Friday, March 02, 2018

கலைஞரின் "பேர் சொல்லும் பிள்ளை"

அதிமுக தொண்டர்கள் கை காட்டுபவர்களுக்கே இனி அரசுப்பணி- அமைச்சர் செங்கோட்டையன் # நம்ம ஆட்சில அரசுப்பணிக்கு கல்வித்தகுதி திறமை எதுவும் தேவை இல்லைனு சொல்றார் போல


=================


2 ஜெயலலிதா குறித்து விஜயதரணி பேசியது அவரது சொந்த கருத்து - திருநாவுக்கரசர் # ஜெ குறித்து விஜயதாரணி பேசியது குறித்து நீங்க பேசினதாவது கட்சியோட கருத்தா?அதுவும் உங்க சொந்தக்கருத்தா?


=============


3 SBI வங்கி 2,416 கோடி நஷ்டம் அடைந்துள்ளது
# மினிமம் பேலன்ஸ் இல்லைனு ஏழைங்க கிட்ட இருந்து பிடுங்கி விஜய் மல்லய்யாக்களிடம் மேக்சிமம் பேலன்சை இழந்துட்டீங்களா?நல்லா வேணும்


===============4 கடவுளின் கோபத்தால் திராவிட இயக்கம் விரைவில் அழியும் --எஸ்வி சேகர்
# அப்டி பாத்தா கடவுள் திராவிட இயக்கம் ஆரம்பிக்கவே விட்டிருக்கக்கூடாதே?


============


5 கமல்ஹாசன் காவி நிறத்தை பெரிய பாவம் போல கூறுவது சரியல்ல; காவி நிறத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்” - பொன்.ராதா # காவி நிறத்தை கொச்சைப்படுத்துவது காவி அணிந்த சாமியார்களே!அவர்கள் நடவடிக்கைகளே!


==============6 சட்டமன்றத்தில் தனி ஒருவராக வந்து சிங்கம் போல் கர்ஜித்தவர் ஜெயலலிதா- ஜெ. உருவப்படம் திறப்பு நிகழ்ச்சியில் Opsபேச்சு # ஒரு தாயின் சபதம் பட க்ளைமாக்ஸ்ல டி ஆரும் ,கேப்டன் பிரபாகரன் பட க்ளைமாக்ஸ்ல விஜயகாந்தும் ,சிங்கம் 1,2,3 களில் படம் பூராவுமே சூர்யாவும் கூடத்தான் கர்ஜிச்சாங்க

==============


7 கர்நாடகாவில் சாலையோர கடையில் பக்கோடா சாப்பிட்ட ராகுல்-செய்தி
# அரசியல்வாதிங்க எதிர்க்கட்சியா இருக்கறப்ப சாலையோரக்கடைல டீ சாப்பிடறாங்க ,பஜ்ஜி சாப்பிடறாங்க,ஆளுங்கட்சியா ஆகிட்டா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க


===========8 தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை ஜெயலலிதா என்ற தெய்வம் ஆட்சி செய்கிறது
-முதலமைச்சர் எடப்பாடி
.# மோடி − அங்கே என்ன சத்தம்?
EPS - சும்மா பேட்டி குடுத்துட்டு இருக்கேன் பாஸ்


=================9 அறநிலையத்துறை அறம் இல்லாமல் உள்ளது-தமிழிசை
# அறம் பட போஸ்டரை உள்ளே ஒட்டீடுவோம்,யாரும் "அறம்" இல்லைனு சொல்லிட முடியாது


=============10 "தலைகீழாக நின்றாலும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்பது அவருக்கே தெரியும்" -டிடிவி. தினகரன்
# சிரசாசனம் ஒர்க் அவுட் ஆகலைன்னா என்ன?வெளிநடப்பு ஆசனம் ,சட்டை பாக்கெட்டை கிழிக்கற ஆசனம்னு பலது ட்ரை பண்ணுவோம்ல?


=============


11 யூகோ வங்கியில் பெற்ற 1.36 கோடி கடனை திரும்ப செலுத்தாததால் சென்னை அபிராமபுரத்தில் இயக்குநர் கே.பாலசந்தருக்கு சொந்தமான 2 பிளாட்கள் ஏலம் விடப்படுகின்றன,
#"சிகரம் போல் நாம் வாழ்ந்தாலும் பண விஷயத்தில் சிரமங்களை சந்திக்க வேண்டி இருப்பது கொடூரம்


=============12 பொது வாழ்வில் எளிமையாக திகழ்ந்தவர் ஜெயலலிதா
-பொள்ளாச்சி ஜெயராமன் # ஆடம்பரமா வளர்ப்பு மகன் கல்யாணம் நடத்தி ஜனங்களிடம் கெட்ட பேர் வந்ததால் எளிமைக்கு மாறினார்னு வேணா சொல்லலாம்,கக்கன் ,காமராஜர் எளிமை இயற்கையிலேயே அவங்க ரத்தத்தில் ஊறுனது,ரத்தத்தின் ரத்தமே அப்டி அல்ல

============13 பாலஸ்தீனத்திற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்ற பிரதமர் மோடி - செய்தி # ஜப்பான்ல"ஜாக்கிசானை,சந்திக்கறாரு,சைனால ஜெட்லீயை"சந்திக்கறாரு,ஆனா"இந்தியால விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்கறதுல மட்டும் "கறாரு"


===============14 தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சி நடத்த முடியாது.. கடிவாளம் போடும் சுப்ரீம் கோர்ட் # Sinனம்மா க்கு ஷாக் நியூஸ்


===============


15 தமிழக மக்களின் பிரச்னைகளை ஆக்கப்பூர்வமாக அணுகி சரிசெய்யும் அரசு பாஜக அரசு: ஹெச்.ராஜா # அப்ப அதிமுக அரசு லீவ் ல இருக்கோ


===============


16 நெல்லையில்
மட்டன் குழம்பு கேட்ட
கணவரை கொன்ற மனைவி
# வழக்கமா மட்டமான குழம்புதானே வைப்பே?இன்னைக்காவது மட்டன் குழம்பு வை ன்னானாம்.மட்டை எடுத்து தலைல ஒரே போடு
-செய்தி


==============17 தென் கொரியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் அதிபரின் தோழிக்கு 20 ஆண்டு சிறை # தோழிகளுக்கு போதாத காலம் போல==============18 இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் வர வேண்டுமானால், ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் - குஷ்பு
# யாரு?டீ குடிச்சா சிஎம் பதவி வரும்னு செண்ட்டிமெண்ட் வெச்சிருக்காரே அந்த பகுத்தறிவுப்பாசறையா?


==================19 ஈபிஎஸ் பதவி பறிபோக வேண்டும் என்பதற்காக காத்திருந்து டீ குடித்தேன் - ஸ்டாலின்
# அரசியலில் "விஸ்வரூபம்" எடுப்பீங்கனு பார்த்தா உங்க "உயர்ந்த உள்ளம்" இப்டி இருக்கே?கலைஞரின் "பேர் சொல்லும் பிள்ளை" ஆவீங்கனு பார்த்தா...


===============20 தமிழை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது - வைரமுத்து
# இந்த வருசம் தேசிய விருது இவருக்கு இல்லைனு சொல்லீட்டாங்க போல================

0 comments: