Monday, July 23, 2018

குருவே!சூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே?நிஜமா?

குருவே!சமூக வலைத்தளங்களில் பெண்கள் அவங்க சொந்த டிபி வைப்பது நல்லதா?கெட்டதா?ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்றாங்க,குழப்பமா இருக்கு.ஆண்களுக்கு நல்லது,பெண்களுக்கு கெட்டது===========


2 சார்,பிரமாதமா வரையறீங்க,உங்க ஓவியத்திறமையால இதுவரை எத்தனை பேரை வரைஞ்சிருக்கீங்க?185
ஓஹோ,5208 பேர் பாலோயர்ஸ் இருக்காங்களே?மீதி?
அதுல 185 பேர் தான் பொண்ணுங்க=============


3 மேடம்,42,863 பேர் மண்டப வாசல்ல நிக்கறாங்கஅய்யய்யோ,நான் 100 பேருக்குதானே கல்யாணப்பத்திரிக்கையே வெச்சேன்?
அவங்க எல்லாம் உங்க Fb பாலோயர்சாம்,இப்ப பந்தி க்கு என்ன பண்ண?
ரஜினி பார்முலாதான்,துரத்தி விட்ருங்க================


4 அருவி படத்துல ஹீரோயின் தம் அடிக்கற போஸ்(டர்) இருந்தது,அதை எதிர்க்காதாங்க ஏன் சர்கார் தம் சீனை எதிர்க்கறாங்க?அருவி படம் வந்தப்ப எத்தனை பேரு அதை டிபி யா வெச்சாங்க?
4 பேரு சர்கார்? 4 லட்சம் பேரு
இப்ப தெரியுதா?தாக்கம்?================


5 இவங்கதான் என் தோழி மேரி ஷீலாஓஹோ!marry sheela ங்கறது கட்டளை வாக்கியமா?
ஆமான்னா என்ன செய்வீங்க?
அன்புக்கட்டளை"வாக்கியம்னு சிலாகிப்பேன்============


6 குழந்தைகளுக்கு மருந்தின் கசப்பை உணராமலிருக்க சர்க்கரை கொடுப்பது போல பொண்டாட்டி கொடுமைக்கு ஏதாவது வழியிருந்தா சொல்லுங்கரெண்டே வழி
1 கல்யாணமே பண்ணிக்கக்கூடாது
2 டைவர்ஸ்============


7 நான் சின்ன புள்ளையா இருந்ததுல இருந்து, இப்போ வரை BOOMBER பப்பிள்கம் தான் இன்னும் அதே ரேட் 1 ரூபாய்க்கு தர்றான்.சைஸைப்பாருங்க,40% சின்னது,மார்க்கெட்டிங்க் டெக்னிக்===========


8 டைரக்டர் சாருக்கு ரொட்டி பிடிக்காது,வரிக்கி கொண்டுவாஓஹோ,ரெட்டி தான் ஆகாதுன்னா ரொட்டியுமா?===============9 ஜெ உயிரோட இருந்தா இந்நேரம் ரஜினி ,கமல் ,எல்லாரையும் ஜெயில்ல தள்ளி இருப்பார் என்ற யூகம் சரியா?தப்பு
எப்டி?
4 வருசம் அவரே ஜெயில்ல தானே இருந்திருப்பாரு?=============


10 டியர்,ஏன் திடீர்னு லவ் பிரேக்கப் பண்றே?உங்க பாலோயர்ஸ் கவுண்ட் பாதியா குறைஞ்சிடுச்சே?


===========


11 2 நாள் மேக்கப் போட்டதுல, 2 நாள் கழிச்சு இன்னிக்கு தான் பழைய மூஞ்சி வந்துருக்கு . கண்ணாடிய நிம்மதியா பாக்க முடியுது .மேக்கப் இல்லாத முகத்தை மாப்ள பாத்துட்டாரா?==============


12 குருவே!சூரியனும், புதனும் ஒரே கட்டத்துல இருந்தா இரண்டு தாரமாமே?நிஜமா?வீட்டுச்சாப்பாடு மட்டும் சாப்பிடறவன் வெளில சாப்பிடமாட்டான்,வெளில ஹோட்டல்ல சாப்பிடறவன் 1 ஹோட்டலோட நிறுத்த மாட்டான்=============


13 குருவே! Perfect ah இருக்கறவங்களுக்கும், வாழ்க்கையிலயும,் career லயும் ஜெயிக்கறவங்களுக்கு மட்டும் தான் உலகமா?அப்டிப்பாத்தா 5% கூடத்தேறாதே?அவங்களுக்கு சிறப்பு அங்கீகாரம் ,அவ்ளவ்தான்,எல்லோருக்குமானதுதான் இந்த உலகம்=============


14 என்னோட 18933 பாலோயர்ஸ்ல இவங்களைத்தான் ரொம்பப்பிடிச்சிருக்குஓஹோ,மீதி 18,932 பேரை பிடிக்கல?
ஆமா
அப்டியா?சரி, அவங்க எல்லார் பேரும் ,ஊரும் சொல்லுங்க
அது ...அது வந்து
அப்போ பேரும் தெரியாது ,ஊரும் தெரியாது,ஆனா பிடிக்கல?இது டகால்டி=============


15

சார்,தமிழ்ப்படம் 2 ல விஜய் அதிகஅளவுல கலாய்க்கபகபடல,அது ஏன்?
படத்தோட டைரக்டர் என்ன கட்சி? திமுக திமுக வோட சேனல் எது?
விஜய் படம்
சன் டிவி சன் டிவி யோட அடுத்த தயாரிப்பு யார் படம்?
அவ்ளவ்தான் மேட்டரு


=============


16 உங்க சீக்ரெட் ஆஃப் சக்ஸெஸ் என்ன சார்?சிகரெட்.
சிக"ரெட்" ல அபாய அறிவிப்பு இருக்கறது தெரிலயா?


===========


17 சர்வர்,என்னய்யா ரோஸ்ட் இது?ஏனுங்?
பேப்பர் ரோஸ்டுன்னா அந்தப்பக்கம் இருக்கிறது இந்தப்பக்கம் தெரியனும். இந்தப்பக்கம் இருக்குறது அந்தப்பக்கம் தெரியனும்.
அதுக்கு தோசையை"திருப்பிப்பாத்தாலே போதும்ங்களே?================


18 ரைட்டர் சார்,உங்க நாவலை ஏன் ஆங்கிலத்தில்"மொழி பெயர்க்கக்கூடாது?நிறைய வாசகர்களைப்போய்"சேருமே?


யோவ்,ஆல்ரெடி நான் ஆங்கில நாவலை அட்லீ வேலை செஞ்சுதான் தமிழ்ல கொண்டு வந்திருக்கேன்


===============


19 குருவே!ஆடி போயி ஆவணி வந்தா டாப்புல வந்துடுவ னு ஜோசியர் சொன்னாரு,இது"பலிக்குமா?


அது தெரில,ஆனா உன் வாழ்க்கைல ஒரு தாவணி வந்தா டாப் ல இருந்து பாட்டம் வந்துடுவ,ஜாக்கிரத
===============


20 டைரக்டர் சார்,உங்க பட ஆடியோ லாஞ்ச்க்கு செம கூட்டமாமே?


அது"பொறுக்கலையா உங்களுக்கு?படத்துக்குதான்"கூட்டம் வர்றதில்ல ,இதுக்காவது வரட்டுமே?================

0 comments: