Monday, July 09, 2018

சாவு பயத்தை காட்டிட்டடா பரமா

எட்டு வழி சாலையில்
அடிபட்டு இறக்கப்போகிறது "விவசாய நிலம் நிலமகளுக்கு அஷ்டமத்துல சனி


============


2 அன்பின் இராட்சத குணமே அழ வைத்துப் பார்ப்பதுதான்!
அழ வைத்துப்பார்ப்பது குணத்தில் சேராது.அது கொடூரம்.அன்பு என்பது அழ விடாமல் பார்த்துக்கொள்வது


=============


3 எப்பவுமே மகிழ்ச்சியா இருக்க வழி என்ன?
ஆதித்யா,சிரிப்பொலி மாதிரி காமெடி க்ளிப்பிங்கஸ் மட்டும் பாக்கனும்,சீரியல் பாக்கக்கூடாது===========


4 சினிமா ஹீரோக்களின் ட்விட்டர் அக்கவுண்ட்க்கு மென்சன் போட்டு "ஏதாவது பதில் சொல்லுங்க"
அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல் ஒரு லைக் போடுங்கனு பலர் கெஞ்சறது பாக்க கஷ்டமா இருக்கு.சூரியன்,நிலா மாதிரி தூரத்துல இருந்து ரசிச்சா போதாதா?தன்மானத்தை விட்டு இப்டி கெஞ்சனுமா?


=============


5 முதல்வரோட ட்விட்டர் அக்கவுண்ட்ல அட்மின் "மாண்புமிகு முதல்வர்" னு போட்டுக்க கூச்சமா இருக்காது?


==========


6 ஒரு பள்ளிக்கூடம் உருவாக்க காமராஜர் எவ்ளவோ கஷ்டப்பட்டார்.கேவலம் கமிஷன் காசுக்காக அடிமைக்கூட்டம் அசால்ட்டா பள்ளிக்கூடத்தை இடிக்கறாங்க,8வழிசாலைக்காக=============


7 கமல் பாட்டுக்கு பிக்பாஸ் 2, சபாஷ் நாயுடு,இந்தியன் 2 னு பிசி ஆகீட்டார்,ரஜினி யும் கார்த்திக் சுப்புராஜ் படம்,ஏஆர் முருகதாஸ் படம்,முதல்வன் 2 னு பிசி ஆகிட்டார்.அவங்கவங்க சம்பாதிக்கற வேலையை அவங்க பாக்கறாங்க,நாம தான் வெட்டியா அவங்க அரசியல்ல ஜெயிப்பாங்களா?மாட்டாங்களா?னு சண்டை போடறம்


==============


8 ஒரு காலத்துல ரேடியோப்பூ செம பேமஸ்.கூடைல வெச்சு சைக்கிள்ல வந்து விப்பாங்க,இப்ப அது வழக்கொழிந்து விட்டது.FM ரேடியோ பூ னு மாடர்னா ஷோ ரூம்ல விக்கலாம்===========


9 சம்சாரத்தோட சண்ட போடனும்னு முடிவு பண்ணிட்டா சமையல் வேலை முடிந்தபின் ஆரம்பிப்பவன் புத்திசாலி


=============


10 நம்மை திட்டுகிறார்களா?
இல்லை நம்மை தேடுகிறார்களா? என்று விக்கல் வரும்போது உறுதியாக சொல்ல முடிவதில்லை!! 2 மே இல்லை,தண்ணியைக்குடி(ங்க) தண்ணியைக்குடி(ங்க)


==============


11 எந்த தவறையும் செய்யாதீர்கள் என்று அறிவுரை கூற தகுதியானவர்கள் தவறே செய்யாதவர்களாதான் இருக்கனும்னு அவசியம் இல்ல,உதாரணமா கட்சியினர் யாரும் ஊழல் பண்ணக்கூடாதுனு கலைஞர் கண்டிக்கறது இல்லையா?


==============


12 கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு
அரசியல்வாதிகளின் புளுகு எட்டு வழி சாலைக்கு=============


13 ஏற்கனவே இருக்கற ஏழு குழந்தைகளை ஒழுங்கா வளர்க்கத்தெரியாதவன் எட்டாவது குழந்தை பெத்துக்கலாமா?னு மனைவி கிட்ட கேட்டானாம்


===========


14 8 வழி சாலை அமைந்தால்
அரசியல்வாதிகளின் 8 தலைமுறைகளுக்கும் சொத்து சேர்ந்து விடும் போல


===============


15 கல்யாண விழா மேடைல மாப்ளை கிட்ட "கடைசியா ஒரு தடவை சிரி" மொக்கை ஜோக்குக்கு "இன்றே கடைசி" போஸ்டர் எப்ப ஒட்டுவாங்க?


==============


16 சமீப ரிலீஸ் பட மாற்று டைட்டில்கள்.என் பார்வையில்
அசுரவதம் = மரண பயம் /சாவு பயத்தை காட்டிட்டடா பரமா செம போத ஆகாத =வீட்டோட டெட்பாடி டிக்டிக்டிக் = விண்வெளிக்குற்றங்கள்


==============17 கல்யாணத்துல மொய் வைக்கறவங்க மாப்ளை −பொண்ணு கைல வைங்க.நோட்"எழுதறவர்ட்ட வெச்சா கணக்குல வருமோ வராதோ?==============


18 பொண்ணு கிட்ட பிரபோஸ் பண்றது "நூல் விடறது"ன்னா
அய்யர் பொண்ணுக்கு ரூட் விட்டா "பூணூல்"விடறதா?


=============


19 அருண்காந்த்துக்கும் ,
ஆராதனாவுக்கும் பிடிச்ச படம் அ(ன்பே) ஆ(ருயிரே)


==========


20 களவாணி 1 = திமுக
களவாணி 2 = அதிமுக==============

0 comments: