Sunday, March 11, 2018

ஸ்ரீதேவி

பிரபலமானவர்கள் யார் எப்போ இறந்தாலும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மக்களுக்கு மீடியா"மூலம் அளித்திட வேண்டும்.பல சந்தேகங்களை தவிர்க்கலாம் ( ஜெ ,ஸ்ரீதேவி)


================


2 தினசரி 4 கிமீ அதிகாலையில் சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டே நடைப்பயிற்சி மேற்கொண்டால் குறைந்த பட்சம் ஆயுளில் 5 வயசாவது அதிகமாக வாழலாம்


=================


3 தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 லிட்டர் தண்ணீர் ( 4 டம்ளர் அல்லது ஒரு சொம்பு) குடித்து வந்தால் ஆரோக்யத்துக்கு மிகவும் நல்லது"( சுடச்சுட வெறும்"வயிற்றில் காபி ,டீ குடிப்பதை தவிர்க்வும்)


================4 கல்யாணமண்டபத்துல வெளிப்படையா,சந்தோஷமா சாப்பிடற மாதிரி அன்னதானத்துல"பலர் கெத்தா சாப்பிடறதில்ல,ஒரு வித"கூச்சத்தோடு ,தயக்கமாதான்"சாப்பிடறாங்க


===============5 வாணி ,சரிகா கூடத்தான்"கமலுக்கு காஸ்ட்யும் டிசைனரா பல படங்கள்ல பணியாற்றுனாங்க.அவங்களுக்குக்கூடதான் கமல் சம்பளம்"தர்ல.அவங்க சொல்லீயா"காண்பிச்சாங்க?கவுதமி அவசரப்பட்டுட்டாங்களா?மீடியா அடிச்சு விடுதா?தெரில


=================


6 கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தபோது கவுதமிக்கு மிகச்சிறந்த துணையாய் இருந்தவர் கமல் என ஹாஸ்பிடல்"பணியாளர்கள் சொல்கிறார்கள்.பிரிவுக்கு காரணம்"எதுவாக இருந்தாலும் கவுதமி"கமலை "காஸ்ட்யூம்"டிசைனர்"சம்பள"பாக்கி"என அவமானப்படுத்தி இருக்கத்தேவை இல்லை

================


7 சில பல பிரிவுகளில் பிரிவுக்குப்பின் நான் உனக்காக"அதைச்செய்தேன் ,இதைச்செய்தேன் ,இதை இழந்தேன் என சொல்லிக்காட்டும் /புலம்பும் பெண்கள் பலர் உண்டு,ஆனால் ஆண்கள் அப்படி தான் இழந்ததை பட்டியல் போடுவதில்லை.பெண்கள் பெரும்போக்கான குணத்தை ஆண்களிடம் கற்றுக்கொள்ளனும்


================


8 நீயா?நானா? கோபிநாத் மேடை ல பொண்ணுங்களைக்கலாய்க்கறதா அவரா நினைச்சு அவரே தன்னை பாராட்டி சிரிச்சுக்கறாரு விகடன் விருது

==============


9 ஒரு விபத்தோ,கொலையோ ,தற்கொலையோ,திருட்டோ,கொள்ளையோ நடக்கும்போது அதை தடுக்க முற்படாமல் செல்பி/வீடியோ/போட்டோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் கொண்டுவரப்படனும்


===============


10 முண்டா பனியன் போடுவது உடல்"வியர்வை உறிஞ்ச.ஆனா பெரும்பாலான சினிமா விஐபி கள் பனியனே போடறதில்லை.சட்டை"மட்டும்தான். இது ஆரோக்யமான விஷயம் அல்ல===================


11 சசிதரூர் மனைவி மர்ம மரணம் நிகழ்ந்ததும் ஒரு பார்ட்டியில்"தான்
போனிகபூர் மனைவி மர்ம மரணமும் அதே"போல்
கொலையாக இருக்கவே வாய்ப்பு.குளிப்பவர்"பாத்ரூம் கதவை உள்பக்கம் தாழ்"போட்டிருப்பார்.கணவர்"எப்படி உள்ளே"சென்றிருப்பார்?


=================


12 போனிகபூர் பாத்ரூம் கதவைத்திறந்து உள்ளே சென்ற நேரம் 6.25pm.
போலீசுக்கு தகவல் சொன்னது 9 pm
.இடைப்பட்ட"நேரத்தில் ஏன்"டாக்டர் வரவழைக்கப்படவில்லை?
ஹார்ட் அட்டாக்கால் இறந்தார் என குத்து மதிப்பு குருசாமி வேலையை ஏன் செய்தார்கள்?


==========================


13 சரக்கடிச்ட்டு போதையில் நீச்சல் குளத்தில் இறந்திருக்கிறார்கள்.பாத்டப்பில் மூழ்கி இறக்க வாய்ப்பு குறைவு


=================


14 நீச்சல் நன்கு அறிந்தவர் ஸ்ரீதேவி என ஆதாரபூர்வ தகவல்கள் சொல்கின்றன.என்னதான் ஒருவர் போதையில் இருந்தாலும் நீரில் மூழ்கும் சூழலில் அனிச்சையாய் அவர் நீந்துவார் அல்லது மூச்சு விட தலையை நீர் மட்டத்துக்கு மேலே வருவார்.யாராவது தலையை அழுத்தினால்தான் மூழ்குவார்


====================


15 மீராஜாஸ்மின்,ரேவதி போன்ற உயரம் குறைவானவர்கள் பாத்டப்பில் மூழ்க வாய்ப்பு உள்ளது,ஆனால் அனுஷ்கா ,ஸ்ரீதேவி போல் உயரமானவர்கள் பாத்டப்பில்"மூழ்கி இறக்க வாய்ப்பில்லை.அப்படி நடந்திருக்க வேண்டும் எனில் பாத்டப்பின் நீளம் ஸ்ரீதேவியின் உயரத்தை விட அதிகமாக இருக்கனும்.அதாவது 6 அடி


=================16 ஸ்ரீதேவிக்கு வழக்கமாக வரும் போன் கால்களை விட 3 மடங்கு அதிகமான போன்கால்கள் அவர் இறப்பதற்கு 48 மணி நேரம் முன்பிலிருந்து வந்திருப்பதாக போலீஸ் ரிப்போர்ட் சொல்கிறது.இது மர்மத்தை உறுதிப்படுத்துகிறது.அந்த போன் நெம்பர்கள் ட்ரேஸ்அவுட் செய்யப்பட்டு விசாரிக்கப்பட இருக்கின்றன


====================17 ஸ்ரீதேவியின் மகளை சினிமாவில் நடிக்கவைக்க அவர் விரும்பினார்.ஒரு நடிகை ஆக என்னென்ன "அட்ஜெஸ்மெண்ட்"செய்ய வேண்டியதிருக்கும் என்பதை உணர்ந்த போனிகபூர் அதை விரும்பி இருக்க மாட்டார்.வாக்குவாதத்தில் ஆக்சிடெண்ட்டலாக மரணம் "நிகழ்ந்திருக்கலாம்


==================18 தான் இன்னாருடைய ரசிகன்/ரசிகை னு அடையாளம் காட்டி ஒரு"க்ரூப் உருவாக்குவது,போல் தான் இன்ன ஜாதி என அடையாளப்படுத்தி ஒரு குழு உருவாக்கும் நாள் இணையத்தில் வந்து விடும் போல் இருக்கு

=================19 ஒவ்வொரு சாமியாரும் இறக்கும்போதும்"எந்த மனிதனிடமும்"தெய்வ"சக்தியோ ,மூப்பு,பிணி யை வெல்லும்"சக்தியோ இல்லை,அனைவரும் சராசரி"என்பதை"உணர"வேண்டும்

=================20 சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் தண்டனையில்,இருந்து,தப்பிய காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக்குறைவு காரணமாக சராசரி மனிதன் போல் மரணம்"அடைந்தார்


===================

0 comments: