Thursday, March 01, 2018

நச்"சியார் - "நாஸ்தி"யார்

மீன ராசி அன்பர்களே!இன்னைக்கு"சந்திராஷ்டம் நடக்கறதால ஜாக்கிரதையா இருங்க,யார்ட்டயும் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்காதீங்க,குறிப்பா சந்திரா ,சந்திரமதி,சந்திரகலா ,கிட்டே கடலை போடாதீங்க============
2 ஆனந்த விகடன் எடிட்டருக்கு போன் பண்ணி "ஜோக்ஸ் 100 அனுப்பவா?"னு கேட்டேன்.இந்த வாரம் ஜோக்ஸ் பகுதியையே தூக்கீட்டாங்க.என் ஒருத்தனால எத்தனை படைப்பாளிகள் பாதிக்கப்பட்டாங்கனு நினைக்கறப்ப..
==============
3 கையில் பணம் இருந்தா தேவை இல்லாத செலவெல்லாம் பண்ணத்தோணும்.அப்பப்ப பேங்க்ல கட்டிடுங்க.சிக்கனத்துக்கு சிக்கனம் ,பாதுகாப்புக்கு பாதுகாப்பு,அப்புறம் அந்த ஏடிஎம் கார்ட தலையைசுத்தி 3 தடவை சுத்தி காக்கா உஸ் சொல்லிடுங்க
==============

4 ப்ரோபோஸ் பண்றது மேட்டரில்ல..ஒரு பொண்ண நம்மட்ட ப்ரோபோஸ் பண்ண வைக்கனும்..அதான் கெத்து னு நாம எல்லாம் தேவுடு காத்துட்டு இருந்தா கடைசி வரை சிங்கிள்தான்
=============

5 நீ செலுத்தும் அன்பு மறுதலிக்கப்படுகிறது என்பது தெரிந்தும் அன்பின் அடர்த்தி இம்மி அளவும் குறையாமல் இருந்தால் அது உண்மையான அன்பு என்றுணர்

===============

6 இன்னைக்கு ப்ரப்போசல்"டே னு வானத்துக்குக்கூட தெரிஞ்சிருக்கு,பூமிப்பெண்ணுக்கு தூறல் மூலம் நூல் விட்டுப்பாக்குது
==============
7 பணத்தை சேமிக்க எளிய வழி கையில் பணத்தை வெச்சிருக்கவே கூடாது.என்ன செலவு என ஒரு பேப்பரில் எழுதி எது அத்யாவசியம்?எது அநாவசாயம் என பில்டர் பண்ணீட்டே வந்தா போதும்.அப்பப்ப ஏழைகள்"படும் கஷ்டத்தையும் ஒரு பார்வை பார்த்துக்கனும்
===============
8 உலகத்துல இருக்கற பொண்டாட்டிங்களை எல்லாம் பொதுவா 1 கேக்கறேன்,உங்க அம்மா விருந்தாளியா வர்றப்ப என்னைக்காவது உப்புமா செஞ்சிருக்கீங்களா?இல்லையில்ல?அப்போ"புருசன்"மட்டும் தக்காளி தொக்கா?
===============

9 செக்கச்சிவந்த வானம்,ஓடாது னு எப்டி சொல்றீங்க ஜோசியரே?சிம்பு நடிச்ச வானம் ஓடுச்சா?
ஓடலை
சிவாஜி நடிச்ச சிவந்த மண் ஓடுச்சா?
ஓடலை
அப்போ இது மட்டும் எப்டி ஓடும் ,ஆய்த எழுத்து கதை போல்"தான்


==============10 ரயிலில் பயணம் செய்யும்போது தகுந்த சில்லறை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.ஸ்டேஷன்களில் பர்ச்சேஸ் செய்து விட்டு பணத்தை தேடி எடுப்பதற்குள் ரயில் கிளம்பினால் வியாபாரி ஓடி வருவது,அப்படி ஓட விடுவது பெரும் பாவம்


===============


11 திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே ஒரு சிக்கன் கடைக்கு "கோழி கூவுது" னு பேர் வெச்சிருக்காங்க.லாஜிக்கா "கோழி கூவியது" னு தானே வைக்கனும்?கடைல உயிரோட ஒரு கோழியும் இல்லயே?


=============`12 கெட்ட வார்த்தை பேசறவங்களை மதிக்காம ,யாரும் RT ,Fav ,ரிப்ளை பண்ணாம கண்டுக்காம விட்டாலே தானா திருந்திடுவாங்க.பதிலுக்கு பதில் பேசினா மேலும் விவாதம் வளரும்


===============13 ஆதார் கார்டு,வோட்டர்ஸ் ஐடி யோட ஒரிஜினல் டிபி தான் வைக்கனும் ,போன் நம்பர் ,வீட்டு அட்ரஸ் ,ஆபீஸ்/கம்பெனி அட்ரஸோட ரிஜிஸ்டர் பண்ணணும்னு விதி இருந்தா ஒரு பய கெட்ட வார்த்தை பேச மாட்டாப்டி,மீறி பேசுனா பணி புரியும இடத்தில் அவருக்கே அவமானம்


=============14 கெட்ட வார்த்தை பேசறவங்க தான் கெத்து,அவங்கதான் ஆளுமை னு ஒரு கூட்டம் நம்பிட்டு இருந்தது,அவங்க எல்லாம் ஜெயில்ல களி சாப்ட்டு ,அரசாங்க வேலையை தொலைச்சு ,அக்கம் பக்கம் கேவலப்பட்டு இப்ப காணாம போகலையா?காலம் எல்லாத்துக்கும் ஒரு தீர்ப்பு வெச்சிருக்கும்


=================15 ஏசி கோச்சிலோ , செகண்ட் க்ளாஸ் ரிசர்வ்டு கோச்சிலோ பயணிக்க ரயில்வே ஸ்டேஷன் வந்தவரை விட பேசஞ்சர் ட்ரெய்னில் பயணிக்க வருபவருக்கு ஒரு ப்ளஸ் இருக்கு.எந்த பொட்டி ல வேணா ஏறிக்கலாம்.தேடத்தேவை இல்லை


============16 குருவே!உள்ளங்கையில் சோறு படாமல் சோறு பிசைந்து சாப்டனும்ன்னு சொல்றாங்களே,எதனால?

நுனி விரல்களில் அள்ளி சாப்பிட்டால் குறைவான அளவு உணவே வரும்,தொண்டைக்கு சரியா இருக்கும்


===============17 சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்கள் அன்புக்கு உரியவர் உங்களை வெறுக்கும் சூழல் வந்தால் தன்னிலை விளக்கம் தந்து அவரை சமாதானப்படுத்தத்தேவையில்லை.பிரிவுக்குப்பின் காலம் அவருக்கு உண்மையை ஒரு நாள் உணர்த்தும்


================18 ரயில்வே ஸ்டேஷன்ல டிபார்ட்மெண்ட்டல் அனொன்ஸ்மெண்ட்னு மைக்ல அந்த பெட்டிக்கு தண்ணீர் நிரப்பு,இந்தப்பெட்டிக்குப்போ னு ஆர்டர் போடறாங்க.எல்லா"பணியாளர்களிடமும் செல்போன் இருக்கே?SMS போதாதா?


===============19 ஜிவிபி + பாலா படம் நல்லாருந்தா
மீடியா விமர்சனம் "நச்"சியார்
நல்லாலைன்னா "நாஸ்தி"யார்==================20 ஆணோ,பெண்ணோ இருபாலரும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்தித்தே ஆக வேண்டிய இயற்கைப்பேரிடர் தன் துணை அற்ற தனிமை.

==================

0 comments: