Monday, March 05, 2018

வசூல் மன்னன் ரஜினியா?அஜித்தா?விஜய்யா?

ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் - வைகோ

# அப்போ விஜயகாந்த் தை முதல்வர் ஆக்குவேன்னு சொன்னீங்க?
அது போன மாசம் இது இந்த மாசம்


===============


2 More
திமுக தலைவர் கருணாநிதிக்கு அரணாக இருந்தது போல ஸ்டாலினுக்கும் அரணாக இருப்பேன் - வைகோ # அரணை யாக னு படிச்ட்டேன்


=============


3 ஆட்சியை கவிழ்க்க திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும்... திருவள்ளூர் கூட்டத்தில் வெடித்த ஸ்டாலின்! # அதெப்டீ தலைவா ?ஒரு டீ குடிக்கக்கூட 5 நிமிஷம் ஆகுமே?


===============4 புதுச்சேரிக்கு நிதி கொடுக்காமல் அல்வா கொடுத்தது பிரதமர் மோடி.. சீறும் நாராயணசாமி! # அல்வா தர்றதெல்லாம் அமைதிப்படை அமாவாசையோட காலாவதி ஆகிடுச்சு,மோடி காலத்துல பக்கோடா கொடுத்துட்டார்னு ட்ரெண்ட் பார்ம் பண்ணுவம்


==============


5 காதலர் தினத்தை விடுமுறை நாளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் - வாட்டாள் நாகராஜ்
# லீவ் வீட்டா பல பாதிப்புகள் ஏற்படும்,குறிப்பா லவ்வர்ஸ் சந்திச்சுக்க முடியாது


==============


6 மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது : தமிழிசை # அப்போ நீட் தேர்வை"மக்கள் ஆதரிச்சாங்களா?


=============


7 தமிழகத்தில் ஆன்மிகம் அருகி வருகிறது, கோவில்களுக்கு செல்வோர் குறைந்து வருகின்றனர்.- கீ. வீரமணி.
# சிவராத்திரிக்கு கோயில் கூட்டத்தை நீங்க பாக்கலையே?அள்ளுச்சே


=============8 தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இதைத் தான் தந்திருக்கிறது அரசு... குஷ்பு விளாசல்! # எதிர்க்கட்சிகளுக்கு சிக்கிடுச்சு செம மேட்டர்


==========9 திரும்பிய இடத்தில் எல்லாம் அதிமுக ஆட்சியில் ஊழல் நிறைந்து இருக்கிறது: பொன்முடி காட்டம் # ஆமா.ஆனா நம் கழக ஆட்சில திரும்பவும் வேண்டாம் ,திருந்தவும் வேண்டாம் ,ஒரே ஊழல் மயம் தான்


============10 பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் மீண்டும் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் 6% சரிவு
நேஷனல்,பேங்க் மானம் பஞ்சா பறந்துடுச்சு ,பஞ்சம் வந்துடுச்சு,அடுத்த பேங்க் SBI?==============


11 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்டவிரோத பண பரிமாற்றம்-சிக்கிய குஜராத் தொழிலதிபர் நிரவ் மோடி # இவருக்கு அதிகபட்ச தண்டனையா ஒரு 500 ரூபா அபராதம் மட்டும் போடுவாங்களோ?


============


12 ஊதிய உயர்வு விவகாரம்: மின்வாரிய ஊழியர்கள் நாளை முதல் ஸ்டிரைக்! # அரசு பலவீனமா இருக்குனு தெரிஞ்சுடுச்சா?இனி ஆளாளுக்கு படம் காட்டுவாங்க


============


13 எனக்கு முன் இருந்த துணைவேந்தர்கள் வழியில் ஊழல் செய்தேன்: கணபதி- # சபாஷ் ,பரம்பரையா இப்டியே இருங்க ,விளங்கிடும்


===========


14 கோபாலபுரம் வீட்டு சுவற்றில் 'திருடர்கள் ஜாக்கிரதை 'என எழுதியவருக்கு வலைவீச்சு. // செய்தி
# முறைப்படி கொள்ளையர்கள் ஜாக்கிரதை தானே சரி?


=============


15 சென்னை விமான நிலையத்தில் 75-வது முறையாக விபத்து # இதை சரி செய்ய இன்னும் 25 தடவை சரிய விட்டு 100 வது விபத்து கொண்டாடிவாங்களோ?


================


16 : பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நாட்டை விட்டு தப்பி ஓட்டம்# இவனுக கிட்ட எல்லாம்"ஆதார்"கார்டு பாஸ்போர்ட் செக் பண்ணி லாக் பண்ண மாட்டாங்க,ஏமாந்த"சோணகிரி யாராவது"சிக்குனா அபராதம் போட்டு தீட்டுவாங்க


==================17 தமிழகத்திற்கு காவி அரசியல் நல்லது; காளி அரசியல் தான் செய்யக்கூடாது- இல.கணேசன்# கெட்ட பய சார் இந்த காளி னு"சொல்வாரே அந்த"காளி யா?


================18 காவிரி வழக்கில் தீர்ப்பு : தமிழகத்திற்கு தண்ணீர் குறைப்பு
# 10 ரூபா கடன் குடுங்கன்னா கைல இருக்கற 5 ரூபாயையும் பிடுங்கிட்டா எப்டி?வெள்ளம் ,மழை வந்து தான் தண்டிக்கனும் இயற்கை


==================19 தமிழகத்திற்கு காவி அரசியல்தான் நல்லது: இல.கணேசன்
# அப்போ நித்யானந்தா ,சத்குரு,மேல்மருவத்தூர் ப்ராடு இவங்களை அமைச்சர் ஆக்கிடலாமா?


=================


20 ஆதியோகி சிலை அருகே அமர்வதற்கு 50000 ரூபாய்-ஜக்கி வாசுதேவ் # ஒரு கூட்டம் வசூல் மன்னன் ரஜினியா?அஜித்தா?விஜய்யா? னு பட்டிமன்றம் நடத்துது,இந்த கேடி சாமியாருங்கதான் கலெக்சன் கிங் போல============

0 comments: