Thursday, March 08, 2018

கவுண்ட்டர் குடுக்கறதுல நீங்க"படிச்ச ஸ்கூல்ல அவரு"வாத்தியாரு

மோடி பண மதிப்பிழப்பு செய்தாரே அப்போதுதான் வங்கியில் பெரும் மோசடிகள் நடந்துள்ளது: மம்தா # இதை,அப்பவே சொல்லாம இப்ப சொல்றீங்க?


==============


2 “ரஜினிகாந்த், கமல்ஹாசனின் சந்திப்பு வின்ஸ்டன் சர்ச்சில், ரூஸ் வெல்ட் சந்திப்பு அளவிற்கு பெரிதுபடுத்தப்படுகிறது” -அமைச்சர் ஜெயகுமார்"# உங்களுக்கும் ,அவங்களுக்கும் என்ன"பகை?அவங்க"சந்திச்சதால"உங்களுக்கு ஏன்"காதுல புகை?

=============


3 ரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!
# நம்ம ஆட்சி ல மக்களுக்கு நல்லது"எதும் நடந்ததில்லை ,நடக்கப்போவதும் இல்ல,இதாவது நடக்கட்டுமே?


===============


4 சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி வேல்முருகன் # சபாஷ்"!சரியான"தீர்ப்பு


=============


5 குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்துக்கான தண்டனை விவரம் ஒத்திவைப்பு.
* 1 மணி நேரம் கழித்து தண்டனை விவரத்தை தெரிவிப்பதாக நீதிபதி அறிவிப்பு
ராஜேஷ்குமார் ரசிகராம்.சஸ்பென்ஸ் இல்லாம"ஜட்ஜ்மெண்ட்"இருக்காதாம்=============6 திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கிக்கிளை திறப்பு விழாவில்
கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவின் செல்போன் திருட்டு; செய்தி.
# செல்""லூட்" ராஜூ


=============


7 தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # பீடா"விற்கறது",பக்கோடா விற்கறது"அவ்ளோ"இளக்காரமான"தொழிலா?


==============


8 பிரதமர் மோடி கடும் தாக்கு ‘தினம் ஒரு ஊழல் வெளிவந்து கொண்டு இருக்கிறது’ # ஊழலை,கண்டிக்கறாரா?வெளிவந்ததை"கண்டிக்கறாரா?


===============9 எனக்கு முதல்வராகும் ஆசை என்றுமே இருந்தது இல்லை: வைகோ ச்சீ இந்தப்பழம் புளிக்கும்


=============


10 சென்னை தனியார் மருத்துவமனை லிப்டில் ஸ்டாலின் செல்லும் போது லிப்ட் பாதியில் நின்றதால் பரபரப்பு - செய்தி #
தலைவரே?நாம"மேல வந்துடக்கூடாதுனு,லிப்ட்"கூட எக்ஸ்ட்ரா ஷிப்ட் போட்டு,வேலை செய்யுது?


=================


11 கோச்சடையான் படத்திற்காக கடனாக பெற்ற ரூ.10 கோடியை திருப்பித் தருவது குறித்து பிற்பகல் 12.30க்குள் பதிலளிக்க ரஜினியின் மனைவி லதாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு # பாஜக"வுடன்"கூடி வாழ்ந்தால்"கோடி நன்மை


================


12 அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் மோடி தலையிட்டதில் தவறு இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி # தஞ்சாவூர்"தலையாட்டி பொம்மைகளாக"நீங்க இருப்பதிலும்"தவறு இல்லை,அரை"ஜான்"வயித்துக்காக என்னவெல்லாம்"சகிச்சிக்க"வேண்டி இருக்கு?பாவம் சார் நீங்க


=================


13 ரூம்லாம் இல்லை.. கொடுக்க முடியாது.. மோடிக்கே 'நோ' சொன்ன மைசூர் ஹோட்டல் நிர்வாகம்! # ரைட்டு,ரெய்டு கன்பர்ம்


==============


14 தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி பூக்கள் மலரலாம் -
மலரும் கவர்ச்சி பூக்கள் மணம் வீசாது - ஸ்டாலின்
# பூக்கள் விடும்"தூது பார்த்து"தலைவருக்கு"பயம்"போல


=================


15 பிரதமராக பார்க்காமல் என்னை
நண்பனாக பாருங்கள் - மோடி #
# முதுகுல குத்துனது நண்பன் னா அவன் பேரைக்கூட வெளில சொல்லக்கூடாதுங்கறாரா?


===============16 திமுக என்பது ஆயிரம் காலத்து பயிர், எந்த சக்தியாலும் அதை அசைக்க முடியாது” - மு.க. ஸ்டாலின் # நீங்களே"பயிர்"னு"சொல்லீட்டீங்க!ஆனா"அசைக்க"முடியாதுன்னா எப்டி?காத்தடிச்சா போதுமே?


===============17 நடிகர் கமல் திராவிடம் பேசினால் அவருடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை - சீமான்..
# தேடிப்போய் சந்திச்சது யாரு?நீங்களா?அவரா?


===============18 உறவுக்கு மறுத்த தோழி.. ஷூ லேசால் கழுத்தை நெரித்து கொன்ற ஃபேஸ்புக் நண்பர்! மும்பையில் பயங்கரம் "லேசு"ப்பட்ட காரியம் இல்ல


==============19 காகிதப்பூ மணக்காது - ஸ்டாலின்

நான் பூ அல்ல, விதை. என்னை முகர்ந்து பார்க்கவேண்டாம். விதைத்து பாருங்கள் - கமல் # தலைவரே!பிக்பாஸ்"பாக்கலயா?கவுண்ட்டர் குடுக்கறதுல நீங்க"படிச்ச ஸ்கூல்ல அவரு"வாத்தியாரு


===========20 நான் கூட்டணி வைப்பேன் என்று ஒருபோதும் கூறியது இல்லை.
கமல்",அரசியல்வாதிக்கான 2 தகுதி
;1 மாத்தி மாத்தி பேசறது
2 என்ன பேசுனாருனு புரிபடாமயே"ஜனங்களைக்குழப்பறது 2ம் அமோகம்


===========


0 comments: