Wednesday, July 18, 2018

வலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள்

2 நாட்கள் சாதம் கெடாம இருக்கனும்னா அதோட புளிப்புச்சுவையை சேர்க்கனும்னு முதல்முதலா உலகத்துக்கே சொன்னவன் தமிழன் தான் ,லெமன் சாதம்,புளிசாதம் (புளியஞ்சோறு),புளித்த தயிர் சாதம் (பால்+புளித்த தயிர்)
தொட்டுக்க தக்காளி தொக்கு
============


குருவே!கர்நாடகா,கேரளா அரசு மாறி வந்தா நமக்கு காவேரி கிடைக்குமா?
தேவையில்லை,இப்பொ வருவது போல் விடாம "மாரி" (மழை) வந்தா போதும்,வேற வழி இல்லாம அணை நிரம்பி அவங்களே அணையைத்திறந்து விடுவாங்க

=============


3 ஹரே ராதா ஹரே கிருஷ்ணா படத்துல (தெலுங்கு) கமல் டூயல் ரோல்.தான் இன்னார்தான் னு நிரூபிக்க பேண்ட்டை கழட்டி கழட்டி மச்சத்தை காட்டிட்டே இருப்பாரு.இப்ப மாடர்ன் பொண்ணுங்க டப்மாஷ் பண்றேன்கற போர்வைல மச்சம் ,மிச்சம் எல்லாத்தையும்


=============


4 பாஜக கிட்ட பவர் இருக்கு,திமுக ,அதிமுக அத்தனை MLA,MP வீடுகள்ல ஒரே சமயத்துல ரெய்டு பண்ணுனா சொத்துக்கு சொத்தும் நாட்டுக்கு சேரும்.மக்களிடையே அவங்க வண்டவாளமும் தண்டவாளம் ஏறும்,அதை விட்டுட்டு அமித்ஷா மாநாடு ,த்ரீஷா ஈநாடு னு டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு


==============


5 சினிமால
கவிதைல சொல்ற மாதி முதல் முத்தம் ஒன்னும் அவ்ளோ சிறப்பானது இல்ல சிறப்புனு யாரும் சொல்லலையே,முதல் முத்தத்தை மறக்க முடியாதுனுதானே சொல்றாங்க.!2ஜி ஊழலை மறக்க முடியாது,அதுக்காக அது சிறந்தது னு சொல்ல முடியுமா?

==============


6 நகரங்களில் வாழ்பவருக்கு,உங்கள் குழந்தைகளுக்கு முதலில் நீச்சல் கற்றுக்கொடுங்கள்,மழை வெள்ளம் ,சுற்றுலா போகும்போது ஏரி/அருவி/ஆற்றில் தவறி விழுதலால் பல அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன்.


==============


7 குருவே!அடுத்தவங்க மேல உள்ள கோபத்தை நம்ம மேல காமிக்குறவங்க எல்லாம் எப்படி? அந்த நேரத்தில் நம்ம சிக்கிட்டோம்னா? இல்ல அந்த நபர் மேல காமிக்கமுடியாமலா?
2 ம் இல்ல,எப்டியும் எதிர்க்க மாட்டாங்கனு தோணுறவங்க கிட்ட மட்டும் தான் கோபத்தை காட்டுவாங்க


============


8 தளயோலப்பரம்பு ,கேரளா


===============================


பெண்களுக்கு தனி கோயில் ,ஆண்களுக்கு தனி கோயில்( வெவ்வேற ஏரியா)
பிரசாதம் கிடையாது, அன்னதானம் கிடையாதுனு அறிவிச்ட்டா 50% கூட்டம் கோயிலுக்கு வர்றது குறைஞ்சிடும் என யூகிக்கிறேன்


===========


10 குருவே!குடிமகன் ல *லவ் ஃபெயிலியரால் குடிப்பவன் *மேரேஜ் பெயிலியரால் குடிப்பவன் என இரு வகை தானா? இல்ல மப்பு ஏத்த குடிக்கறவன் டப்பு இருக்குனு குடிக்கறவன் னு குடிகாரன் ல பல வகை இருக்கு

===============


11 டாக்டர் ,.. படுத்துட்டு டிவி பாத்தா கண்ணு தானா மூடுது ? படுத்துட்டே டிவி ,மொபைல் பார்ப்பது,புக் படிப்பது எல்லாம் கெடுதல்.படுத்துட்டு செய்யற ரெண்டே வேலைகள்ல ஒண்ணு தூக்கம்,தூங்குங்க ,சரி ஆகிடு


=============


12 டொக் டொக் யாருங்க நீங்க?யாரைப்பாக்கனும்? உங்க பொண்ணை எதுக்கு? என்னைப்பிடிச்சிருக்குனு சொன்னாங்க எங்கே?எப்போ? யாருக்கெல்லாம் என்னய புடிக்கும் ? ஒரு ஆர்டி மட்டும் பன்னுங்க நோட் பண்ணிக்கிறேன் .னு ட்வீட்னப்ப ஆர்டி பண்ணாங்க,அப்ப இது லவ் தானே ஜெஸ்ஸி?


==============


13 குருவே!நல்ல ஃபேஷியல் என்பது, "ஃபேஷியல் பண்ணியா ?" என மற்றவர்கள் கேட்கும் படி இருக்க வேண்டும்...என்பது உண்மையா? இல்ல,மஞ்சள் பூசிக்குளிப்பதே பாரம்பரியமான் இயற்கை பேஷியல்,பாசிப்பயிறு மாவு,கடலைமாவு பூசிக்குளிப்பதும்,மத்ததெல்லாம் கெடுதல்


=============


14 ஒரு பொண்ணு பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல போய் இட்லி போட்டோ FB ல அப்டேட் பண்ணி இருக்கு,ஒருத்தன் கமெண்ட்ல "உங்க கவிதை பிரமாதம்,எப்பவும் உங்க நினப்பு"ங்கறான்


===============


15 ட்விட்டரில் அதிகம் பேர் ஆன் லைன் வரும் நேரம் காலை 11 டூ 2 இரவு 9 டூ 12


===========16 சுனை னா @ தொடுபுழா ,இடுக்கி மாவட்டம் ,கேரளா


============

17 உடனிருக்க வலியுறுத்துவதெல்லாம் அன்பின் பெரும் பிழை அப்டி நீங்களா நினச்சுக்கிட்டா பெரும்பிழை!நீங்க பாட்டுக்கு கோவிச்ட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டா ஹோட்டல் செலவு கையைக்கடிக்குமில்ல?


==============


18 ஊட்டி டூர் போனப்ப ரோட்டோரமா இருக்கற யாரோ 2 பேரை ஒரு பொண்ணு"போட்டோ பிடிச்சு FB ல போட்டிருக்கு,ஒரு நெட் தமிழன் ஓவரா உணர்ச்சிவசப்பட்டு,"அச்சுல வார்த்தது மாதிரி உங்க ஜாடை"ங்கறான்,குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடுவாங்க போல,நல்ல வேளை,புருசன் fb ல இல்ல

=============


19 வலைப்பூ,கீச்சுலகம்,பத்திரிக்கை என முன்னேறியவர்கள் 1 கார்க்கி பவா ,சென்னை (பக்கா விஜய் ரசிகர்,தொட்டால் தொடரும் பட வசனகர்த்தா,ஆனந்த விகடன் ல பணி) 2 பரிசல்காரன் கிருஷ்ணகுமார் ,திருப்பூர் ( விஜய் ரசிகர்) 3 அதிஷா வினோ (ஆ விகடன் பொறுப்பாசிரியர்) 4 யுவகிருஷ்ணா (பக்கா திமுக,புதலைமுறை)

=============


20 வலைப்பூ தொடங்கி அதிகம் சம்பாதித்தவர்கள் (பணம் +நட்பு+சினிமாக்காரர்கள் தொடர்பு) 1 கேபிள் சங்கர் ( தொட்டால் தொடரும் இயக்குநர்) 2 உண்மைத்தமிழன் 3 ஜாக்கிசேகர்


==============0 comments: