Tuesday, March 20, 2018

உன்னை நினைத்து" பட லைலாக்கள் ஜாக்கிரதை,

தமிழக பாஜகவில் இரு பிரிவினராக பிரிந்து மோதல்- செய்தி# அந்த அளவு அந்த"கட்சில"கூட்டம் இருக்கா?தமிழ்நாட்ல


=============2 கமல் நாவை அடக்கிப் பேச வேண்டும்" - வைகோ
# வை கோ யாரை ஆதரிக்கறாரோ"அவர் தோற்பார்,அந்த பார்முலாபடி பாத்தா வை கோ எதிர்க்கற கமல் ஜெயிச்சிடுவாரோ?

============


3 அரசியலில் எனக்கு சவாலாக எந்த பெண்ணையும் நினைக்கவில்லை; எனக்கு நானே சவால் - தமிழிசை # அப்போ முன்னாடி கண்ணாடி பாத்துக்கிட்டேதான் பஞ்ச் டயலாக் பேசுவீங்க?

============


4 நான் ஆட்சிக்கு வந்தால் ஆன்மிகவாதிகளுக்கு பாதிப்பு வராது என்று நம்பிக்கை கூறுகிறேன் - கமல்ஹாசன்
# கண்டிப்பா பாதிப்பு வராது எப்டி? அதான் ஆட்சிக்கு வந்தாதானே?


=============5 தமிழராக இருக்கும் யாரும் பெரியார் சிலையை உடைக்கமாட்டார்கள் : பினராயி விஜயன் # ராஜா வுக்கு செக் இப்டி வைக்கனும்,அபாரம்


=============6 ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் ராஜூ
# அரசாங்கம் தர்றதைத்தானே அவங்க விநியோகம் பண்றாங்க?


=============


7 ஹெல்மெட் அணியாமல் சென்றால் தொடர்ந்து அபராதம் விதிக்க வேண்டும்: திருச்சி காவல் ஆணையர் # தொடர்ந்து அபராதம் விதிச்சா தப்பில்லை,பின் தொடர்ந்து தீவிரவாதி கணக்கா துரத்தி சிரமப்படாதீங்க.வண்டி நெம்பர் நோட் பண்ணா போதாதா?


==============8 குக்கர் சின்னத்தால் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது - தமிழிசை # பரவால்ல.உதய சூரியன்,இரட்டை இலை க்கெல்லாம் ஒரு காட்டு காட்டுச்சே,அது போதாதா?


================9 கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது - எச்.ராஜா
# அரசியல் ல இருக்கற அப்பா ன்னா மட்டும் மகனுக்கு நல்ல வழிகாட்டி யா இருக்க முடியாது.மோசமான வழிகாட்டியா வேணா ஆகலாம்


===============10 தலைக்கவசம் அணிந்திருந்தால் உஷா இறந்திருக்கமாட்டார்-உயர்நீதிமன்றம்.# கேவலம் 100 ரூபா காசுக்காக மெனக்கெட்டு துரத்தற எண்ணம் உள்ள கேவலமான ஆளுக்கு போலீஸ் வேலை தராம இருந்திருந்தாக்கூட தான் உஷா இறந்திருக்க மாட்டாரு


================11 3 வருஷம் காதலித்து படிக்க 2.5 லட்சம் காதலனை செலவு செய்ய வைத்து கடைசியில் கல்யாணத்துக்கு மறுத்ததால் Ashwini கொலை-செய்தி
# "உன்னை நினைத்து" பட லைலாக்கள் ஜாக்கிரதை,எல்லா ஆண்களும் "சூர்யா" மாதிரி செலவு மட்டும் பண்றவரா இருக்க மாட்டாங்க


===============12 கண்ணடி அழகி ப்ரியா வாரியர் ட்விட்டரில் /FB யில் ஒரு பதிவுக்கு ரூ 8 லட்சம் சம்பளம் பெறுகிறார் # ஒரு வருசம் கூடி உழைச்சாதான் நமக்கு அந்த காச கண்ல பாக்க முடியும்

============


13 சிபிஐக்கு என்னுடைய செல்போனின் பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் −கார்த்தி சிதம்பரம் கனம் இல்லைன்னா வழில பயம் எதுக்கு?


==============14 அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பமாகும் சோனியா காந்தி −திமுக வில் உதயநிதி வந்த மாதிரி?


==============15 தமிழ்நாட்டுக்கு மிகமிக சோதனையான காலம் இது... வைகோ வேதனை தான் தமிழ்நாடு னு நினைக்கறார் போல


==============16 திரிபுரா முதல்வர் பதவியேற்பு விழா: வணக்கம் சொன்ன அத்வானியை கண்டுக்காமல் அவமானப்படுத்திய பிரதமர் மோடி அமாவாசை நாகராஜசோழனா மாறுன பின் யாரையும் மதிக்காத மாதிரி


==============
17 அரசியலுக்கு வரவேண்டும் என்பது பிரியங்காவின் சொந்த விருப்பமாகும் சோனியா காந்தி −ஸ்டாலினுக்கு ராசி இல்லைனு தெரிஞ்சதும் உதயநிதியை இறக்கி விட்டது மாதிரி ராகுலுக்கு ராசி இல்லை னு ப்ரியங்காவை இறக்கி விட்டுப்பார்க்கறாரு போல


---------------
18 பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட காங்கிரஸ்
உடனும் கூட்டணி வைப்பேன் - வைகோ # அப்போ காங் கிரசுக்கு முடிவு காலம் நெருங்கிடுச்சு போல==============19 ஆன்மீக சாமி மலையேறிவிட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் # நமக்கு எப்படியும் இனி இறங்குமுகம் தான் ,ரஜினியும் ,கமலும் வந்தபின் எல்லாருக்கும் வயித்தைக்கலக்குது போல


===============20 ஊழலின் சின்னம் 'பிரஷர் குக்கர்'-தமிழிசை
# நாம எதிர்மறை மார்க்கெட்டிங்க் செஞ்சாதான் அது மெர்சல் ஹிட் ஆகிடுதே,கம்முனு இருந்தாதான் என்ன?


===============

0 comments: