Wednesday, March 21, 2018

குப்பை ஆட்சிக்கு சொல்வோம் குட்பை

1விசாரணையின் போது கார்த்தி சிதம்பரத்தை தூங்க விடவில்லை... அபிஷேக் மானு சிங்வி புகார்! # 24 மணி நேரமா தொடர்ந்து விசாரிச்ட்டாங்க? செய்யறது திருட்டு,இதுல ரூல்ஸ் வேற,பட்டினி போட்டு விசாரிக்கனும்,ஆனா சட்டத்துல அதுக்கு இடம் இல்லாததால சோறாவது கிடைச்சுது


===========2 ரஜினி கமல் குறித்து
ஏன் அதிகம் கேள்வி கேட்கிறீர்கள் சரத்குமாருக்கும் முதல்வராகும் தகுதி உண்டு -சரத்குமார் # நாட்டாமைக்கு முதல்வர்"ஆகும்"தகுதி உண்டாம் ஓஹோ,ஊரு சனம் சொல்லுச்சா? இல்ல,நாட்டாமையேதான் சொல்லிக்கிட்டாரு

==========3 சிஸ்டம் சரியில்லை என்பவர் ஜெ இருந்தபோது அரசியலுக்கு வராதது ஏன்?" -ரஜினி குறித்து சமக தலைவர் சரத்குமார் கேள்வி"# நம்மை யாரும்"சீந்தலைன்னா மீடியா யார் பின்னாடி போகுதோ அவங்களை"தாக்கி பேசனும்"−சீமான் ,நாட்டாமை கண்டுபிடிப்புகள்


==============4 வீடியோகான் அதிபர்
38,000 கோடி கடனுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - செய்தி. # பேர்லயே க்ளு"இருக்கு.வீடியோகான்,இட்ஸ்கான்==================
5 50 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன்வாங்க இனிமேல் பாஸ்போர்ட் எண் கட்டாயம். வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு. # டூ லேட்
இப்பவாவது விழிப்புணர்வு வந்ததே!


===========6
என் கட்சியை கூட நான் எதிர்ப்பேன் : கமல் # என்"மனைவியைக்கூட தான்"நான் எதிர்ப்பேன்,ஆனா வெளில"சொல்லிட்டு இருக்க மாட்டேன்,அதான் இப்ப சொல்லீட்டீங்களே மொமெண்ட்========7 குடித்துவிட்டு கணவன் அடித்தால், அருகில் உள்ள 10 பெண்களை திரட்டி, ஒன்று சேர்ந்து கணவனை தாக்கி, மூக்கை உடைக்க வேண்டும் என துணைநிலை-ஆளுநர் கிரண்பேடி
# 10 பேரா?கிளுகிளுப்பா அடி வாங்கிக்குவான்.இது செம கிக்============8 8 தமிழகத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது− அமைச்சர் கடம்பூர் ராஜூ # எப்டி காமராஜ் 100 ரூபா காசுக்காக சேசிங்க் எல்லாம் பண்ணி ஒரு கர்ப்பிணிப்பெண்"மரணத்துக்கு காரணமானாரே,அந்த மாதிரி சிறப்பாவா?===============9 நான் பிரதமர் என்றால் பணமதிப்பு நீக்க திட்டத்தினை குப்பை தொட்டியில் வீசியிருப்பேன்: ராகுல் காந்தி # நான் முதல்லர் ஆனால் னு அன்புமணி கனவு காணற மாதிரி,நான் பிரதமர் ஆனால்னு ராகுல் கனவு கண்டுட்டு இருக்காரு


================


10 கலைஞரை விட மிகவும் விவேகமாக அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்: துரைமுருகன் - "விவேகம்" தான் எடுபடலையே?உங்களோட எஜமான் "விசுவாசம்" அமர்க்களம்


================11 ஜெ. பாணியில் கமல்ஹாசன்.. 10 மாத குழந்தைக்கு 'கமலா ரஞ்சிதம்' என பெயர் சூட்டினார்
கோவிச்சுக்க மாட்டாரா?


================12 ஆன்மீக பயணத்தில் இருக்கிறேன்.. அரசியல் பேச மாட்டேன்.. சிம்லாவில் ரஜினி பேட்டி # ஆன்மீக அரசியல் நடத்தறவரு இப்டி சொல்லலாமா?அரசியல் மீட்டிங்க்ல மட்டும் ஆன்மீகம் பேசுனீங்க?


==============13 மீம்ஸ் போடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்- தமிழிசை # மீம்ஸ் அதிகமா போட்டது இதுவரை
வைகோ நாஞ்சில் சம்பத் வளர்மதி Ops Eps ஸ்டாலின் விஜயகாந்த் இவங்க எல்லாம் இறங்குமுகத்துல தானே இருக்காங்க?


================14 நான் பத்துப்பேர வெட்டிசாய்ச்ச குடும்பத்திலிருந்து வந்தவன்
− ' அய்யாக்கண்ணு! # இதையே ஒப்புதல் வாக்குமூலமா"வெச்சு குடும்பத்தை உள்ளே தள்ளிடப்போறாங்க ஜாக்கிரதை


====================15 காங்கிரஸ் செய்த பணியைவிட பாஜக மக்களுக்கு அதிகம் செய்துள்ளது! - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி # வரி வசூலிப்பில்"தானே?


==============16 பட வாய்ப்பு குறைந்ததால் கமல் அரசியலுக்கு வந்தார்"-!CM EPS # 2021 மே க்கு பிறகு நாம எங்கே இருக்கோம்னு கூகுள் சர்ச் ல கூட தெரியாது,நாம பஞ்ச் பேசலாமா?===============17 திமுகவினர் யாரென்று காட்டும் தருணம் வரும் - ஸ்டாலின்
# கமல் ,ரஜினி கட்சில பலர் சேர்ந்துட்டு வர்றாங்க,போற போக்கைப்பார்த்தால் திமுகவினர் யார்?யார்? எஞ்சி இருக்காங்க?னு தேட வேண்டி வரும் போல


==============18 தமிழகத்தில்
15 வருடங்களாக குப்பை ஆட்சி நடக்கிறது -கமல் ஆட்சிக்கு சொல்வோம் குட்பை?எப்டீ கட்சியோட ஸ்லோகன்?


===============


19 சிபிஐக்கு என்னுடைய செல்போனின் பாஸ்வேர்டை தெரிவிக்கவே மாட்டேன் −கார்த்தி சிதம்பரம் # யார் யாருக்கு எங்கே அடிச்சா எங்கே வலிக்கும்கற ரமணா பார்முலா சிபிஐ க்கு தெரியாமயா இருக்கும்?


==============20 ஊழலின் சின்னம் 'பிரஷர் குக்கர்'-தமிழிசை
# மத்தவங்க மேல சேற்றை வாரி இரைச்சாதான் சேற்றில் மலர்ந்த"செந்தாமரை"மலரும்னு"யாராவது சொன்னாங்களா?=================

0 comments: