈகோவை பேலன்ஸ் பண்ணத்தெரிந்த ஆண் உலகில் இல்லை,அவங்களாத்திருந்துனாதான் உண்டு==========2 ரிலீஸ் ஆன படம் நல்ல படமா?மோசமா?சராசரியா?என விசாரித்து ,தேர்வு செய்து பார்க்கும் பாக்யம் விமர்சகர்களுக்கு இல்லை
===========
3 புருசன் ருசிச்சு சாப்பிடனும்னா பொண்டாட்டி ரசிச்சு சமைக்கனும்.அதை விட முக்கியம் வயிறு பசிச்சு இருக்கனும்
==========
4 குருவே!நாம கடன்காரனா

ஆனதற்கு காரணமே
நாம் கடன் கொடுத்ததுதான்னு சிலர் புலம்பறாங்களே?அது நிஜமா?
ஆமா,வசூல் பண்ணிட முடியும்னு நம்பிக்கை இருந்தா மட்டும் கடன் தரனும்.முடியாதவங்க "இல்லை"னு சொல்லிடலாம்


==============


5 திண்டுக்கல் ஐ லியோனி மாதிரி ஜனரஞ்சக பேச்சாளர் கிடைப்பது சிரமம்.ஆனா திமுக அவரை சரியான விதத்துல உபயோகிக்கல


=============


6 ஏ ஆர் முருகதாஸ் படங்கள்லயே 4 எழுத்துப்படம் 2 தான்
அதே போல் ஆங்கில/ஹிந்தி (தூய தமிழ் அல்லாத) டைட்டில் படமும் 2 தான்
1 ஸ்பைடர் 2 சர்கார்
இப்டி செண்ட்டிமெண்ட்டா ஜோசியம் சொல்ல யாரும் இன்னும் கிளம்பலையா?
இந்த 2ம் ஆங்கிலத்துல s ல ஆரம்பிச்சு R ல முடியுது.

============
7 உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்?னு ஒரு பொண்ணு கேட்டா ஒரே கல்லுல 2 மாங்கா அடிக்கற நெட் தமிழன் பதில்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல=============


8 டாக்டர்,ரோஸ்மில்க் உடலுக்கு நல்லதா?
பசும்பால் ,எருமைப்பால் இது வேணா நல்லது.கால்சியம் சத்து.ரோஸ் மில்க் ல ரோஸ் கலருக்காக சேர்க்கப்படும் பொருள் உடல் நலனுக்கு உகந்ததல்ல


==============


9 மாநகரங்கள் தமிழகத்தில் பல இருக்கலாம்,ஆனால் "மா"நகரம் ஒன்று தான். சேலம்


=============


10 ஒரு தெலுங்குப்படத்துல வில்லன் டூ ஹீரோ = நான் நினைச்சா ஒரு செகண்ட்ல உன் ஆளை ரேப் பண்ணமுடியும்,பாக்கறியா?பாக்கறியா?
டவுட் 1 = ஒரு நொடி ல எப்டி?
டவுட் 2 = வில்லன் ரேப் பறதை ஹீரோ ஏன் பாக்கனும்?


===========

11 லோன் வேணுமான்னு ஃபோன் பண்ணி கேட்ட மாதிரி திரும்ப கட்டலைனா ஃபோன் பண்ணி தான கேட்கணும்!!
அதென்ன நேர்ல வந்து கேட்கிறது!?
நேர்ல வந்தாதான் பணம் வரும்.இல்லைன்னா பதில் /தாட்டுவார்த்தனை/சால்ஜாப் தான் வரும்


================

12 வீட்டில் கொசு தொல்லை இருக்கு.
என்ன பண்ணலாம்?
கேரளா வில் பண்றது மாதிரி பெரிய சைஸ் கொசு வலை வாங்கி வீட்டையே வலையால் போர்த்தலாம்.பெட்ரூம்ல வலை கட்டினா எல்லா கொசுக்களும் வலைக்குள்ள வரும்.நீங்க நைசா ஹாலுக்கு ஷிப்ட் ஆகிடலாம்


================


13 சாமிக்குப்படைக்கும் தேங்காய் உடைக்கும்போது இனிப்பான தேங்காத்தண்ணியை வேஸ்ட் பண்ணிடக்கூடாதுனுதான் தமிழன் அதுக்கு தீர்த்தம் னு பேர் வெச்சு நைசா குடிச்சிடறான்


===============


14 பசுமை வழிச்சாலை திட்டம் தொடங்கப்பட்டால் அந்த அரசுக்கு ஆபத்து ,அவங்க குடும்பத்தில் துர்மரணம் நிகழும்னு 2 ஜோசியர்களை விட்டு கிளப்பி விட்டா அடிமைகள் எல்லாம் அரண்டுட மாட்டாங்க?


===============


15 பொண்ணு மாசமான 4 மாசத்துலயே வயிறு சைஸ் பாத்து இரட்டைக்குழந்தைன்னா பெருசுங்க(கிராமத்துல) சொல்லிடுவாங்க.பெண் குழந்தைன்னா (கூந்தல்) முடி அதிகம் என்பதால் கர்ப்பிணிக்கு வாமிட் அதிகம் வருமாம்


===============


16 சரக்கே இதுவரை அடிக்காத பெண்கள் கூட சும்மா ஒரு கவுரவத்துக்காக(!) ருசி பாத்திருக்கேன் னு சொல்லிக்கறாங்க


===============


17 ஆணோ,பெண்ணோ இருபாலருக்கும் அழகு சேர்ப்பது எளிமை தான். எளிமையை விட சிறந்த அணிகலன் இல்லை


==============18 டாக்டருக்கும் ,டாக்டருக்கும் சண்ட ,அதை ஊரே வேடிக்கை பாக்குது (மதுரை எய்ம்ஸ்)


===============


19 வாசனை திரவியம் உபயோகிப்போர் பெரும்பாலும் தினசரி குளிக்கும் ப/வ ழக்கம் இல்லாதவரே!இவர்களால் உடன் இருப்பவர்களுக்கு தலைவலிதான் மிச்சம்


==============


20 பிரமாதமான சிறுகதைகள் எழுதுவோர் கவன ஈர்ப்புக்காக ஒரு மாதிரியான டைட்டில்களை வைத்து வாசகிகளை இழக்கிறார்கள்.திரைக்கதை ,வசனம் ,டைட்டில் எல்லாம் பெண்களைக்கவரும்படி தேர்ந்தெடுப்பது எப்படி என்பதற்கு சிறந்த உதாரணம் இந்தியத்திரை உலகின் திரைக்கதை மன்னன் ஜனரஞ்சக இயக்குநர் கே.பாக்யராஜ்

=============

0 comments: