Sunday, July 01, 2018

செம போதஆகாதே - சினிமா விமர்சனம் #SemmaBothaAagatha

Image result for sema botha paakaadhae

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் பிரேக்கப், பொதுவாவே பொண்ணுங்க சின்ன விஷயத்தை பெருசாக்குவாங்க . ஹீரோவோட ஃபிரண்ட் தனியா இருக்கும் ஹீரோகிட்டே ஒரு சொப்பன சுந்தரியை கோர்த்து விடறாரு.ஒரு எதிர்பாராத தருணத்துல கில்மா பார்ட்டி கொலை செய்யப்படுது. அந்தக்கொலையை செஞ்சது யாரு?னு ஹீரோ துப்பு துலக்குவதுதான் கதை


ஏற்கனவே நாம பிரியாணி , கோவா , பஞ்ச தந்திரம் ல பார்த்த கதைக்கருதான், ஆனாலும் இதுல திரைக்கதை , காமெடி ஒன் லைனர்கள் நல்லா அமைஞ்சு படத்தை ஓரளவு காப்பாத்தி இருக்கு

ஹீரோவா அதர்வா , ஈட்டி ல பாணா காத்தாடி ல எல்லாம் ஆள் ஜம்முனு இருந்தார் , இதுல தாடி வெச்சு சோக கெட்டப் . இந்தக்கதைக்கு இது மாதிரி தாடி கெட்டப் எதுக்கோ?

மற்றபடி ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்கார், அப்பா முரளி ஹீரோயினை தொடவே 10 டைம் யோசிப்பார், நம்மாளு 10 செகண்ட் கூட யோசிக்காம பொசுக்கு பொசுக்குனு கட்டிப்பிடிச்சிடறார் , சபாஷ்

ஹீரோயின் புதுமுகம் மிஷ்டி போர்த்தி , பேர்ல தான் போர்த்தி இருக்கு , நேர்ல பார்ட்டி ஓப்பன் டைப் , ஆனா பெருசா எதிர் பார்த்த அளவுக்கு இல்லை ( உன்னை யாரு பெருசா எதிர்பார்க்கச்சொன்னா?)


கில்மா லேடியா அனேகா சோட்டி , பாப்பாவுக்கு அனேகா படின்னே பேர் வெச்சிருக்கலாம். கண் , கன்னம் எல்லாமே படி படி பிக் பிக்


கேரளா பாலக்காட்டில் ஹீரோ போய் விசாரிக்கும் அந்த இன்னொரு கில்மா லேடி அப்ளாஸ் அள்ளறார்

ரொம்ப நாளுக்குப்பின் கருணாகரன் ஒன் லைன் காமெடி லைனர்கள் தியேட்டர்ல கை தட்டலை அள்ளிக்குது , மொத்தப்படத்துல 27 ஒன் லைனர்கள் அதுல 7 டபுள் மீனிங் , 3 ட்ரிபிள் மீனிங் , 5 டைரக்ட் மீனிங்

தேவ தர்ஷினி கொஞ்சம் காமெடி ட்ரை பண்ணி இருக்காரு . அந்த இழவு வீட்டு மாடில நடக்கும் மனோபாலா காமெடி கலக்கல் ரகம்

ஒளிப்பதிவு , ஸ்டண்ட் காட்சிகள் , பிஜி எம் குட், இயக்கம் , திரைக்கதை வசனம் சராசரிக்கும் மேலே , இது நிச்சய சராசரி வெற்றிப்படம்

Image result for sema botha paakaadhae


சபாஷ் டைரக்டர்

1 கருணாகரன் காமெடி ஒன் லைனர்கள்

2 அதர்வாவின் பின் பாதி ஃபைட் காட்சிகள்

3 இழவு வீட்டு மாடி யில் நடக்கும் கிரேசி மோகன் டைப் காமெடிக்காட்சிகள்

4 இளமையான 2 ஹீரோயின்கள் போதாதுன்னு எக்ஸ்ட்ரா உருப்படிகள் 2


லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில ஆலோசனைகள்


லாஜிக் மிஸ்டேக் 1 − ஹீரோவைத்தேடி கில்மா லேடி ஆட்டோல அவர் வீட்டுக்கு வருது.ரேட் 5000 ரூபா.ஆனா ஆட்டோ கட் பண்ண 127 ரூபா கேக்குது,வாசல்லயே.பர்ஸ்ல மினிமம் பேலன்ஸ் கூடவா? இருக்காது?னு அருண்காந்த் கேக்கறாப்டி



லாஜிக் மிஸ்டேக் 2− கொலைசெய்யப்பட்ட லேடியைப்பத்தி விசாரிக்க சென்னைல இருந்து பாலக்காடு வர்ற ஹீரோ அந்த லேடியோட அக்காவை விசாரிக்க வாய்ப்பிருந்தும் பாக்காமயே போவது ஏன்?


1 ஸ்லோ & ஸ்டெடி வின் த ரேஸ் ஃபார்முலா தமிழ் சினிமா வில் ட்ரை பண்ணி இருக்காரு , படத்தின் முதல் 20 நிமிடங்கள் ரொம்ப ஸ்லோ , இன்னும் ஸ்பீடு பண்ணி இருக்கலாம்

2 ஹீரோ வுக்கு தேவதாஸ் கெட்டப் தேவை இல்லாதது


3 அபார்ட்மெண்ட்டில் அத்தனை குடித்தனக்காரர்கள் இருக்கும்போது யாராவது வீட்டுக்கு கில்மா லேடியை வரச்சொல்வாங்களா?


4 டெட் பாடி உள்ளே இருக்குது, ஃபிரிட்ஜை தேவதர்ஷினி 3 டைம் திறக்குது , டெட் பாடியை பாக்கலை ஓக்கே அந்த பாடி ஸ்மெல் அடிச்சிருக்குமே? அது பற்றி அது ஏன் கேட்கலை?

5 கேரளாவில் கண்ணூர் ஏரியா , ஹை ரேஞ்ச் ஏரியாக்களில் தான் இது போன்ற கில்மா லேடிகள் தனி வீடு எடுத்து தொழில் நடத்துவதாக கேள்வி அறிவு, ஆனா பாலக்காட்டில் அப்டி பல குடும்பங்கள் இருப்பதா வசனம் வருது , வரலாற்றுப்பிழை

6 பாலக்காட்டில் அந்த கில்மா லேடி கதவைத்திறந்ததுமே வாய்யா 2000 ரூபாதான் என்பதும் பின் 500 ரூபா குறைச்சுக்கறேன் என்பதும் படு செயற்கை


7 வில்லன் கில்மா லேடிக்கு அந்த ரோஸ் கலர் பானத்தில் விஷம் கலக்கறான், ஆனா அந்த பானத்தின் கலர் மாறவே இல்லை


8 விஷம் சாப்பிட்டு 3 மணி நேரம் கழிச்சுதான் அது வேலை செய்யுமா? வித்தியாசமான ஸ்லோ பாய்சனா இருக்கே?

9 விஷம் குடிச்சா வாய்ல நுரை வந்தோ , ரத்தம் வந்தோ சாவாங்க, ஆனா 3 மணி நேரம் கழிச்சு விக்கல் வந்தா சாவாங்க?

10 ./ அவ்வளவு பெரிய வீட்டில் ஹாலில் ,ம் கிச்சனில் எங்குமே ஒரு டம்ளர் தண்ணீர் கூட இல்லாதது எப்படி?


Image result for mishti hot
நச் டயலாக்ஸ்


1 மத்தியான வேளைல குடிக்காத

மண்ட வலி வந்து சாகாத



2 மதுரக்காரனுக்கு பயமா?

டென்சன் தான் நம்மோட பலம்



ஓட்டை இல்லாத சங்கை ஊதி பிரயோஜனம் இல்ல
அப்டின்னா?
அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே


4  ஏண்டா போனை எடுக்க லேட்?


4 வது ரிங்க்லயே எடுத்துட்டனே?
ஏன் 3 ரிங்க் வரை விட்ட?


நான் ஹவுஸ்சர்ஜன்


ஹவுஸ்சர்ஜன்க்கு ஹாஸ்பிடல் ல என்ன வேலை?
ஹலோ,அப்ப கார்ப்பெண்டர்னா கார்ல வேலை செய்யறவங்களா?



சாவு வீட்ல சகுனம் பாக்கனுமா?


பயம்தான் நம்ம பெரிய பலவீனம்



கீழ் வீட்டுக்காரர் செத்துட்டாருடா
அடடா,எப்டி?
அவரா விருப்பப்பட்டு செத்துட்டாரு



யாரோ ஓடுன மாதிரி இல்ல?
உன் மன பிராந்தியா இருக்கும்
நேத்து அடிச்ச பிராந்தியா இருக்கும்

10 சரக்கு இல்லாத வீடு சாவு விழுந்த வீடு மாதிரி


11 சுடுகாட்டுக்குப்பாடையோட போறமோ இல்லையோ இளையராஜா பாட்டோட போகனும்


12 நான் குடிச்சிரக்கற சரக்கு மேல சத்தியமா சொல்றேன்,நான் குடிக்கல


13 குறள் தெரியுமா?
தெரியும்,சிம்பு தம்பி தானே?



14 வேன்வாடகை செவன்பிப்டிதானே பேசுனோம்?350 தர்றே?
7×50=350 தானே?
Image result for anaika soti

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1 ஒரு நாயகியின் பெயர் மிஸ்டி
இன்னொரு நாயகி அனேகா ச்சோட்டி
அனேகமும் படி னு வெச்சிருக்கலாம்



வசனகர்த்தா பத்ரி வெங்கடேஷ் டபுள் மீனிங்க்ல புகுந்து விளையாடி இருக்காரு


என் லிங்குசாமி யின் ரன் பட ஷட்டர் க்ளோஸ் பைட் சீன் போல ஒரு ஆக்சன் சீக்வன்ஸ்,அதர்வா அதகளம் பண்றாப்டி

Image result for anaika soti







செம போதை ஆகாதே −"ஏ" செண்ட்டர் ரசிகர்களுக்கான கில்மா காமெடி + க்ரைம் த்ரில்லர் .டபுள் மீனிங்க் காமெடி,வார்த்தை ஜாலக்காமெடி வசனங்கள்,அதர்வா ஆக்சன் சீக்வன்ஸ் குட்.ஒன் டைம் வாட்ச்சபிள் .விகடன் 42 ,ரேட்டிங்க் 3 / 5


கேரளா ,கோட்டயம் அனுபமா
செம போதை ஆகாத 2 pm ஷோ




===============



0 comments: