Saturday, March 03, 2018

கேர்ள்காட்

கைதி = கொலை பண்ணுனது தப்பு தான்.அதுக்காக தூக்கு தண்டனையா?கொஞ்சம்"கருணை,காட்டுங்க எஜமான்


ஜட்ஜ் = கருணையா?தக்காளி ,உனக்கு கருணை மலர் டிபி கூட காட்ட முடியாது,ஓடிடு


=============


2 யுவர் ஆனர், கர்நாடகா வுக்கு சாதகமா தீர்ப்பு தந்திருக்கீங்களே ஏன்?


சட்டமன்றத்தேர்தல் எங்கே முதல்ல வருதோ அந்த மாநிலத்துக்கு சாதகமா தீர்ப்பு தரச்சொல்லி மேலிட ஆர்டர்


===============3 டாக்டர் ,முடி பயங்கரமா கொட்டுது, அனேகமா மொட்டையாகிடுவேன் அதுக்குள்ள நாமளே மொட்டை அடிச்சிடனும்


அப்பாடா ,இனி உங்க சமையல் சாம்பார்ல முடி இருக்குனு ஒரு பய சொல்ல முடியாது=============


4 வீட்ல மணி பிளாண்ட் வெச்சதால போலீஸ் ரெய்டு வந்ததா?எப்டி?

செடிக்கு தண்ணி ஊத்தாம விட்டதால இலை கருகிடுச்சு,"பிளாக் மணி" பிளாண்ட் னு ரெய்டு வந்துட்டாங்க===============5 தலைவரே!1000 3ம் பிறை கண்டவரே!னு பாராட்றாரு,ஏன் கோபப்படறீங்க?

யோவ்,எனக்கு 81 வயசு ஆகுது னு குத்திக்காட்றான்யா================


6 நானும்தா நல்லா டீ போடுறேன், என்னால மட்டு ம் ஏ ன் PM ஆக முடியல?

டீ"போட்டா பத்தாது,வரி போடனும்


==============


7 கைதி"−,யுவர் ஆனர் ,மோடி சொல்லிதான் இந்த கொலையை நான் செஞ்சேன்

ஜட்ஜ் −ஆதாரம் இருக்கா?
இருக்கு,ஆனா அதை சமர்ப்பிச்சா என்னைய போட்டுத்தள்ளிடுவாங்க

==============


8 ஜட்ஜ் − ஏம்மா,ஆணாக நடிச்சு பொண்ணுங்களை மேரேஜ் பண்ணி ஏமாத்தி இருக்கியே?அதுக்கு பொண்ணாவே ஆம்பளைங்களை ஏமாத்தி இருக்கலாமே?

கைதி − பொண்ணுங்கதாங்க புத்திசாலினு நினச்சிட்டு ஈசியா ஏமாறுவாங்க


================9 இன்றைய இளைஞர்கள் இணையதளத்தில் நேரத்தை செலவிடுவது மனதிற்கு வருத்தத்தை தருகிறது

மேடம்,நாங்களாவது வெறும் நேரத்தைத்தான் செலவு பண்றோம்,ஆனா பொண்ணுங்க நாங்க"சம்பாதிக்கறதை செலவு பண்ணிடறாங்க


=================


10 பெண் குழந்தைகளிடம் அப்பாவை அடினு சொன்னா ஓடி வந்து அம்மாவைத்தான் அடிக்கிறாங்க .அது ஏன்?

டெய்லி அப்பா பாவம் அம்மா கிட்ட அடி வாங்கறாருனு ஒரு பாவம் பாத்து தான்


===============


11 தலைவரே!திருச்சி மலைக்கோட்டைக்கு நேர் வழில போகாம துப்பாக்கி தொழிற்சாலை வழியா காரை விடச்சொல்றீங்களே அது ஏன்!?

ஒரு லட்சம் துப்பாக்கிகளைத் தாண்டி போனேன்னு பந்தாவா சொல்லிக்கலாமில்ல?


===============


12 தலைவரே!தோள்ல இனிமே துண்டு வேணாம் ,உட்கார சீட் வேணாம்னு ஏன் கறாரா சொல்லீட்டீங்க?

துண்டு சீட்டு இல்லாம உங்களால பேச முடியுமா?னு சவால் விடறாங்க


=================

13 சார்,என் SB A/C அக்கவுண்ட்ல 50,000 போட்டு வெச்சிருந்தேன்.காணோமே?

சாரி சார்.அந்த தொழில் அதிபர் நாட்டை விட்டு போறப்ப உங்க பணத்தையும் ,எங்க பேங்க் பணத்தையும் அடிச்ட்டு போய்ட்டார்


=================


14
மாமா,உங்க பொண்ணு கார் வாங்கச்சொல்லி அடம் பிடிக்கறா
வாங்கிடுங்க மாப்ள ,அதான் அந்தஸ்து
நாட்டின் பிரதமர் எனக்கே கார்' இல்லை னு அவரே புலம்பிட்டு இருக்காரு,சாதா பொதுஜனம் எப்டி கார் வாங்க?


==============15 தலைவரே!இதுக்கு முன்னால பெரியார நேரில் பாத்திருக்கீங்களா?

இல்ல
அண்ணாவை?
இல்ல
அப்புறம் எதை வெச்சு "பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக ஸ்டாலின் இருக்கார் னு அடிச்சு விட்டீங்க?


=====================16 தலைவரே!கொஞ்சநாள்"பாய்காட்"பண்றதில்லைனு முடிவு பண்ணி இருக்கீங்களாமே?

ஆமா,கேர்ள்காட் பண்ணலாம்னு இருக்கேன்.பொண்ணுங்களுக்கான கட்டில் நல்ல சேல்ஸ்


==============


17 தலைவரே!யாரைப்பார்த்தாலும்"நீ,Anti இந்தியன்"னு தாக்கறீங்களே?ஏன்?

;ஆளாளுக்கு ஒரு ஆண்ட்டியை"கரெக்ட் பண்ணிடறானுங்க,ஒரு அத்த அவசரத்துக்கு நமக்கு"ஒரு ஆண்ட்டி"சிக்க மாட்டேங்குது==


18 குருவே!திட்டாத பெண்களும் இல்லை,
திட்டு வாங்காத ஆண்களும் இல்லை!னு சொல்றாங்களே?இது ஆணுக்கு அவமானம் இல்லையா?
போய்யா,திட்ட திட்ட திண்டுக்கல்,திகட்ட திகட்ட பெண்கள் திட்னாலும்,அது கிக் தான்


===============19 இன்னிக்கு பியூட்டி பார்லர்ல ஹேர்கட் பண்ணினவங்க ரொம்ப அழகா வந்துருக்கு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்னு என் தலைய ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்க.. விளம்பரம் பண்ணவாம்

அவங்க பண்ற விளம்பரத்த விட உங்க விளம்பரம் அமோகம் மேடம்


===============


20 சார்,பாஜக வில் மெம்பரா இருந்துட்டே பிரதமரை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கீங்களே?என்ன தைரியத்துல?

அவருக்கு தமிழ் தெரியாதுங்கற"தைரியத்துலதான்=====================0 comments: