Sunday, March 25, 2018

நான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து வந்தவன்

கமல்,ரஜினி போட்டியிடும் தொகுதிகளில் இருவரையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்-நடிகர் பிரபு # கமல்,ரஜினி பிரச்சாரம் பண்ணாலே தமிழன் ஓட்டுப்போட மாட்டான்(ரசிகர்கள் தவிர)இவரு"பிரச்சாரம்"பண்ணா மட்டும் அள்ளி ஊத்திடுவானா?


=============2 நான் ஆட்சிக்கு வந்தால் ஆன்மிகவாதிகளுக்கு பாதிப்பு வராது என்று நம்பிக்கை கூறுகிறேன் - கமல்ஹாசன்
# ஆட்சிக்கு வரப்போவதே ரஜினியின் ஆன்மீக அரசியல் னு ஜனங்க பேசிக்கறாங்களே?


============


3 அரசியலில் எனக்கு சவாலாக எந்த பெண்ணையும் நினைக்கவில்லை; எனக்கு நானே சவால் - தமிழிசை # ஜெ உயிரோட இருந்தப்ப இந்த பஞ்ச் டயலாக்கை பேசி இருந்தா பஞ்சர் ஆகி இருப்பீங்க


============4 கமல் நாவை அடக்கிப் பேச வேண்டும்" - வைகோ
# அப்டியே "சாமான்ய ஜனங்களுக்கு புரியற மாதிரி பேசனும் ,ட்வீட்டனும்னு சொல்லுங்க,இவருக்கே"தனி கோனார் நோட்ஸ் ,துபாஷ் தேவைப்படுது


============5 தமிழக பாஜகவில் இரு பிரிவினராக பிரிந்து மோதல்- செய்தி# h ராஜாவும் ,தமிழிசையும்"மோதிக்கிட்டாங்க போல.இரு பிரிவு னு பந்தாவா போட்டுக்கிட்டாங்க=============6 ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி # முதல்ல வாடகை,பாக்கி ,சம்பள பாக்கி இதை எல்லாம்"செட்டில் பண்ணச்சொல்லனும் 2 பேரையும்==========


7 பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமாது - ரஜினி
# அரசியலுக்கு வந்ததும் லேட் ,கருத்து சொல்வதிலும் டூ லேட்


============8 திமுகவினர் யாரென்று காட்டும் தருணம் வரும் - ஸ்டாலின்
# கமல் ,ரஜினி கட்சில பலர் சேர்ந்துட்டு வர்றாங்க,போற போக்கைப்பார்த்தால் திமுகவினர் யார்?யார்? எஞ்சி இருக்காங்க?னு தேட வேண்டீ வரும் போல


===========


9 ஊழலின் சின்னம் 'பிரஷர் குக்கர்'-தமிழிசை
# மத்தவங்க மேல சேற்றை வாரி இரைச்சாதான் சேற்றில் மலர்ந்த"செந்தாமரை"மலரும்னு"யாராவது சொன்னாங்களா?


=\10 என் கட்சியை கூட நான் எதிர்ப்பேன் : கமல் # கண்ணாடி முன்னாடி நின்னு தன்னைத்தானே திட்டிக்குவாரோ?===========11 தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது− அமைச்சர் கடம்பூர் ராஜூ # இவருக்கு அந்த "காமராஜ்" மேட்டர் தெரியாது போல


=============


12 நான் பிரதமர் என்றால் பணமதிப்பு நீக்க திட்டத்தினை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்: ராகுல் காந்தி # "க்ளீன் இந்தியா" வை ஆதரிக்கறாரு போல============13 கலைஞரை விட மிகவும் விவேகமாக அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்: துரைமுருகன் - " சம்பத்தை விட திறமையாக ஜிங்க் ஜக் அடிக்கிறார் து மு


===========14 ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி # நம்ம அரசியல் பயணமே ஆன்மிக அரசியல்தானே?பேசலாமே?


=============15 நான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து வந்தவன்
− ' அய்யாக்கண்ணு! # விவசாயம்"னா"அறுவடைக்காலத்துல அறுப்பு இருக்கும்,ஆனா இந்த"மனித அறுப்பு"தப்பு


============


16 காங்கிரஸ் செய்த பணியைவிட பாஜக மக்களுக்கு அதிகம் செய்துள்ளது! - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி # காங் பணி செஞ்சு பலாபலனை "வெச்சுக்கிச்சு,பாஜக நம்மை "வெச்சு செய்யுது


==============17 பட வாய்ப்பு குறைந்ததால் கமல் அரசியலுக்கு வந்தார்"-!CM EPS # அவராவது கைவசம் இந்தியன் 2 ,சபாஷ் நாயுடு , விஸ்வரூபம் 2 னு வரிசையா 3 படம் வெச்சிருக்கார்,நாம?அடுத்த தேர்தல் ல டெபாசிட்டாவது வாங்குவமா?


=============18 3 ஆண்டுகளுக்குப்பின், 12 ம் வகுப்பு படித்தாலே வேலை வாய்ப்பு உறுதி என்ற நிலை உருவாகும் - அமைச்சர் செங்கோட்டையன்.
# அடுத்த"தேர்தல்"ல தான்"நாம"கோட்டை விட்ருவமே?


=============19 மோடியைப் போல் அனைவரும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் - தமிழிசை
# அத்வானி"மாதிரி ஒருத்தர்"சிக்குனா நாம,மோடி ஆகிடலாம்,ஆனா சிக்கனுமே?


===========20 : ஓட்டை பானையில் சமையல் செய்ததை போல தமிழக பட்ஜெட் உள்ளது:் மு.க.ஸ்டாலின் # என்னதான் கருத்து"சொன்னாலும்"நம்மால இரட்டை இலை ஓட்டை இழுக்க முடியலையே?நம்ம ரெகுலர் ஓட்டையே விட்டுடவம் போலயே?


==========

0 comments: