Wednesday, March 07, 2018

மேக்கப் போடுவது தப்பா..?:

பஞ்சாப் நேஷனல் வங்கியை போல் சென்னை சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடி மோசடி # பேங்க் ஷேர் எல்லாம் டவுன் ஆகப்போவுது,பேங்க் மேனேஜர்"எல்லாம் பாரீன் எஸ் ஆகப்போறாங்க

===============


2 கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களே கோவிலுக்கு செல்கிறார்கள் - சத்யராஜ். # அப்டி,சொல்ல முடியாது,சிம்பு ரசிகர்கள் கூட அடிக்கடி "கோவில்" பாக்க போலாம் ,உண்டியல் திருடறவன் ,சாமி சிலையை"கடத்தறவன் கூட ஸ்கெட்ச் போட போலாம்


==============


3 நாட்டின் பிரதமர் எனக்கு 'கார்' இல்லை -மோடி # என்ன இப்டி சொல்லீட்டீங்க?உங்க மேல ஏகப்பட்ட பு"கார்" இருக்கே? அது போதாதா?


=============


4 பாஜகவை பலப்படுத்த மாநிலம் முழுவதும் தமிழிசை சுற்றுப்பயணம்

// டெய்லி ஒரு பலாப்பழம் சாப்ட்டா பலம் கிடைச்சிடுமா?சுற்றுப்பயணம் போனா கட்சி பலப்படுமா?


==============


5 காவிரி பிரச்சினையில் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த தேவையில்லை: எடப்பாடி பழனிச்சாமி - # நீங்கதான் தைரியமான ஆள் ஆச்சே?வலியுறுத்தித்தான் பாருங்களேன்


==============


6 திமுக தலைவர் கருணாநிதியின் ரத்தத்திற்கு மட்டும் ஸ்டாலின் வாரிசு அல்ல, அவரது லட்சியத்திற்கும் வாரிசு - ஆ.ராசா

# தலைவரோட லட்சியம் என்ன?னு உங்களுக்கும் தெரியும் ,எங்களுக்கும் தெரியும் ,இந்த ஊருக்கே தெரியும்.எப்டியாவது முதல்வர் பதவியை அடையனும்=============


7 நடிகர் வடிவேலுவின் நிலைதான் கமலுக்கும் ஏற்படும் – அமைச்சர் மணிகண்டன் # அதாவது இப்ப துக்கத்துல இருக்கற மக்களை விரைவில் சிரிக்க வைப்பார் ,சந்தோஷப்படுத்துவார்னு சொல்றார் போல


=============


8 ஜெ அரசும், மோடியின் அரசும் ஏழை மக்களின் உயர்வுக்கு பாடுபடும் - முதலமைச்சர் பழனிசாமி

# இதை,நம்ப"முடியாது,மோடி ஊர்லயே இருக்கறதில்ல,ஜெ இந்த உலகத்துலயே இல்ல


==============9 : மேக்கப் போடுவது தப்பா..?: விஜயதரணி ஆவேசம் "போடலாம்ங்க,சினிமால,நடிக்கறவங்க"மட்டும்தான்"போடலாம்னு"ரூல்ஸ்"இருக்கா என்ன?அரசியல்ல நடிக்கறவங்களும் மேக்கப்"போடலாம்ங்க


===============10 காவிரி தீர்ப்பு வந்த போது பெத்த மகனை இழந்த படபடப்பு ஏற்பட்டது-துரைமுருகன் :# இத எல்லாம்"அன்புள்ள"அப்பா ,பாசமலர்,முதல் மரியாதை லயே பாத்தாச்சு வேற"வேற


================


11 நாட்டின் பிரதமர் எனக்கு 'கார்' இல்லை -மோடி சாப்பிட சோறு"இல்லைனு கவலைப்பட்டுட்டு இருக்கான்,இவரு காரில்லை ,காரிகை இல்லைன்ட்டு"புலம்பறாரு


==============


12 கேரள மாநிலத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி 4ஆவது நாளாக தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்

# ஏற்கனவே கிமீ 1 ரூபா ,இன்னும் சம்பாதிக்க பேராசை.


==============


13 மும்பை: எம்சிபி பிரேடி ஹவுஸ் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சீல் வைப்பு.

ரூ.11,400 கோடி மோசடி செய்த நிரவ் மோடிக்கு இந்த வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் தரப்பட்டது
#"திருடன் போன பிறகு செக்யூரிட்டி எதுக்கு?கணக்கு,வெச்சிருக்கற பொதுஜனம் என்ன செய்யும்?===================14 மூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்: ஆன்மீக ஆலோசகரை கைப்பிடித்தார்..# ஆன்மீக"அரசியலுக்கு"ரஜினி

ஆன்மீக ஆலோசனைக்கு இம்ரான்
ஆன்மீக அழகிகளுக்கு நித்யானந்தா==================


15 அரசியல் ஒரு சாக்கடை; யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தது குறித்து கேட்ட கேள்விக்கு மு.க. அழகிரி கருத்து # அரசியல்ல அழ"கிரிவலம்" வந்த போதுசெண்ட்"கடை ,இப்போ ஒதுக்கப்பட்டபின் சாக்கடை?


===================16 ரஜினி, கமலும் இணைந்து வந்தாலும் 10% வாக்குகளை கூட பெற முடியாது – டாக்டர் ராமதாஸ்"# மகன்"என்னடான்னா ஓவியா வைப்பாத்து பொறாமைப்படறாரு ,அப்பா ரஜினி கமலை"க்கண்டு..பயப்படறாரு


==================


17 ரஜினியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைப்பேன் - தமிழுருவி மணியன்!

ஏன் அவரா உக்காரமாட்டாரா?நீலாம்பரி சீட் தராதப்பவே ஸ்டைலா உக்காந்தாரே?


===============


18 அதிமுக இணைப்பில் பிரதமர் மோடி தலையீடு இல்லை... ஓபிஎஸ் கூறியது பொய்... எடப்பாடியார் பகீர் # அப்ப பொய் சொல்ற ஒரு,பிராடு ஆளை"துணைமுதல்வரா வெச்சிருக்கற முதல்வர் எப்டீ நேர்மையா இருப்பார்? (கொளுத்திப்போடுவொம்",2 பேரும் அடிச்சுக்கட்டும்)


=============19 குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த கணவர்.. போட்டுத்தள்ளிவிட்டு போலீஸில் சரணடைந்த மனைவி! # சபாஷ் ,மக்கள் தொகை குறையறதுல குடிகாரர்கள் இருந்தா சமூகத்துக்கு நல்லது


=================


20 வெளிநாடு ஓடவில்லை.. இந்தியாவில்தான் இருக்கிறேன்.. ரூ.4,232 கோடி மோசடி செய்த விக்ரம் கோதாரி தகவல்! # பண்றது திருட்டு ,பேசறது,பஞ்ச் டயலாக்


================

0 comments: